துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, August 20, 2011

பெனின் - அபோமி மன்னர் அரண்மனைகள்

அபோமி மன்னர் அரண்மனைகள்
(Read Original Article in :-Royal Palaces of Abomey)
 
1625 முதல் 1900 ஆண்டுகள் வரை பெனின் நாட்டின்  (Benin) 'அபோமி' (Abomey) என்ற நகரை ஆண்டு வந்தவர்களும்  ஒரு காலத்தில் செழிப்புடன் இருந்த ஆனால் தற்போது அழிந்து விட்ட 'போன்' (Fon) வம்சத்தினருடைய அரண்மனையின் மிச்சப் பகுதிகளே 'அபோமி'  மன்னர்கள் அரண்மனை (Royal Palaces of Abomey) ஆகும்.  அவர்கள் அரசாண்ட நேரத்தில் பன்னிரண்டு (12) டோஹோமி (Dohomey) வம்சத்து மன்னர்கள்  தமது அரண்மனைகளை அந்த வளாகத்துக்குள்ளேயே கட்டினார்கள். ஆனால் 'அகாபா' (Akaba) எனும் ஒரே ஒரு மன்னன் மட்டும் அந்த வளாகத்துக்குள் தனி பாதையை  (Own Enclosure) அமைத்துக் கொண்டு தனக்கு ஒரு அரண்மனையை கட்டிக் கொண்டார்.
இந்த அரண்மனைகள் மேற்கு ஆப்ரிக்காவில் (West Africa) விசேஷமான அரண்மனைகள் என்பதினால்  அவற்றை 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் (December) இரண்டு முதல் ஆறாம் தேதிவரை 'பாரிசில்' (Paris) நடைபெற்ற   உலக  புராதான சின்ன அங்கத்தினர்  (World Heritage Committee ) கூட்டத்தில் இந்த மன்னர்கள் அரண்மனை வளாகத்தை  யுனெஸ்கோ  புராதான சின்ன மையம் (UNESCO World Heritage Site) என அங்கீகரித்தார்கள். அந்தக் கூட்டத்தில் இந்த மிக முக்கியமான இடத்தை மீண்டும் பழைய நிலையில் கொண்டு வர அதை புதுப்பித்து பாதுகாத்து வர வேண்டும் என  அறிவுறுத்தினார்கள். 
'அபோமி' என்பது 'டோஹோமி' மன்னர்களின் தலை நகரமாக இருந்தது. அதை சுற்றி களி மண்  சுவற்றை Mud wall)  ஆறு மைல் (6 Miles) தூரத்துக்கு  எழுப்பி தடுப்பு போடப்பட்டு இருந்தது.  அந்த சுவற்றுக்குள் எளிதாக நுழைய முடியாமல் இருக்க ஒரு அடி அகல அகழிகள் (ditch)  அமைக்கப்பட்டும், அவற்றுக்கு அடுத்து  கடுமையான முட்கள் குத்தும் வேல மரங்களும் (prickly acacia) அடர்த்தியாக வளர்க்கப்பட்டு இருந்தன. அந்த வளாகமே தனி நகரமாக இருந்தது. அதற்குள் நுழைய ஆறு (Six) வாயில்களும் அமைக்கப்பட்டன. அதற்குள் கிராமிய வீடுகள் (village houses), மைதானம் (Fields) , கடை வீதிகள் (Market Place)  மற்றும் வீரர்கள் குடியிருப்பு (Barracks), மன்னர்களின் அரண்மனைகள் (Royal Palaces) போன்றவை இருந்தன. ஆனால் 1892 ஆம் ஆண்டில் டோஹோமியின்  மன்னனான பெஹன்சின் (Behansin) என்பவன் அபோமிக்கு தீ வைத்துவிட்டு  வாடா நாட்டிற்கு ஓடிவிட்டான். அதனால் அந்த இடம்  முழுமையாக அழிந்தன. அதன் பின் பிரான்ஸ் (France) நாட்டினர்  அங்கிருந்து கடற்கரைவரை ரயில்  பாதையை (Railway line) அமைத்தார்கள்.     
 அபோமி மன்னர் அரண்மனைகள்- 2008

