துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Wednesday, August 3, 2011

இத்தாலிய நாட்டு சுற்றுலாக் குறிப்புக்கள்

இத்தாலிய நாட்டு சுற்றுலாக் குறிப்புக்கள்  
(Read Original Article in :- Italy Travel Guide)
 

My Italy Travel Guide: Village of Agordo, Italy
 இத்தாலியின் அகோர்டோ கிராமம் 
'இத்தாலிய' (Italy) நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என அந்த நாட்டின் நகரங்கள் (Cities) , சிறிய ஊர்கள்(Towns) மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் (Attractions) என அனைத்தையும் இந்த தளத்தில் தந்து உள்ளேன்.
'இத்தாலி'யைப் பற்றி பலரும் பல கோணங்களிலும் பார்க்கின்றார்கள். ‘இத்தாலிக்கு தனி வரலாறு (History) உள்ளது. அதன் கலாசாரம் மற்றும் நாகரீகம் (Customs and Fashion) தனித்தன்மைக் கொண்டது. அதன் உணவுப் பழக்கங்கள் தனியானது. இந்த தளத்தில் நீங்கள் அந்த நாட்டிற்குச் சென்றால் எங்கு சாப்பிடுவது, எங்கு தங்குவது, என்ன வாங்கலாம், 'இத்தாலி'ய நாட்டின் கலாசாரம் (Custom) , வரலாறு (History) மற்றும் அதன் அமைப்பு (Geography) போன்றவற்றை தந்து உள்ளேன்.
Castel Sant'Angelo, Rome
ரோமில் உள்ள ஸந்த் அங்கேல்லோ அரண்மனை
Author: Andreas Tille (Creative Commons Attribution 3.0 Unported)


இந்த இணையதளத்தில் உள்ள செய்திகள் என்னுடைய உலகம் சுற்றும் ஆர்வத்தினால் ஏற்பட்டவை. அந்த நாட்டிற்குச் செல்பவர்களுக்கு சிறிய அளவிலாவது பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் கண்டவற்றை, விவரங்களை வெளியிட்டு உள்ளேன்.
'இத்தாலி' ஒரு குடியரசு நாடு. ஐரோப்பியாவின் தென்புறத்தின் மத்தியில் (301,338 sq km) அமைந்துள்ளது. இது 'இத்தாலி'ய தீபகற்பம் (Italian peninsula), 'சிசிலி' (Sicily) மற்றும் 'சர்டினியாவை' (Sardinia) உள்ளடக்கியது. 'இத்தாலி'யின் பரப்பளவு 301,338 சதுர கிலோ மீட்டர் ஆகும். ஆனால், 'ஜெர்மனி'யை (Germany) விட 'இத்தாலி' நாடு சிறியது.
ஒரு காலணியைப் போல உள்ள 'இத்தாலி'யின் மேற்குப்புறம் 'தைர்ஹெனியன்' (Tyrrhenian Sea) கடல் தென் புறத்தில் 'லோனியன்' கடல் (Ionian Sea), கிழக்குப் பகுதியில் 'அட்ரியாடிக்' கடல் (Adriatic Sea) என மூன்று பக்கங்களில் கடலால் சூழப்பட்டு உள்ளது. இத்தாலி தனது எல்லைகளில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளைக் கொண்டு உள்ளது. இத்தாலிக்கு உள்ளேயே தனியாக 'வாடிகன் சிட்டி'(Vatican City) மற்றும் 'சான் மரினோ குடியரசு' (Republic of San Marino) என்ற இரண்டு சுதந்திர பகுதிகள் (independent enclaves) உள்ளன.
Torri del Vaiolet in the Dolomites
டாலோமிட்ஸ் என்ற இடத்தில் டோர்ரி டெல் வைலேட்
Author: Vincenzo Gianferrari Pini (Creative Commons Attribution ShareAlike 2.5 Italy)

