கரை விலகிய பவளத்திட்டு
கரை விலகிய பவளத் திட்டு
'பெலிஸ்' (Belize ) நாட்டில் வடக்கு பக்கத்தில் உள்ள கரை விலகிய பவளத் திட்டு எனும் இயற்கையாக (Barrier Reef Reserve System) அமைந்து உள்ள பவழத்திட்டு (Barrier Reef) என்ற இடத்தில் கரையில் இருந்து விலகி உள்ள பவழப் பாறை (Offshore atolls) , மணல் திட்டுக்கள் (sand says), தீவுத் திட்டுக்கள் (Islets) , கிளைகளில் இருந்து வேர்கள் உண்டாகும் ஒரு வகை வெப்ப மண்டல மரங்கள் உள்ள காடு ( Mangrove forests), கடலோர உப்பங்கழி (coastal lagoons) மற்றும் நதி முகத்துவாரங்கள் (estuaries) போன்றவை சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு பரவி உள்ளது. இந்த
கரை விலகிய பவளத்திட்டு 'மெக்ஸ்சிகோ'வில் (Maxico) உள்ள 'கான்குனில்' (Cancun) இருந்து 'ஹோன்றுஸ்' வரை நீண்டு உள்ள 'மேசோமேரிகன்' (Mesoamerican) என்ற கரை விலகிய பவழத் திட்டின் தொடர்ச்சியாகும். அதுபோன்று ஆஸ்திரேலியாவில் (Australia) உள்ள மிகப் பெரிய பவழத் திட்டிற்கு அடுத்தபடியான பெரிய பவழத் திட்டு ஆகும்.
இது 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 முதல் 7 ழாம் தேதிவரை 'மெக்ஸிகோ' நாட்டின் 'மேரிடாவில்' (Merido) நடைபெற்ற உலக புராதான சின்ன மைய அங்கத்தினர் (World Heritage Committee) கூட்டத்தில் உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு 27 ஜூன் மாதம் 27 ழாம் தேதியன்று இந்த இடத்தை அழிய உள்ள இடமாக உலக புராதான சின்ன மையம் அறிவித்தது. அதன் காரணம் அந்த நாட்டின் வனப் பிரதேசங்களில் இருந்த காடுகளை அளவுக்கு மீறி அழிக்கத் துவங்கியதுதான். ஆகவே இனிமேல் சிறிது காலத்திற்கு அந்த காட்டில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது என்ற தடை போடப்பட்டது (Maratorium). அந்தத் தடை 2008 ஆம் ஆண்டு முதல் முடிவு அடைந்தது. ஆனால் அதற்குள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக 'பெலிஸ்' நாட்டின் பவழப் பாறைகள் நாசப்படுத்தப்பட்டு (Damaged) விட்டதாக விஞ்ஞானிகள் (Scientists) கூறுகிறார்கள். அதற்குக் காரணம் அங்கு ஏற்பட்ட புயல், கடல் உஷ்ணநிலை, சுற்றுப்புற உஷ்ண சீதோஷ்ண நிலை, கடல் மாசு அடைதல், சுற்றுலாப் பயணிகளின் அதிக எண்ணிக்கை, மீன் பிடிப்பு, போக்குவரத்து போன்றவைகளே என்கிறார்கள்.
உலகில் இப்படிப்பட்டவை உள்ள மூன்று இடங்களை அழிந்துவரும் இடமாக யுனெஸ்கோ புராதான சின்ன மையம் அறிவித்து உள்ளது. அவற்றில் இந்த இடம் மற்றும் கொலம்பியாவில் உள்ள லாஸ் கடியோஸ் தேசிய பூங்காவும் (Los Katios National Park of Colombia) அடக்கம்.
