துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 2, 2011

இத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி கன்னரிஜியோ

வெனிஸ் நகரின் சிஸ்டேரிகள் (Sestieres of Venice)
'சிஸ்டேரி கன்னரிஜியோ'
(Read Original Article in :- Cannaregio)


'வெனிஸ்' நகரை ஆறு பாகங்களாகப் (Six Parts) பிரித்து உள்ளார்கள். அவை ஒவ்வொன்றும் 'சிஸ்டேரி' (Sestiere) எனப்படும். அவற்றில் வடக்குப் பகுதியில் உள்ளதே 'சிஸ்டேரி கன்னரிஜியோ' (Sestiere Cannaregio) எனும் இடம். 'சிஸ்டேரி சாந்தா கிரோஸ்' (Sestiere santa croce) மற்றும் 'சிஸ்டேரி சான் போலோ' (Sestiere san polo) என்ற இடங்களின் இடையே உள்ள வாய்க்காலை தாண்டி அவற்றின் தெற்குப் பக்கத்தில் உள்ள இடமே 'சிஸ்டேரி கன்னரிஜியோ ' என்பது. அந்த 'சிஸ்டேரிக்குள்' உள்ளது 'ஐசோலா டி சான் மிச்சிலி' (Isola di San Michele) எனும் இன்னொரு சிறு தீவுத் திட்டு.
Canale di Cannaregio

கனாலே டி கன்னரிஜியோ
Author: Jphollow (Creative Commons Attribution 3.0 Unported)



'கன்னரிஜியோ'வை 'இத்தாலி'யுடன் இணைக்கும் பாலம் (Bridge) உள்ளது. அதன் பெயர் 'பொன்டேடெல்லா லிபெர்டா (Ponte della Liberta) என்பது. அந்த தீவு திடலைத் தாண்டி ரயில்பாதையும் (Rail) மற்றும் பெரிய சாலையும் (Road) உள்ளன. 'வேனிசியா சாண்டா லூசியா' (Venezia Santa Lucia) ரயில் நிலையம் வரை ரயில் செல்கின்றது.  அதைப் போன்று உருவாக்கப்பட்டு உள்ள  சாலை 'சிஸ்டேரி சாந்தா கிரோஸ்'சில் செயற்கையாக உருவாக்கப்பட்டு உள்ள 'ஐசோலா நுவோவா' (Isola Nuova) வரைதான் செல்கின்றது.  'ஐசோலா நுவோவா' என்றால் புதியத் தீவு (New Island) என்றுப் பொருள்.
அங்குள்ள பெரிய வாய்க்கால்களின் (Grand Canal) பக்கங்களில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் (Buildings) பிரும்மாண்டமாக இருந்தாலும் சிஸ்டேரிக்கு உள்ளே உள்ள கட்டிடங்கள் சிறியவையாகவே (Small) உள்ளன. காரணம் 'சிஸ்டேரி கன்னரிஜியோ'சியாவில் வசிக்கும் அதிக மக்கள் வேலை செய்பவர்களாகவே (working-class) உள்ளார்கள்.
AD 697-1797 காலத்தில் இருந்த வெனிசியா குடியரசின் (Venetian Repunblic) ஆட்சியில் 'கன்னரிஜியோ'வில் 'வெனிசியா கேட்டோஸ்' (Venetia Ghettos) எனப்படும் பகுதியில் ஜியூஸ் (Jews) என்ற இனத்தவரே அதிகம் குடியேற்றம் செய்யப்பட்டார்கள். வெனிசியாவில் 'கேட்டோஸ்' என்றால் குடிசைவாசிகள் என்று அர்த்தம். ஜியூஸ் இனத்தவர்களில் வியாபாரிகள், மருத்துவர்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் என நல்ல நிலையில் உள்ளவர்களாக  இருந்தாலும் அவர்களை மாலை முதல் விடியற்காலை வரை 'கேட்டோஸ்' பகுதியில் இருந்து வெளியில் வரவிட்டது இல்லை. 'நேபோலியன் போனபார்டே' (Napoleon Bonaparte) இந்த நகரைக் கைபற்றியதும்தான் அவர்கள் வெனிஸ் நகரில் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்க அனுமதிக்கப்பட்டனர்.
Path to the Venetian Ghetto, Sestiere Cannaregio
'சிஸ்டேரி கன்னரிஜியோ'வில் வெனிசியா  கேட்டோஸ் எனப்படும் பகுதிக்குச் செல்லும் பாதை
Author: ARIE DARZI (Creative Commons Attribution 3.0 Unported)




சிஸ்டேரி கன்னாரிஜியோவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Sestiere Cannaregio)
(1) வெனிஷியா சாந்தா லூசியா ரயில் நிலையம்
(Venezia Santa Lucia Railway Station)
(2) காடரோ
(Ca' d'Oro)
(3) க வென்றமின் கலேர்கி
(Ca' Vendramin Calergi )
(4) மடோனா டெல்'ஒர்தோ தேவாலயம்
(Church of Madonna dell'Orto )
(5) கன்சியனோ தேவாலயம்
(Church of San Canciano )
(6) சான் ஜெரிமியா தேவாலயம்
(Church of San Geremia)
(7) சான் ஜியோவன்னி கிரிச்டோமோ டி வெனிஷியா தேவாலயம்
(Church of San Giovanni Crisotomo di Venezia )
(8) சந்த்'அல்வைஸ் தேவாலயம்
(Church of Sant'Alvise)
(9) சந்தா மரியா டேய் மிராகோலி தேவாலயம்
(Church of Santa Maria dei Miracoli)
(10) சந்தா மரியா டி நாசரெத் தேவாலயம்
(Church of Santa Maria di Nazareth)
(11) ஐசோல டி சான் மிச்சிலி
(Isola di San Michele )
(12) பலச்சோ லபியா
(Palazzo Labia)
(13) பொன்டே தெல்லி குக்லி
(Ponte delle Guglie)
(14) சக்கா டெல்லா மிசிரிகோர்டியா
(Sacca della Misericordia )
(15) வெனிஷியன் கேட்டோஸ்
(Venetian Ghetto )

No comments:

Post a Comment