துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Monday, October 17, 2011

ப்ருனி சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

ப்ருனி சுற்றுலா பயணக்  குறிப்புக்கள்
(Read Original Article in :- Brunei )


 பண்டார் செரி பகவான் மசூதி  
Author: Camera Operator: PH2 JACOB JOHNSON, USN (public domain)

'ப்ருனி' (Brunei) நாட்டை குறைந்த செலவில் பார்க்கவே உங்களுக்கு இந்த நாட்டின் சுற்றுலா குறிப்புக்களை தந்து உள்ளேன். 'மலேசியா' (Malaysia)  நாட்டின் 'சபாஹ்' (Sabah) மற்றும் 'சராவக்' (Sarawak) போன்ற இடங்களை சென்று பார்ப்பதும் இங்கு போகவும்  ஒரே அளவிலான செலவுதான் ஏற்படும்.
இது மிகச் சிறிய ஆனால் பணக்கார நாடாகும். இதன் அதிகாரபூர்வமான பெயர் 'நெகரா ப்ருனி தாருஸ்ஸலாம்' (Negara Brunei Darussalam) என்பதே.  அதன் அர்த்தம் அமைதியான வசிப்பிடம். (Abode of Peace).  இதன்  தென்புறத்தில் 'மலேசியா'வின் 'சராவக்' , வடக்கில் 'தென் சைனா' (South China) போன்றவற்றுடன் எல்லைகளை வைத்து உள்ளது.  இந்த நாட்டின் ஆளுநர் மற்றும் மன்னன்  (Ruler and Head)  'சுல்தான் ஹசானால் போல்கியா' (Sultan Hassanal Bolkiah) என்பவர் ஆவர். 'ப்ருனி'யில் நான்கு மாகாணங்கள் உள்ளன. அவை 'பிலைட்' (Belait), 'டுடாங்' (Tutong), 'மவ்ரா'  (Muara) மற்றும் 'டெம்புராங்' (Temburong) என்பவை ஆகும். 'ப்ருனி'யின் தலைநகரம் 'பண்டார்  செரி பகவான்' (Bandar Seri Begawan)  என்பதே. இது 'மவ்ரா' மாகாணத்தில் உள்ளது.

ஓமர் அலி சைபுதின் மசூதி
Author: Daniel Weiss (Creative Commons Attribution-ShareAlike 3.0)

ப்ருனியின் வரலாறு 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில்  கொடி கட்டிப் பறந்த 'சுல்தானேட் ஆப் ப்ருனி' (Sultanate of Brunei) என்பவர்கள் ஆட்சி காலத்தில் துவங்கியது.  அவர்களின் ஆதிக்கம் 'சபாஹ்' , 'சராவக்' , 'போர்னியோ'வின் (Borneo) தீவுகள்   மற்றும் 'சுலு ஆர்ச்சிபீலகோ' (Sulu archipelago) போன்ற  இடங்களிலும் பரவி இருந்தது. ஆனால் ஐரோப்பியர்கள் அந்த இடங்களில் வந்து குடியேறியதும் சுல்தான்  ஆட்சியின் மகிமை குறைந்தது. 'ப்ருனி'யின் தலைநகரில் 'ஸ்பெயின்' (Spain) நாட்டினருடன் நடந்த சண்டையில் சுல்தானியர்கள் வெற்றிப் பெற்றாலும் அவர்களின் சில பகுதிகளை 'ஸ்பெயின்' நாட்டினரிடம் இழந்தார்கள்.  19 ஆம் நூற்றாண்டில் அவர்கள் 'சராவாக்கை' சேர்ந்த 'வெள்ளை ராஜாஹ் '(White Rajahs) என்பவர்களிடம் நடந்த சண்டையில்  தற்போது உள்ள சிறு பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் இழந்து விட்டார்கள். 1888 முதல் 1984 வரை 'ப்ருனி' பிரிட்டிஷ் (British) நாட்டினரின் கையில் இருந்தாலும் 1941 முதல் 1945 வரை அது 'ஜப்பானியர்'கள் (Japanese)  கையில் விழுந்தது.  
1960 ஆம் ஆண்டு அரசை எதிர்த்து நடந்த புரட்சியை (Rebellion) பிரிட்டிஷ் அரசின் துணையோடு முறியடித்து 'மலேசியாவின்' கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது.  1984 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பிரிட்டிஷ் அரசிடம் இருந்தும் விடுதலை பெற்று சுதந்திர நாடாகியது (Independence).

