துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, August 27, 2011

மோஸ்ட்டர் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : மோஸ்டரின் பழைய பாலம்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
மோஸ்டரின் பழைய பாலம்
(Read Original Article in :- Old Bridge of Mostar)



Stari Most, Mostar, Bosnia Herzegovina
ஸ்டேரி மோஸ்ட், மோஸ்டர்
Author: Mhare (Creative Commons Attribution ShareAlike 2.5)

'மோஸ்டரின்' பழைய பாலம் (Old Bridge of Mostar) என்பது 'போஸ்னியா-ஹேர்சிகோவினா'வின் (Bosnia-Herzegovina) பழைய நகரமான 'மோஸ்ட்டரின்' பண்டைய  பண்பாட்டை (Multi Cultural) எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து உள்ளது. 'நேரேட்வா' நதிக்கு (Neretva River) இடையே அமைந்துள்ள பாலம் 'ஓட்டமன்' ஆட்சிக்கு முன்னர் (Pre -Ottaman), கிழக்கு ஓட்டமன் பகுதிகள் (eastern Ottoman), மத்திய தரைக்கடல் (Mediterranean) மற்றும் கிழக்கு ஐரோப்பிய (western European) போன்ற அனைத்து இடங்களிலும் கட்டப்பட்டு உள்ள கட்டிடக் கலைகளின் தொகுப்பாக உள்ளது. இன்றைக்கு அதை 'ஸ்டேரி மோஸ்ட்' (Stari Most) அதாவது 'பழைய பாலம்' (Old Bridge) என்று அழைக்கின்றார்கள். 1557 ஆம் ஆண்டில் முதலில் அங்கிருந்த உறுதியற்ற (Unstable) உடையும் நிலையில் இருந்த மரப் பாலத்திற்கு மாற்றாக இந்த பாலத்தை 'சுலைமான்' என்ற பேரரசர் (Suleiman the Magnificent) கட்டினார்.
இதை வடிவமைத்தவர் 'ஓட்டமானை' சேர்ந்த கட்டிடக் கலைஞ்சரான 'மிமார் ஹேருட்டின்' (Mimar Hayruddin) என்பவர் ஆவார். இதைக் கட்ட ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று. நதியில் இருந்து 24 மீட்டர் உயரத்தில் (above the river) அமைந்துள்ள இந்த பாலம் 30 மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும் கொண்டது .  இரண்டு முனைகளிலும் அதாவது வடகிழக்கில் 'ஹெலிபிஜா' கோபுரம் (Helebija Tower) மற்றும் தென் மேற்குப் பகுதியில் 'தாரா' என்ற கோபுரத்தையும் (Tara Tower) கட்டி பாலத்தை பலப்படுத்தி உள்ளார்கள். இந்த இரண்டு கோபுரங்களையும் பாலத்தை பாதுகாப்பவர் (bridge keepers) என்ற அர்த்தம் தரும் சொலான 'மோஸ்டாரி' (mostari) என அழைத்தார்கள். அதுவே பின்னர் 'மோஸ்ட்டர்' என ஆயிற்று.
1993 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் ஒன்பதாம் தேதியன்று 'போஸ்னிய' கலவரத்தின் போது இந்த பாலத்தை 'க்ரோஷிய' (Crotia) பாதுகாப்புப் படையினர் நாசம் செய்தார்கள். { அந்த நேரத்தில் 'க்ரோஷியப்' படைத் தலைவராக இருந்த 'ஸ்லோபோடன் ப்ரல்ஜாக்' (Slobodan Praljak) என்பவர் பாலத்தை உடைத்த யுத்தக் குற்றத்திற்காக யுகோஸ்லாவியா (Yugoslavia) சர்வதேச நீதி மன்றத்தில் (International Criminal Tribunal) தற்போது குற்றவாளியாக நிறுத்தப்பட்டு உள்ளார்}. அங்கு யுத்தம் நின்று விட்டப் பின் அந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவும், அதனுடன் முன்னர் இருந்த பழைய பாலத்தை சீரமைக்கவும் யுனெஸ்கோ நிறுவனம் ஒரு விஞ்ஞான குழுவை அனுப்பியது. புதுப்பிக்கப்பட்ட அந்த பாலம் 2004 ஆம் ஆண்டு ஜூலை (July) மாதம் 23 ஆம் தேதியன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. ஆகவே 'தென் ஆப்ரிக்கா'வின் (South Africa) 'டர்பன்' (Durban) நகரில்  2005 ஆம் ஆண்டு ஜூலை (July) மாதம் 10 முதல் 17 ழாம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன மையத்தின் அங்கத்தினர்கள் (World Heritage Committee) கூட்டத்தில் பழைய நகரமான 'மொன்ஸ்டேரை' யுனெஸ்கோ புராதான சின்ன அமைப்பாக ( UNESCO World Heritage Site) அங்கீகரித்தார்கள். மீண்டும் புதுப்பிக்கப்பட்டாலும் அந்த பழைய பாலம் தனித் தன்மை (exceptional ) கொண்டது என்றும் பலவிதமான  கலாச்சாரம், வாழ்கை முறை, மதக் கோட்பாடு போன்றவற்றைக் கொண்டவர்கள்  ஒன்று சேர்ந்து (coexistence of communities) வாழ்ந்த அந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள உலக சின்னம் (universal symbol) எனக் கருதுகிறார்கள்.
 ஸ்டேரி மோஸ்ட் எனும் மோஸ்டரின் பழைய பாலத்தைப் (Stari Most, the Old Bridge of Mostar) பற்றிய செய்தியை பூமியின் ஆவணப் படவர்ணனை (Earthdocumentary) என்ற என்னுடைய இணையதளத்திலும் காணலாம்.
Mostar Old Town Panorama
ஸ்டேரி மோஸ்ட்
பழைய மோஸ்டர் சிறு நகரம்
Author: Ramirez (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic

Stari Most, Mostar, Bosnia Herzegovina
ஸ்டேரி மோஸ்ட்
Author: Staff Sgt. Samuel Bendet (public domain)

Stari Most, Mostar, Bosnia Herzegovina
ஸ்டேரி மோஸ்ட்
Author: Christian Bickel (Creative Commons Attribution 2.0)

Stari Most, Mostar, Bosnia Herzegovina
ஸ்டேரி மோஸ்ட்
Author: Peccafly (public domain)

Neretva River, Mostar
நேரிட்வா நதி (31 December 2006)
© Timothy Tye using this photo

Tim at the Stari Most, Mostar
ஸ்டேரி மோஸ்ட்தில் டிம் (31 December 2006)
© Timothy Tye using this photo


உலக புராதான மைய விவரம்
(World Heritage Site Inscription Details)

உள்ள இடம் : N 43 20 53.2 E 17 48 39.3
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2005
பிரிவு : கலை
தகுதி : VI

ஸ்டேரி மோஸ்ட் உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Mostar )

இந்த மையத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் சரஜிவோவில் தங்கிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து நீங்கள் தங்கி உள்ள ஹோட்டல் மூலமோ இல்லை தனி வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டோ அங்கு செல்லலாம். சரஜிவோவில் இருந்து மோஸ்டருக்கு செல்ல நிறைய பஸ்கள் உள்ளன. 'க்ரோஷியாவில்' உள்ள 'ப்ளோஸ்' (Ploce) அல்லது 'துப்ரோன்விக்' (Dubrovnik) போன்ற இடங்களில் இருந்தும் அங்கு செல்லலாம்.
போஸ்னியா -ஹீர்சிகோவினிய (Hotels in Bosnia-Herzegovina ) வில் உள்ள தாங்கும் ஹோட்டல்களைப் பற்றி அறிய அதன் மீதே கிளிக் செய்யவும். அல்லது ஹோட்டல்ஸ் வோர்ட்வைட் (hotels worldwide.) என்பதில் பார்க்கவும்

No comments:

Post a Comment