துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Thursday, August 25, 2011

போட்ஸ்வானா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

போட்ஸ்வானா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read Original article in :- Botswana


போட்ஸ்வானா போப்பா பால்ஸ்

போட்ஸ்வானாவும் தென் ஆப்ரிக்காவின் (South Africa) ஒரு நாடுதான். இதன் பரப்பளவு 581,730 சதுர கிலோமீட்டர் (224,610 சதுர மைல் ). இதன் எல்லைகள் வடகிழக்கில் ஜிம்பாவே (Zimbabwe), தெற்கில் தென் ஆப்ரிக்கா (South Africa), மேற்கில் நாம்பியா (Nambia), மற்றும் வடக்கில் ஜாம்பியா (Zambia ) போன்றவற்றுடன் உள்ளன. இந்த நாட்டின் 70 % இடம் காலஹாரி (Kalahari) எனும் பாலைவனப் பகுதியாக உள்ளது.
காலஹாரி பாலைவனம்

இந்த நாட்டின் ஜனத்தொகை 2 மில்லியன் (2011 ஆண்டு கணக்கின்படி ). இதன் தலை நகரம் 'கபரோன்' (Gaborone) என்பதே.  இந்த நாட்டின் நேரம் உலக நாடுகளின் பொதுவான நேரத்தை (Coordinated Universal Time) விட இரண்டு மணி நேரம் அதிகமாக உள்ளது. நாட்டின் அதிகாரபூர்வமான நாணயம் 'புலா' {Pula (BWP)} . இந்த நாட்டின் சர்வதேச தொலைபேசி எண் கோட் +267. சாலையில் இடது பக்கமாக வண்டிகளை ஓட்ட வேண்டும். 'போட்ஸ்வானா'வில் உள்ள மக்களை 'மோட்ஸ்வானா' (Mostwana) என அழைக்கின்றார்கள். காரணம் 'போட்ஸ்வானா' என்பது பன்மைப் (Plural) பெயராம். ஆகவே 'மோட்ஸ்வானா' என்பது ஒருமைப் பெயராம்.
2010 ஆண்டின் கணக்கின்படி இந்த நாட்டின் GDP என்பது $12.5 பில்லியன் மற்றும் தனி நபர் வருமானம் $15,450. பிரிட்டிஸ் (British) அரசில் இருந்து விடுதலைப் பெற்றபோது இந்த நாட்டின் GDP என்பது $70 தாக மட்டுமே இருந்தது. அதற்குப் பின்னால் இந்த நாட்டின் வருடாந்தர வளர்ச்சி 9 % ஆக வளர்ந்து வந்துள்ளது.  இந்த நாட்டில் நல்ல முறையில் ஆட்சி (Good Governance) நடந்து வருவதே இதற்குக் காரணம்.
ஓக்கவாங்கோ ஆற்றுக் கழிவுமுக நிலம்

 'போட்ஸ்வானா'வின் பொருளாதாரம் (Economy) பராம்பரிய பழக்கமான வைரக் கற்களின் (Diamond) ஏற்றுமதி (Export) மற்றும் சுற்றுலாப் பயணிகளினால்தான் (Tourism) வளர்ந்து வந்துள்ளது.  தற்போது இந்த நாடு புதிய தொழில் நுட்ப விஞ்ஞான ஆராய்ச்சிகளும் (Innovation Technology and Research) மாற்று (Diversifying) தொழிலகங்கள் அமைப்பதிலும் முனைந்து உள்ளது.
 1885 ஆம் ஆண்டு மார்ச் மாதம் (March) 31 ஆம் தேதி முதல் பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சியின்  கீழ் வந்த இந்த நாட்டின் முந்தையப் பெயர்  'போட்ஸ்வானா' 'பெசுவனாலாண்ட் ப்ரோடேக்டோரேட்' (Bechuanaland Protectorate) என்பதே.  1910 ஆம் ஆண்டு 'ஒன்றுபட்ட ஐக்கிய தென் ஆப்ரிக்கா' (Union Of South Africa) அமைக்கப்பட்டவுடன் 'பெசுவனாலாண்ட் ப்ரோடேக்டோரேட்' வையும் அங்கிருந்த மக்களின் கருத்தைக் கேட்டறிந்து தென் ஆப்ரிக்க நாட்டுடன் (South Africa ) இணைத்துக் கொள்ள முயன்றார்கள். ஆனால் அதற்கு பிரிட்டிஷ்  அரசு சம்மதிக்கவில்லை. 1948 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா இன ஒதுக்கீட்டுக் கொள்கையை (Apartheid) நிறைவேற்றி குடியரசு நாடுகளின் (Commonwealth) அமைப்பில் இருந்து 1961 ஆம் ஆண்டு  வெளியேறியவுடன் (Withdrew) 'பெசுவனாலாண்ட் ப்ரோடேக்டோரேட்' டை இணைக்கும்   எண்ணம் முற்றிலுமாக தடைபட்டது.
1964 ஆம் ஆண்டு ஜூன் (June) மாதம் 'போட்ஸ்வானியா'விற்கு விடுதலை தந்து அந்த நாட்டை அவர்களே சுயமாக (self-governing) ஆளுவதற்கு வழி செய்ய முடிவெடுத்த பிரிட்டிஷ் அரசாங்கம்  முதலில் அந்த நாட்டின் தலை நகரத்தை (Capital) 'மபிகேங்' (Mafikeng) என்ற நகரில் இருந்து கபோரோன் (Gaboron) என்ற நகருக்கு மாறியது. அதன் பின்னர் 'போட்ஸ்வானாவின்' அரசியல் சாசனம் (Constitution) 1965 ஆம் ஆண்டு வரையப்பட்டு அங்கு பொது ஜனத் தேர்தலை நடத்தி முடித்து 1966 ஆம் ஆண்டு செப்டெம்பர் (September) மாதம் 30 ஆம் தேதியன்று  முதல் முழு சுதந்திரம் பெற்ற (Full Independnce) நாடாக அதை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
சோடில்லோ மலைப் பகுதியில் பாறையில் சித்திரங்கள்

'போட்ஸ்வானா'வின் தேசிய மொழி (Official Language) ஆங்கிலம். ஆனால் உள்ளூர் மொழியான 'செட்ஸ்வானாவை' பலரும் பேசுகிறார்கள். இங்குள்ள மக்களில் 70% மக்கள்  ஆங்க்லிகன், மேதொடித்ஸ், தென் ஆப்ரிக்க ஒன்றிணைந்த கிருஸ்துவ சபையின் அங்கத்தினர்கள் போன்ற கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள்.  (Anglicans, Methodists and members of the United Congregational Church of Southern Africa).

'போட்ஸ்வானா'வுக்கு செல்ல வேண்டுமா 
(Visiting Botswana )

'ஆஸ்திரேலியா' (Australia), 'கனடா' (Canada), 'ஹாங்காங்' ( Hong Kong), 'மலேசியா' (Malaysia), 'நெதர்லாந்' (Netherlands),  'சிங்கப்பூர்' (Singapore), 'பிரிட்டன் எனும் யுனைடெட் கிங்டம்' (United Kingdom ) மற்றும் 'அமெரிக்கா எனும் யுனைடெட் ஸ்டேட்ஸ்'  (United States) போன்ற நாடுகளில் உள்ளவர்களைத் தவிர மற்ற நாட்டினருக்கு விசா தேவை.
'சிர் சிரிட்ஸ்சீ காமா சாவதேச விமான நிலையத்தில்'  {Sir Seretse Khama International Airport (GBE)} இறங்கியே 'போட்ஸ்வானாவுக்கு' செல்ல வேண்டும். இந்த விமான நிலையம்  இந்த நாட்டின் தலை நகரமான 'கபோரோன்' எனும் நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  தென் ஆப்ரிக்கா மற்றும்  'ஜிம்பாவேயில்'(Zimbabwe)  இருந்து மட்டுமே இந்த விமான நிலையத்துக்கு வருவதற்கான விமான சேவைகள் உள்ளன். 
போட்ஸ்வானாவின் வரிக் குதிரைகள்
Author: Pharaoh Hound (Creative Commons Attribution 3.0 Unported)


போட்ஸ்வானாவின் பெரிய நகரங்கள்
(Major Cities in Botswana)

(1) கபோரோன்- தலை நகரம்
(Gaborone - capital)
(2) பிரான்சிஸ்டவுன்
(Francistown)
(3) கான்ஸ்சி
(Ghanzi)
(4) க்வீடா
(Gweta)
(5) கான்யீ
(Kanye)
(6) கசானீ
(Kasane)
(7) மவுன்
(Maun)
(8) நட்டா
(Nata )
(9) சபோங்
(Tsabong)

போட்ஸ்வானாவில் பார்க்கக் கூடிய இடங்கள்
(Places of Interest in Botswana)

(1) சோபே நேஷனல் பார்க்
(Chobe National Park)
(2) காலஹாரி பாலைவனம்
(Kalahari Desert)
(3) க்காலகாடி  டிரான்ஸ்பிரான்டியர்  பார்க்
(Kgalagadi Transfrontier Park)
(4) மோரிமி நேஷனல் பார்க்
(Moremi National Park)
(5) ஓக்கவாங்கோ டெல்டா
(Okavango Delta)

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Botswana)

சோடில்லோ
(Tsodilo (2001)

No comments:

Post a Comment