பெலாருஸ் (Беларусь) சுற்றுலாப்
ஹோலி ட்ரினிட்டி எனும் ஆர்த்தடாக்ஸ் சர்ச் பின்புறத்தில்
தெரியும் பெலாருஸ்சின் இயற்கைக் காட்சி
ஐரோபியாவின் (Europe) கிழக்குப் பகுதியில் உள்ளதே 'பெலாருஸ்' (Belarus) நாடு. இதன் பரப்பளவு 207,600 சதுர மீட்டர்கள் (80,200 sq mi). இந்த நாட்டின் வாடா கிழக்கு எல்லை 'ரஷ்யா' (Russia), தெற்கு எல்லை 'யுக்ரைன்' (Ukraine), மேற்கு எல்லை 'போலந்த்' (Poland ) மற்றும் வாடா மேற்கு எல்லை லித்துவானியா (Lithuania) மற்றும் லாட்வியா ( Latvia) போன்ற நாடுகளுடன் உள்ளன. இந்த நாட்டின் ஜனத்தொகை (Population) 9.5 மில்லியன் (2011 ஆம் ஆண்டு கணக்கின்படி ). 'பெலாருஸ்' நாட்டின் தலை நகர் 'மின்ஸ்க்' ( Minsk) என்பது.
2010 ஆம் ஆண்டின் கணக்கின்படி ' பெலாருஸ்'சின் GDP of $52.9 பில்லியன் மற்றும் தனி நபர் வருமானம் GDP of $5,606. நாட்டின் அதிகாரபூர்வமான நாணயம் (currency) பெலாருசியன் ரூபிள் {ruble (BYR)} என்பதே . சர்வதேச போன் IDD எண் +375. சாலையில் வாகனங்களை வலது பக்கத்தில்தான் சேலத்த வேண்டும். பெரும்பாலான மக்கள் ரஷ்யன் (Russian) ஆர்தடாக்ஸ் கிருஸ்துவ மதத்தை தழுவினாலும், ரோமன் கத்தோலிக்க (Roman Catholic) கிருஸ்துவர்கள் அதற்கு அடுத்தபடியாக அதிகமாக உள்ளனர்.
'பெலாருஸ்' என்றால் 'வெள்ளை ருஸ்' என்று அர்த்தமாம். அதாவது முன்னர் 'லிதுவானியா'வை (Lithuania) சேர்ந்த 'கிராண்ட் துட்சி' (Grand Duchy) என்பவர்கள் ஆண்ட 'ருதுனியர்கள்' (Ruthenian) நிலத்தில் குடி அமர்ந்த வெள்ளை கிருஸ்துவ அடிமைகள் இருந்த இடத்தைக் குறிப்பதாக இருந்தது. அது போல கருப்பு 'பகான் பால்ட்ஸ்' (Pagan Balts) என்பவர்கள் குடியேறி இருந்த கருப்பர்கள் 'ருதுனியர்கள்' நிலமும் அங்கு இருந்தது. ஆனால் 'ரஷ்ய' மன்னர் (Russian empire) ஆட்சியில் இந்த பூமியை 'பெலோருஷியா' (Belorussia) என அழைத்தார்கள்.
20 ஆம் நூற்றாண்டுவரை தற்போதைய 'பெலாருஸ்' என்பது 'போலோட்ஸ்க்' (Polotsk) இளவரசர் ஆண்ட இடம், 'லிதுவானியா'வை சேர்ந்த 'கிராண்ட் துட்சி' , ரஷ்ய மன்னர் மற்றும் போலிஷ் லிதுவானியா குடியரசின் அங்கங்களாக இருந்தது.
ஆனால் சோவியத் யூனியன் உடைந்து போனபோது (collapsing) 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதியன்று 'பெலாருஸ்' தனது நாட்டின் சுதந்திரப் பிரகனத்தை (independence) வெளியிட்டுக் கொண்டது. 'பெலோருஷியா' என்ற பெயரை மாற்றி தனது நாட்டின் பெயரை 'பெலாருஸ்' என அறிவித்துக் கொண்டது. ரஷ்ய நாட்டு புரட்சிக்குப் பின்னர் 'பெலாருஸ்' தனது நாட்டை 'பைலோருஷியன் சர்' (Byelorussian SSR) என்ற பெயரில் சோவியத் யூனியனின் அங்கமான நாடாக அறிவித்துக் கொண்டது.
பெலாருஸ் செல்ல வேண்டுமா
(Visiting Belurus)
ஆர்மேனியா (Armenia), கியூபா (Cuba), ஜியோர்ஜியா (Georgia), காசகிஸ்தான் (Kazakhstan), வடக்கு கொரியா (North Korea), க்ரைஜிச்ஸ்தான்( Kyrgyzstan), மாசிடோனியா (Macedonia), மோல்டோவா (Moldova), மங்கோலியா (Mongolia), போலந் (Poland), ரஷ்யா (Russia), டாஜிகிச்ஸ்தான் (Tajikistan), யுக்ரைன் (Ukraine), உஸ்பேகிஸ்தான் (Uzbekistan) மற்றும் வியட்நாம் (Vietnam) போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு விஸ் (Visa) தேவை இல்லை. ஆனால் எந்த நாட்டில் எல்லாம் 'பெலாருஸ்' தூதரகங்கள் (Consular) இல்லையோ அங்குள்ளவர்கள் 'பெலாருஸ்' விமான நிலையத்தில் வந்து விசாவைப் பெற்றுக் கொள்ளலாம்.
விமானம் மூலம்
(By Plane)
நீங்கள் 'ரஷ்யா'வின் வழியாக 'பெலாருஸ்சுக்கு' சென்றால் ரஷ்யா நாட்டு வழி கடக்கும் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆகவே இந்த பிரச்சனையைத் தவிர்க்க ஷேங்கன் (Schlengen) நாட்டு விமான நிலையங்கள் மூலம் செல்வதே சிறந்தது.
'பெலாருஸ்' சின் மின்க்ஸ் தேசிய விமான நிலையம் (Minsk National Airport (MSQ)) அந்த நாட்டின் தலை நகரமான மின்க்ஸ்சில் இருந்து 42 கிலோ தூரத்தில் உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு பிரான்க்பார்ட்(Frankfurt) , வியன்னா (Vienna) போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து விமான சேவைகள் உள்ளன.
வ்யாலிகியா க்ருஹோவிச்சியில் செயின்ட் ஜார்ஜ் சர்ச்
Author: Alex Zelenko (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Alex Zelenko (Creative Commons Attribution 3.0 Unported)
பெலாருஸ்சின் பெரிய நகரங்கள்
(Major Cities in Belarus)
(1) மின்க்ஸ்- தலைநகரம்
(Minsk) capital
(2) பிரெஸ்ட்
(Brest)
(3) கோமெல்
(Gomel)
(4) கிரோட்னோ
(Grodno)
(5) மோகிலேவ்
(Mogilev)
(6) நெஸ்விஹ்
(Nesvizh)
(7) ஷார்கோவ்ஸ்சைன
(Sharkovshchina)
(8) விடிப்ஸ்க்
(Vitebsk)
யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Belarus)
(1) பிலோவிஷ்கயா புஷ்ச்சா/ பயலோவைஸ்சா காடு
( Belovezhskaya Pushcha / Białowieża Forest (1979)
(2) மிர் கஸ்டேல் காம்ப்ளெக்ஸ்
(Mir Castle Complex (2000)
(3) நெஸ்விஹ் ராட்சிவில் குடும்ப இருப்பு வளாகம்
Architectural, Residential and Cultural Complex of the Radziwill Family at Nesvizh (2005)
(4) ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்
( Struve Geodetic Arc (2005)
(Major Cities in Belarus)
(1) மின்க்ஸ்- தலைநகரம்
(Minsk) capital
(2) பிரெஸ்ட்
(Brest)
(3) கோமெல்
(Gomel)
(4) கிரோட்னோ
(Grodno)
(5) மோகிலேவ்
(Mogilev)
(6) நெஸ்விஹ்
(Nesvizh)
(7) ஷார்கோவ்ஸ்சைன
(Sharkovshchina)
(8) விடிப்ஸ்க்
(Vitebsk)
யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Belarus)
(1) பிலோவிஷ்கயா புஷ்ச்சா/ பயலோவைஸ்சா காடு
( Belovezhskaya Pushcha / Białowieża Forest (1979)
(2) மிர் கஸ்டேல் காம்ப்ளெக்ஸ்
(Mir Castle Complex (2000)
(3) நெஸ்விஹ் ராட்சிவில் குடும்ப இருப்பு வளாகம்
Architectural, Residential and Cultural Complex of the Radziwill Family at Nesvizh (2005)
(4) ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்
( Struve Geodetic Arc (2005)
No comments:
Post a Comment