'இத்தாலி'யின் ஜனத்தொகை (Population) 60.4 மில்லியன். ஐரோபியாவின் ஆறாவது (6th) மிகப் பெரிய ஜனத்தொகையைக் கொண்ட நாடு இது. 3.7 மில்லியன் ஜனதொகைக் கொண்ட 'ரோம்' (Rome) நகரமே 'இத்தாலி'யின் தலை நகரம். இதன் வரலாறு (History) 2,700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது 'ரோம் மன்னர்கள்' (Roman Kingdom) ஆட்சி , 'ரோம் குடியரசு' (Roman Republic) மற்றும் 'ரோம் சாம்ராஜ்யம் ' (Roman Empire) என்ற அனைத்து நிலைகள் இருந்தபோதும் 'ரோம்' அவற்றின் தலை நகரமாகவே இருந்து உள்ளது.
ரோமன் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தவுடன் ‘இத்தாலி’ பல சிறிய ராஜ்யங்களாகவும், மன்னர்கள் ஆண்டு பூமிகளாகவும் இருந்துள்ளது என்பது அதன் வரலாறு. 1861 ஆம் ஆண்டுதான் அது அனைத்துப் பகுதிகளையும் ஒன்றிணைத்த நாடாக மாறியது. இரண்டாவது உலக யுத்தம் முடிந்ததும் 19 ஆம் நூற்றாண்டில் முன்னர் அதன் பகுதிகளாக இருந்தவை ‘லிப்யா’ (Libya) , ‘எரிட்ரியா’ (Eritria) , ‘எதியோபியா’ (Ethiyopia) , ‘அல்பானியா’ (Albania) , ‘ரோடெஸ்’ (Rhodes) மற்றும் ‘டோடிகநெஸ்’ (Dodecanese) போன்ற நாடுகள்.
Trevi Fountain, Rome
ட்ரேவி நீர் ஊற்று Fountain, Rome
Author: Diliff (Creative Commons Attribution 3.0 Unported)

இன்று உலகில் அதிகம் வளர்ந்து உள்ள நாடுகளின் பட்டியலில் 'இத்தாலி' 18 வது இடத்தில் உள்ளது. அவர்களின் பொருளாதார வளர்ச்சியும் (GDP per capita growth) அதிகமாகவே உள்ளது. ஐரோப்பிய யூனியன் என்ற நாட்டு அமைப்பை உருவாக்கிய நாடு 'இத்தாலி'. அவர்கள் சர்வதேச நிலையில் G8, G20 மற்றும் NATO போன்றவற்றில் உறுப்பினர்கள்.
'இத்தாலி'யில் உயர்தரமான கார்கள் (luxury cars) உற்பத்தி செய்யப்படுகின்றன. அவர்களின் உணவு (delicious food) உலகப் பிரசித்தி பெற்றது. நவநாகரீகமான ஆடைகளும் (trendy fashion) அங்கு தயாரிக்கப்படுகின்றன.
'இத்தாலி' நாடு 20 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவை அனைத்தும் 110 மாகாணங்களாகவும் (Provinces), 8,100 நகரசபைகளாகவும் (municipalities) பிரிக்கப்பட்டு உள்ளன. சராசரி ஜனத்தொகை (Population) அனைத்து இடங்களிலும் ஒரே அளவில் இல்லை. வடக்கு 'இத்தாலி'யப் பகுதி (Northern Italy) 'இத்தாலி'யின் மொத்தப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கே (1/3) உள்ளது என்றாலும் அங்குள்ள மொத்த ஜனத்தொகை 'இத்தாலி'ய ஜனத்தொகையில் சரி பாதியாக (50%) உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் (two decades) வெளிநாட்டில் இருந்து வந்து அங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக (massive immigration) உள்ளதினால் மக்களின் பொருளாதார வளர்ச்சி (Growth rate) முன்னபைப் போல அதிக வளர்ச்சி அடையவில்லை.
'இத்தாலி'யில் சுமார் 55 % மக்கள் 'இத்தாலி'ய மொழியைப் (Italian language) பேசுகிறார்கள். உலகம் (World Over) முழுவதிலும் சுமார் 120 முதல் 150 மில்லியன் மக்கள் 'இத்தாலி'ய மொழியை அறிந்து இருக்கின்றார்கள். 'இத்தாலி'யின் மொத்த ஜனத்தொகையில் 87.8% மக்கள் 'ரோமன் கிருஸ்துவ' (Roman Christians) மதப் பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களில் சராசரியாக 1/3 பிரிவு (one-third) மக்களே சர்ச்சுகளுக்குப் (Church) போகின்றார்கள்.
Restaurant in Florence
பிலோரேன்ஸ்சில் ஒரு உணவகம்
Author: sailko (Creative Commons Attribution 3.0 Unported)

