காக்ஸ் பஜார் னும் இடத்தில் உலகிலேயே மிக நீண்ட கடற்கரை
Author: Ziaul Hoque (Creative Commons Attribution 2.0)
'பங்களாதேஷ்' ( Bangladesh) சுற்றுலாக் குறிப்புக்கள் மூலம் உங்கள் அனைவருக்கும் 'பே ஆப் பெங்காலின்' கடற்கரையில் உள்ள தெற்கு ஆசியாவின் ஒரு நாட்டின் விவரங்களை தந்து உள்ளேன்.
பங்களாதேஷ் தேசிய சபைக் கட்டிடம்
தனது மூன்று பக்க எல்லைகளை 'இந்தியா'வுடனும் (India) , தென்கிழக்குப் பக்கத்தின் எல்லையை 'மயன்மார்' (Myanmar) எனும் நாடுடனும் வைத்துக் கொண்டு தெற்குப் பக்கத்தில் வங்கக் கடலை பார்த்தபடி அமைந்துள்ள தென் ஆசிய நாடே 'பங்களாதேஷ்' (Bangladesh) எனும் நாடு. 1972 ஆம் ஆண்டு அந்த நாடு 'பாகிஸ்தான்' (Pakistan) நாட்டில் இருந்து பிரிந்தது. 'பங்களாதேஷில்' உள்ளவர்கலின் வாழ்கை பல விதங்களிலும் 'இந்தியா'வின் மேற்கு வங்க மாநிலத்தின் உள்ளவர்களின் வாழ்கையை ஒத்து உள்ளது. அவர்களின் மொழிக் கூட ஒன்றாகவே உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 147,570 சதுர கிலோமீட்டர், ஜனத்தொகை, 147 மில்லியன் . அந்த நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளிடையே பெரிய அளவில் இடைவெளி உள்ளது. அந்த நாடும் நல்ல வளமான நாடு அல்ல. உலகிலேயே மிக நீளமான கடற்கரை மற்றும் மிகப் பெரிய சதுப்பு நிலக் காட்டையும் 'பங்களாதேஷில்' பார்க்க முடியும். நாட்டின் சீதோஷ்ண நிலை 20°C முதல் 30°C வரை உள்ளது.
பங்களாதேஷின் செயின்ட் மார்டின் தீவில் உள்ள பவழப் பாறைகள்
பங்களாதேஷுக்கு செல்ல வேண்டுமா
'பங்களாதேஷு'க்கு செல்ல விசா தேவை. அதை உங்கள் நாட்டில் உள்ள 'பங்களாதேஷ்' தூதரகத்திலோ அல்லது அண்டை நாடுகளில் உள்ள அவர்களின் தூதரகம் மூலமோ பெற்றுக் கொள்ளலாம். அதற்கான கட்டணங்கள் 'அமெரிக்கர்களுக்கு' (Americans) US$131; 'ஆஸ்திரேலிய' (Australians) குடிமக்களுக்கு A$150; 'கனடா'வை (Canadians) சேர்ந்த குடிமக்களுக்கு C$80, மற்றும் 'பிரிட்டனை' (British) சேர்ந்த குடிமக்களுக்கு £40 ஆகும்.
விமானம் மூலம்
'பங்களாதேஷின்' முக்கியமான சர்வதேச விமான நிலையம் 'டாக்காவில்' (Dhaka) உள்ள 'ஷாஜலால் விமான நிலையமே (Shahjalal International Airport). அங்கு செல்லும் சில விமான சேவை நிறுவனங்கள் GMG ஏர்லைன்ஸ், கத்தார் (Qatar) ஏர்வேஸ் , எமிரேட்ஸ் (Emirates) மற்றும் ஏடிஹாட்(Etihad) ஏர்வேஸ் (Airways) போன்றவை ஆகும்.' டாக்கா'வில் இருந்து 'கோலாலம்பூர்' (Kuala Lumpur) செல்லும் ஏர் ஏசியா (AirAsia) விமான சேவை நிறுவனம் கட்டண குறைவான சேவையை அளிக்கின்றது.
உள்ளூரில் சுற்றுப் பயணம் செய்பவர்கள் அதிக நெருக்கமான உள்ளூர் பஸ்களில் பயணம் செய்வதை தவிர்த்துவிட்டு குளிர் சாதனம் பொருத்தப்பட்டு உள்ள கிரீன் லைன் (Green Line) மற்றும் சில்க் லைன் (SilkLine) போன்ற பஸ்களில் செல்வது பயணக் களைப்பைப் போக்கும்.
கலியா ஜுயே ஆலயம், தினாஜ்பூர் மாவட்டம்
பங்களாதேஷின் முக்கியமான நகரங்கள்
(Principal Cities of Bangladesh)
(Dhaka )
'பங்களாதேஷின்' தலை நகரம் மற்றும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரம்
(Chittagong)
'பங்களாதேஷின்' இரண்டாவது பெரிய நகரம் மற்றும் அந்த நாட்டின் துறைமுகப் பகுதி
(Khulna)
'பங்களாதேஷின்' மூன்றாவது பெரிய நகரம் மற்றும் அந்த நாட்டின் வணிக மற்றும் தொழில்சாலைகள் (Industries) நிறைந்த இடம்.
(Rajshahi)
'பங்களாதேஷின்' நான்காவது பெரிய நகரம் மற்றும் பட்டு (Silk) தயாரிப்பு மற்றும் மாம்பழம் (Mangoes) போன்ற பழங்கள் நிறையக் கிடைக்கும் ஊர் .
(Sylhet)
'பங்களாதேஷின்' வடகிழக்குப் பகுதியில் உள்ள அந்த நாட்டின் மிகப் பணக்கார நகரம்.
(Barisal)
'பங்களாதேஷின்' வங்கக் கடற்கரையில் உள்ள பழைய துறைமுகப் பகுதி (Old port)
(Rangpur)
'பங்களாதேஷின்' வடமேற்குப் பகுதியில் உள்ள இந்த நகரம் பெரிய வியாபார மற்றும் வணிக கேந்திரம் மற்றும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரம்.
(Char Atra)
'பங்களாதேஷின்' கங்கை நதிக் கரையில் உள்ள சிறு தீவு.
(Cox's Bazar)
'பங்களாதேஷின்' முக்கியமான கடற்கரை
(Rangamati)
'பங்களாதேஷின்' கிராமப்புறம். பல மலைவாழ் குடி மக்களை அங்கு பார்க்கலாம்.
(St. Martin's Island)
'பங்களாதேஷின்' வடகிழக்குப் பகுதியில் வங்கக் கடலில் உள்ள பவழப் பாறைகள் தீவு.
யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Bangladesh)
(Historic Mosque City of Bagerhat)
முன்னர் 'காலிபதாபாத்' (Khalifatabad) என அழைக்கப்பட்ட இந்த நகர் வரலாற்று சிறப்பு மிக்க மசூதிகள் உள்ள இடம்.
'பங்களாதேஷின்' முக்கியமான புத்த விஹாராக்களின் சிதைவுகள்உள்ள இடம்
(The Sundarbans)
உலகிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலத்தில் கிளைகளில் இருந்து
வேர்கள் உண்டாகும் ஒரு வகை வெப்ப மண்டல மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதி.
வேர்கள் உண்டாகும் ஒரு வகை வெப்ப மண்டல மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதி.
No comments:
Post a Comment