பெலிஸ் நகரில் மணல் திட்டுத் தீவு
Author: anoldent (Creative Commons Attribution 2.0)
கரை விலகிய பவளத் திட்டு
(What to See in Barrier Reef Reserve System)
இந்த இடத்தில் 960 கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டுள்ள ஏழு நீர்மட்டத்தின் கீழ் உள்ள கற்பாறை தடுப்புக்கள், 450 'கயேக்கள்'* மற்றும் மூன்று பவழப் பாறைகள் இயற்கையாக அமைந்து உள்ளன. 960 சதுர கிலோமேடேர்ஸ் . அங்குள்ள மற்றவை க்ளோவர் பாறை தடுப்புக்கள் (Glover's Reef Marine Reserve), பெரிய நீல நிறப் பள்ளம் (Great Blue Hole), இயற்கையாக அமைந்து உள்ள பிறை வடிவிலான 'கயே'* (Half Moon Caye Natural Monument), ஹோல்சான் கடல் பாறை தடுப்புகள் ( Hol Chan Marine Reserve), அம்பர்க்ரிஸ் 'கயே'* ( Ambergris Caye), 'கயே'* கவுல்கர் (Caye Caulker) 'கயே'* சேப்பல் (Caye Chapel), செயின்ட் ஜியார்ஜ் 'கயே'* (St. George's Caye), இங்க்லீஷ் 'கயே'* (English Caye), ரெண்டவஸ் 'கயே'* (Rendezvous Caye), க்லேட்டேன் 'கயே'* (Gladden Caye), ரங்குவானா 'கயே'* (Ranguana Caye), லாங் 'கயே'* (Long Caye), மகோ 'கௌஅஎ'* ( Maho Caye), பிளாக் பார்ட் 'கயே'* (Blackbird கே) மற்றும் த்ரீ கோர்னர் 'கயே'* (Three Coner Caye) போன்றவையும் உள்ளன.
{** கயே (Caye) = பவழம் மற்றும் கடல் மண் நிறைந்து உள்ள தீவு போன்ற சிறிய பகுதி }உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 16 45 0 W 87 3 30
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1996
பிரிவு : இயற்கை - அழிவுற்று வரும் நிலையில் உள்ள இடம்
தகுதி : VII, IX, X
பெலிஸ் உள்ள இடத்தைப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Barrier Reef Reserve System )
(Visiting Barrier Reef Reserve System )
இந்த இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும் என்றால் 'பெலிஸ்' நகரில் தங்கிக் கொள்ள வேண்டும். ஏதாவது வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு இங்குள்ளவற்றைக் காணலாம்.
'பெலிஸ்' நாட்டிற்கு செல்ல வேண்டும் எனில் 'பெலிஸ்' நகரில் உள்ள 'பிலிப் SW க்ரான்ட்சன் சர்வதேசிய விமான நிலையம்' {Philip SW Goldson International Airport (BZE)} செல்ல வேண்டும். அது பெலிஸ் நகரின் வட மேற்குப் பகுதியில் உள்ளது. இங்கு அமெரிக்காவின் (United States) மியாமி (Miami), ஹூஸ்டன் (Houstan) மற்றும் அட்லாண்டா (Atlanta) போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.
ஹோட்டல் மற்றும் உள்ளூர் பயணம்
(Hotel and Inside Tour )
'பெலிஸ்' நகரில் தங்கிக் கொள்ள வசதியாக ஹோட்டலில் அறைகளை (Hotels in Belize) முன் பதிவு செய்து கொள்ள ஹோட்டல் அறை மீது மீதே கிளிக் செய்யவும். உள்ளூரில் உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க வியாதர் என்ற நிறுவனத்தை அணுகலாம். அவர்களின் சேவை நல்ல முறையில் உள்ளது. வியதார் மீது கிளிக் செய்து அவர்களை தொடர்பு கொள்ளவும்.
'பெலிஸ்' நகரில் தங்கிக் கொள்ள வசதியாக ஹோட்டலில் அறைகளை (Hotels in Belize) முன் பதிவு செய்து கொள்ள ஹோட்டல் அறை மீது மீதே கிளிக் செய்யவும். உள்ளூரில் உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க வியாதர் என்ற நிறுவனத்தை அணுகலாம். அவர்களின் சேவை நல்ல முறையில் உள்ளது. வியதார் மீது கிளிக் செய்து அவர்களை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment