பென்சியோனி
( Read Original Article in :- Pensioni in Italy)
'பென்சியோனி' (Pensioni) என்பது ஒன்று அல்லது இரண்டு நட்சத்திர ஹோட்டல் (one or two star hotel) வசதிகளைக் கொண்ட தங்குமிடம். உண்மையில் இது தனியார் குடும்பத்தினர் சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்குத் தரும் இருப்பிடத்தை (Family run inns) அல்லது சிறிய விருந்தினர் தங்கும் இருப்பிடங்களைக் (Guest Houses) குறிக்கும்.
அந்த மாதிரியான அறைகளில் தங்கி 'இத்தாலி'யர்கள்(Italians) எப்படி வாழ்கையை நடத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த மாதிரியான அறைகள் சுத்தமாகவே இருக்கும். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் (service friendly) கிடைக்கும். ஆனால் பழைய கட்டிடங்களில் உள்ள 'பென்சியோனி'கள் அதிக வெளிச்சம் இல்லாமல் சற்று இருட்டாகவே (not well lit) இருக்கும் . மேலும் அதில் உள்ள தண்ணீர் குழாய்கள் (plumbic) தாறுமாறாக (erratic) இருக்கும்.
கலப்ரியேன் ரிக்கார்டி பென்சியோனி
Author: Manfred Morgner (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Manfred Morgner (Creative Commons Attribution 3.0 Unported)
சில 'பென்சியோனி'களில் படுக்கும் அறைக்கு உள்ளேயே குளியல் அறையும் (Attached Bath) கொண்டதாக இருக்கும். ஆனால் அங்கு குளிக்கும் தொட்டி (Bath Tub) இருக்காது. அதக்குப் பதில் தலை மீது நீர் பொழியும் சல்லடைக் குழாய்கள் (Showers) இருக்கும். அனைத்து பென்சியோனியோக்களிலும் நாம் இஷ்டப்பட்ட நேரத்தில் இரவில் செல்ல முடியாது. அதாவது அவை 24 மணி நேரமும் (No 24 hour front desk) திறந்து இருக்காது. இரவு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னால் (certain time) அதன் கதவுகளை மூடி விடுவார்கள். ஆகவே இரவு திரும்பி வர நேரமாகும் எனில் (if going to be late) முதலிலேயே அவர்களிடம் கூறி விட்டால் (Inform) கதவை திறப்பார்கள்.
'பென்சியோனி'களைத் தவிர 'லோகண்டா' (Locanda) அல்லது 'இன்ஸ்' (Inns) எனப்படும் தங்கும் இடங்களும் உள்ளன. அந்த இடங்களில் தங்கும் இடம் மட்டும் அல்ல உணவும் கிடைக்கும். ஆனால் தற்போது குறைந்தக் கட்டண இடங்களான 'லோகண்டா' என்ற பெயர் மறைந்து போய் அனைத்து தங்கும் இடங்களையும் 'பென்சியோனி' என்றே அழைக்கின்றார்கள்.
No comments:
Post a Comment