'இத்தாலி'யின் சீதோஷ்ண நிலை (Climate) அனைத்துப் பகுதியிலும் ஒரே மாதிரியாக இல்லை. பொதுவாக 'இத்தாலி'யில் உள்ள 'பிலோரேன்ஸ்சின்' (Florence) தெற்குப் பகுதிகளின் (South ) சீதோஷ்ண நிலை மத்தியதரைக் கடல் பகுதியின் (Mediterranean) சீதோஷ்ண நிலையைப் போலவே உள்ளது. 'இத்தாலி'ய தீபகற்பத்தின் பின்னால் 'அப்னைன்' மலைத் தொடர்கள் (Apennine Mountains) இருக்க இ'த்தாலி'யின் வடது புறம் 'அல்ப்ஸ்' (Alps) மலைகள் உள்ளன. 'இத்தாலி' மற்றும் 'பிரான்ஸ்' (France) நாட்டு இடையே உள்ள எல்லைப் பகுதியில் உள்ள மிக உயரமான மலை 4810 மீட்டர் உயர 'மவுன்ட் பிலான்க்' (Mount Blanc) என்பதாகும்.
'இத்தாலி' பல அற்புதமான இயற்கை காட்சிகளைக் கொண்ட நாடு. இங்கு யுனேஸ்கோவின் கண்காணிப்பில் உலக புராதான சின்னங்கள் பல உள்ளன. 1861 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் 'இத்தாலி'யின் பல பகுதிகளும் ஒன்று சேர்ந்து ஒரே நாடாயிற்று. அதுவரை அந்தந்தப் பகுதியில் இருந்த மக்கள் அவரவர் (Own) பழக்க வழக்கங்களைக் (traditions and customs) கொண்டு இருந்துள்ளனர் என்பதினால் இன்றும் அந்தப் பழக்க வழக்கங்கள் அந்தப் பகுதிகளில் தொடர்கின்றன .
'இத்தாலி'க்கு வருபவர்கள் பயன்படுத்தும் விமான நிலையங்கள் (Airports) உள்ள நகரங்கள் 'ரோம்' (Rome), 'மிலான்' (Milan), 'போலோக்னா' (Bologna), 'நேபில்ஸ்' (Naples), 'பிஸா' (Pisa), மற்றும் 'வெனிஸ்' (Venice) போன்றவை. 'இத்தாலி'க்குச் செல்ல கட்டணக் குறைவான விமான சேவைகள் (budget airlines) நிறைய உள்ளன.
Mole Antonelliana, Turin
துரினில் மோல் அன்டோனிலியன
Author: Kevin Hutchinson (Creative Commons Attribution 2.0 Generic)