 அபோமி மன்னர் அரண்மனைகள்- 2008

1993 ஆம் ஆண்டு 'அபோமி' மன்னர்களின் அரண்மனை புதிப்பிக்கப்பட்டபோது அங்கு புதைந்து இருந்த 'க்லீலி' (Glele) மன்னனின் காலத்து சுவர்களில் இருந்த   56 உண்மையான அடித்தளத்தின்  பின்னணியில் இருந்து சிறிது புடைத்து எழுந்து உள்ள ஓவியங்கள்  (bas-reliefs) கொண்ட சுவர் பகுதிகளில் 50 கண்டெடுக்கப்பட்டு அவை மீண்டும் பொருத்தப்பட்டன. அந்த சுவர் சித்திரங்கள் 'போன்' (Fon)  மக்களின் வாழ்கை வரலாற்றை (Fon History) எடுத்துக் காட்டுவதாக இருந்தது. 
தற்பொழுதைய தலைநகரமான 'போர்டோ நோவோ' முந்தய  'அபோமியை' விட பிரபலமாகி விட்டாலும் 'அபோமி' இன்றும் ஒரு முக்கியமான சுற்றுலா இடமாகவும்,  கைவேலை (Handicrafts) சம்மந்தப்பட்ட பொருட்களின்  விற்பனை முன்னணி இடமாகவும்  உள்ளது.  

மன்னர் அரண்மனை உள்ள இடத்தில் என்ன பார்க்கலாம்
(What to See in Royal Palaces of Abomey )

இந்த இடத்தில் உள்ள அரண்மனைகளும் கட்டிடங்களும் மண் (Earth) , பனை ஓலை (Palm) , மூங்கில் (Bamboo) போன்றவற்றைக் கொண்டு கட்டப்பட்டு, மேல்  கூறை  வைக்கோல் (Straw) மற்றும் உலோகத் தகடுகள் (Metal roof) கொண்ட பொருட்களால் மூடப்பட்டு  உள்ளன. சுவர்களில் காணப்படும் பின்னணியில் இருந்து சிறிது புடைத்து எழுந்து உள்ள ஓவியங்கள்  (Bas - Relief) சுவர்களை அலங்கரிக்கும் சித்திரங்களாக மட்டும் அல்லாமல் சங்கேத மொழியில்  தகவல் பரிமாற்றம்  செய்து கொள்ளும் வழிமுறையாகவும் இருந்துள்ளது.  அந்த புடைத்து எழுந்த சித்திரங்கள் மண் புற்று மணலை (Ant Hill Mud) எடுத்து அதை வண்ணக் கலவைகள், மற்றும் பாமாயில் எண்ணை சேர்த்து கலந்தக் கலவையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.  
அங்கு செல்லும் பயணிகள் அங்குள்ள கட்டிடக் கலைகள், ஆலயங்கள், வீட்டு முற்றங்களின் அமைப்பு போன்றவற்றை கண்டு ஆய்வு செய்யலாம், கண்டு களிக்கலாம்.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

இருப்பிடம் : N 7 10 60 E 1 58 60
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1985
பிரிவு : கலை
தகுதி : III, IV

மன்னர் அரண்மனைப் பகுதி உள்ள இடத்தை 
பெரிய அளவில் காண  படத்தின்  மீது  கிளிக் செய்யவும்.

இந்த இடத்துக்கு எப்படி செல்லலாம்.
(Visiting Royal Palaces of Abomey )

இந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் பெனின் நாட்டின் முக்கியமான வியாபார கேந்திரமான 'கோடோநௌவ்' (Cotonov)  என்ற நகருக்கு சென்று அங்கு ஹோட்டலில் தங்கி அவர்கள் மூலம்  வண்டி ஏற்பாடு செய்து கொண்டு  இங்கு செல்லலாம். இந்த நகரில் உள்ள நல்ல தங்கும் இடமான  ஹோட்டல் டிகோடலில் ( Hotel Dichotel ) தங்கிக் கொள்ள இணையத்தளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment