துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 30, 2011

பெல்ஜியம் - டினான்ட்

பெல்ஜியம் - டினான்ட்
(Read Original Article in :- Dinant

இங்குள்ள 'டினான்ட்' (Dinant ) சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
'டினான்டு'ம் 'பிரெஞ்ச்' (French) மொழி அதிகம் பேசும் 'வால்லோனியா' (Wallonia) மண்டலத்தில் உள்ள  ஒரு நகரம். இதுவும் 'மியூஸ்' (Meuse)  நதியின் அருகில் அமைந்து உள்ளது. 'நமூர்' (Namur) மாகாணத்தை சேர்ந்தது 'டினாட்'. இதன் எல்லை 'பிரான்ஸ்' (France) நாட்டுடன் உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 99.8 கிலோ மீட்டர். ஜனத்தொகை 13,000. இதன் நேரம் ஐரோப்பிய நாடுகளின் பொதுவான நேரத்தை விட ஒரு மணி நேரம் (Central European Time) அதிகம் (UTC+1). வெயில் காலத்தில் இதன் நேரம் இரண்டு மணி அதிகம் (UTC+2).
'டினான்டிற்கு' வருகை தரும் பயணிகள் இங்கு கோதிக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டு உள்ள 'காலேஜியேட் சர்ச் ஆப் நோத்ரே டாமே' (Collegiate Chruch of Notre-Dame) என்ற முக்கியமான கட்டிடத்தைக் கவனிக்காமல் இருக்க மாட்டார்கள். இதுவே இந்த நகரின் முக்கியமான எளிதில் அடையாளம்  கண்டு கொள்ளக்கூடிய சின்னம் (Landmark) . பெரும்பாலான மக்கள் இங்கு 'பிரெஞ்ச்'  மொழியையே பேசுகிறார்கள். இந்த நகரத்தின் முக்கியமான இனிக்கும் அல்லது இன்பகரமான (delicacies) ஆகாரம் தேனினால் (Honey Sweetened) இனிப்பூட்டப்பட்ட  அப்ப வகை (Cookies).
View of Dinant from the Meuse
டினான்ட்டின் தோற்றம் 
Author: Jean-Pol GRANDMONT (Creative Commons Attribution 2.0 Generic)

'டினான்டின்' வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு (1000) முற்பட்டது. புதிய கற்காலம் முதலே (Neolithic) இங்கு மனிதர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள். 'ரோமானியர்'கள் (Romans) இங்கு வருவதற்கு முன்னரே 'செல்டிக்' (Celtic) என்ற இனத்தவர் இங்கு வாழ்ந்து உள்ளார்கள்.  'டினான்டை' பற்றி ஏழாம் (7th) நூற்றாண்டில் 'செயின்ட் பெர்பெடே'(Saint Perpete) என்பவர் 'செயின்ட் வின்சென்ட்' (Saint Vincent) எனும் தேவாலயத்தை நிறுவியபோதே  கூறப்பட்டு உள்ளது. 
'மியூஸ்' நதிக் (Meuse river)  கரையில் இந்த நகரம் அமைந்துள்ள இடத்தினால் இந்த நகரம் அடிக்கடி  கொள்ளையடிப்பட்டும் (Pillaged) தீ வைக்கப்பட்டும் (Burnt) நாசப்படுத்தப்பட்டது. 16 மற்றும் 17 ழாம் நூற்றாண்டுகளில் 'ஸ்பெயின்' (Spain) மற்றும் 'பிரெஞ்ச்' நாடுகளிடையே நடந்த யுத்தத்தினால் (War)  அதிக பாதிப்புக்கு உள்ளாயிற்று. 1675 ஆம் ஆண்டு இந்த நகரை 'பிரெஞ்ச்' நாடு பிடித்துக் கொண்டது. ஆனால் மீண்டும் 18 ஆம் நூற்றாண்டில் இதை 'ஆஸ்திரியா' (Austria) நாடு பிடித்துக் கொண்டது. 1795 ஆம் ஆண்டு 'பிஷோப்ரிக் ஆப் லிகேரி' (Bishopric of Liège) என்பவர்  இதை பிரெஞ்ச் நாட்டுடன் இணைய ஒப்புக் கொண்டார்.1914 ஆம் ஆண்டு 674 மக்கள் ஜெர்மனியை சேர்ந்த  படையினரால் (Troops) இங்கு கொல்லப்பட்டார்கள். அந்த ஆண்டில் நடந்த மிகப் பெரிய படுகொலை (massacre) இதுவே ஆகும்.  
Abbaye Notre-Dame de Leffe, Dinant
அப்பயே  நோட்ரே -டாமே  டி  லெப்பே
Author: Grentidez (public domain)

இன்று 'டினான்ட்'  நவ நாகரீகமான செழுமையான நகரம். இதன் 2003 ஆம் ஆண்டின் வருட வருமானம்  €10,000.  இங்கு பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன.  'ப்ருச்சில்ஸ்'சில் (Brussils) இருந்து ரயில் (Train) மூலம்  இங்கு ஒரு மணி முப்பது நிமிட நேரத்தில் செல்லலாம்.  நதிக் கரையின் அருகில் இந்த ரயில் நிலையம் உள்ளது.
Meuse Riverbank, Dinant
மியூஸ் நதிக் கரை 
Author: Marc Ryckaert (Creative Commons Attribution 3.0 Unported)

டினாண்டில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to Visit in Dinant)


(1) காலேஜியேட் சர்ச் ஆப் நோத்ரே டாமே
(Collegiate Church of Notre-Dame )

1227 ஆம் ஆண்டு மலை மீது இருந்து  விழுந்த  பாறைகளினால்  நாசம் அடைந்த இந்த தேவாலயம் கோதிக் கலையில் நதிக் கரையில் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இதனுள் 'அன்தோய்னே வியர்ட்ஸ்' (Antoine Wiertz) என்ற ஓவியர் வரைந்து உள்ள கற்பனையில் உருவான பயங்கரமான உருவைக் (macabre-Romantic) காட்டும் ஓவியம் உள்ளது.
(2) சிடாடலே
(Citadelle)

ஆகாய ஊஞ்சல் மூலம் (Cable Car) செல்ல வேண்டிய மலை உச்சியில் நகரைப் பார்த்தபடி அமைந்து உள்ள உள்ள கோட்டை அரண்   (Fortification)
(3) மியூசி டி லா லெப்பே
(Musée de la Leffe)

'பழைய அப்பே டி லெப்பே'  (old Abbaye de Leffe.) எதிரில் அமைந்துள்ள மதுபான வடிப்பக (Brewery) மியூசியம் 
(4) ரோசேர் பயார்ட்
(Rocher Bayard)

நகரின் தென் பகுதியில் உள்ள கற் கோட்டம். (Rock formations). ஒரு புராண நம்பிக்கையின்படி இங்குள்ள கற்கள் மிகப் பெரிய புராணக் கதைக் குதிரை (Giant Horse) ஒன்று தன்னுடைய கால் குளம்புகளினால் பெரிய கற்களை உடைத்ததினால் ஏற்பட்டவையாம்.
L'église de la Nativité de Notre-Dame in Dinant
லேக்லிஸ்சே டி லா நடிவைட் டி நோட்ரே டாமே  
Author: Jean-Pol Grandmont (Private Collection) (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

No comments:

Post a Comment