ப்ருனி பற்றிய தகவல்கள்
(Fast Facts about Brunei )

அதிகாரபூர்வமான பெயர் : நெகரா  ப்ருனி  தாருஸ்ஸலாம்
தலைநகரம் : பண்டார்  செரி  பகவான் (83,500)
ஜனத்தொகை : 372,400
மொழிகள் : மலாய்  (official), ஆங்கிலம் , சீன மொழி
நாணயம் : ப்ருனியன் டாலர்  (BND)
மதம் : இஸ்லாம்  (67%), புத்தமதம்  (13%)
பரப்பளவு : 5,770 சதுர கிலோ மீட்டர்  (2,228 சதுர மைல்)
உள்ள பகுதி: ஆசியா
 
ஓமர் அலி சைபுதின் மசூதி
Author: Dcubillas (Creative Commons Attribution-ShareAlike 3.0)

நீங்கள் 'ப்ருனியில்' ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ளும் முன் மற்ற ஹோட்டல் இணையதளங்களில்  (hotel booking websites )  அதே அளவிற்கான அறைகளுக்கு என்ன கட்டணம்  உள்ளது என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ப்ருனி  ஹோட்டல் தேடுதல்   (Brunei Hotel Search Engine ) மீது கிளிக் செய்து நீங்கள் அனைத்து ஹோட்டல்களின் விவரங்களையும் பார்க்கலாம். உங்கள் செலவை குறைத்துக் கொள்ள அது உதவும்.

ப்ருனிக்கு எப்போது செல்லலாம்
(When to visit Brunei )

'ப்ருனி'யில்  நல்ல வெய்யில் மற்றும் புழுக்கமே அனைத்து மாதங்களிலும் இருக்கும். செப்டம்பர் (September) மாதம் முதல் ஜனவரி  (Januvary) மாதம் வரை சிறிது ஈரப்பதமாக இருக்கும் . வருடம் முழுவதுமே அவ்வப்போது மழை பெய்தவாறு இருக்கும்.

ப்ருனியில் எந்த மாதிரியான உடைகளை அணியலாம்
(What to wear in Brunei )

இங்கு செல்ல வேண்டும் எனில் மெல்லிய உடைகளை (Light Weight) எடுத்துச்  செல்ல வேண்டும். முக்கியமாக மழை கோட் மற்றும் குடை (Rain Coat and Umbrella) இரண்டையும் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த நாடு மதக் கட்டுப்பாடு மிக்க முஸ்லிம் நாடு என்பதினால் கண்டபடி உடை அணிவதை (dress decently) தவிர்க்க வேண்டும்.  

ப்ருனிக்கு செல்ல வேண்டுமா
(Getting into Brunei )

இந்த நாட்டிற்குச் செல்ல 'ஏர் ஏஷியா' ( AirAsia)  தரும் குறைந்த கட்டண விமான சேவை மூலம் செல்லலாம் .'மலேசியா'வின் 'சராவாக்'கில் இருந்து சாலை (Road)  மூலமும் செல்லலாம். 'மிரி' (Miri), அல்லது 'லிம்பாங்' ( Limbang) என்ற இடங்களில் இருந்து பஸ்சிலும் செல்ல முடியும். அதற்கான கட்டணம்  RM12.20. அந்த பஸ்கள் 'ப்ருனியின்'  நகரான 'கவ்லா பிலைட்' (Kuala Belait)  வரை செல்கின்றது. அதுவரை சென்று விட்டு அங்கிருந்து அந்த நாட்டின் தலைநகரமான  'பண்டார் செரி பகவானுக்கு' செல்லலாம்.
அமெரிக்க (U S National) நாட்டினர் 90 நாட்கள் வரை அங்கு தங்க விசா (No Visa) தேவை இல்லை . அது போல பிரிட்டிஷ் (UK National) நாட்டினர் 30 நாட்கள் வரையும், கனடா (Canada) நாட்டினர் 14 நாட்கள் வரையும் அங்கு தங்கினால் விசா பெறத் தேவை இல்லை.

உள்ளூரை சுற்றிப் பார்க்க
(Budget Travel within in Brunei )

இந்த நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் குறைவு என்பதினால் சாலைகளும் அதிகம் இல்லை. பொதுவாக அனைவரிடமும் வாகனங்கள் உள்ளன என்பதினால் பொதுஜன வாகன சேவைகளும் குறைவாகவே உள்ளது.  தலை நகரில் மினிபஸ்கள் (Mini Bus) செல்கின்றன. மொத்தத்தில் 'ப்ருனி' நகரை   நடந்து சென்றே (By Walk)  சுற்றிப் பார்க்க முடியும். டாக்சி கட்டணம்  காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு B$3.00 என்று உள்ளது. ஆனால் அதற்கு முன்போ, பின்போ போக வேண்டும் எனில் அதற்கான மேல் கட்டணம் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும்  B$0.20  ஆகும்.  எங்கு சென்றாலும் ஆரம்பக்  கட்டணம் B$4.50.  இந்த நாட்டில் மொத்தமே 40 டாக்சிகள் மட்டுமே உள்ளன என்பதினால் டாக்சிகள் கிடைப்பது கடினம்.   நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் செல்ல தூரப் பயண வண்டிகள் உள்ளன. அவை 'பண்டார் செரி பகவான்' முதல் 'செரியா' வரை செல்கின்றன.

