'சான் கியோர்கியோ மக்கியோரே பேசிலிக்கா' வில் இருந்து
பார்த்தால் தெரியும் வெனிஸ்
Author: Tango7174 (Creative Commons Attribution 3.0 Unported)
பார்த்தால் தெரியும் வெனிஸ்
Author: Tango7174 (Creative Commons Attribution 3.0 Unported)
இந்த இணையதளத்தின் மூலம் வெனிஸ் (Venice) நகரில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெரிவித்து உள்ளேன். அங்கு என்ன இடங்களுக்குச் செல்லலாம் (Major sights) , தங்கும் இடங்கள் (Accomodation) , உணவு (Food) மற்றும் வெனிஸ் குறித்த அனைத்து செய்திகளையும் தந்து உள்ளேன்.
'சான் கியோர்கியோ மக்கியோரே'வின் 'கோண்டோலோஸ்'
எனப்படும் படகுகள் Author: Mestska (Creative Commons Attribution 3.0 Unported)
எனப்படும் படகுகள் Author: Mestska (Creative Commons Attribution 3.0 Unported)
வெனிஸ் நகரத்தின் ஜனத்தொகை 272,000 . இது இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. இது வேனேடோ என்ற மாகாணத்தின் தலை நகரமாகும். அட்ரியாடிக் கடல் (Adriatic Sea) பகுதியில் உள்ள வெனிஷியன் லகூன் (Venetian Lagoon) எனும் இடத்தில்தான் வெனிஸ் அமைந்து உள்ளது. அந்த லகூனில் உள்ள தீவுகளில்தான் (built on islands) வெனிஸ் அமைக்கப்பட்டது. தீவுகளின் இடையே அமைந்துள்ள வெனிஸ் நகரின் குறுக்கே நிறைய தண்ணீர் ஓடும் வாய்க்கால்கள் உள்ளன. அந்த நகரத்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்க அவற்றின் குறுக்கே அமைந்து உள்ள வாய்க்கால்கள் மீது பாலங்கள் (bridges) போடப்பட்டு உள்ளன.
இத்தாலியின் முக்கியமான சுற்றுலா இடம் என்பதினால் முதன் முறையாக (First time visitors) வெனிஸ்சிற்குச் செல்லும் பயணிகள் அங்கு குறுகலாக உள்ள சாலைகளில் (Narrow Alley) காணும் மக்களின் கூட்டத்தைக் கண்டு வியப்பு அடைவார்கள். அந்த நிலை வருடம் முழுவதும் இருக்கும். சில மாதங்களில் அங்கு கூட்டம் மிக அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் அங்குள்ள செயின்ட் மார்க்ஸ் ஸ்கொயர் (St Mark 's square) என்ற இடத்தில் நிற்க்கக் கூட முடியாது. அந்தக் கூட்டம் மீண்டும் கலைந்து சென்றப் பிறகு நிதானமாக அங்கு சென்று நின்று கொண்டு அதன் அழகை ரசிக்கலாம்.
வெனிஸ் பண்டிகை
Author: Robertito1965 (public domain)
'வெனிஸ்சின்' வரலாறு (History of Venice)
Author: Robertito1965 (public domain)
'வெனிஸ்சின்' வரலாறு (History of Venice)
வரலாற்றுக் குறிப்புக்கள் இல்லாத நிலையில் ஜெர்மனியை சேர்ந்த (Germanic) மலை ஜாதியினர் (tribes and Huns) படை எடுப்பினால் (Attacks) அவதிப்பட்ட 'படுவா' (Padua) , 'அக்விலியா' (Aquileia), 'ட்ரைவிஸ்கோ' (Trevisco), 'அல்டினோ' (Altino) மற்றும் 'கன்கோர்டியா' (Concordia) போன்ற ரோமானியர்கள் 'வெனிஸ்சிற்கு' இடம் பெயர்ந்து வந்து தங்கினார்கள் என்றே வரலாற்று வல்லுனர்கள் நம்புகிறார்கள். ஆகவே 'ரியால்டோ' (Riyalto) எனும் தீவுத்திட்டில் 'சான் ஜகபோ' (San Jacopo) என்ற சர்ச் அமைக்கப்பட்ட AD 421 ஆண்டே வெனிஸ் நகரின் ஆரம்பம் என்று நம்புகிறார்கள்.
