துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 30, 2011

பெல்ஜியம் - எப்ரேஸ்

பெல்ஜியம்  - எப்ரேஸ்
(Read Original Article in :-Ypres )

'ஏப்ரேஸ்' (Ypres )  சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
 இந்த நகரம் 'பெல்ஜியத்தின்' (Begium) மேற்குப் பகுதியில் உள்ளது. இதன் எல்லை 'பிரான்ஸ்' (France) நாட்டுடன் உள்ளது. மேலும் இந்த நகரம் 'ப்ளெமிஷ்' (Flemish) மாகாணத்தில் உள்ளது. இந்த நகரின் மொத்தப் பரப்பளவு 130.61 சதுர கிலோ மீட்டர்.  நகரின் ஜனத்தொகை  35,000 (2011 ஆண்டு கணக்கின்படி ). 'லேபெர்லீ' (Ieperlee ) எனும் வாய்க்கால் (Canal) இந்த நகரத்தின் உள் வழியாக செல்கின்றது. இந்த நகரின் வரலாறு ரோமர்கள் (Romans) காலத்தை சேர்ந்தது.  மத்தியப் பகுதியில் இந்த நகரின் ஜனத்தொகை  40,000 என்ற அளவில் இருந்தது.  அந்த அளவு ஜனத்தொகை தற்போது உள்ள ஜனத்தொகையை விட அதிகம். இந்த இடம் 'இங்கிலாந்து' (England)  நாட்டுடன் ஒரு வகை மெல்லிய நூல் துணி (Linen) வியாபாரத்தில்  ஈடுபட்டு வந்து இருந்தது.
க்ரோடி மார்கெட்  
Author: Tony Grist (public domain)
ஒரு வகை மெல்லிய லினேன் (Linen) எனும் துணி மற்றும் பிற துணிகளின் வியாபாரத்தில்இருந்து வந்ததினால் 'ஏப்ரேஸ்' நகரில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடமான க்ளோத் ஹால் (cloth Hall) எனப்படும் மையத்தைக் கட்டினார்கள். இந்த நகரமும் பல்வேறு சமயங்களில் பெரும் சேதத்தை சந்தித்தது. 1241 ஆம் ஆண்டு க்ளோத் ஹால் தீயினால் நாசம் அடைந்தது. 1383 ஆம் ஆண்டு இந்த நகரம் 'ஆங்கில பிஷாப் ஹென்றி லி டிஸ்பென்செர்' (English bishop Henry le Despenser) என்பவரால் முற்றுகை இடப்பட்டது. 1697 ழில் 'ரிஸ்விக்' (Ryswick) என்ற ஒப்பந்தத்தின்படி இது 'ஸ்பெயின்' (Spain) நாட்டு வசமாயிற்று. 1713 ஆம் ஆண்டு இந்த நகரை 'ஆஸ்த்ரியன்' (Austrian) நாட்டினருக்கு தந்துவிட்டார்கள். 
இப்படியாக குழப்பமான (turbulent) வரலாற்றைக் கொண்ட இங்கு இந்த நாட்டின் மீது படை எடுத்தவர்களை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த சுவற்றின் சிதைவுகளை , முக்கியமாக 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  சுவற்றை  இன்றும் காணலாம்.
க்ளோத்  ஹால்
Author: Tony Grist (public domain)

முதலாம் உலக யுத்தத்தின்போது (First World War)  'ஜெர்மனி'யின் (Germans) தாக்குதலினால் மற்ற நாடுகளைப் போல 'எப்ரேஸ்' நகரமும் பெரும் சேதத்துக்கு உள்ளாயிற்று.  மூன்று முறை 'ஏப்ரேஸ்' நகரில் நடந்த யுத்தத்தில் 50,000 க்கும் அதிகமான  'ஜெர்மானி'யர்கள்(Germans), 'ஆங்கிலேயர்' (English), 'கனடா' (Canadians), 'அன்சாக்' (ANSAC), மற்றும் 'பிரென்ச்'(French) போன்ற நாடுகளின்  படையினர் (Troops) மடிந்தார்கள். ஆனால் அந்த நகரத்தினை மீண்டும் ஜெர்மனியிடம் இருந்து பெற்ற நஷ்ட ஈட்டுத் தொகையினால் புனரமைத்தார்கள். முக்கியமான கட்டிடங்களை முடிந்த அளவு பழைய தோற்றத்திலேயே கட்டினார்கள். மற்ற கட்டிடங்களை நவீனக் கட்டிடங்களாகக் கட்டினார்கள்.
மெனின்  கேட்
Author: Sniper snoop with Cam (Creative Commons Attribution 3.0 Unported)


 

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Ypres )

'ப்ருச்சில்ஸ்சில்' இருந்து செல்லும் ரயிலில் ஏறி 'எப்ரேஸ்' நகருக்குச் செல்ல முடியும்.

எப்ரேஸ்சில் பார்க்க வேண்டிய இடங்கள்
( Places of Interest to Visit in Ypres )


(1) இன் பிலாண்டேர்ஸ் பீல்ட்ஸ் மியூசியம்
(In Flanders Fields Museum)
ஏப்ரேச்ஸ் நகரில் முதலாம் உலக யுத்தத்தில் நிகழ்ந்த காட்சிகளைக் கொண்ட மியூசியம்
(Grote Markt 34, Ieper )
(2) பஸ்செண்டேலே 1917 நினைவு மியூசியம்
(Memorial Museum Passchendaele 1917 )
முதலாம் உலக யுத்தத்தில் நிகழ்ந்த காட்சிகளை வரிசையாகக் காட்டும் மற்றொரு மியூசியம் 
(3) மெனின் கேட் மெமோரியல்
(Menin Gate Memorial)
பிரிட்டிஷ் மற்றும் காமன்வெல்த்  நாடுகளை சேர்ந்த  தொலைந்து போன படையினர் நினைவாக அமைந்த மியூசியம்
(4) எப்ரேஸ் க்ளோத் ஹால்
( Yepes Cloth Hall )
மீண்டும் கட்டப்பட்ட ப்லண்டேர்ச்ஸ் பில்ட்ஸ் மியூசியம்

No comments:

Post a Comment