யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம்
சோமபுரா மகாவிஹாரா
(Read Original Article in Somapura Mahavihara)
Somapura Mahavihara, Paharpur, Bangladesh
Author: Man (Creative Commons Attribution 2.0)
(Read Original Article in Somapura Mahavihara)
Somapura Mahavihara, Paharpur, Bangladesh
Author: Man (Creative Commons Attribution 2.0)
'பங்களாதேஷின்' ( Bangladesh) பஹார்பூரில் (Paharpur) உள்ள 'சோமபுரா மகாவிஹாரா' (Somapura Mahavihara) என்ற இடம் புத்த விஹாராக்களின் (Buddhist viharas) முக்கியமான புராதான சின்ன மையம் ஆகும். இதை 'பாரிசில்' (Paris) 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 முதல் 6 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன அமைப்பின் (World Heritage Committee ) அங்கத்தினர் கூட்டத்தில் 'பங்களாதேஷின்' யுனேஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Site ) அங்கீகரித்தார்கள்.
'சோமபுரா மஹா விஹாராவின்' அற்புதமான ஒன்றுக்குள் ஒன்று பின்னியபடி ஒரே சீராக அமைக்கப்பட்டு உள்ள வடிவமைப்புக்கள் இந்த புராதான சின்ன அங்கீகாரத்துக்கு அடிப்படையாக உள்ளது. இங்குள்ள கட்டிட அமைப்பு 'கம்போடியா'வின் (Cambodia) 'புத்த விஹாரா'க்களின் கட்டிட அமைப்புக்கு அடித்தளமாக இருந்துள்ளது. முன்னர் 'பலா' (Pala) என்பவர் ஆட்சி காலத்தில் 'பெங்காலில்' (Bengal) கட்டப்பட்டு இருந்த ஐந்து விஹாராக்களில் இதுவும் ஒரு மகாவிஹாரா ஆகும். அந்த ஐந்து மகாவிஹாராக்களும் ஒன்றுடன் ஒன்றிணைந்து பணியாற்றி வந்துள்ளன.

781-821 AD ஆண்டில் 'தர்மபாலா' (Dharmapala) என்ற இரண்டாம் 'பலா' மன்னன் ஆட்சியில் இந்த விஹாரா கட்டப்பட்டு உள்ளதாக அங்கு புதைந்து இருந்த சில எழுத்துக்களைக் கொண்ட மண் பொருட்கள் (Clay Seals) மூலம் அறிய முடிகின்றது.
சோமபுரா மகாவிஹாரா கட்டிடத்தில்
மண் சிலை அமைப்புக்கள்
Author: Farhana Azad (Creative Commons Attribution ShareAlike 3.0)
மண் சிலை அமைப்புக்கள்
Author: Farhana Azad (Creative Commons Attribution ShareAlike 3.0)
சோமபுரா மகாவிஹாராவில் என்ன பார்க்கலாம்
(What to See in Ruins of Somapura Mahavihara)
இங்குள்ள புத்த மகா விஹாராக்களில் 177 சிறிய அறைகளும் (Cells) அவற்றின் நடுவில் ஒரு பெரிய ஸ்தூபியும் (Sthupa) அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிறிய அறைகள் அங்கு வந்த துறவிகள் (Monks) தியானம் செய்ய அமைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள புத்த (Budha) , ஜைன (Jain) மற்றும் ஹிந்து (Hindu) மத தர்மத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஒரு மையமாக இருந்துள்ளது.
இங்குள்ள கட்டிடங்கள் இந்திய ஆலயங்களைப் போல அல்லாமல் 'காம்போடியா' (Cambodia) , 'மயன்மார்' (Myanmar) மற்றும் 'ஜாவா' (Java) போன்ற இடங்களில் உள்ள ஆலயக் கட்டிடங்களை ஓத்து உள்ளது. ஆனால் இங்குள்ள விஹாராக்கள் 781-821 AD ஆண்டில் கட்டப்பட்டவை என்பதினால் அந்த நாடுகளில் உள்ள விஹாராக்களை விடப் பழமையானது. அந்த நாடுகளில் உள்ள ஆலயக் கட்டிட அமைப்புக்களில் காணப்படும் பிரமிட் போன்ற (Pyramid) அமைப்பு, தரை, மேல் தளங்களின் அமைப்பு போன்றவை அநேகமாக ஒன்றுடன் ஒன்று ஓத்து உள்ளன. ஆனால் அந்தக் கட்டிடக் கலையை ஆராயும்போது இந்தியா மற்றும் தென் ஆசியப் பகுதிக் கட்டிடக் கலைகள் ஓத்து உள்ளதும் தெரிகின்றது.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 25 2 E 88 59
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1985
பிரிவு : கலை
தகுதி : I, II, VI
உள்ள இடம்
(Location Somapura Mahavihara )
'பங்களாதேஷின்' ( Bangladesh) வடமேற்குப் பகுதியில் உள்ள பஹார்பூரில் (Paharpur) 'சோமபுரா மகாவிஹாரா' (Somapura Mahavihara) உள்ளது.
இது உள்ள தரைப் படம்
(Location Map)
(Location Map)
சோமபுர மகாவிஹாரா உள்ள இடத்தை பெரிய அளவில்
காண அந்த தரை படத்தின் மீது கிளிக் செய்யவும்.
அங்கு எப்படி செல்லலாம்
(Visiting Somapura Mahavihara )
இங்கு சென்று பார்க்க 'டாக்காவில்' (Dhaka) தங்கி இருந்து அந்த ஹோட்டல் மூலம் உங்கள் வசதிக்கேற்ப பயண திட்டத்தை தேர்வு செய்து அவர்கள் மூலம் செல்வது சிறந்தது. 'டாக்காவில்' உள்ள ஹோட்டல்களின் விவரம் அறிய அதன் மீதே கிளிக் செய்யவும். இந்த இடத்திற்கு நம்மை நேரடியாக அழைத்துச் செல்ல நம்பிக்கை வாய்ந்த சுற்றுலா நிறுவனத்தை நான் இதுவரைக் காணவில்லை. அங்கு செல்ல வேண்டும் எனில் அங்கும் இங்கும் விசாரித்துக் கொண்டேதான் செல்ல வேண்டி உள்ளது.
No comments:
Post a Comment