என்னுடைய இந்த தளம் உங்களுடைய 'சிட்டகாங்' (Chittagong) பயணத்துக்கு உதவும் வகையில் அனைத்து விவரங்களையும் தந்துள்ளது. சிட்டகாங் 'பங்களாதேஷின்' இரண்டாவது பெரிய நகரம் ஆகும். மேலும் 'சிட்டகாங்' மாகாணத்தின் நிர்வாகத் தலைநகரமும் ஆகும். 'பங்களாதேஷின்' (Bangladesh) தென்புறத்தில் உள்ள இந்த நகரமே அந்த நாட்டின் துறைமுகமாகவும் (entry Port) வடக்கு 'இந்தியப்' (India) பகுதிகள், 'நேபால்' (Nepal) , 'பூடான்' (Bhutan) , மற்றும் 'மயான்மார்' (Myanmar) போன்ற நாடுகளுக்கும் நுழை வாயில் துறைமுகமாக விளங்குகிறது. இன்று 'சிட்டகாங்' முக்கியமான சுற்றுலாப் பயண இடமாக உள்ளது. அங்கு உள்ள முக்கியமான சுற்றுலா இடங்களை கீழே தந்து உள்ளேன்.
டாக்கா
Author: Pervez Ahsan (public domain)
சிட்டகாங் செல்ல- விமானம் மூலம்
(Arriving in Chittagong By Plane)
வெளிநாட்டை சேர்ந்த பிரயாணிகள் 'ஷா அமானத்' சர்வதேசிய விமான நிலையத்துக்கே {(Shah Amanat International Airport (CGP)} வந்து இறங்குகிறார்கள். இந்த விமான நிலையமே இந்த நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். இங்கு 'கொல்கத்தா' ( Kolkata), 'குவைத்' ( Kuwait), 'ஷார்ஜா' (Sharjah ) மற்றும் 'மஸ்கட்' (Muscat) போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.
ரயில் பயணம்
(By Train)
இந்த நகருக்கு செல்ல 'டாக்கா' (Dhaka ) மற்றும் 'சில்ஹெட்'டில் (Sylhet) இருந்து ரயிலில் பயணம் செய்யலாம்.
சாலை வழியே
(By Road)
'காக்ஸ் பஜாரில்' (Cox Bazhar) இருந்து 'டாக்கா' செல்ல பஸ்கள் உள்ளன. அதில் சென்றால் மூன்று மணி நேரம் பிடிக்கும். 'டாக்கா'வில் இருந்து 'சிட்டகாங்' செல்ல ஆறு மணி நேரம் ஆகும்
நகரை சுற்றிப் பார்க்க
(Getting around Chittagong)
இந்தியா மற்றும் நேபால் நாடுகளைப் போல உள்ளூரை சுற்றிப் பார்க்க இந்த நாட்டிலும் நிறையவே சைக்கள் ரிக்ஷாக்கள் கிடைக்கும். அதன் கட்டணம் குறைவாகவே இருக்கும். ஆனால் அதில் ஏறிக் கொள்ளும் முன்னால் கட்டணத்தை பேசிக் கொண்டு விடவேண்டும். வெகு தூரம் செல்வதானால் டாக்ஸி அல்லது ஆட்டோவில் செல்லலாம்.
(Places of Interest in Chittagong)
(1) பைதுல் பால்லா
(Baitul Falah)
சிட்டகான்கின் மிகப் பெரிய மசூதி
(2) சந்தன்புரா மசூதி
(Chandanpura Mosque)
பழைய நகரில் பல குவிந்த மண்டபக் கூரைகளைக்
கொண்ட மசூதி
(3) கோர்ட் கட்டிடம்
(Court Building)
18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்பு
மிக்கக் கட்டிடம்
(4) மனித இன அறிவியல் துறை காட்சியகம்
(Ethnological Museum)
மலைவாழ் மக்களின் வாழ்க்கையைக்
காட்டும் காட்சியகம்
(5) போய்ஸ் ஏரி
(Foy's Lake )
1924 ஆம் ஆண்டு நீர் அணை கட்டப்பட்டபோது செயற்கையாக
ஏற்படுத்தப்பட்ட ஏரி
(6) படிங்கா கடற்கரை
(Patenga Beach)
சிட்டகாங்கின் அற்புதமான கடற்கரை பகுதி
(7) பைசிட் போஸ்தாமி புனித ஸ்தலம்
(Shrine of Baizid Bostami)
பங்களாதேஷி முஸ்லிம் துறவியின் புனித ஸ்தலம்
(8) இரண்டாம் உலக யுத்த வீரர் கல்லறை பகுதி
(World War II Cemetery)
இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிர் துறந்த குடியரசு
நாடுகளை சேர்ந்த 700 படை வீரர்கள் அடக்கம்
செய்யப்பட்ட கல்லறை பகுதி.
No comments:
Post a Comment