துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 2, 2011

இத்தாலி - எங்கு தங்கலாம்

இத்தாலியில் எங்கு தங்கலாம்
(Read Original Article in :- Where to Stay In Italy)


Hotels in Italy: Grand Hotel in Sopot, Italy
'இத்தாலி'யில் 'சொபோட்' எனும் இடத்தில் உள்ள கிராண்ட் ஹோட்டல்

'இத்தாலி'யில் (Italy) சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு நிறைய இடங்கள் உள்ளன. மிகப் பெரிய ஹோட்டல்கள் (Hotels) , விடுதிகள் (Guest Houses) , வில்லாக்கள் (Villas) , குடும்பத்தினர் வாடகைக்குத் தரும் அறைகள் (Family run hostels), ஹோடல்களாக மாறிய அரண்மனைகள் (Palaces Converted as Hotels) போன்று பல விதமான தங்கும் இடங்கள் உள்ளன. சிலவற்றில் இலவசமாக காலை சிற்றுண்டியையும் (Morning Breakfast) தருவார்கள். சில இடங்களில் நீங்களே சமைத்து சாப்பிடலாம் (Self Catering) .
'இத்தாலி'யில் ஹோட்டல்களை ஆல்பர்கோ (albergo) அல்லது ஆல்பர்ஹி (alberghi) என்று கூறுவார்கள். இத்தாலியில் தங்கும் இடங்களுக்கான கட்டணங்கள் அதிகம். அது போல தங்கும் இடங்களில் உள்ள அறைகளின் அளவும் சிறியதாகவே (room Small in size) உள்ளன. நீங்கள் 'இத்தாலி'யில் அறைகளுக்காகக் கொடுக்கும் அதே கட்டணத்தில் 'இத்தாலி'க்கு வெளியில் உள்ள நாடுகளில் தங்கினால் அதிக வசதிகளைக் கொண்ட அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். ஆனாலும் 'இத்தாலி'யின் சில இடங்களில் நீங்கள் தரும் கட்டணத்துக்கு ஈடான சேவைகள் (value for the price you pay) மற்றும் வசதிகள் உள்ளன.
Grand Hotel Miramare, Genoa
'ஜினோவாவின்' 'மிராமரேயில்' உள்ள கிராண்ட் ஹோட்டல்
Author: Alessio Sbarbaro (Creative Commons Attribution 3.0 Unported)


'இத்தாலி' ஹோடல்களின் நட்சத்திர மதிப்பெண்
(Hotel Grading In Italy)

'இத்தாலி'யில் ஒன்று முதல் ஐந்து நட்சத்திரம் வரையிலான ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்கள் கட்டப்பட்டு உள்ள  இருப்பிடங்களின் தரத்தை (Atmosphere) தரத்தின் அளவாக எடுத்துக் கொள்ளாமல்  அவர்கள் தரும் வசதிகளைப் (Facilities) பொறுத்தே அந்த மதிப்பெண் (Star Grading) தரப்படுகின்றது. 'இத்தாலி'யில் அனைத்து மாகாணங்களிலும் நட்சத்திர மதிபெண் தருவதற்கான தகுதிகள் ஒரே மாதிரியானவை ஆனது அல்ல. ஒவ்வொரு மாகாணத்திலும் (Region) அவரவர் உருவாக்கி வைத்துள்ள தகுதியை எடை போட்டு (Own Grading) நட்சத்திர மதிப்புத் தருகிறார்கள்.
அதிக நட்சத்திரம் கொண்ட ஹோட்டல்கள் அதிக வரி (pay higher taxes) செலுத்த வேண்டி உள்ளதினால் பல ஹோட்டல்கள் தனது நட்சத்திர தகுதியை (star rating) உயர்த்திக் கொள்ள விரும்புவது இல்லை.
அறைகளுக்கான கட்டணத்தைப் பொறுத்த வரை அதே கட்டணத்தில் 'இத்தாலி'க்கு வெளியில் உள்ள நாடுகளில் (Neibouring Countries) தரப்படும் வசதிகளை விடக் குறைவான வசதிகளையே (offer fewer facilities) 'இத்தாலி' நாட்டு ஹோட்டல்கள் தருகின்றன. உதாரணமாக 'இத்தாலி'யில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர குறைந்த நட்சத்திரத்தை பெற்று உள்ள பல ஹோட்டல்களில் குளிர்சாதன வசதிகள் (air-conditioning) உள்ள அறைகள் இல்லை.
Hotel Italia in Marina di Massa
மரினா டி மாசாவில் உள்ள ஹோட்டல் இடாலியா
Author: sailko (Creative Commons Attribution 3.0 Unported)