ப்ருனியில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Brunei )

(1) பில்லியந்த் பாரேல் மொனுமென்ட்
 (Billionth Barrel Monument )
(2) ஜெருடாங் பார்க்
( Jerudong Theme Park )
(3) கவுலா பாலாய்
(Kuala Balai )
(4) லுகான் இல்லக் ரேகரியேஷனல் பார்க்
(Luagan Lalak Recreational Park )
(5) பெரடாயன் பாரெஸ்ட் ரிசர்வ்
(Peradayan Forest Reserve )
(6) புலாவ் செரிலாங்
(Pulau Selirong )
(7) செரசா பீச்
(Serasa Beach )
(8) தாசிக் மேரிம்புன்
(Tasik Merimbun )
(9) உலு டெம்புராங் நேஷனல் பார்க்
(Ulu Temburong National Park  )

மாகாணங்கள்
(Districts of Brunei )

(1) மவுரா
(Muara )
(Tutong )
(3) பிலைட்
(Belait  )
(4) டெம்புராங்
(Temburong )

நகரங்கள்
(Towns in Brunei )

(1) பண்டார் செரி பகவான்
(Bandar Seri Begawan )
(2) பங்கார்
(Bangar )
(3) கவ்லா  லுராஹ்
(Kuala Lurah )
(4) லாபி
(Labi )
(5) லபூ
(Labu )
(6) லுமுட்
(Lumut )
(7) செரியா
(Seria )
(8) டெலிசை
(Telisai )

ப்ருனி - பண்டார் செரி பகவான்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
(Read Original Article in :- Bandar Seri Bagawan)


'ப்ருனி'யின் (Brunei) தலை நகரமே 'பண்டார் செரி பகவான் ' (Bandar Seri Bagawan) என்பது. இதன் ஜனத்தொகை 27000 ஆகும்.  இதன் வரலாறு என்ன என்றால் இது 7 ஆம் நூற்றாண்டை (7th Century) சார்ந்தது. தற்போது உள்ள 'ப்ருனி' மியூசியத்தின் அருகில் இது அப்போது இருந்தது. அதை அப்போது 'பண்டார் ப்ருனி' என அழைத்தார்கள். 'பெர்சியா'வின் (Persian) மொழியில் 'பண்டார் என்றால் 'துறைமுகம்' (Harbour) என்று பொருள். ஆனால் 'மலாய்' (Malay) மொழியில் அது நகரம் எனப் பொருள் தரும். 'ப்ருனியின்' சுல்தான்கள் அரசை துறந்ததற்கு பெருமைப்படுத்த சம்ஸ்கிருத (Sanskrit) மொழியில் கடவுள் என்பதைக் குறிக்கும் பகவான் என்ற பெயரை அடைந்தார்கள். ஆகவே தற்போதைய சுல்தானின் தந்தையான 'சர் ஓமர் அலி சைபுத்தின்' என்பவரை கவரவிக்கும் விதமாக தலை நகரின் அடைமொழிப் பெயராக அந்த சொல் -பகவான்- விளங்கியது.
ராயல் ரெகாலியா மியூசியம்
Author: Hajotthu (Creative Commons Attribution 3.0 Unported)

நீங்கள் பண்டார் செரி பகவானுக்கு செல்ல வேண்டுமா
(Travel To Bandar Seri Bagawan)


விமானம் மூலம்
(By Plane)
'ப்ருனிக்கு' செல்ல வேண்டுமானால் 'ப்ருனி' சர்வதேச விமான நிலையத்துக்கு (BWN) செல்ல வேண்டும் . இந்த விமான நிலையத்துக்கு 'ராயல் ப்ருனி ஏர்லயன்ஸ்' (Royal Bruni Airlines), மலேசியா ஏர்லயன்ஸ் (Malaisia Airlines), ஏர் ஏஷியா (Air Asia), சிங்கப்பூர் ஏர்லயன்ஸ் (Singapore Airlines) மற்றும் சில்க் ஏர் (Silk Air) போன்ற விமான சேவைகள் உள்ளன. அவை குசிங், கோடா கினபாலு, கோலாலம்பூர், சிங்கப்பூர், பாங்காக், ஆக்லாந்த், பிரிஸ்பாண்ட் , துபாய், ஹோசிமின் சிட்டி, ஹாங்காங், ஜகார்த்தா, ஜெட்டா, லண்டன், மனிலா, பெர்த் மற்றும் சுரபா போன்ற நகர விமான நிலையங்களுக்கு செல்கின்றன.

சாலை வழியே
(By Road)

'மவ்ரா' (Maura) மற்றும் 'கவ்லா லுராஹ்' (Kuala surah) இருந்து 'சராவக்கில்' உள்ள 'லிம்பாங்கிற்கு' (Limbang) எல்லையைக் கடந்து செல்ல வேண்டும். நீங்கள் 'பண்டார் செரி பகவானில் ' இருந்து 'டெம்புராங்' மாகாணத்துக்கு சென்றால் 'சராவக்கைக்' கடந்துதான் 'ப்ருனியை' அடைய முடியும். ஆகவே 'கவ்லா லுராஹ்'கில் உள்ள சோதனை சாலையை (Check Post) கடந்தே 'சராவக்கில்' உள்ள 'டேடுங்கன்' (Tedungan) என்ற பகுதிக்குள் நுழைய முடியும். அங்கிருந்து மீண்டும் 'சராவக்கில்' உள்ள 'பண்டருவானைக்' (Pandaruan) கடந்து 'ப்ருனிக்குள்' நுழைய வேண்டும். ஆகவே 'ப்ருனியின்' பல பகுதிகளுக்கும் செல்ல 'பண்டார் செரி பகவானில் ' இருந்து செல்லும் பஸ்களில் செல்ல முடியும்.