12 ஆம் நூற்றாண்டில் வெனிஸ் நகரம் மிக முக்கியமான வியாபாரக் நகரமாக ஆயிற்று. அட்ரியாடிக் கடல் பகுதியில் அது முக்கியமான வியாபார மற்றும் கடற்படை கேந்திரமாக விளங்கியது. பைசன்டையின் ராஜ்ஜியம் (Byzantine Empire) மற்றும் இஸ்லாமிய நாடுகளில் (Islamic world) இருந்து ஏற்றுமதியான பொருட்கள் இங்கு வரத் துவங்கின. ஆகவே நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும், கடற்கொள்ளையர்களின் கொள்ளையை தடுக்கவும் அட்ரியாடிக் கடலோரப் பகுதிகளில் வெனிஸ் அரசு பல ராணுவ மையங்களை (Military Stations) அமைத்தது. 'துர்கியர்கள்' மற்றும் 'நார்மன்' இன மக்களின் படையெடுப்பை தடுக்க உதவிய 'கோன்ஸ்டண்டினோபில்' (Constantinople) நாட்டுடன் அதிக உறவை ஏற்படுத்திக் கொண்டது.
ரியால்டோ பாலம் அருகில் சாலையில் கடை
Author: Abxbay (public domain)
Author: Abxbay (public domain)
13 ஆம் நூற்றாண்டில் 'இத்தாலி'யின் மிகப் பெரிய பணக்கார நகரமாக 'வெனிஸ்' விளங்கியது. அந்த நகரை மெத்தப் படித்த பெரிய மக்கள் (Noble families) நிர்வாகித்து வந்தார்கள். அந்த நகரை நிர்வாகிக்க தமக்கு கீழ் பல அதிகாரிகளை (public officials) வைத்துக் கொண்டார்கள். மேலும் 200 முதல் 300 பேர்களை பொது நிர்வாக சபை (Senate members) உறுப்பினர்களாக நியமித்தார்கள். அந்த நிர்வாக சபைக்கு 'டோகி' (Doge) அல்லது 'டியூக்' (Duke) என்ற தலைவரையும் நியமித்தனர். அந்த தலைவர் (Ceremonial head) அந்த நகரத்தின் தலைவராக தமது ஆயுள் காலம் வரை (Held for life) பொறுப்பில் இருப்பார்.
15 ஆம் நூற்றாண்டில் 'ஒட்டோமான்ஸ்' (Ottomans) என்பவர்களை எதிர்த்து 'திசலோனிக்கா' (Thessalonica) என்பவர்கள் நடத்திய யுத்தத்தில் 'திசலோனிக்கா'விற்கு ஆதரவாக 'வெனிஸ்' நின்றதும் அதன் வீழ்ச்சி துவங்கியது. மேலும் துர்கிக்கு எதிராக யுத்தம் புரிந்த 'கோன்ஸ்டண்டினோபில்' என்பவர்களுக்கு 'வெனிஸ்' தமது யுத்தக் கப்பல்களை (Ships) அனுப்பி உதவியது. ஆனால் அந்த யுத்தத்தில் 'சுல்தான் மெஹ்மெட் II' (Sultan Mehmet II) என்பவர் வெற்றி பெற்றதும் இல்லாமல் 'வெனிஸ்' நகரம் மீதும் யுத்தத்தை துவக்கினார். சுமார் 30 வருடங்கள் நடந்த அந்த யுத்தத்தில் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளை வெனிஸ் இழந்தது. மேலும் புதிய உலகைக் கண்டு பிடிக்கக் கிளம்பிய 'கிறிஸ்டோபர் கொலம்பஸ்' (Christopher Columbus) இந்தியாவுக்கு செல்லும் புதிய கடல் வழிப் பாதையைக் (new sea route to India) கண்டு பிடிக்கவும் வெனிஸ் நகரின் வர்த்தகம் பெருமளவில் சரிந்தது.