'இத்தாலி'க்குச் செல்ல 'பிரான்ஸ்' (France), 'கிரோஷியா'(Croatia), 'ஆஸ்த்ரியா'(Austria), 'சுவிட்சர்லாந்' (Switzerland), மற்றும் 'ஜெர்மனியில்' (Germany), இருந்து ரயில் (Train) வசதியும் உள்ளது.
'இத்தாலி'யின் ஹைவே எனப்படும் நெடுந்தூர சாலைகள் (Highways) அருமையாக அமைக்கப்பட்டு உள்ளன வடக்குப் (North) பக்கத்தில் உள்ள சாலைகள் தெற்குப் (South) பக்கத்தில் உள்ள சாலைகளை விட நன்கு பராமரிக்கப்பட்டு உள்ளன. அனைத்து நெடுஞ் சாலைகளிலும் சுங்கவரி (toll roads) வசூலிக்கின்றார்கள்.
நீங்கள் 'இத்தாலி' நாட்டை ரயில் வண்டி மூலமும் சென்று சுற்றிப் பார்க்கலாம். அங்கு உயர் கட்டண ரயில்களும் (expensive) , குறைவுக் கட்டண ரயில்களும் உள்ளன.
Market in Palermo, Italy
இத்தாலியின் பலேர்மோ கடைவீதி
Author: Mavila2 (public domain)
ஹோட்டல்களின் கட்டணங்களை கட்டண சேவை
மையங்களில் பார்க்கவும்
(Hostels in Italy )
கட்டணக் குறைவான தங்கும்
இடத்தைப் பற்றிய விவரத்தைக் காட்டும் தளம்
(Where to stay in Italy)
இத்தாலியில் உள்ள பல தங்கும் இடங்களின்
விவரங்களை அறிந்து கொள்ளவும்.

இத்தாலியில் பென்சியோனிகள் 
(Pensionies in Italy) 
இத்தாலியில் உள்ள 2 அல்லது 3 ஸ்டார் அந்தஸ்து
தங்கும் இடங்கள்

 இத்தாலியின் மலை அடிவாரங்களில் அனைத்து 
வசதிகளுடன் உள்ள தங்கும் இடங்கள்

இத்தாலியில் விவசாய நிலங்களில் உள்ள பண்ணை வீடுகள்
மற்றும் குடிசைகளில் தங்கும் இடங்கள்



இத்தாலியின் முக்கிய நகரங்கள் (Main Cities of Italy)
பாரி (Bari)
போலோக்னா (Bologna )
ப்ரேச்சியா (Brescia )
கடனியா (Catania )
ப்லோரேன்ஸ் (Florence )
ஜெனோவா (Genoa )
மிலான் (Milan )
நேப்பில்ஸ் (Naples )
படுவா (Padua )
பலேர்மோ (Palermo )
பிஸா (Pisa )
ரவேன்னா (Ravenna )
ரோம் (Rome )
திரேஸ்டி (Trieste )
துரின் (Turin )
வெனிஸ் (Venice )
வெரோனா (Verona)

இத்தாலி நாட்டுப் பகுதிகள் / மாகணங்கள் (Regions of Italy)
வடகிழக்குப் பகுதி (Northeast Italy)
(1) ப்ரைஉலி-வேனிசியா கிலியா (Friuli-Venezia Giulia )
(2) ட்ரேண்டினோ அல்டோ அடிகே (Trentino-Alto Adige )
(3) வெனிடோ (Veneto)
வடமேற்கு இத்தாலி (Northwest Italy)
(1) லொம்பார்டி (Lombardy)
(2) அஸ்டோ வால்லி ( Aosta Valley)
(3) லிகுரியா (Liguria )
(4) பிட்மோன்ட் (Piedmont)
மத்திய இத்தாலி (Central Italy)
(1) இமிலா ரோமக்னா (Emilia-Romagna )
(2) லசியோ (Lazio )
(3) லே மர்ச்சி (Le Marche )
(4) டுஸ்கனி (Tuscany )
(5) உம்ப்ரிடா (Umbria)
தெற்கு இத்தாலி (Southern Italy)
(1) அப்ருச்சோ (Abruzzo )
(2) அபுலியா (Apulia )
(3) பசிகுகடா (Basikucata )
(4) கலாப்ரியா (Calabria )
(5) கம்பானியா (Campania)

தீவுகள் (The Islands)
(1) சர்டினியா (சர்டினியா)
(2) சிசிலி (Sicily)

No comments:

Post a Comment