நீங்கள் பண்டார் செரி பகவானுக்கு உள்ளே சுற்றிப் பார்க்க வேண்டுமா ?
(Travel within Bandar Seri Bagawan)

'பண்டார் செரி பகவானில் ' பொதுஜன வாகனங்கள் மிகக் குறைவாக உள்ளது. ஆகவே நீங்கள் ஒரு காரை வாடகைக்கு (Rent a Car) அமர்த்திக் கொண்டு செல்வது நல்லது. பஸ்களில் செல்ல காத்திருப்பதில் நேரம் வீணாகும்.

'பண்டார் செரி பகவானில் ' பார்க்க வேண்டிய இடங்கள்
(Places To See)
  1. ஆர்ட்ஸ் அண்ட் ஹான்டிக்ரப்ட் சென்டர் (Arts & Handicrafts Centre )
  2. பும்புங்கன் துவா பேலஸ் (Bumbungan Dua Belas )
  3. செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆங்க்லிகன் சர்ச் ( St Andrew's Anglican Church )
  4. புகிட் சுபோக் பாரேஸ்ட் ரேக்ரியேஷனல் பார்க் (Bukit Subok Forest Recreational Park )
  5. ப்ருனி மியூசியம் (Brunei Museum )
  6. ஹஸனல் போல்கியாஹ் நேஷனல் ஸ்டேடியம் (Hassanal Bolkiah National Stadium )
  7. இஸ்தானா நருல் இமான் (Istana Nurul Iman )
  8. காம்புங் அயர் (Kampung Ayer )
  9. மலாய் டெக்னாலாஜி மியூசியம் (Malay Technology Museum )
  10. ராயல் மசோலினியம் (Royal Mausoleum )
  11. ராயல் ரேகலியா மியூசியம் (Royal Regalia Museum )
  12. சுல்தான் ஓமர் அலி சைபுத்தின் மசூதி  (Sultan Omar Ali Saifuddin Mosque )
  13. சுல்தான் போல்கயாஹ் கல்லறை (Tomb of Sultan Bolkiah )
கடைவீதிகள்
(Shopping in Bandar Seri Begawan )

  1. ஹுவா ஹொ டிபார்ட்மென்ட் ஸ்டோர் (Hua Ho Department Store )
  2. தி மால் (The Mall )
  3. யாசான் சுல்தான் ஹாஜி ஹஸனால் போல்கியாஹ் காம்ப்ளெக்ஸ் (Yayasan Sultan Haji Hassanal Bolkiah Complex )

பண்டார் செரி பகவன் அருகில் உள்ள இடங்கள்
(Sights in the vicinity of Bandar Seri Begawan )

  1. எம்பயர் ஹோட்டல் அண்ட் கண்ட்ரி கிளப் (Empire Hotel & Country Club )
  2. ஜேம்ஸ் ஹசர் ஹஸனால் போல்கியாஹ் மியூசியம் (Jame'Asr Hassanal Bolkiah Mosque )
  3. ஜெருடாங் பார்க் (Jerudong Park )
  4. பண்டை மேரகாங் (Pantai Meragong )
  5. பேண்டை செரசா (Pantai Serasa )
  6. புலாவ் ரங்கூ (Pulau Ranggu )
  7. புலாவ் செரிலாங் (Pulau Selirong )
  8. தமன் பெர்சியாரன் டமுவான் (Taman Persiaran Damuan )

Friday, October 14, 2011

ப்ருனி - பண்டார் செரி பகவான் : அருகில் உள்ள எட்டு சுற்றுலா இடங்கள்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
அருகில் உள்ள எட்டு சுற்றுலா இடங்கள்
(Read  the Original Eight Articles in English by 
Clicking on each Site reproduced below )
 
இங்கு தரப்பட்டு உள்ள எட்டு இடங்களும் (Eight Sites) 'பண்டார் சேரி பகவானிற்கு' (Bandar Seri Bagawan) அருகில் பார்க்ககூடிய இடங்கள் . ஆகவே நீங்கள் அவற்றின் ஆங்கில மூலக் கட்டுரையை (Original Article) படிக்க விரும்பினால் அதனதனுடைய பெயர்கள் மீது கிளிக் செய்தால் அந்த கட்டுரையின் பக்கத்திற்குச் செல்லலாம்.

