யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம்
பெகேர்காட் நகரின் வரலாற்று சிறப்பு மிக்க மசூதி
(Read The original Article in
The Historic Mosque City of Bagerhat )
பெகேர்காட் நகரின் வரலாற்று சிறப்பு மிக்க மசூதி
(Read The original Article in
The Historic Mosque City of Bagerhat )
ஷாட் கம்புஜ் மசூதி Author: Nasir Khan Saikat (Creative Commons Attribution 3.0 Unported)
'பேகர்காட்' (Bagerhat) நகரின் வரலாற்று சிறப்பு மிக்க மசூதி (Mosque) முன்னர் 'கலிபடாபாத்' (Khalifatabad) என அழைக்கப்பட்டது. இதை 'பாரிசில்' (Paris) 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 முதல் 6 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன அமைப்பின் (World Heritage Committee ) அங்கத்தினர் கூட்டத்தில் பங்களாதேஷின் யுனேஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Site ) அங்கீகரித்தார்கள். இந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள கட்டிடங்களின் வேலைபாடுகள், பண்டைய காலத்தை சேர்ந்த இஸ்லாமிய சின்னங்கள் (Islamic monuments) மற்றும் பலதரப்பட்ட மசூதிகளின் (mosques) அற்புதமான அமைப்பைப் பார்த்தே அந்த தீர்மானம் நிறைவேறியது.
பேகர்காட்டின் மசூதி
Author: Nasir Khan Saikat (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Nasir Khan Saikat (Creative Commons Attribution 3.0 Unported)
இங்கு என்ன பார்க்கலாம்
(What to See in Historic Mosque City of Bagerhat)
இங்கு 'பேகர்காட்' நகரை சேர்ந்த 50 மசூதி சின்னங்களைக் காணலாம். அவற்றில் 'ஷட்கொம்புஜ் மசூதி' ( Shatgombuj Mosque), 'கான் ஜகானின்' கல்லறை ( the Mausoleum of Khan Jahan), 'சிங்கார்' (Singar), பீபி பேக்னி (Bibi Begni), ரிஸா கோடா ( Reza Khoda) மற்றும் ஜின்டாவீர் (Zindavir) போன்றவை உண்டு.
இந்த மையத்தில் உள்ள 60 தூண்களைக் கொண்ட ஷாட் கம்புஜ் மசூதி (Shat Gambuj Mosque) மிகவும் பிரபலமானது. 'பங்களாதேஷின்' மிகப் பழைய மசூதி என இதைக் கூறுகிறார்கள். இதை 15 ஆம் நூற்றாண்டில் உள்ளூரை சேர்ந்த 'கான் ஜகான் அலி' (Khan Jahan Ali) என்ற ஒரு முஸ்லிம் துறவி கட்டினாராம்.
இந்த மையத்தில் உள்ள 60 தூண்களைக் கொண்ட ஷாட் கம்புஜ் மசூதி (Shat Gambuj Mosque) மிகவும் பிரபலமானது. 'பங்களாதேஷின்' மிகப் பழைய மசூதி என இதைக் கூறுகிறார்கள். இதை 15 ஆம் நூற்றாண்டில் உள்ளூரை சேர்ந்த 'கான் ஜகான் அலி' (Khan Jahan Ali) என்ற ஒரு முஸ்லிம் துறவி கட்டினாராம்.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
இருப்பிடம் : N 22 40 00 E 089 48 00
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1985
பிரிவு : கலை
தகுதி : IV
உள்ள இடம்
(Location )
இந்த இடம் 'பேகர்காட்' நகரின் வெளிப்பகுதியில் உள்ளது. அதாவது 'பங்களாதேஷின்' தென்மேற்குப் பகுதியில் உள்ளது.
இருப்பிடத்தின் தரைப் படம்
(Location Map)
(Location Map)
'பேகர்காட்' நகரின் மசூதி உள்ள இடத்தைப் பெரிய
அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
அங்கு எப்படி செல்லலாம்
(Visiting Historic Mosque City of Bagerhat )
இங்கு சென்று பார்க்க 'டாக்காவில்' (Dhaka) தங்கி இருந்து அந்த ஹோட்டல் மூலம் உங்கள் வசதிக்கேற்ப பயண திட்டத்தை தேர்வு செய்து அவர்கள் மூலம் செல்வது சிறந்தது. 'டாக்காவில்' உள்ள ஹோட்டல்களின் விவரம் அறிய அதன் மீதே கிளிக் செய்யவும். இந்த இடம் 'டாக்காவில்' இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 'டாக்காவில்' இருந்து 'குல்னா' வரை சென்று அங்கிருந்து இன்னொரு பஸ்ஸைப் பிடித்தும் இங்கு செல்ல முடியும்.
No comments:
Post a Comment