துரின்
( Read Original Article in :- Turin)
( Read Original Article in :- Turin)
வடக்கு ‘இத்தாலி’யில் (Italy) உள்ள நகரமே ‘துரின்’ (Turin). இது ‘பிட்மொன்ட்’ மாவட்டத்தின் (Piedmont region) தலை நகரம் மட்டும் அல்ல அதன் வியாபாரக் கேந்திரம் (Business), கலாச்சார (Culture) மையம் போன்றவையும் ஆகும் . இதன் ஜனத்தொகை (Population) சுமார் 910,000 ஆகும்.
பேசிலிக்கா டி சுபெர்கா
Author: M. Klüber Fotografie (Creative Commons Attribution 3.0 Unported)
Author: M. Klüber Fotografie (Creative Commons Attribution 3.0 Unported)
‘துரின்’ நகரம் கலாச்சாரத்திற்கும் வியாபாரங்களுக்கும் பெயர் பெற்ற நகரம். இங்கு நிறைய தேவாலயங்கள் (Churches), அரண்மனை (Palaces), பொதுஜன மைதானங்கள் (Public Squares) மற்றும் பல கலையகங்கள் (Galleries) உள்ளன. இந்த நகரம் ‘சுவேன்டுஸ் F.C’. மற்றும் ‘டொரினோ F.C.’ போன்றவர்களின் சொந்த இடம் மட்டும் அல்ல, ‘பியட்’(Fiat), ‘லன்சியா’ (Lancia) மற்றும் ‘அல்பா’ ரோமியோ (Alfa Romeo) போன்ற கார்களை உற்பத்தி செய்யும் தொழில்சாலைகளின் இருப்பிடமும் ஆகும். 2006 ஆம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.
28 BC யில் நிறுவப்பட்ட 'கஸ்டரா துரினோரம்' (Castra Taurinorum) என்ற ராணுவ மையம் (Military camp) முதலில் இங்குதான் அமைக்கப்பட்டது. இதன் வரலாறு (History) அதனுடன்தான் துவங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் 'டுச்சி ஆப் சவாய்' (Duchy of Savoy) என்பதின் தலை நகரமாக இருந்த இந்த நகரம் 1861 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த இத்தாலி நாட்டின் (unified Italy) முதலாம் தலை நகரமாக (First Capital) மாறியது.
20 ஆம் நூற்றாண்டு முதல் 'துரினின்' ஜனத் தொகை குறையத் துவங்க மீண்டும் 21 ஆம் நூற்றாண்டில் அதாவது 2009 ஆம் ஆண்டில் 865,000 என இருந்த ஜனத்தொகை 2011 ல் 910,000 என ஆயிற்று.
துரினுக்கு விமானப் பயணம் (Going to Turin)
'துரின் கஸ்டீல்லோ ' விமான நிலையம் {Turin-Caselle Airport (TRN)} அல்லது , 'சான்ட்ரோ பெர்டினி' விமான நிலையம் (Sandro Pertini Airport) 'துரினில்' இருந்து 15 கிலோ தொலைவில் உள்ள 'கஸ்டீல்லோ' (Casello) என்ற பகுதியில் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து 30 முதல் 40 நிமிடங்களில் துனின் செல்ல பஸ்கள் (Buses) உள்ளன. அதன் கட்டணம் €5 ஆகும்.
படத்தின் மீது கிளிக் செய்து துரின் உள்ள இடத்தை
பெரிய அளவில் பார்க்கவும்.
பெரிய அளவில் பார்க்கவும்.
No comments:
Post a Comment