1348 மற்றும் 1575 முதல்1577 ஏற்பட்ட வன்முறையில் பலர் உயிர் (Black Death) இழந்தனர். அதன் பின் 1650 ஆம் ஆண்டு மீண்டும் ஏற்பட்ட பிளேகு (Plague ) நோயினாலும் பலர் உயிர் இழந்தனர். அந்த நகரின் ஜனத்தொகை வெகுவாகக் குறைந்தது. அதன் இடையே ஐரோப்பியாவில் போர்துகேயர்களின் (Portugal) வருகையினால் போர்துகீசிய நாட்டின் வர்த்தகமே கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தது.
வெனிஸ்சின் மிகப் பெரிய வாய்க்கால்
Author: Yair Haklai (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Yair Haklai (Creative Commons Attribution 3.0 Unported)
1100 வருடங்களாக சுதந்திர நாடாக இருந்த 'வெனிஸ்' 1797 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று 'நெப்போலியன் போனபார்டே' (Napoleon Bonaparte) வசம் வீழ்ந்தது. அடுத்த ஐந்து மாதத்தில் (5 months) நெப்போலியன் 'ஆஸ்திரியாவுடன்' (Austriya) ஏற்படுத்திக் கொண்ட 'கேம்போ பார்மியோ' (Campo Formio) எனும் ஒப்பந்தத்தின்படி (Treaty) 1805 ஆண்டு வரை 'ஆஸ்திரியாவின்' வசம் 'வெனிஸ்' நகரை ' ஒப்படைத்தார். 1814 ஆம் ஆண்டு 'நெப்போலியன்' யுத்தத்தில் தோற்றுப் போனதும் 'ஆஸ்திரியா' வெனிஸ் நகரை தனது ஆதிக்கத்தில் இருந்த 'லோம்பர்டி வேனிசியா'வுடன் (Lombardy-Venetia) இணைத்துக் கொண்டது. மீண்டும் 1866 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது 'இத்தாலி' நாட்டு யுத்தத்தின் (Third Italian War) பிறகு 'வெனிஸ்' நகரம் இத்தாலிய ராஜ்ய ஆட்சியின் கீழ் வந்தது.
இரண்டாவது உலக யுத்தத்தின்போது (Second World War) 'வெனிஸ்' நகரம் அதிக பாதிப்பை அடையவில்லை என்றாலும் 'படுவா'விற்குச் (Padua) செல்லு ரயில் பாதையும் (Train Lines) 'மிஸ்திரி' மற்றும் 'மார்கேரா' (Mestre and Marghera) எனும் தொழில்சாலைகள் நிறைந்த நகரங்களின் மீது குண்டு மழை (repeated bombings) பொழிந்தது.
ஆங்கிலேயப் பெயரா அல்லது இத்தாலியப் பெயரா ?
(English names or Italian? )
இந்த இணையதளத்தில் இத்தாலி பற்றி நான் எழுதத் துவங்கியதும் ஒரு குழப்பம் தோன்றியது. நான் கண்ட இடங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் (English ) எழுதுவதா இல்லை இத்தாலிய மொழிப் பெயரையே (original Italian name) குறிப்பிடுவதா என்ற குழப்பமே அது. ஆகவே நான் பார்த்த இடங்கள் எப்படி குறிப்பிட்டால் அனைவருக்கும் தெரிய வரும் என்பதை நன்கு ஆலோசித்து இடத்திற்கேற்ப அவற்றின் உண்மையான பெயர்களை (more popularly known name) தந்து உள்ளேன்.
'வெனிஸ்'
Author: Hellkt (public domain)
Author: Hellkt (public domain)
வெனிஸ் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Main Tourist Attractions of Venice)
(Main Tourist Attractions of Venice)
(1) செயின்ட் மார்க் ஸ்கொயர்
(St Mark's Square )
வெனிஸ் நகரத்தில் பார்க்க வேண்டிய பொது ஜன சதுக்கம்
எனும் முக்கியமான சுற்றுலா இடம்
(2) டோகே அரண்மனை
(Doge's Palace )
செயின்ட் மார்க் சதுக்கத்தின் எதிரில் உள்ள வெனிஸ்
நகர மன்னர் அரண்மனை.
(3) ரியால்டோ பாலம்
(Rialto Bridge )
வெனிஸ் நகரில் மிக புகழ்பெற்ற பாலம்
(4) செயின்ட் மார்க்கின் பேசில்லா
(St Mark's Basilica )
வெனிஸ் நகரில் அர்ச்டியோசெசே ரோமன் கத்தோலியர்களின் தேவாலயம்
(5) பெக்கி குக்கேன்ஹெம் மியூசியம்
(Guggenheim Museum)
பெக்கி குக்கேன்ஹெம் என்பவரின் சிற்பக் களஞ்சிய கலைக் கூடம்
வெனிஸ் நகரத்தில் உள்ள சிஸ்டெரிகள்
(Sestieri of Venice )
வெனிஸ் நகரத்தை ஆறு சிஸ்டேரிகளாக பிரித்து
வைத்து உள்ளார்கள். அவற்றின் விவரம் கீழே :-
(1) கன்னரிஜியோ
(Cannaregio )
வெனிஸ் நகரின் வடக்குப் பகுதியில் மிகுந்த ஜனத்தொகை உள்ள இடம்
(2) காஸ்டெல்லோ
(Castello )
வெனிஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள சிஸ்டேரி
(3) டோர்சோடுரோ
(Dorsoduro)
வெனிஸ் நகரின் மிகப் பெரிய சிஸ்டேரி
(4) சான் மார்கோ
San Marco
வெனிஸ் நகரின் இதயம் போன்ற இடம். இது சான் ஜியார்கியோ
என்ற தீவையும் உள்ளடக்கி உள்ளது.
(5) சான் போலோ
(San Polo )
வெனிஸ் நகரின் மிகச் சிறிய சிஸ்டேரி
(6) சாந்தா கிராஸ்
Santa Croce
வெனிஸ் நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள சிஸ்டேரி
வெனிஸ் அருகில் உள்ள இடங்கள்
(Places around Venice)
(1) ஐசோல டி சான் செர்வொலோ
(Isola di San Servolo)
வெனிஷியன் லகூனில் 'சான் ஜியார்கியோ மக்கியோரின்'
தென்கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய தீவு.
(2) லா கெர்டோசா
(La Certosa)
வெனிஷியன் லகூனில் வெனிஸ்சின் வடமேற்குப்
பகுதியில் உள்ளது.
(3) லிடோ டி வெனிசியா
(Lido di Venezia )
வெனிஸ்சின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இங்குதான்
வெனிஸ் திரைப்பட விழா நடந்தது.
(4) மேஸ்ட்ரி
(Mestre )
வெனிஸ் நகரை நோக்கியபடி இத்தாலியக்
கடற்கரையில் அமைந்துள்ள நகரம்
(5) முரனோ
(Murano)
வெனிஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள இந்த
இடம் கண்ணாடிகளில் செய்யப்படும் அழகுப்
பொருட்களில் பெயர் பெற்ற இடம்
(6) சக்கா செஸ்சோலா
(Sacca Sessola )
வெனிஸ் நகரின் தெற்கில் செயற்கையாக
உருவாக்கப்பட்ட தீவு
(7) சந்த் 'ஏரேஸ்மோ
(Sant 'Erasmo )
வெனிஷியன் லகூனில் உள்ள விக்னோலே எனும்
இடத்திற்கு கிழக்கில் உள்ள தீவு
(8) வெனிஷியன் லகூன்
(Venetian Lagoon )
வெனிஸ் நகரை சூழ்ந்துள்ள ஆற்றுப் பகுதியை சேர்ந்த
ஆழமில்லாத இந்த ஏரிப் பகுதியில் பல தீவுகள் உள்ளன.
(9) வெனேடோ
(Veneto )
இத்தாலியின் இந்த மாவட்டத்தின் தலை நகரமே வெனிஸ் ஆகும்.
(10) விக்னோலே
(Vignole)
வெனிஸ்சின் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு தீவுகள்
வெனிஸ் பற்றிய பிற செய்திகள்
(Other Information on Venice)
வெனிஸ் நகர அமைப்பு
(Geography of Venice )
(St Mark's Square )
வெனிஸ் நகரத்தில் பார்க்க வேண்டிய பொது ஜன சதுக்கம்
எனும் முக்கியமான சுற்றுலா இடம்
(2) டோகே அரண்மனை
(Doge's Palace )
செயின்ட் மார்க் சதுக்கத்தின் எதிரில் உள்ள வெனிஸ்
நகர மன்னர் அரண்மனை.
(3) ரியால்டோ பாலம்
(Rialto Bridge )
வெனிஸ் நகரில் மிக புகழ்பெற்ற பாலம்
(4) செயின்ட் மார்க்கின் பேசில்லா
(St Mark's Basilica )
வெனிஸ் நகரில் அர்ச்டியோசெசே ரோமன் கத்தோலியர்களின் தேவாலயம்
(5) பெக்கி குக்கேன்ஹெம் மியூசியம்
(Guggenheim Museum)
பெக்கி குக்கேன்ஹெம் என்பவரின் சிற்பக் களஞ்சிய கலைக் கூடம்
வெனிஸ் நகரத்தில் உள்ள சிஸ்டெரிகள்
(Sestieri of Venice )
வெனிஸ் நகரத்தை ஆறு சிஸ்டேரிகளாக பிரித்து
வைத்து உள்ளார்கள். அவற்றின் விவரம் கீழே :-
(1) கன்னரிஜியோ
(Cannaregio )
வெனிஸ் நகரின் வடக்குப் பகுதியில் மிகுந்த ஜனத்தொகை உள்ள இடம்
(2) காஸ்டெல்லோ
(Castello )
வெனிஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள சிஸ்டேரி
(3) டோர்சோடுரோ
(Dorsoduro)
வெனிஸ் நகரின் மிகப் பெரிய சிஸ்டேரி
(4) சான் மார்கோ
San Marco
வெனிஸ் நகரின் இதயம் போன்ற இடம். இது சான் ஜியார்கியோ
என்ற தீவையும் உள்ளடக்கி உள்ளது.
(5) சான் போலோ
(San Polo )
வெனிஸ் நகரின் மிகச் சிறிய சிஸ்டேரி
(6) சாந்தா கிராஸ்
Santa Croce
வெனிஸ் நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள சிஸ்டேரி
வெனிஸ் அருகில் உள்ள இடங்கள்
(Places around Venice)
(1) ஐசோல டி சான் செர்வொலோ
(Isola di San Servolo)
வெனிஷியன் லகூனில் 'சான் ஜியார்கியோ மக்கியோரின்'
தென்கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய தீவு.
(2) லா கெர்டோசா
(La Certosa)
வெனிஷியன் லகூனில் வெனிஸ்சின் வடமேற்குப்
பகுதியில் உள்ளது.
(3) லிடோ டி வெனிசியா
(Lido di Venezia )
வெனிஸ்சின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இங்குதான்
வெனிஸ் திரைப்பட விழா நடந்தது.
(4) மேஸ்ட்ரி
(Mestre )
வெனிஸ் நகரை நோக்கியபடி இத்தாலியக்
கடற்கரையில் அமைந்துள்ள நகரம்
(5) முரனோ
(Murano)
வெனிஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள இந்த
இடம் கண்ணாடிகளில் செய்யப்படும் அழகுப்
பொருட்களில் பெயர் பெற்ற இடம்
(6) சக்கா செஸ்சோலா
(Sacca Sessola )
வெனிஸ் நகரின் தெற்கில் செயற்கையாக
உருவாக்கப்பட்ட தீவு
(7) சந்த் 'ஏரேஸ்மோ
(Sant 'Erasmo )
வெனிஷியன் லகூனில் உள்ள விக்னோலே எனும்
இடத்திற்கு கிழக்கில் உள்ள தீவு
(8) வெனிஷியன் லகூன்
(Venetian Lagoon )
வெனிஸ் நகரை சூழ்ந்துள்ள ஆற்றுப் பகுதியை சேர்ந்த
ஆழமில்லாத இந்த ஏரிப் பகுதியில் பல தீவுகள் உள்ளன.
(9) வெனேடோ
(Veneto )
இத்தாலியின் இந்த மாவட்டத்தின் தலை நகரமே வெனிஸ் ஆகும்.
(10) விக்னோலே
(Vignole)
வெனிஸ்சின் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு தீவுகள்
வெனிஸ் பற்றிய பிற செய்திகள்
(Other Information on Venice)
வெனிஸ் நகர அமைப்பு
(Geography of Venice )
No comments:
Post a Comment