இது 'பண்டார் செரி பகவானின்' புற நகர் பகுதியில் உள்ள தாங்கும் இடம். இதை US 1.1 பில்லியன் செலவில் இளவரசர் ஜெப்ரி (Jefri) என்பவர் கட்டி உள்ளார். ஒவ்வொன்றும் 80 மீட்டர் உயரத்தில் உள்ளவாறு ஐந்து அடுக்கு மாடிகளை கட்டி உள்ள இதில் கோல்ப் விளையாட்டு மைதானம், ஏழு உணவகங்கள், சினிமா ஹால் போன்றவை உள்ளன



இதுவும் 'பண்டார் செரி பகவான்' நகரின் வெளிப்புறத்தில் 'காம்புங் கியரான்' (Kampung Kiarong) எனும் பகுதியில் உள்ளது. இது முஸ்லிம் மத கோட்பாட்டின் கட்டிடக் கலையை (Muslim Architecture) எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து உள்ளது. இது 1992 ஆம் ஆண்டு 'ஜெம்'அசர் ஹசன்னல் போல்கயாஹ்' ஹின் (Jame'Asr Hassanal Bolkiah) 25 வருட ஆட்சி முடிந்ததைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
இங்கு செல்ல வேண்டும் எனில் (Getting there) 'பண்டார் செரி பகவானால்' இருந்து பஸ் (Busses) எண்கள் 1 அல்லது 22 போன்றவற்றில் ஏறிச் செல்லலாம்.


ஜெருடாங் பார்க் (Jerudong Park ) என்பது பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை விளையாட்டுக்கள் (amusement) நிறைந்த இடம். இது 'ப்ருனி'யின் (Brunei) தலை நகரமான 'பண்டார் செரி பகவானின்' (Bandar Seri Begawan) புறநகர் பகுதியில் உள்ளது. 1994 ஆம் ஆண்டு தனது 48 வது பிறந்த நாள் (birthday ) விழாவைக் கொண்டாடிய அந்த நாட்டின் 'மன்னர் சுல்தான் ஹச்சனால் போகியா' (Sultan Hassanal Bolkiah) இதை மக்களுக்கு தனது பிறந்த நாள் பரிசாக கட்டினார். 1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை அந்த பார்க்கில் நுழையக் கட்டணம் கிடையாது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. பல கேளிக்கை சாதனங்கள் பழுதடைந்து விட்டதினாலும், மாற்று பாகங்கள் கிடைக்காததினாலும் அப்படியே பழுதடைந்த நிலையில் விட்டு வைக்கப்பட்டு உள்ளன. அவை வேலை செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனைதான் செய்து பார்க்க வேண்டி உள்ளது.


பண்டை மேரகாங் (Pantai Meragong ) என்பது 'ப்ருனி'யின் (Brunei) தலை நகரமான 'பண்டார் செரி பகவானின்' (Bandar Seri Begawan) புறநகர் பகுதியில் உள்ள கடற்கரை ஆகும். இது 'மவ்ரா-டுடோங்' (Muara -Tutong) நெடுஞ்சாலையில் உள்ளது .இங்கு நிறைய உணவகங்களும் உள்ளன.
இங்கு செல்ல வேண்டும் எனில் (Getting there) 'பண்டார் செரி பகவானால்' இருந்து உங்கள் சொந்த வண்டி அல்லது டாக்ஸியில் செல்லலாம்.


பண்டை செராசா (Pantai Serasa ) என்பது 'ப்ருனி'யின் (Brunei) தலை நகரமான 'பண்டார் செரி பகவானின்' (Bandar Seri Begawan) புறநகர் பகுதியில் உள்ள இன்னொரு சிறிய கடற்கரை ஆகும். இங்கு கடலுக்குள் சிறிய தரைப் பகுதி உள்ளது. மேலும் ராயல் ப்ரூனி உலாப் படகு மன்றமும் (Royal Bruni Yacht Club) உள்ளது. உணவகங்களும் உள்ளன.


பாளை ரங்கூ (Palai Ranggu) என்பது 'ப்ருனி'யின் (Brunei) தலை நகரமான 'பண்டார் செரி பகவானில் ' (Bandar Seri Begawan) உள்ள 'ப்ருனி' நதியில் (River) உள்ள சிறு தீவு (Island) ஆகும். இங்கு தும்பிக்கைப் ( proboscis ) போல வாய் கொண்ட குரங்குகள் (Monkeys) உள்ளன. அவற்றைப் பார்க்க வேண்டும் எனில் நீங்கள் மதியம் (Afternoon) அங்கு செல்ல வேண்டும். இந்த இடத்திற்கு பயணம் செய்யும்போது அங்கிருந்து 'இஸ்தானா நருல் இமான்' (Istana Narul Iman) மற்றும் 'தமன் பெர்சியரான் தமுவான்' (Taman Persiaran Damuan ) போன்ற இடங்களுக்கும் செல்லுமாறு பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
இங்கு செல்ல வேண்டும் எனில் (Getting there) ஒரு படகை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். அதன் கட்டணம் B $ 20 முதல் B $ 30 வரை இருக்கும்.


பலாவ் செலிராங் (Palau Serlirong) என்பது 'ப்ருனி' (Brunei) விரிகுடாவில் (Bay) உள்ள சிறிய தீவு (Island) ஆகும். 'மவ்ராவில்' (Muara) இருந்து ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இங்கு செல்லலாம். அதற்க்கு ஒரு மணி நேரம் ஆகும். அங்குள்ள மருந்துக்கும் தோல் பதனிடுவதற்கும் பயன்படும் பட்டையினையுடைய வெப்ப மண்டல தாவர வகை சதுப்பு நிலப் பகுதியில் (Mangrove) அமைக்கப்பட்டு உள்ள மரப் பலகைப் பாலத்தின் மீது நடந்து செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்லும்போது வழிகாட்டியை (Guide) அழைத்துச் செல்வது அவசியம். ஏன் என்றால் அங்கு கொடிய விஷமுள்ள பாம்புகள் (VenemousSnakes) அதிகம் உண்டு.
இங்கு செல்ல வேண்டும் எனில் (Getting there) ஏதாவது சுற்றுலா பயண நிறுவனங்கள் மூலம் (Package Tour) ஏற்பாடு செய்து கொண்டு செல்லலாம்.

 
'தமன் பெர்சியரான் தமுவான்' (Taman Persiaran Damuan ) என்பது 'ப்ருனி'யின் (Brunei) தலை நகரமான 'பண்டார் செரி பகவானின்' (Bandar Seri Begawan) அருகில் 'ப்ருனி' நதிக்கரையில் (Bruni River) உள்ளது. இது ஒரு இயற்கை நிலக் காட்சி (Landscape) கொண்ட பார்க் ஆகும்.

ப்ருனி - பண்டார் சேரி பகவான் : யாசன் சுல்தான் ஹாஜி ஹஸனால் போல்கையாஹ் காம்ப்ளெக்ஸ்

ப்ருனி
பண்டார் சேரி பகவான்

யாசன் சுல்தான் ஹாஜி ஹஸனால் 
போல்கையாஹ் காம்ப்ளெக்ஸ்
(Read Original Article in : 


'ப்ருனி' (Brunei) நாட்டின் 'பண்டார் சேரி பகவான்' (Bandar seri Bagawan) நகரில் உள்ள இன்னொரு மிகப்   பல் பொருள் கடை வளாகமே 'யாசன் சுல்தான் ஹாஜி ஹஸனால் போல்கையாஹ் காம்ப்ளெக்ஸ் ' (Yayasan Sultan Haji Hassanal Bolkiah Complex) எனப்படுவது. 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி  'சுல்தான் ஹாஜி ஹஸனால் போல்கையாஹ்'யின் 25 வது ஆண்டு ஆட்சி முடிவை பெருமைப்படுத்தும் விதத்தில் இது அமைக்கப்பட்டது.  

இது உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்


ப்ருனி - பண்டார் சேரி பகவான் : மால்

ப்ருனி
பண்டார் சேரி பகவான்

மால்

(Read Original Article in : Mall)



'ப்ருனி' (Brunei) நாட்டின் 'பண்டார் சேரி பகவான்' (Bandar seri Bagawan) நகரில் உள்ள மிகப் பெரிய ஆனால் விலை அதிகம் இல்லாத பல் பொருள் கடை வளாகமே 'மால்' (Mall) எனப்படுவது.

இது உள்ள இடத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும் 
 

ப்ருனி - பண்டார் சேரி பகவான் : ஹுவா ஹோ டிபார்ட்மேண்ட் ஸ்டோர்

ப்ருனி
பண்டார் சேரி பகவான்
ஹுவா ஹோ டிபார்ட்மேண்ட் ஸ்டோர்
(Read Original Article in : Hua Ho Department Store)

'ப்ருனி' (Brunei) நாட்டின் 'பண்டார் சேரி பகவான்' (Bandar seri Bagawan) நகரில் உள்ள மிகப் பெரிய பல் பொருட்கள் அங்காடியே (Departmental Store) 'ஹுவா ஹோ டிபார்ட்மேண்ட் ஸ்டோர்' (ஹுவா ஹோ டிபார்ட்மேண்ட் ஸ்டோர் ) என்பது .

இது உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

ப்ருனி - பண்டார் சேரி பகவான் : சுல்தான் ஓமர் அலி சைபுத்தின் மாஸ்க்

ப்ருனி
பண்டார் சேரி பகவான்
சுல்தான் ஓமர் அலி சைபுத்தின் மாஸ்க்
(Read Original Article in : Sultan Omar Ali Saifuddin Mosque)

'ப்ருனி' (Brunei) நாட்டின் 'பண்டார் சேரி பகவான்' (Bandar seri Bagawan) நகரில் உள்ளது ' சுல்தான் ஓமர் அலி சைபுத்தின் மாஸ்க்" (Sultan Omar Ali Saifuddin Mosque) என்பது. இது இந்த நகரின் முக்கியமான இடம்.

சுல்தான் ஓமர் அலி சைபுத்தின் மாஸ்க்
Author: sam garza (Creative Commons Attribution 2.0 Generic)


1958 ஆம் ஆண்டு இது தற்போதைய சுல்தானின் தந்தையான 28 வது சுல்தானுக்காக கட்டப்பட்டது. இதன் உயரம் 44 மீட்டர். 'ப்ருனியில்' இதவிட அதிக உயரமான கட்டிடங்கள் கட்டப்படக் கூடாது என்பது கட்டளை.
இந்த மசூதி செயற்கையாக உருவாக்கப்பட்டு உள்ள ஏரி ஒன்றில் கட்டப்பட்டது என்றாலும் 'கேடயான்' (Kedayan) எனும் நதியின் நீரும் இதில் ஓடுகின்றது. இந்த மசூதி பெரும் செலவில் கட்டப்பட்டு உள்ளது. இதனுள் இத்தாலியன் (Italy) சலவைக் கற்கள், அராபு நாட்டு கார்பெட்டுக்கள் (Arabian Carpets), ஐரோபியாவின் ஜன்னல் கண்ணாடி kathavugal (English Glass Windows) மற்றும் 3.5 மில்லியன் வெனிஷியன் (Venetian) மொசைக் கற்கள் போன்றவை பதிக்கப்பட்டு உள்ளன. 
Sultan Omar Ali Saifuddin Mosque on the eve of Ramadan
சுல்தான் ஓமர் அலி சைபுத்தின் மாஸ்க்
Author: sam garza (Creative Commons Attribution 2.0 Generic)


இந்த மசூதியின் வெளி வாயில் முஸ்லிம் (Non Muslims) அல்லாத மக்களுக்காக காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொழுகை நேரத்தில் (Prayer Times) அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை.

இங்கு எப்படி செல்லலாம்
(Getting There)

நீங்கள் ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு இங்கு செல்லலாம்.

தொடர்பு கொள்ள முகவரி
(Contact)

Sultan Omar Ali Saifuddin Mosque
Tel: 222 2623
Admission Free
Opening Hours:
Sat - Wed: 8:00 am - 12:00 noon & 1:00 pm - 3:30 pm
Fri: 4:30 pm - 5:00 pm
Thurs: closed to non-Muslims 

ப்ருனி - பண்டார் செரி பகவான் : சுல்தான் போல்கயாஹ் கல்லறை

ப்ருனி
பண்டார் செரி பகவான்
சுல்தான் போல்கயாஹ் கல்லறை
(Read Original Article in :- Tomb of Sultan Bolkiah)


'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானானின்' (Bandar seri Bagawan) வெளிப் பகுதியில் 'ப்ருனி' மியூசியம் (Brunei Museum) போகும் பாதையில் உள்ள கல்லறையே 'சுல்தான் போல்கயாஹ் கல்லறை ' ( Tomb of Sultan Bolkiah) என்பது. இது 1473 முதல் 1521 ஆம் ஆண்டுவரை 'ப்ருனியை' ஆண்டு கொண்டு இருந்த ஐந்தாம் சுல்தானின் (Fifth Sultan) கல்லறை. இங்கிருந்து அங்குள்ள நதியின் அழகைக் கண்டு களிக்கலாம்.

இது உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
 

ப்ருனி - பண்டார் செரி பகவான் : ராயல் ரேகாலியா மியூசியம்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
ராயல் ரேகாலியா மியூசியம்
(Read Original Article in :- Royal Regalia Museum)


'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானானில் ' (Bandar seri Bagawan) உள்ள ஒரு இடமே 'ராயல் ரேகாலியா மியூசியம் ' ( Royal Regalia Museum) என்பது. அது மன்னர்களின் வாழ்கை பாணியை (Lifestyle) எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து உள்ளது. அதன் வாயிலில் நுழையும் முன்னர் காலணிகளை கயற்றி (Remove Shoes) வைத்து விட வேண்டும். அங்கிருந்தே எட்டிப் பார்த்தால் உலகிலேயே மிகப் பணக்கார பேரரசர் (World's richest Monarch) என்பதின் அடையாளமாக சுல்தானின் பொக்கிஷத்தைக் (Treasure) காணலாம். இந்த மியூசியத்தில் மன்னர் வம்சத்தினரின் செழிப்பான வாழ்கையில் பயன்படுத்திய குறிப்பிடத்தக்க பொருட்கள், பரிசுகள், விலை உயர்ந்த மேஜை நாற்காலிகள் மற்றும் இறக்கை உள்ள முதலைப் போன்ற விலங்கு இழுத்துச் செல்லும் வண்டிகள் போன்றவை காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டு உள்ளன.

தொடர்புக் கொள்ள
(Contact)

Royal Regalia Museum
Tel: 223 8358
Admission Free
Opening Hours:
Sat-Thurs: 8:30 am - 5:00 pm
Fri: 9:00 am - 11:00 am & 2:30 pm - 5:00 pm


இது உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
 

ப்ருனி - பண்டார் செரி பகவான் : ராயல் மசோலியம்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
ராயல் மசோலியம்
(Read Original Article in :- Royal Mausoleum)


'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானானில் ' (Bandar seri Bagawan) உள்ள ஒரு இடமே 'ராயல் மசோலியம் ' (Royal Mausoleum) என்பது. இது நகரின் மத்தியப் பகுதி மற்றும் இஸ்தானா னருள் இமாம் (Isthana Narul Imam) என்ற இரண்டுக்கும் இடையே உள்ளது. இங்குதான் 'ப்ருனியின்' கடைசி நான்கு சுல்தான்களும் (Sultans) அவர்களுடைய குடும்பத்தினரும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இது உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
 

ப்ருனி - பண்டார் செரி பகவான் : மலே டெக்னாலஜி மியூசியம்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
மலே டெக்னாலஜி  மியூசியம்
(Read Original Article in :- Malay technology museum )


