துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, November 5, 2011

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - உகாண்டா - கம்பாலா

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்- உகாண்டா
கம்பாலா
(Read Original Article in :-Discover Kampala)
 

கம்பாலா (Kampala) என்ற நகரமே உகாண்டாவின் தலை நகரம். இதன் பரப்பளவு 189 சதுர கிலோமீட்டர், ஜனத்தொகை  1.7 மில்லியன் .லேக் விக்டோரியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1190 மீட்டர் உயரத்தில் உள்ளது. 

கம்பாலாவில் ஹோட்டல்கள்
(Guide to Kampala )

இங்கு ஹோட்டல்கள் கிடைப்பது அத்தனை எளிது அல்ல.  நல்ல ஹோட்டலை தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. ஆகவே  உங்களுக்கு உதவ நான் வெளியிட்டு உள்ள அங்குள்ள ஹோட்டல்கள், அதன் விலாசம், தொலைபேசி எண், நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் போன்ற அனைத்தையும் இங்குள்ள கம்பாலாவில் ஹோட்டல்கள் என்பதின் மீது கிளிக் செய்து பார்க்கவும். இதில் பல இணைய தளங்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு உள்ள கட்டணப் பட்டியல் உள்ளது

கம்பாலாவைப் பற்றிய விவரங்கள்
(More on Kampala )
கம்பாலாவின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது. அது அப்போது புகாண்டா (Buganda)  எனப்பட்ட பிரதேசத்தை ஆண்டுவந்த முடிச்ஸா  I (Mutesa I) என்பவற்றின் வேட்டையாடும் பகுதியாக இருந்தது. இங்குள்ள ஏழு மலைகளும்  நகருக்கு அடையாள சின்னங்களாக  உள்ளன. அப்போது புகாண்டாவின் தலை நகரமாக இருந்ததும் கம்பாலாதான்.


கம்பாலாவின் சாலை காட்சி

கம்பாலாவுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Kampala )

இந்த நகருக்கு செல்ல வேண்டும் எனில் என்டபே விமான நிலையத்துக்கு {Entebbe International Airport (EBB)} சென்று அங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்பாலாவுக்கு வாகனத்தில் போக வேண்டும்.  இந்த  விமான நிலையத்துக்கு   அட்டிஸ்  அபாபா , அம்ஸ்டேர்டம் , ப்ருச்செல்ஸ் , கைரோ , டர்  எஸ்  சலாம் , துபாய் , இஸ்தான்புல் , ஜோஹன்னேஸ்புர்க் , லண்டன்  ஹீத்ரோவ் , மொம்பாசா , நைரோபி  மற்றும் சான்சிபார் போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் இருந்து கம்பாலாவுக்கு செல்ல 2,000 உஷ்  அல்லது டாக்சியில் சென்றால்   60,000 உஷ் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.


பஹாய் ஹவுஸ்  - வழிபாட்டுத் தலம்

கம்பாலாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to visit in Kampala )
(1) அஹ்மதியா  சென்ட்ரல்  மசூதி
ஒரே நேரத்தில் 9,000  வரை அமரக்கூடிய இடம். அகமதிய முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத் தலம்.
(2) பஹாய் ஹவுஸ் ஆப வர்க்ஷாப்
பஹாய் ஆலயங்களின் தாயாரைப் போன்ற வழிபாட்டுத் தலம்.
(3) கசுபி  டோம்ப்ஸ்
நான்கு புகாண்டா  மன்னர்களின் கல்லறை உள்ள இடம். 
(4) நகசெரோ  மார்க்கெட்
 ஒரு முக்கியமான கடைவீதி 
(5) உகாண்டா மியூசியம் 
உகாண்டாவின் பல்வேறுதரப்பட்ட மக்களின் வாழ்கை
முறையைக் காட்டும் மியூசியம்.
அதில் வேட்டைக்குக் கொண்டு செல்லப்பட்ட பல்வேறு ஆயுதங்கள்,
இசை வாத்தியங்கள் போன்றவை உள்ளன. 
(6) உகாண்டா தேசிய கலாச்சார மையம்  
இங்குள்ள கலாச்சார மையத்தில் திரை அரங்குகள்,
நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடைபெறும்
கூடம் மற்றும் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு
ஓவியர்களின் காட்சிப் பொருட்கள் உள்ளன.

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - உகண்டா

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
உகண்டா
(Read Original Article in : Discover Uganda)
 

காடம் மலை
Author: Eright (Creative Commons Attribution 3.0 Unported)

கிழக்கு ஆப்ரிக்காவின் ஒரு நாடே உகாண்டா (Uganda).இதன் பரப்பளவு  236,040 சதுர கிலோமீட்டர். ஜனத்தொகை  32.3 மில்லியன் . இந்த நாட்டின் வடக்கில் சூடானும் (Sudan ), கிழக்கில் கென்யாவும் ( கென்யா) தெற்கில் தான்சனேஷியாவும்( Tanzania ), தென் கிழக்கில் ரவாண்டாவும் (Rwanda ), தென்மேற்கில் காங்கோ குடியரசும் (Democratic Republic of the Congo ) தத்தம் எல்லைகளைக் கொண்டு உள்ளன.  உகாண்டாவின் தலை நகரம் கம்பாலா (Kampala). இந்த நாடு அனைத்துப் பகுதிகளிலும் சில நாடுகளினால் சூழப்பட்டு இருந்தாலும் அதன் தெற்கில் கடலும் உள்ளது. 

ஹோட்டல்கள்
(Guide to Uganda Hotels )


இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Uganda) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது  கிளிக் செய்யவும்.

உகாண்டாவில் மக்கள் பேசும் மொழிகள் ஆங்கிலம் மற்றும் ச்வாஹிலி போன்றவை (English and Swahili). லுகாண்டா (Luganda ) என்ற மொழியையும் அங்குள்ளவர்கள் பேசுகிறார்கள். அது 1960 ஆம் ஆண்டு வரை தேசிய மொழியாக இருந்தது. இந்த நாட்டின்  60 சதவிகித மக்கள் கிருஸ்துவர்கள். அவர்களில் ரோமன், கதோலிகர்கள் மற்றும் ப்ரோடேஸ்டன்ட் போன்றவர்கள் உள்ளனர்.

புஜ்காலி  பால்ஸ் 

உகாண்டா ஜனநாயக குடியரசு.  உலக நாடுகளின் ஒப்புக் கொள்ளப்பட்ட நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் மூன்று மணி  நேரம் அதிகம்  (UTC+3). அரசாங்க நாணயம் உகாண்டியன் ஷில்லிங் { Ugandan shilling (UGX)} என்பதே. இந்த நாட்டின் சாலைகளில் இடது பக்கமே வாகனங்களை ஓட்ட வேண்டும். மின்சார  அளவு  240V 50Hz  .
உகாண்டா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. இந்த நாட்டின் GDP of $17.703 பில்லியன். உகாண்டா கடல் மட்டத்தில் இருந்து  1,100 மீட்டர் உயரத்தில் உள்ளது.  இந்த நாட்டில் பல ஏரிகள் உள்ளன. அவற்றில் சில க்யோகா, ஆல்பர்ட் மற்றும் துர்கானா (Lake Kyoga, Lake Albert and Lake Turkana) போன்றவை. 


கம்பாலாவில் கசூபி  டோம்ப் 16 -03 -2010 ஆம் தேதி அது எரிந்து விட்டது.
Author: not not phil (Creative Commons Attribution 2.0 Generic)

உகாண்டாவை 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தே வேட்டை ஆடுபவர்கள் ஆக்கிரமித்து இருந்துள்ளார்கள். 1830 ஆம் ஆண்டில்தான் முதன் முதலாக அராபிய நாட்டை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். 1860 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாட்டினரும் இங்கு வந்தபோதுதான் ரோமன் கதோலிக்கர்களும் ப்ரோடேஸ்டன்ட் பிரிவை சேர்ந்தவர்களும் தம் மத்தைப் பரப்ப இங்கு வந்தார்கள். 1894 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை இந்த நாடு பிரிட்டிஷ் நாட்டின் பாதுகாப்பில் இருந்தது. 1962 ஆம் ஆண்டு இந்த நாடு சுதந்திரம் அடைந்து காமன்வெல்த் நாடுகளின் கூட்டணியில் சேர்ந்தது. 1967 ஆம் ஆண்டு இந்த நாட்டில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு குடியரசு அமைந்தது .  
1971 ஆம்  ஆண்டு இடி அமின் என்பவர் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு மாறினார். அவர் பதவி ஏற்றதும், இந்தியர்கள், கென்யர்கள் மற்றும் ஆசியாவை சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்த நாட்டில் நடைபெற்ற புரட்சியில் 300,000 பேர் மரணம் அடைந்தார்கள் . அண்டை நாடானா தான்சனேயாவுடனும்சண்டை எழுந்தது.  ஆனால் 1986 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி ஏற்ற யோவெரி முசுவேனி  இன்று வரை நாட்டை நிர்வாகித்து வருகிறார்.


கம்பாலாவின் ஒரு சாலை


உகாண்டாவுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Uganda )

எந்த நாட்டில் நுழைய உகாண்டா மக்கள் விசா வாங்க வேண்டுமோ அந்த நாடுகளின் குடிமக்கள் உகாண்டாவுக்கு சென்றால் அவர்களும் விசா இருந்தால் மட்டுமே உகாண்டாவில் நுழைய முடியும்.  மூன்று மாதங்கள் வரை விசா உள்ளவர்கள் அங்கு தங்கலாம். அதற்கான விசா கட்டணம் $50 .
கீழ் காணப்படும் நாடுகளில் உள்ள மக்கள் விசா பெறத் தேவை இல்லை.  அங்கோலா , அண்டிகுவா மற்றும்  பர்புட , பஹமாஸ் , பார்படோஸ் , பெலிஸ், கொமொரோஸ் , சைப்ருச்ஸ்  , எரித்ரியா , பிஜி , காம்பியா , கிரெனடா , ஜமைக்கா , கென்யா , லெசோதோ , மடகஸ்கார் , மலவி , மல்ட , முரிதயுஸ் , ர்வாண்ட , செய்செல்லெஸ் , சிர்லியோன்  , சிங்கப்பூர் , சாலமன் தீவு , செயின்ட் வின்சென்ட், கிரெனடின்ஸ் , ஸ்வாசிலாந்து , தன்சானியா, டோங்க , வானோடு , ஜாம்பியா மற்றும்  ஜிம்பாப்வே .
உகாண்டாவுக்கு செல்ல கம்பாலாவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லேக் விக்டோரியாவின் அருகில் உள்ள  உகாண்டா விமான நிலையத்துக்கே {Uganda is the Entebbe International Airport (EBB)} செல்ல வேண்டும். அங்கு செல்ல  பிரிட்டிஷ்  விமான சேவை  லண்டன் -ஹீத்ரோவ் வியில் இருந்து உள்ளது.

உகாண்டாவின் பெரிய நகரங்கள்
(Major Cities in Uganda )
  1. கம்பாலா
  2. அருவ 
  3. எண்டேப்பே
  4. போர்ட்  போர்டல்
  5. ஜிஞ்சா
  6. கபலே
  7. கிசோரோ
  8. மபரற
  9. பக்வச் 

பார்க்கக் கூடிய இடங்கள்
(Places of Interest in Uganda )
  1. அஜய்  கேம்  ரிசர்வ்
  2. ப்விண்டி  இம்பெனிட்ரபெல் நேஷனல் பார்க்
  3. கிபலே  பாரேஸ்ட்  நேஷனல் பார்க்
  4. கிதேபோ  வால்லி  நேஷனல் பார்க்
  5. ம்கஹிங்க  கொரில்லா  நேஷனல் பார்க்
  6. முர்சிசன்  பால்ஸ் நேஷனல் பார்க்
  7. கியீன்  எலிசபெத்  நேஷனல் பார்க்
  8. ரவேன்சாரி  நேஷனல் பார்க்
  9. செம்லிகி  நேஷனல் பார்க்
  10. செஸ் தீவுகள்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
( UNESCO World Heritage Sites in Uganda )
  1. ப்விண்டி  இம்பெனிட்ரபெல் நேஷனல் பார்க்
  2. ரவேன்சாரி  மலைகள்   நேஷனல் பார்க்
  3. டோம்ப்ஸ்  ஆப  புகண்டா   கிங்க்ஸ்  அட்  கசூபி 

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ப்ருஜ் கலிபா எனும் ப்ருஜ் துபாய்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
ப்ருஜ் கலிபா எனும் ப்ருஜ் துபாய்
(Read Original Article in :- Burj Khalifa (Burj Dubai), UAE )


புர்ஜ் கலிபா (Burj Khalifa ) என்பதை முன்னர் புர்ஜ் துபாய் (Burj Dubai) என பெயரிட்டு இருந்தார்கள். உலகிலேயே மிக அதிக உயரமான கட்டிடம் UAE யின் ( United Arab Emirates) துபாய் நகரில் உள்ள இதுவே ஆகும். முழுவதுமே இயந்திரம் இல்லாமல் மனிதர்களால் கட்டப்படும் இந்த கட்டிடத்தின் உயரம் 828 மீட்டர்.
இந்த கட்டிடம் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று கட்டப்படத் துவங்கியது. தைபெய் (Taipei) எனுமிடத்தில் உள்ள 509.2 மீட்டர் உயர கட்டிடத்தை விட அதிக உயரமான கட்டிடம் இது.
12 -08 -2007 அன்று இது உலகின் மிக உயர அதாவது 527.4 மீட்டர் உயர கட்டிடமான சியர்ஸ் டவர் அன்ட்டேன்னா (Sears Tower's antenna) வை விட அதிக உயரமான கட்டிடமாக ஆக மீண்டும் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று 553.33 மீட்டர் உயர கட்டிடமான டோரோண்டோவின் CN டவர் (CN Tower) கட்டிடத்தை விட உயரமான கட்டிடமாக ஆயிற்று. முடிவாக 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியன்று இந்த கட்டிடமே உலகின் மிக அதிக உயர கட்டிடமாக அமெரிக்காவில் 646.38 மீட்டர் உயரமாக இருந்த KVLY-TV மஸ்ட் எனும் கட்டிடத்தை விட அதிக உயரமாக ஆகியது. ஆனால் 1991 ஆம் ஆண்டு அந்த அமெரிக்க கட்டிடம் இடிந்து விழுந்தது.
துபாயின் இந்த மிக அதிக உயரக் கட்டிடம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதியன்று புர்ஜ் கலிபா எனும் பெயரில் திறந்து வைக்கப்பட்டது. சுமார் இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த இடம் துபாய் நாட்டின் புரனகரமாக உருவாகி உள்ளது. கட்டிடம் கட்ட மட்டும் US$1.5 பில்லியன் செலவு ஆகியது. அந்த புறநகர் பகுதி முழுவதையும் கட்டி முடிக்க US$20 பில்லியன் செலவு ஆகும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த கட்டிடத்திற்கான வரை படத்தை ஒவிங்க்ச்ஸ் அண்ட் மெரில் {Owings and Merrill (SOM)} என்ற நிறுவனத்தை சேர்ந்த அட்ரியன் ஸ்மித் (Adrian Smith ) என்பவர் தயாரித்து உள்ளார். அந்த நிறுவனத்தினரே தைபெய் 101 (Taipei 101 ) மற்றும் பெட்ரோனாஸ் டுவின் டவர்களைக் (Petronas Twin Towers) கட்டியவர்கள். இந்த செய்தியை வெளியிடும் சமயத்தில் ப்ருஜ் துபாயின் சதுர அடி நிலத்தின் விலை $4,000 அளவில் இருக்க ஆர்மானி ரேசிடன்சஸ் எனும் இடத்தில் உள்ள நிலத்தின் விலை சதுர அடிக்கு $3,500 ஆக உள்ளது.

புர்ஜ் துபாய் உள்ள இடத்தைக் காட்டும் படம் 
  





புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


ப்ருஜ் துபாய் தெரியுமாறு எடுக்கப்பட்ட படம்
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Hierakares (GFDL)


புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Aheilner (GFDL)
படங்களுக்கான அனுமதி : Approval for the use of photos taken by Imre Solt can be found at Dubai Construction Update Part 7 Page 12 at Post 223. Imre Solt's exact statement is: "I, Imre Solt, put all my images found on the Dubai Construction Update sites on the GFDL (GNU Free Documentation License). I agree to the terms that my images may be freely redistributed and used, that they may be freely modified (and modified versions may also be freely redistributed and used), that any redistribution must include the full text of the GFDL itself, that the work (and modified versions of it) must be attributed to me (the creator), and that the images can be re-used for commercial purposes (as long as the use is under the terms of the GFDL and that the full text of the GDFL goes along with the work). I acknowledge that I cannot withdraw from this agreement." He gave this statement on 17 August 2007.

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ஒன்றிணைந்த அராபிய எமிரேட்ஸ்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
 ஒன்றிணைந்த  அராபிய எமிரேட்ஸ்
(Read Original Article in :- United Arab Emirates )


 டெர்மினல்  2 டில் A380  துபாய்  இன்டர்நேஷனல்  ஏர்போர்ட்
Author: Simisa (Creative Commons Attribution ShareAlike 3.0)

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்காக இந்த தளத்தில் செய்திகளை தந்து உள்ளேன்.
ஹோட்டல்கள்
(Guide  Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Dubai) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும். இந்த கூட்டமைப்பில் துபாய் மட்டுமே மிகப் பெரிய நகரமாக உள்ளது. சந்தர்பம் கிடைக்கும்போது மேலும் பல விவரங்களைத் தருகிறேன்.