உணவு (Meals)
பல ஹோட்டல்களிலும் மூன்று வேளை உணவுக்கும் சேர்த்து அறைக் கட்டணம் தருமாறு  கூறுவார்கள். நீங்கள் அதை ஏற்கக்கூடாது (Resist). காரணம் தங்கும் ஹோட்டல்களின் உணவுக் கட்டணங்களை விட வெளியில் கிடைக்கும் அதே உணவுக்கான கட்டணம் மிகவும் குறைவாக (cheaper rate outside) உள்ளது. நீங்கள் தங்குவது நான்கு அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டல் (4 or 5 star Hotels) என்றால் பல விதமான காலை சிற்றுண்டி (Buffet) தருவார்கள்.
ஆனால் 'பென்சியோனி' (pensioni) போன்ற இடங்களில் காப்பியுடன் பிஸ்கட்டுகள் அல்லது ஜாமுடன் ப்ரெட் (Coffee with biscuits or brioches with Jam) போன்றவை மட்டுமே காலை சிற்றுண்டியாகக் கொடுப்பார்கள். பொதுவாக 'பென்சியோனி'யில் தங்குபவர்கள் காலை சிற்றுண்டிகளை சேர்த்த  அறைக் கட்டணங்களை தவிர்க்கலாம். வெளியில் அதே உணவு மிகக் குறைவான விலையில்  கிடைக்கும்.

அறைக் கட்டணம் (Pricing)
அறைகளுக்கான கட்டணம் வெளி நாடுகளை விட இத்தாலியில் மிகவும் அதிகம். அதுவும் விடுமுறைக் காலங்களில் (Peak Seasons) கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். உதாரணமாக  குளியல் அறை இல்லாத இரண்டு பேர்கள் தங்கும் அறைக்கான கட்டணம் சுமார் € 50 என இருக்கும். குளியல் அறை உள்ள இரண்டு பேர்கள் தங்கும் அதே அறை வேண்டும் எனில் அதற்கான கட்டணம் € 65 என இருக்கும். பெரிய நகரங்களுக்கு வெளியில் உள்ள தங்கும் இடங்களின் கட்டணம் அவர்கள் தரும் வசதிக்கு ஏற்ப € 100 முதல் € 210 வரை உள்ளது.

முன் பதிவு (Booking)

நீங்கள் இத்தாலிக்கு வருவதற்கு குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே (2 months in advance) ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்து கொள்வது அவசியம். ஏன் எனில் வருடம் முழுவதுமே பல ஹோட்டல்களில் அறைகள் முன் பதிவு செய்யப்பட்டு (Fully Booked) விடுகிறது. பல பிரபலமான ஹோட்டல்களில் ஆறு மாதங்களுக்கு  முன்னரே சுற்றுலாப் பயணிகளினால் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றது.
Royal Hotel Victoria in Pisa
பிஸாவில் 'ராயல் ஹோட்டல் விக்டோரியா'
Author: sailko (Creative Commons Attribution 3.0 Unported)

இணையத்தளம் மூலம் அறைகளை முன்பதிவு செய்ய உதவும் குறிப்புகள்
(A useful way to book your room is to go online)

இணையதளங்களில் பல ஹோட்டல்களின் இணையதள விலாசங்கள்  உள்ளன.  இலவசங்களை அள்ளித் தரும் வகையில் அந்த விளம்பரங்கள் அமைந்து இருக்கும். ஆகவே அவற்றில் உள்ள விவரங்களை அப்படியே நம்பி விடக்  கூடாது. ஒரே அளவுக்கான அறைக் கட்டணம் ஒவ்வொரு ஹோட்டலிலும் வேறு வேறு அளவில் இருக்கும். ஆகவே இங்குள்ள ஹோட்டல் அறைக் கட்டணத்தைத் தேடும் வாகன வண்டியில் நுழைந்து அனைத்து கட்டண விவரங்களையும் தெரிந்து கொள்ளவும். கட்டண விவரங்களைப் பார்க்க தங்கும் அறைக்கான கட்டணம் விகிதம் - தேடும் வண்டி (hotel room rate comparison engine) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment