பங்களாதேஷ் - சுற்றுலாத்தலம்
விடியற்காலையில் செயின்ட் மார்டின் தீவு
'பங்களாதேஷின்' (Bangladesh) வங்கக் கடலில் வடகிழக்குப் பகுதியில் உள்ளதே 'செயின்ட் மார்டின் தீவு'. (St Martin's Island). காக்ஸ் பஜார் (Cox's Bazar) மற்றும் 'தேனாப்' (Denab) எனும் பகுதிகளுக்கு இடையே ஓடும் 'நாப் நதி' (Naf Ribver) எனப்படும் நதியின் வாய் பகுதியில் இது உள்ளது. இந்தத் தீவை 'நாரிகல் ஜிஞ்சிரா' ( Narical Gingira) என்றும் கூறுகிறார்கள். அதன் அர்த்தம் தேங்காய் தீவு (coconut island) என்பதே.
செயின்ட் மார்டின் தீவு
Author: Shahnoor Habib (public domain)
செயின்ட் மார்டின் தீவுக்கு எப்படிப் போகலாம்
(How to go to St Martin's Island)
Author: Shahnoor Habib (public domain)
'செயின்ட் மார்டின் தீவு' கடல் மீது மிதக்கும் தக்கைகள் மீது ஏரி விளையாடும் மற்றும் நீச்சலடிக்கும் இடம் (snorkeling and diving spot) ஆகும். ஆனால் இங்கு வரும் அளவுக்கு மீறிய கூட்டத்தினால் அந்த தீவின் இயற்கை (Natural Beauty) அழகு பாழடைந்து விட்டது. ஆகவே இந்த தீவின் பல கடல் பிராணிகளை, முக்கியமாக கடல் ஆமைகளை (Sea Turtles) பாதுகாக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
அங்குள்ள பவழப் பாறைகளையும் (Coral Reef) வெட்டி எடுத்து (Harvested) வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதினால் இயற்கையின் சின்னம் அழிந்து அழிந்து போகின்றது என்பதினால், அங்கு செல்லும் பிரயாணிகள் அப்படிப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செயின்ட் மார்டின் தீவுக்கு எப்படிப் போகலாம்
(How to go to St Martin's Island)
இந்த தீவிற்கு செல்லவேண்டும் எனில் 'சிட்டகாங்' மற்றும் 'காக்ஸ் பஜாரில்' இருந்து படகில் பயணம் செல்ல வேண்டும்.
சூரிய அஸ்தமனத்தின்போது செயின்ட் மார்டின் தீவு.
Author: Shahnoor Habib (public domain)
No comments:
Post a Comment