துபாய் , ஒன்றிணைந்த அராபிய எமிரேட்ஸ்

அராபிய வளைகுடாவில் ஏழு எமிரேட்ஸ்கள் (முஸ்லிம் தலைவர்கள்) சேர்ந்து உருவாக்கியதே UAE என்பது.  இந்த எமிரேட்ஸ் எனப்படும் கூட்டமைப்பில்  அபுதாபி , துபாய், ஷார்ஜாஹ், அஜ்மான், உம் அல் குயெயின், ரச அல் கைமாஹ் மற்றும் புஜைரா (Abu Dhabi, Dubai, Sharjah, Ajman, Umm al-Quwain, Ras al-Khaimah and Fujairah) போன்ற நகரங்கள் அடங்கி உள்ளன. இவற்றின் தலை நகரம் அபுதாபி . இதுவே அந்த கூட்டமைப்பின் பொருளாதார, அரசியல், கலை  மற்றும் தொழில்சாலைகளில் வளம் பெற்ற இடம் ஆகும்.   
சிறிய நாடு என்றாலும் உலகின் ஏழாவது மிகப் பெரிய எண்ணை வளம்  மிக்க இடம் ஆகும். இந்த நாட்டின் GDP US$46,584 மற்றும் உலகில் மிக அதிக தனி நபர் வருமானத்தில் 14 இடத்தை வகிக்கின்றது. 
UAE பழமைக் கோட்பாடு சார்ந்த அராபிய வாழ்கை முறைக்கு மாறுபட்ட மிக அதிக நாகரீகமான அராபிய நாடு.   இந்த உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு மிக அதிக உயரமான கட்டிடங்களை 2010 ஆம் ஆண்டு துபாய் நகரில் கட்டி உள்ளார்கள். ஐரோப்பிய உணவகங்களின் பாணியில் மக்டோனால்ட் போன்ற பல கடைகள் உள்ளன.  நாகரீக உலகுடன் ஒத்துப் போகும் வகையில் 2006 ஆம் ஆண்டில் பண்டைய காலத்து பாணியில் இருந்த சௌக்ஸ் (Souks) கடைகள்  இடித்துத் தள்ளப்பட்டன.

துபாய்க்கு செல்ல வேண்டுமா
(Budget travel to Dubai )

கீழ்கண்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 30 நாள் விசா (Visa) தரப்படுகின்றது.
 ஆஸ்திரேலியா , அண்டொரா  , ஆஸ்திரியா , ப்ருனெய் , பெல்ஜியம் , கனடா , டென்மார்க் , பின்லாந்த் , பிரான்ஸ் , ஜெர்மனி , க்ரீஸ்  , ஹாங் காங் , ஐஸ்லேன்ட்  , இர்லாந்து , இத்தாலி , ஜப்பான் , லிச்ட்டேன்ச்டீன் , லுக்ஸ்யெம்பௌர்க்  , மலேசியா , மொனாகோ , நெதர்லாண்ட்ஸ் , நியூ சிலாந்து , நார்வே , போர்துகல் , சான்  மரினோ , சிங்கப்பூர் , சவுத்  கொரியா , ஸ்பெயின் , ஸ்வீடன் , ஸ்விட்சர்லாந்து , யுனைடெட் ஸ்டேட்ஸ்  ஆப்  அமெரிக்கா  மற்றும்  வாடிகன் . மற்ற நாடுகளில் உள்ளவர்கள் முன்னதாகவே விசாவை பெற்று இருக்க வேண்டும்.
UAE யை பொறுத்தவரை மருந்துகள், போதைப் பொருட்கள் போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. கோட்டின், வாலியம், ராபிடுச்சின் போன்ற மருந்துகள் அங்கு தடை செய்யப்பட்டு உள்ளவை. அந்த மருந்துகளை நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்றால்  என்றால் உங்களிடம் தகுந்த மருத்துவருடைய சான்று இதழ் தேவை.இல்லை என்றால் உங்களை திரும்ப அனுப்பி விடுவார்கள் அல்லது சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.
UAE க்கு செல்ல வேண்டும் எனில் அந்த நாட்டின் தேசிய சேவை விமானங்களில் செல்லலாம். உலகெங்கும் இருந்தும் இங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன. குறைந்தக் கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டும் எனில் ஏர் அராபியா விமானங்களில் பயணம் செய்யலாம்.  பிற நகரங்களுக்கு பயணம் செய்ய நல்ல சொகுசான பஸ் வசதிகள் உள்ளன. அவையே சிறந்தது. துபாய், ஷார்ஜாஹ் மற்றும் அபு துபாயில் நிறைய டாக்சிக்கள் ஓடுகின்றன.  

 ஷேக் சயேத்  மசூதியின்  உட்புறக் காட்சி , Abu Dhabi
Author: Frank Haas (Creative Commons Attribution 3.0 Unported)


UAE யில் உள்ள நகரங்கள்
(Places of Interest in United Arab Emirates )
1) அபு  தாபி
தலை நகரம் மற்றும் இரண்டாவது பெரிய நகரம்
2) துபாய்
வர்த்தக நகரம்
3) ஷர்ஜாஹ்
UAE யின் மூன்றாவது மிகப் பெரிய நகரம்
4) ஹட்டா
சிறிய நகரம் 
5) அஜ்மான்
UAE யின் மிகச் சிறிய நகரம்
6) புஜைராஹ்
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரம் 

சுற்றுலா இடங்கள்
(Tourist Destinations in the United Arab Emirates )
1) புர்ஜ்  காலிபா  
உலகின் மிக அதிக உயரமான கட்டிடம்
2) லிவா  ஓசிஸ்
மிகப் பெரிய அளவிலான மணல் குன்றுகள் உள்ள பாலைவனச் சோலை 
3) சகி  துபாய்
உலகின் மூன்றாவது  பனி நடைக் கட்டை உள்ள இடம் (பனி சறுக்கல்)

உஸ்பெகிஸ்தான் -- கல்யான் மினாரேட்

உஸ்பெகிஸ்தான்
கல்யான் மினாரேட்
(Read original Article in :- 
 



கல்யான்  மினரெட்

உஸ்பெகிஸ்தானின் புக்ஹாரா நகரில் உள்ளது இந்த மினாரேட்.  போ -இ -கல்யான்  மசூதி என்பதின் மினாரேட்டான இது நகரின் முக்கியமான ஒன்றாக  உள்ளது.
இதை 1127 AD ஆண்டில்   கரக்ஹனிட்  என்ற நாட்டின் ஆளுனரான அர்ஸ்லன்  கான் என்பவர் முஸ்லிம் மக்களின் தொழுகை இடமாக கட்டினார்.  இதன் மேல்மாடியின் உயரம்  45.6 மீட்டர்  அதற்கு மேல் பகுதியின் உயரம் 48 மீட்டர். இதன் கீழ் கூடத்தின்  சுற்றளவு  9 மீட்டர் மற்றும்  6 மீட்டர்  உயரமானது. மினாரேட்டின்  மேல் பகுதியில்  16 வளைவான ஜன்னல்கள் உள்ளன. இந்த மினாரேட் பல சித்திர வேலைபாடுகளைக் கொண்டது. இந்த நகரை கைப்பற்றியபோது அனைத்து பகுதிகளையும்  இடித்த சென்கிஸ்கான் இந்த மினாரேட்டின் அழகைப் பார்த்து இதை இடிக்காமல் விட்டார்.
20 ஆம் நூற்றாண்டுவரை இந்த மினாரேட்மரண கோபுரம் என்ற பெயரைப் பெற்று இருந்தது. காரணம் குற்றவாளிகள் அதன் மீது இருந்து கீழே வீசப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் . 1870 ஆம் ஆண்டு வரை  தொடரப்பட்டு கைவிடப்பட்டாலும் மீண்டும் அது 1917 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளில் அது தொடர்ந்தது.
இது போன்ற மினாரேட்டை மலேஷியாவின் முஸ்லிம் மத அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ள குவாலா டேரேன்கானூ (Kuala Terengganu)  எனும் இடத்தில் உள்ள பார்க்கில்   தமன் தமடுன் இஸ்லாம் (Taman Tamadun Islam) எனும் பெயரில் கட்டி உள்ளார்கள். 

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் -- உஸ்பெகிஸ்தான்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
உஸ்பெகிஸ்தான்
(Read original Article in :-




ஷக்ஹ -இ  ஜிந்டெஹ் மசூதி  , சமர்கந்த் 
Author: Sergei Mikhailovich Prokudin-Groskii (public domain)

மத்திய ஆசியாவின் ஒரு நாடே உஸ்பெகிஸ்தான் (Uzbekistan ).  சுற்றிலும் பல நாடுகளால் இந்த நாடு சூழப்பட்டு உள்ளது. அதிசயமாக அதை சுற்றி உள்ள மற்ற நாடுகளும் அந்த நாடுகளை சுற்றியும்   பல நாடுகளாகவே உள்ளன. லிசென்ஸ்டைன் ( Liechtenstein ) என்ற இடத்துக்கு அடுத்தபடியாக இந்த நாடே இப்படி உள்ளது.
உஸ்பெகிஸ்தான் வடக்கில் காசகிஸ்தான் ( Kazakhstan த) வடகிழக்கில் கிரைஜிஸ்தான் (Kyrgyzstan) தென் கிழக்கில் தாஜிகிஸ்தான் (Tajikistan ) மற்றும் ஆப்கானிஸ்தான் (ஆப்கானிஸ்தான்)  மற்றும் தெற்கில் துர்க்மேநிஸ்தான்(துர்க்மேனிஸ்தான்) போன்ற நாடுகளுடன் தன எல்லையை வைத்து உள்ளது.  உஸ்பெகிஸ்தானின் பரப்பளவு  447,400 சதுர கிலோமீட்டர் மற்றும் ஜனத்தொகை  28 மில்லியன் ஆகும். இதன் தலை நகரம் தாஷ்கண்ட்(தாஷ்கண்ட் ).


தாஷ்கண்ட்டில் தேவாலயம்
Author: Or2008 (Creative Commons Attribution 3.0 Unported)

ஹோட்டல்கள்
(Guide to Uzbekistan Hotels )

இங்குள்ள ஹோட்டல்களின்    (hotels in Uzbekistan) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.

உஸ்பெகிஸ்தானை பற்றிய விவரங்கள்
(More about Uzbekistan )

உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் ஐந்து  மணி அதிகம் (UTC+5). வாகனங்களை இடதுபுறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் உஸ்பெகிஸ்தான் சோம் (UZS) .  மின் ஓட்ட அளவு 220V/50Hz . தொலைபேசி எண் கோட் IDD +998.
2010 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் GDP of $37 பில்லியன் , தனி நபர் வருமானம் GDP of $1,320.. இந்த நாட்டில் ஏழை மற்றும் பணக்காரர்களிடையே அதிக இடைவெளி உள்ளது. நாட்டில் 45% மக்களின் தின வருமானம்  $1.25 மட்டுமே.


குகேல்டஷ்  மெட்ராஸ்சாஹ்
Author: FrancisTyers (Creative Commons Attribution 3.0 Unported)

பல ஆண்டுகளாக இந்த நாட்டை பலரும் தம் ஆதிக்கத்தில் எடுத்துக் கொண்டார்கள். 13 ஆம் நூற்றாண்டில் இதை மங்கோலியாவை சேர்ந்த செங்கிஸ்கான் (Genghis khan ) எடுத்துக் கொண்டார். 14 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை திமுர் (Timur) மலைவாசி தலைவர் ஆட்சியில் இது இருந்தது.  1924 ஆம் ஆண்டு இது ரஷ்யாவின் வசம் வந்தது.1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 அம தேதி இது சுதந்திரம் அடைந்தது. 

உஸ்பெகிஸ்தானுக்கு செல்ல
(Visiting Uzbekistan )

 CIS நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் உள்ளவர்கள் இங்கு செல்ல விசா (Visa) பெற வேண்டும்.  ஆஸ்திரியா , பெல்ஜியம்  , பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் , லட்விய , மலேசியா , ஸ்பெயின் , ஸ்விட்சர்லாந்து  மற்றும் பிறருடன் நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு வர முதலில் அங்குள்ளவர்களிடம் இருந்து அழைப்பிதழ் பெற வேண்டியது இல்லை.  ஆனால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் இங்கு செல்ல வேண்டும் எனில் உள்ளூர் மக்களின் அழைப்பிதழ் தேவை.


போ -இ -காலன்  மசூதி , புக்ஹர 
Author: Piero d'Houin (Creative Commons Attribution 3.0 Unported)

இந்த நாட்டிற்குள் செல்ல தாஷ்கந்த் விமான நிலையத்துக்கு {Tashkent International Airport (TAS)} முதலில் செல்ல வேண்டும். அதுவே மத்திய ஆசியாவின் மிகப் பெரிய விமான நிலையம் ஆகும். இங்கு  ஏதென்ஸ்  , பாங்காக் , பெய்ஜிங் , பிர்மின்காம் , டெல்லி , பிரான்க்பர்ட் , ஜெனீவா  , இஸ்தான்புல் , கோலாலம்பூர் , லாகூர் , லண்டன் -ஹீத்ரோவ் , மாட்ரிட் , மிலன் , மாஸ்கோ , நியூ  யார்க்  சிட்டி , பாரிஸ் , செயின்ட் பீட்டர்ஸ்புர்க் , மற்றும்  டோக்யோ போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.

இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Uzbekistan )
  1. தாஷ்கண்ட்   - தலை நகரம்
  2. அன்டிஜன்
  3. புக்ஹர
  4. க்ஹிவ
  5. நமங்கன்
  6. நுகுஸ்
  7. சமர்கந்த்
  8. ஷக்ஹ்ரிஸப்ழ
  9. தேர்மேஸ்

சுற்றுலா இடங்கள்
(Tourist Attractions of Uzbekistan )
கல்யாண்  மினரெட்  

யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Uzbekistan )
  1. யட்சன்  கல 
  2. ஹிஸ்டரிக்  சென்டர் ஆப    புக்ஹர 
  3. ஹிஸ்டரிக்  சென்டர்  ஆபி  ஷக்ஹ்ரிஸ்யப்ஸ்
  4. சமர்கந்த்  - கிராஸ்ரோட்ஸ் ஆப்  குல்சரஸ்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - வனுவதூ

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
வனுவதூ 
(Read Original Article in : Discover Vanuatu )

Resort bungalows on Iririki Island, Vanuatu
இரிக்கி தீவில் சுற்றுலா பயணிகள் தங்கும் வீடுகள்  
Author: Phillip Capper (Creative Commons Attribution 2.0 Generic)


பசிபிக் கடலில் தென் கிழக்குப் பகுதியில் உள்ளதே  வனுவதூ (Vanuatu) எனும் தீவு நாடு.  இதன் பரப்பளவு   12,190 சதுர கிலோமீட்டர்.  ஜனத்தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி  245,000. ஆஸ்திரேலியாவில் இருந்து வடமேற்கில்  1,750 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது.  இதன் தலை நகரம் போர்ட் விலா (Port Vila) என்பது.

இங்குள்ள ஹோட்டல்களின்  (hotels in Vanuatu ) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக்  செய்யவும்.

வனுவதூவைப் பற்றிய விவரங்கள்
(More on Vanuatu)

இந்த நாட்டின் நேரம் உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ள நேரத்தை விட பதினோரு மணி நேரம் அதிகம் (UTC+11). வாகனங்களை வலது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் வானத்து வடூ (VUV).   தொலைபேசி எண் கோட் IDD +678.

சம்பக்னே  பீச் , வடக்கு சாண்டோ
Author: Jae Lee (public domain)

வனுவதூ என்பது 82 சிறு தீவுகளைக் கொண்டது.  இவை அனைத்துமே கடல் அடியில் எழுந்த  சீற்றங்களினால்  ஏற்பட்டவை.  இங்குள்ள மிகப் பெரிய தீவுகள்  எஸ்பிரிடூ சாண்டோ, மலாகுலா, இபாடே, எர்ரோமாங்கோ (Espiritu Santo, Malakula, Efate and Erromango) போன்றவை.  இதன் தலைநகரமான போர்ட் விலா என்பது இபாடே தீவில் இருக்க நாட்டின் 1,879 மீட்ட உயரமான  மலை எஸ்பிரிடூ சாண்டோவில் உள்ளது.
இந்த நாட்டின் தட்ப வெட்ப நிலை 20°C (68°F) முதல் 32°C (90°F) வரை உள்ளது . டிசம்பர் முதல் ஏப்ரல் வரை மழைக் காலம். இந்த தீவுகளில் அடிக்கடி புயல் வீசும்.


பெண்டேகோஸ்ட்  தீவினர் கீழே குதிக்கும்  ஒரு சடங்கு

வனுவதூவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மைக்ரோனேஷியா( Micronesia ) வை சேர்ந்தவர்கள் வசித்து வந்தாலும் 1605 ஆம் ஆண்டு இங்கு ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த பெர்னாண்டஸ் டி குரோஸ் ( Fernandes de Queirós )  என்பவரே முதலில் வந்தார்.  19 ஆம் நூற்றாண்டில் இந்த தீவுகளில் பலவற்றை பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடினாலும் 1940 ஆம் ஆண்டு இங்கு தேசிய உணர்ச்சி தோன்றியது. ஆனாலும் 1970 ஆண்டில்தான் முதலில் அரசியல் கட்சி தோன்றியது.  1980 ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 30 ஆம் தேதியன்று இது பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாட்டில் இருந்து சுதந்திரம் அடைந்தது.


பெல்ஸ் குகையில் ஓவியங்கள் 

ஐரோப்பிய நாடுகள் மற்றும் காமன் வெல்த் நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு செல்ல விசா தேவை இல்லை. பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன் , ஆக்லாந் , நாடி, நௌமியா, போர்ட் விலா ( Brisbane, Sydney, Melbourne, Auckland, Nadi and Nouméa from Port-Vila) போன்ற இடங்களில் இருந்து இங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன

இந்த நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Cities in Vanuatu )
  1. போர்ட் -விலா  - தலை நகரம்
  2. லுகன்வில்லே

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Vanuatu )
செப் ரோய்  மட்ட�s டொமைன்  (2008)

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ஜாம்பியா

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
ஜாம்பியா
(Read Original Article in : Discover Zambia )



விக்டோரியா பால்ஸ்சில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
Author: Ian Restall (public domain)  

தென் ஆப்ரிகாவில் உள்ள இன்னொரு நாடு ஜாம்பியா (Zambia ). இதன் பரப்பளவு 752,618 சதுர கிலோமீட்டர். 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி இதன் ஜனத்தொகை 13 மில்லியன் . இதன் எல்லைகள் வடக்கில் காங்கோ ஜனநாயக நாட்டுடனும் ( Democratic Republic of the Congo )   வட கிழக்கில்
தான்சனியாவுடனும் ( Tanzania ), கிழக்கில்  மலாவி (Malawi) தென் கிழக்கில் மொசாம்பிக் (Mozambique) மற்றும் தெற்கில் போஸ்ட்வானா (Botswana ), நாம்பியா (Namibia ) மற்றும் தெற்கில் அங்கோலா (Angola) வுடன் உள்ளது. இந்த நாட்டின் தலை நகரம் லுசாகா ( Lusaka).
ஜாம்பியாவின் ஹோட்டல்கள். Guide to Zambia Hotels இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Zambia) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.


விக்டோரியா பால்ஸ்
Author: Kounosu (Creative Commons Attribution 3.0 Unported)

ஜாம்பியாவைப் பற்றிய விவரங்கள்
(Details on Zambia )

ஜாம்பியாவின் நேரம் உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட  இரண்டு மணி நேரம்  அதிகம் (UTC+2). வாகனங்களை இடதுபுறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் அமெரிக்க டாலர். பேசும் மொழிகள் ஆங்கிலம், பெம்பா, லுண்டா,நியாஞ்சா  போன்றவை (English, Bemba, Lunda and Nyanja).  தொலைபேசி எண் கோட் IDD +260. இங்குள்ள மக்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் கிருஸ்துவர்கள்.
18 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக இங்கு ஐரோப்பியர்கள் வந்தார்கள். அதில் டேவிட் லிவிங்ஸ்டோன் (David Livingstone) என்பவர் முக்கியமானவர்.இந்த நாட்டின் பெயரை 1888 ஆம் ஆண்டு  இந்த நாட்டின் பெயர் சுரங்கத் தொழிலை குத்தகைக்கு எடுத்த பிரிட்டிஷ்  சவுத் ஆப்ரிக்கா  கம்பெனி  (BSA Company)யை சேர்ந்த  செசில் ரோடெஸ்  என்பவர்  மூலம்  அமைந்தது. முதலில் வடகிழக்கு மற்றும் வட மேற்கு ரொடிஷியா என இருந்த பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு  1911 ஆம் ஆண்டில் வடக்கு ரொடிஷியா என ஆனாலும் அதில் இருந்து பிரிந்த தென் ரொடிஷியா இன்று ஜிம்பாவே (Zimbabwe) என ஆகிவிட்டது.     


லுசாகா  

1924 ஆம் ஆண்டு வட ரொடிஷியா, தென் ரொடிஷியா மற்றும் ந்யாசலாந் (Northern Rhodesia, Southern Rhodesia and Nyasaland) போன்ற மூன்றும் இணைந்து மலாவி (Malawi) என ஆயிற்று.  மீண்டும் வடக்கு ரொடிஷியா 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று ஜாம்பியா குடியரசு என ஆயிற்று.
சுரங்கத் தொழிலில் மிக முன்னேற்றம் கொண்டுள்ள இந்த நாட்டில் உள்நாட்டுக் குழப்பங்களும்  அண்டை நாடுகளான ஜிம்பாவே, அங்கோலா, மொசாம்பிக் போன்றவையுடன் யுத்தங்களும் தொடர்ந்து கொண்டு இருந்தாலும் 21 ஆம் நூற்றாண்டில்தான் இந்த நாடு வளர்ச்சி அடையத் துவங்கி உள்ளது.

 சிபடா எனும் இடத்தில் உள்ள கறிகாய் கடைகள்  
Author: Brian Dell (public domain)

ஜாம்பியா  ஜனாதிபதி ஆட்சின் கீழ் உள்ள  ஜனநாயக நாடு . இந்த நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்ற இருவருமே ஒருவரே ஆகும். இங்கு வறண்ட சூழ்நிலை நிலவுகின்றது.  நவம்பர் முதல் ஏப்ரல் வரை மழைக் காலம். மே முதல் அக்டோபர் வரை வறண்ட காலமாக உள்ளது. 
ஜாம்பியாவுக்கு செல்ல விசா தேவை (Visa). ஆனால் இரிலாந்த் ( Ireland) , மலைசியா (Malaysia), சிங்கப்பூர் (Singapore) மற்றும் தென் ஆப்ரிக்க (South Africa) நாடுகளில் உள்ளவர்களுக்கு விசா தேவை இல்லை.   
இந்த நாட்டிற்கு சென்று வரும் பயணிகள் அங்கு சுற்றுலாப் பயணம் செய்யத் தேவையான வசதிகள் இல்லை என்கிறார்கள். ஆகவே குறைந்த அளவில்தான் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கிறார்கள். இங்கு செல்ல வேண்டும் எனில் லுசாகா விமான நிலையத்துக்கு {Lusaka International Airport (LUN)} சென்று அங்கிருந்து ஊருக்குள் செல்ல வேண்டும். லண்டன் ஹீத்ரோவ் (London-Heathrow) விமான நிலையத்தில் இருந்து இங்கு செல்ல விமான சேவை உள்ளது. 

ஜாமியாவின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Zambia )
  1. லூசாக  -தலை நகரம்
  2. சின்கோல
  3. சிப்ட
  4. கப்வே
  5. காசாம
  6. கிட்வே
  7. லிவிங்ஸ்டோன் 
  8. முபுலிர
  9. ந்டோல

பார்க்கக் கூடிய இடங்கள்  
(Places of Interest in Zambia )
  1. ப்ளூ  லகூன்  நேஷனல்  பார்க்
  2. கபேவ் நேஷனல்  பார்க் 
  3. லோசின்வர்  நேஷனல்  பார்க்
  4. லோவேர்  சம்பேசி  நேஷனல்  பார்க்
  5. நோர்த்  லோங்க்வா  நேஷனல்  பார்க்
  6. நசும்பு  நேஷனல்  பார்க்
  7. சவுத்  லோங்க்வா  நேஷனல்  பார்க்
  8. வெஸ்ட்  லுங்க  நேஷனல்  பார்க்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Zambia )
மோசி -ஓ -துன்யா  / விக்டோரியா  பால்ஸ் 

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - யேமன்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
யேமன்
(Read original Article in :  Yemen (اليَمَن‎) Travel Guide)


யேமனின்  பாலைவனப் பகுதியில் உயரமான கட்டிடங்கள் (வாடி  ஹட்ரமவ்ட்)
Author: Jialiang Gao (Creative Commons Attribution 3.0 Unported)

மத்தியதரைக் கடல் நாட்டில் அராபியன் வளைகுடாவின் தென் பகுதியில் உள்ளது யேமன் (Yemen). இதன் எல்லைகள்  வடக்கில் சவூதி அராபியா (Saudi Arabia )  மற்றும் கிழக்கில் ஓமன் (Oman ) நாடு.  இது மேற்குப் பகுதியில் சிவப்புக் கடலை நோக்கியும், தெற்குப் பகுதியில் அராபியன் கடலையும் நோக்கி அமைந்து உள்ளது.

வாடி  தவான் , ஹட்ரமுட் , யேமன்
Author: Jacques Taberlet (Creative Commons Attribution 3.0 Unported)

யேமனில் ஹோட்டல்கள்
(Guide to Yemen )
இங்கு ஹோட்டல்கள் கிடைப்பது அத்தனை எளிது அல்ல.  நல்ல ஹோட்டலை தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. ஆகவே  உங்களுக்கு உதவ நான் வெளியிட்டு உள்ள அங்குள்ள ஹோட்டல்கள், அதன் விலாசம், தொலைபேசி எண், நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் போன்ற அனைத்தையும் இங்குள்ள யேமனின் ஹோட்டல்கள் என்பதின் மீது கிளிக் செய்து பார்க்கவும். இதில் பல இணைய தளங்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு உள்ள கட்டணப் பட்டியல் உள்ளது.
யேமன் பற்றிய விவரங்கள்;
(More about Yemen )
யேமன்  நாட்டின் பரப்பளவு  555,000 சதுர கிலோமீட்டர்  (203,849 sq mi). நாட்டின் ஜனத் தொகை  23.7 million people (2011 ஆண்டு கணக்கின்படி ). இந்த நாட்டின் தலை நகரம் சனானாஸ் என்பது. நாட்டின் நாணயம் யேமானி ரியால்  (YER).  இந்த நாட்டின் நேரம்  உலக நாடுகளின் ஒப்புக் கொள்ளப்பட்ட நேரத்தை விட மூன்று மணி நேரம் அதிமானது. இங்குள்ள மின் ஓட்ட அளவு  220V/50Hz . தொலைபேசி எண் கோட்  +967.
அராபியன் வளைகுடாவின் மிக ஏழ்மையான  நாடே யேமன். 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டின் GDP  $25.131 பில்லியன். 


சனானாஸ்சின் நகரின் அழகு
Author: Niklas Schiffler (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

யேமன் என்றால் தெற்கு என்று பொருள். இது பாலைவனப் பகுதியாகும். சவூதி அராபியாவுடனான இதன் எல்லை  யாருமே வாழாத பாலைவனப்  பிரதேசமாகும்.

டவர் ஹவுஸ் , வாடி  தர் 
Author: Gavin Collins (Creative Commons Attribution 3.0 Unported)

1918 ஆம் ஆண்டுவரை அதன் பக்கத்து நாடுகளைப் போலவே இதுவும் ஓட்டமான்  ஆட்சியில் இருந்து விடுதலைப் பெற்றது.  1962 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த நாடு தெற்கு யேமன் என்றும் வடக்கு யேமன் என்றும் இரண்டாகப் பிரிந்தன. 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துனிஷியா மற்றும் எகிப்து நாட்டுப் புரட்சியினால்  இந்த நாட்டின் பல நகரங்களிலும் ஆர்பாட்டங்கள் நடந்து நாட்டின்  ஜனாதிபதியான அலி அப்துல்லா சாலே விலகுமாறு ஆயிற்று. 

யேமனுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Yeman)
இந்த நாட்டில் நடைபெறும் புரட்சிகளினால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தடை உள்ளது.  புரட்சியினால் அந்த நாட்டில் உள்ளவர்களும் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
ஆகவே அந்த நாட்டின் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமையை கண்டறியுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். 2010 ஆம் ஆண்டுமுதலங்கு சென்று விசா (Visa) வாங்குவதற்கு தடை விதிகபட்டு உள்ளதினால் அங்கு செல்ல வேண்டும் எனில் முன்னதாகவே விசாவை கைவசம் வைத்து இருக்க வேண்டும்.
கைரோ(Cairo), தோஹா , துபாய், பிரான்க்பர்ட் (Frankfurt) போன்ற இடங்களில் இருந்து சனானாஸ்சிற்கு செல்ல சர்வதேச விமான நிலையம் உள்ளது. 

இங்குள்ள பெரிய நகரங்கள்
(Major Cities in Yemen )
  1. சனானாசஸ்  - தலை நகரம்
  2. ஏடன்
  3. அழ  ஹுடய்ட
  4. அழ  முகல்ல
  5. தமர்
  6. இப்
  7. கவ்கபன்
  8. மொக்ஹா
  9. ஷிபம்
  10. தயிஸ்   

பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Yemen )
  1. ஹரஸ் மலைப் பகுதி    
  2. வாடி  ஹட்ரமவ்ட்  

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Yemen )
  1. ஓல்ட்  வால்ட் சிட்டி  ஆபி  ஷிபம் 
  2. ஓல்ட் சிட்டி ஆப் சனானாஸ்
  3. ஹிஸ்டாரிக்  டவுன்  ஆப்  சாபிட் 
  4. சொகற்ற  அர்சிபெலகோ 

பூடான் - ஜகார் : லோட்ரக் கர்ச்சூ லக்ஹாங்

பூடான் : ஜகார்
 லோட்ரக் கர்ச்சூ லக்ஹாங்
(Read Original Article in :-Lhodrak Khacchu)


'பூடானில்' (Bhutan) உள்ள 'ஜகாரில்' (Jakar) உள்ள மிகப் பழைய மடாலய பள்ளி 'லோட்ரக் கர்ச்சூ லக்ஹாங்' (Lhodrak Kharcchu Lhakhang) என்பதே ஆகும். இது திபெத்திய (Tibetan) புத்த மத மடாலயம் (Buddhist monasttry) ஆகும். இந்த மடாலயம் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதைநிருவியவர் 'நம்ஹாய் என்க்போ ரின்போச்சே' (Namhai Nyingpo Rinpoche) என்பவர்.
இந்த மடாலயம் கட்டப்படுவதற்கான அடித்தளம் 1961 ஆம் ஆண்டிலேயே ஏற்பட்டது. 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'தலாய் லாமாவே' (Dalai lama) இந்த மடாலயத்தைக் கட்ட உள்ளூர் துறவிகளை (Monks) ஊக்குவித்தார்.
தற்போது 'லோட்ரக் கர்ச்சூ லக்ஹாங்'கில் நானூறு துறவிகள் உள்ளனர். இதன் நோக்கமே 'திபெத்திய' புத்த மத கோட்பாடை நிலையாக வைத்து இருப்பதே ஆகும்.

பூடான் - ஜகார் : குர்ஜே லக்ஹாங்

பூடான் : ஜகார்
குர்ஜே லக்ஹாங்
(Read Original Article in :- Kurje Lhkhang)

குர்ஜே லக்ஹாங்
Author: F. Eveleens (Creative Commons Attribution 3.0 Unported)

'பூடானில்' (Bhutan) 'குரு ரின்போச்சே' (Guru Rinpoche) என்பவர் AD 746 ஆம் ஆண்டு தியானம் செய்த புனித மடாலயமே 'குர்ஜே லக்ஹாங்' (Kurje Lhakhang) என்ற மடாலயம் . இந்த நாட்டின் மிகப் பழைய மடாலயம் இதுவே ஆகும்.
'குர்ஜே லக்ஹாங்' அல்லது 'குர்ஜே மடாலயம்' (Kurjey Monastery) எனப்படும் இது 'பும்தாங்' (Bumthang) மலைப் பள்ளத்தாக்கில் உள்ளது.
'பூடானில்' ஆட்சி செய்து வந்த 'சென்டப் காப்' (Sendah Gyab) என்ற மன்னன் தனது நாட்டில் இருந்த தீய ஆவி சக்திகள் (evil spirits) தமது மக்களை துன்புறுத்தி வருவதை தடுக்க 'குரு ரின்போச்சே'யை அழைத்தார். அது மட்டும் அல்லாமல் 'ஷேல்ஜிங் கார்போ' (Shelging Karpo) என்ற காவல் தேவதை அந்த மன்னனின் சக்தியை எடுத்துக் கொண்டு போய்விட அவன் நோயுற்றான்.
ஆகவே 'குரு ரின்போச்சே' அங்கு வந்து 'டிராக்மார் டோர்ஜி செஸ்பா' (Dragmar Dorji Tsegpa) எனப்பட்ட சிவப்புக் குகையில் கடுமையான தவம் செய்து அந்த தீய ஆவிகளை துரத்தி அடித்தாராம். அதுவே தற்போது 'குர்ஜே லக்ஹாங்' எனப்படும் மடாலயம் ஆகும்.

பூடான் - ஜகார் : ஜம்பே லக்ஹாங்

பூடான் : ஜகார்
ஜம்பே லக்ஹாங்
(Read Original Article in :-Jambey Lhakhang


'ஜம்பே லக்ஹாங் (Jambey Lhakhang) என்பது 'பூடானில்' (Bhutan) ஒரே இரவில் கட்டப்பட்ட 108 மடாலயங்களில் (Monastry) ஒன்றாகும்.
இதன் புராணக் கதை என்ன என்றால், 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த 'சொன்ஸ்டேன் கேம்போ' (Sonsten Gambo) எனும் அரசன் ஒருவன் பூடானில் புத்த மதத்தை (Buddahism) அழிக்க வந்த அரக்கி (Demonness) ஒருவளை அடக்குவதற்காக ஒரே இரவில் நாடெங்கும் 108 மடாலயங்களை அமைக்க அந்த அரக்கி பூமியில் புதைந்து போனாளாம்.
'ஜம்பே லக்ஹாங்' என்ற மடாலயம் அந்த அரக்கியின் இடது காலை (Left knee) மடித்து வைத்திருக்க 'கைச்சு லக்ஹாங்' மடாலயம் (Kychu Lhkhang) அவளது இடது காலை அழுத்தி பிடித்தபடி அமைந்துள்ளதாம்.

பூடான் : ஜகார்

பூடான் : ஜகார்
(Read Original article in :- Jakar)

'பூடானின்' (Bhutan) ஒரு சிறிய நகரமே 'ஜகார்' (Jakar) . கடல் மட்டத்தில் இருந்து 2800 மீட்டர் உயரத்தில் மத்திய கிழக்கு பகுதி 'பூடானின்', 'பும்தாங்' (Bumthang) மாகாணத்தில் உள்ளது இந்த நகரம். 'திம்புவில்' (Thimphu) இருந்து இந்த நகருக்கு செல்ல சுமார் 11 மணி நேரம் பிடிக்கும். 5000 மக்களே உள்ள இந்த நகரம் வஜ்ராயன புத்தமத (Vajrayana Buddhism) சமூகத்தினரின் முக்கிய இடம்.


ஜகார் சோங்
Author: Jean-Marie Hullot (Creative Commons Attribution 3.0 Unported)

சீதோஷ்ண நிலை
மே முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த நகருக்கு செல்ல தகுந்த காலம் ஆகும். காரணம் மற்ற நாட்களில் இங்குள்ள குளிர் -6°C வரை சென்றுவிடும்.

இங்கு செல்வது எப்படி
'திம்புவில்' (Thimphu) இருந்து இந்த நகருக்கு செல்ல சுமார் 11 மணி நேரம் பிடிக்கும். ஜாகாரின் உள்ளே சுற்றிப் பார்க்க ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொள்ளலாம்.
வாங்டிசோலிங் அரண்மனை
Author: Stephan Shephard (Creative Commons Attribution 3.0 Unported)




ஜகாரில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of interest)

(1) சாக்கர் லகாங்
( Chakhar Lhakhang )
சிந்து ராஜா என்ற இந்திய மன்னனின் சிறிய மடாலயம். அவர் இங்கு குரு 'ரின்போச்சே'யை அழைத்து இருந்தார்
(2) ஜகார்சோங்
(Jakar Dzong )
1667 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மடாலயம்
(3) ஜம்பே லக்ஹாங்
(Jambey Lhakang )
ஒரே நாள் இரவில் கட்டப்பட்ட 108 மடாலயங்களில் இதுவும் ஒன்று
(4) குர்ஜே லக்ஹாங்
(Kurje Lhakhang)
பூடானின் மிக முக்கியமான மடாலயம்
(5) லோட்ரக் கர்ச்சூ லக்ஹாங்
(Lhodrak Kharchhu Lhakhang )
ஜகாரின் புதிய மடாலயம்
(6) டாம்சிங் கோம்பா
( Tamshing Gompa )
1501 ஆம் ஆண்டை சேர்ந்த மடாலயம்
(7) வாங்டிசோலிங் அரண்மனை
(Wangdicholing Palace )
1857 ஆம் ஆண்டு முதல் மட்டும் இரண்டாம் பூடான் மன்னர்கள் தங்கிய கோடைக்கால அரண்மனை.
(8) சண்டோபெல்ரி லக்ஹாங்
(Zangtopelri Lhakang )
2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மடாலயம்

பூடான் : பரோ

பூடான் : பரோ
(Read Original Article in :- Paro
)

Paro Travel Guide
 
'பரோ'வை (Paro) பொறுத்தவரை 'பூடானுக்கு' (Bhutan) நுழை வாயில் என்றே கூறலாம். காரணம் அங்குதான் 'பூடானுக்குள்' செல்ல விமான நிலையம் உள்ளது. 'பூடானின்' தலை நகரமான 'திம்புவில்' (Thimbhu) இருந்து இது 54 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தக்சங் மடாலயம்
Author: Thomas Wanhoff (Creative Commons Attribution 2.0 Generic)

பாரோவின் ஹோட்டல்கள்
'பரோவில் ' தங்கும் இடங்கள் கிடைப்பது கஷ்டம். ஆகவே நீங்கள் நல்ல ஹோட்டலை தேட வேண்டும் என்பதினால் உங்களுக்கு உதவுவதற்காக அனைத்து ஹோட்டல்களின் கட்டணங்கள், விலாசம் போன்ற விவரங்களை ஹோட்டல்ஸ் இன் பரோ (hotels in Paro) என்ற தளத்தில் காணலாம்.
பரோவைப் பற்றிய மேல் விவரங்கள்
'ரின்புங் சோங்' (Rinpung Dzong) எனும் மடாலயம் இங்கு புகழ் பெற்றது. 'பரோவை' நோக்கி அமைந்து உள்ள இது மலை முகப்பில் உள்ளது.

பரோவிற்கு செல்ல வேண்டுமா
'பரோ'விற்குச் செல்ல வேண்டும் எனில் அங்குள்ள 'பரோ' (PBH) விமான நிலையத்தை வந்து அடைய வேண்டும். இங்கு வருகை தருபவர்கள் உள்ளூரில் உள்ள சுற்றுலா பயண திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால் அவர்களே உங்கள் சாமான்களை அங்கிருந்து நீங்கள் தங்கும் இடத்துக்கு கொண்டு வரும். 'டிரன்க் ஏர்' விமான சேவை மூலம் 'பாங்காக்' (Bangkok), 'டெல்லி' (Delhi), 'டாகா' (Daka), 'காட்மாண்டு' (Katmandu) மற்றும் 'கல்கத்தாவில்' இருந்து இங்கு செல்ல முடியும்.

உள்ளூரை சுற்றிப் பார்க்க
(Getting around Paro)
நீங்கள் உள்ளூரை சுற்றிப் பார்க்க வேண்டுமானால் நடந்தே செல்லாம். அல்லது டாக்ஸி, பஸ் போன்றவற்றிலும் பிரயாணம் செய்யலாம்.
கறுப்புத் தொப்பி நடனம்
Author: Stephen Shephard (Creative Commons Attribution 3.0 Unported)




பூட்டான் : திம்பு

பூட்டான் : திம்பு
(Read Original Article in :-Thimphu Travel Guide)

'திம்பு' (Thimphu) நகரம் பூடானின் தலை நகரம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 உயரத்தில் உள்ள இந்த நகர ஜனத்தொகை 80,000 ஆகும். இந்த நகரம் 'திம்பு சுவா நதி' (Thimphu Chuu) அல்லது 'வாங் சுவா நதி' (Wang Chuu) என்று அழைப்படும் நதியின் மேற்குப் பக்கத்தில் உள்ளது.

திம்புவின் ஹோட்டல்கள்
'திம்புவில்' தங்கும் இடங்கள் கிடைப்பது கஷ்டம். ஆகவே நீங்கள் நல்ல ஹோட்டலை தேட வேண்டும் என்பதினால் உங்களுக்கு உதவுவதற்காக அனைத்து ஹோட்டல்களின் கட்டணங்கள், விலாசம் போன்ற  விவரங்களை  ஹோட்டல்ஸ் இன் திம்பு  (hotels in Thimphu) என்ற தளத்தில் காணலாம்.

நேஷனல் மெமோரியல் சொர்டேன்
Author: Stephen Shephard (Creative Commons Attribution 3.0 Unported)

திம்புவைப் பற்றிய மேல் விவரங்கள்
'பூடான்' நாட்டின் பொருளாதாரத்தில் (conomy) தம்பு முக்கிய பங்கு வகிக்கின்றது.  அரசாங்கத்தின் பல கட்டடங்கள் மற்றும் 'டிசென்சொலிங்' அரண்மனையும்  (Dechencholing Palace)  இங்குதான் உள்ளன.

தட்பவெட்ப  நிலை
மே -ஜூன் (May -June)  மாதங்களில் அதிகமாக வேர்க்கும் (Humid) .  வெயிலும் அதிகம். ஆனால் அதே போல குளிர் காலத்திலும் (Winter) குளிர் அதிகம்.  ஆகவே பூடானுக்கு செல்ல சிறந்த காலம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களே (Sept -Oct) . அப்போதுதான் அங்கு வெப்ப நிலை 10°C to 23°க என்ற அளவில் இருக்கும்.

திம்புவிற்கு செல்ல
'திம்புவில்' சர்வதேச விமான நிலையம் இல்லை. ஆகவே அங்கிருந்து சுமார் 54 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'பரோ' (Paro) விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து திம்புவிற்கு செல்ல வேண்டும். உங்கள் சாமான்களை அங்கிருந்து நீங்கள் தங்கும் இடத்துக்கு கொண்டு வர  உங்களுடைய சுற்றுலாப் பயண திட்ட மையமே ஏற்கும்.

உள்ளூரை சுற்றிப் பார்க்க
நீங்கள் உள்ளூரை சுற்றிப் பார்க்க வேண்டுமானால் நடந்தே செல்லாம். அல்லது டாக்ஸி, பஸ் போன்றவற்றிலும் பிரயாணம் செய்யலாம்.
Cheri Goemba Monastery
சேரி  கோயெம்ப  மடாலயம் 
Author: Stephen Shephard (Creative Commons Attribution 3.0 Unported)

திம்புவில் பார்க்க வேண்டிய இடங்கள்
Places of Interest in Thimphu

(1) பொடானிகல் கார்டன்
( Botanical Gardens )
திம்புவில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூங்கா
(2) சங்கங்க லகாங்
(Changangkha Lhakhang )
மிகப் பழைமையான ஆலயம்
(3) காரனேஷன் பார்க்
(Coronation Park )
நகரத்தின் ஸ்டேடியத்துக்கு அருகில் நதிக் கரையில் உள்ள பூங்கா
(4) நேஷனல் பால்க் ஹெரிடேஜ் மியூசியம்
(National Folk Heritage Museum )
பூடான் நாட்டின் கிராமிய வாழ்கையைக் காட்டும் காட்சியகம்
(5) நேஷனல் மெமோரியல் சொர்டேன்
(National Memorial Chorten)
திபெத் நாட்டுப் பாணியில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்தூபி. இங்கு வந்து மக்கள் வணங்குகிறார்கள்.
(6) சிம்டோகா சோங்
(Simtokha Dzong )
1629, ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதலாம் மடாலயம்
(7) டாக்கின் பிரசர்வ்
(Takin Preserve )
ஆடும் அல்ல, மாடும் அல்லாத பூடான் நாட்டுப் பிராணியைக் காக்கும் இடம்
(8) டெக்ஸ்டையில் மியூசியம்
(Textile Museum )
பூடான் நாட்டு துணிகள் மற்றும் திரை சீலைகள் விற்பனை நிலையம்
(9) த்ராஷீ சோயீ சோங்
(Trashi Chhoe Dzong )
மத மற்றும் நிர்வாக அமைப்பு இடங்களைக் கொண்ட மடாலய அரண்மனை
(10 ) சன்தொபெரி லக்ஹாங்
(Zangthoperi Lhakhang )
1960' ஆம் ஆண்டு கட்டப்பட்ட அற்புதமான கலை அழகு கொண்ட ஆலயம்
(11) சோரிக் சுசும் எனும் பண்டைய கால கலை பள்ளி
(Zoric susum School of Traditional Ats)
1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கலை கல்விக் கூடம்

பூடான் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

பூடான் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read The original Article in :- Bhutan Budget Travel )


பூடானில் சிறுவர்கள்
Author: Steve Evans (Creative Commons Attribution 2.0 Generic)

'பூடான்' (Bhutan) நான்கு பக்கங்களிலும் நிலப்பரப்பால் சூழ்ந்த பகுதி ஆகும். தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் 'இந்தியா'வுடனும் (India) , தெற்கு மற்றும் வடக்கில் 'திபெத்' (Tibet) மற்றும் 'சீனா'வுடனும் (China) தனது எல்லையை வைத்துக் கொண்டு உள்ளது. இதன் பரப்பளவு 38,394 சதுர கிலோ மீட்டர் (14,824 சதுர மைல் ). 2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் ஜனத்தொகை 700,000, தனிநபர் வருமானம், அதாவது GDP 1880 .
பூடானின் தலை நகரம் 'திம்பூ' (Timphu). இதன் அதிபராக மன்னர் உள்ளார்.  இது மன்னர் (King) ஆட்சிக்கு உட்பட்ட நாடு (Monarchy). இந்த நாட்டின் மன்னர் 'ஜிக்மே கேசர் நேம்யேல் வாங்சுக்' (Jigme Khesar Nemgyel Wangchuck) என்பவர். பிரதமர் 'ஜிக்மே Y. தின்லே' என்பவர் (Jigme Y. Tinley).
'பூடானின்' வடக்குப் பகுதி முழுவதும் இமயமலையினால் (Himalayas)  சூழப்பட்டு உள்ளது. அவற்றின் உயரம் சுமார் 7000 மீட்டர் வரை உள்ளது. 'பூடானின்' மிக உயரமான மலைகளில் 7553 மீட்டர் உயரமான 'குலா காங்கரி' (Kula Kangri) மற்றும் 7570 மீட்டர் உயரமான 'கங்கர் பென்ஸும்' (Gangkhar Puensum) என்ற இரண்டும் உள்ளன. அது போல தெற்கு 'பூடானும்' இமயமலைக் காடுகளினால் (Himalayan Forest) சூழப்பட்டுள்ள பகுதியாகும். இந்தக் காட்டுப் பகுதியில் உள்ள மலைகளின் சராசரி உயரம் (Height) 1500 மீட்டர் ஆகும்.
'பூடான்' அரசாங்க நாணயம் (Currency) 'நகுல்ட்ரம் ' (Ngultrum) என்பது. அதனுடன் சேர்த்து 'இந்திய' நாணயமும் அங்கு நடைமுறையில் உள்ளது. இந்த நாடு சிறியது என்றாலும் இதன் வளர்ச்சி நல்ல முறையில் உள்ளது. 2005 ஆம் ஆண்டு 8 % அளவில் இருந்த இந்த நாட்டின் வளர்ச்சி 2007 ஆம் ஆண்டில் 14 % தாக உயர்ந்துள்ளது.
1987 ஆம் ஆண்டு 'பிரிட்டிஷ்' நாட்டு (British) பத்திரிகை (Journalist) நிருபர் ஒருவர் இந்த நாட்டின் வளர்ச்சி மிகக் குறைவாக உள்ளது என்றதற்கு அந்த நாட்டின் மன்னர் கூறினார் ' பொருளாதார வளர்ச்சியை விட நாட்டு மக்களின் மன மகிழ்ச்சியின் வளர்ச்சியே முக்கியமானது'. அது முதல் மேற்கத்திய (Europian) பத்திரிகையாளர்களும் பார்வையாளர்களும் (psychologists) அந்த நாட்டின் பொருளாதார மற்றும் மன மகிழ்ச்சியின் வளர்ச்சியை ஆராயத் துவங்கினார்கள். அவர்கள் ஆராய்ச்சியின்படி பூடான் நாட்டு மக்களில் 45 % மக்கள் மிக மிக மகிழ்ச்சியாகவும், 52 % மக்கள் மகிழ்ச்சியாகவும், 3 % சதவிகிதத்தினர் மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் உள்ளதாகவும் தெரிய வந்தது.
'பூடானுக்கு' செல்பவர்கள் கையில் அதிக பணம் இல்லாமல் செல்ல முடியாது. 'இந்தியர்கள்' (India) மற்றும் 'பங்களாதேசத்தினருக்கு' (Bangaladesh) அங்கு செல்ல விசா தேவை இல்லை. விசா தேவையானவர்கள் 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். விமான நிலையத்துக்கு சென்று இறங்கியப் பின் விசாவிற்கு (Visa) விண்ணப்பித்தால் அது கிடைக்காது. 14 நாட்களுக்கான விசாவின் கட்டணம் US$20, அதற்கு முன்னதாகவே நாட்டிற்கு சுற்றுலா செய்து கொண்டதற்கான அத்தாட்சி  பத்திரமும் தேவை. அந்த சுற்றுலா பயணத்திற்கான திட்டத்தை உள்ளூரில் உள்ள சுற்றுலா அலுவலகம் மூலமே செய்து கொள்ள வேண்டும். அதற்கான கட்டணம் US$200 ஆகும். உள்ளூரில் உள்ள ஏஜெண்டுக்களின் மூலமே சுற்றுலா பயண முன் பதிவு செய்து கொண்டாலும் அதற்கான கட்டணத்தை பூடான் அரசே நிர்ணயித்து உள்ளது.
'பூடானுக்கு' செல்ல வேண்டும் என்றால் 'இந்தியா' அல்லது 'தாய்லாந்துக்குச்' (Thailand) சென்றுவிட்டு அங்கிருந்து 'பூடானுக்கு' செல்லலாம். 'நேபாளம்' (Nepal)  மற்றும் 'தாய்லாந்து' நாட்டிற்குச் சென்றால் அங்கிருந்து 'பூடானுக்கு' செல்ல விசாவிற்கு ஏற்பாடு செய்வார்கள்.
'பூடானின்' ஒரே சர்வதேசிய விமான நிலையம் 'பரோ' விமான நிலையம் (Paro Airport) ஆகும். அங்கு செல்ல  'டுறுக் ஏர்' (Druke Air) என்ற தேசிய விமான சேவை உள்ளது.
பாரோவின் இயற்கை காட்சிகள்
Author: Jean-Marie Hullot (Creative Commons Attribution 2.0 Generic)
 

பூட்டானில் உள்ளூர் சுற்றுலா

'பூடானுக்கு' செல்பவர்களின் பெட்டி படுக்கைகளை இறக்கவும், அதை கொண்டு செல்லவும் சுற்றுலா திட்ட அமைப்பே ஏற்பாடு செய்து விடும். ஏன் எனில் நீங்கள் கொடுக்கும் சுற்றுலா கட்டணத்தில் (Tour package) அவை அடக்கம். உள்ளூரில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் மினிபஸ் அல்லது 4 WD வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள். உள்ளூரில் தனியாக செல்பவர்கள் அங்குள்ள வாகன ஓட்டிகளிடம் கேட்டுக் கொண்டால் அவர்கள் உங்களை பல இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள். அதற்கான சிறு தொகையை அவர்குக்கு அன்பளிப்பாக தர வேண்டும். 

புனாகா சோங் எனும் இடம்
Author: Jean-Marie Hullot (Creative Commons Attribution 3.0 Unported

 
பூடானின் முக்கிய நகரங்கள்
(Principal Cities of Bhutan )

(1) திம்பு
(Thimphu )
1961 ஆம் ஆண்டு முதல் இதுவே பூடானின் தலை நகரம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நகரம் பெரும் வளர்ச்சியை அடைந்து உள்ளது.
(2) பரோ
(Paro)
பூடானில் ஒரு நகரம்
(3) ஜகார்
(Jakar)
'ஜகார் சோங்' (Jakar Dzong) எனும் இடத்தில் உள்ள 'பும்தாங்' (Bumthang ) மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம்
(4) புனகா
(Punakha)
புனகா மாவட்டத்தில் உள்ள நகரம். முன்னர் இதுவே தலை நகரமாக இருந்தது.

பூடானில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Sights in Bhutan )
(1) குர்ஜி லக்ஹாங்
(Kurje Lakhang)
பூடானின் முதலாம் புத்தர் தலம். இங்குதான் குரு 'ரின்போச்சே' (Rinpoche) என்பவர் தியானத்தில் அமர்ந்து இருந்தார். ஆகவே இது ஒரு புனிதத் தலம்.
(2) தக்சாங் மடாலயம்
(Taktsang Monastry)
1200 மீட்டர் உயர மலை மீது உள்ள மடாலயம். தனது இரண்டாவது பயணத்தின் போது குரு 'ரின்போச்சே' இங்கு வந்தாராம்.
(3) சிங்கே சோங்
(Singye Dzong )
இது திபெத் (Tibet) நாட்டின் அருகில் உள்ளதால் இந்த இடத்தக்க்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. இத மழைப் பள்ளத்தாக்கில் உள்ள 'எஷி ஸோன்கல்' என்பவர் அமைத்து உள்ள ஆலயத்துக்கும் தனது இரண்டாம் விஜயத்தில் 'ரின்போச்சே' சென்றாராம்.
(4) ஜம்பே லக்ஹாங்
ஒரே நாள் இரவில் சோங்க்டேன் என்ற மன்னனால் (King Songten) கட்டப்பட்ட 108 மாடாலயங்களில் இதுவும் ஒன்று.
(5) டாம்சிங் லக்ஹாங்
'டேர்தான் பத்மா லிங்கப்பா' (Terton Padma Lingpa) என்பவர் கட்டிய மடாலயம்
(6) லாவ்ட்ராக் கர்ச்சூ லக்ஹாங்
பூடானின் மிகப் பெரிய மடாலய கல்லூரி
(7) புனாகா சோங்
புனாக்காவில் சப்ட்ருங் காவாங் நம்ஜியால் (Zhabdrung Ngawang Namgyal) என்பவர் கட்டிய அரண்மனை
(8) ரின்புங் சோங்
1993 ஆம் ஆண்டு சிறிய புத்தர் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்ட பூடானின் அரண்மனை
(9) சாகர் சோங்
பூடானின் 'பும்டாங்' (Bumthang ) மாகாணத்தில் உள்ள அரண்மனை