'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானானில் ' (Bandar seri Bagawan) உள்ள ஒரு இடமே 'மலே டெக்னாலஜி மியூசியம்' (Malay technology museum) என்பது. இது 'ப்ருனி' மியூசியத்தின் (Museum) பக்கத்தில் அமைந்து உள்ளது . 'மலே டெக்னாலஜி மியூசியம்' மூண்டு கலைக் கூடங்களைக் கொண்டு உள்ளது. காட்சியகம்-1 என்பதில் கிராமத்தைக் காட்டும் காட்சிகளும், இரண்டில் மீன் பிடி சாதனங்கள் (Fishing Implements) , கைவேலைப் பொருட்கள் (Handicrafts) மற்றும் மூன்றாம் பகுதியில் வேட்டை ஆட அந்த பழங்குடி (Tribes) மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் (Hunting tools) போன்றவை வைக்கப்பட்டு உள்ளன.

தொடர்புக் கொள்ள
(Contact)
Malay Technology Museum
Tel: 224 4545
Opening Hours: Sat-Thurs: 9:00 am - 4:30 pm
Fri: 9:00 am - 11:00 am & 2:30 pm - 4:30 pm



இது உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

ப்ருனி - பண்டார் செரி பகவான் : காம்புங் அயேர்

ப்ருனி
பண்டார் செரி பகவான்

காம்புங் அயேர்

(Read Original Article in :- Kampung Ayer )


'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானானில் ' (Bandar seri Bagawan) உள்ள ஒரு இடமே 'காம்புங் அயேர்' (Kampung Ayer) என்பது. இந்த நாடு எண்ணை  வளத்தினால் (Oil Rich) செழிப்படைந்ததிற்கு முன்னர் எப்படி வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டும் இடம். இன்றும் தண்ணீர் கிராமம் (Water Village) எனக் கூறப்படும் இங்கு சுமார் 30 ,000 மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
'ப்ருனி' நதியின் இரு கரையிலும் உள்ள 28 கிராமங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி உள்ளது. அதுவே 'காம்புங் அயேர்' என்பது. இங்கு கடற்கரைக்குச் சென்று அங்கு சிதறிக் கிடக்கும் மரப்பலகைகள் மீது நடந்து கொண்டு மீன் பிடிக்கும் தொழிலாளிகளின் குடிசைகள், கிடங்குகள் போன்றவற்றைக் காணலாம். இங்குள்ளவர்கள் மெல்ல மெல்ல மற்ற இடங்களுக்குச் சென்றுவிட இந்த நாட்டிற்கு தஞ்சம் அடைய வருபவர்கள் இந்தக் கடற்கரைப் பகுதிகளில் தங்குகிறார்கள்.

இங்கு எப்படி செல்லலாம்
(Visiting there)
இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் எனில் ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். அதற்கான  கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு  B $10 ஆகும்.

இது உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

ப்ருனி - பண்டார் செரி பகவான் : இஸ்தானா நருல் இமாம்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
இஸ்தானா  நருல்   இமாம்
(Read original article in :- Istana Narul Imam
 

'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானில்' உள்ளது 'சுல்தான் ஹாஸனல் போல்கியாஹ்'ஹின்  (Sultan Hassanal Bolkiah) அதிகாரபூர்வமான இருப்பிடம் (Residence) . இது நகரில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் 'டுடோங்' சாலையில் உள்ளது. இதனுள் 1788 அறைகள் (Rooms), 200 கழிவறைகள் (Toilets), மற்றும் 400 வருகையாளர்கள் அமரும் இடம் உள்ளது. இந்த மாளிகை 'வாடிகன்' (Vatican) மாளிகையை விடப் பெரியது. 'ஹரி ரா ஐடிபிட்ரீ' (Hari Raya Aidifitri)  என்ற  பண்டிகையின் போதுதான் பொது மக்களுக்கு திறந்து விடப் படுகின்றது.  
இந்த மையம் உள்ள இடத்தை பெரிய
அளவில் பார்க்க தரை படத்தின் மீது கிளிக் செய்யவும் 


ப்ருனி - பண்டார் செரி பகவான் : ஹஸனல் போல்கியாஹ் நேஷனல் ஸ்டேடியம்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
ஹஸனல் போல்கியாஹ் நேஷனல் ஸ்டேடியம்
(Read original article in :-  Hassanal Bolkiah National Stadium



'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானில்' உள்ளது 'ஹஸ்ஸனால் போல்கயாஹ் நேஷனல் ஸ்டேடியம்' (Hassanal Bolkiah National Stadium). ஒலிம்பிக் (Olympic) போட்டிகள் நடைபெறக் கூடிய வகையில் இது அமைக்கப்பட்டு உள்ளது. இதனுள் டென்னிஸ் (Tennis), ஸ்குவாஷ் (Squash) மற்றும் ஓட்டப்பந்தய (Track and Field) தளகளங்கள் உள்ளன. இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் திறந்து விடப்பட்டு இருந்தாலும் இங்கு அதிக மக்கள் வருவது இல்லை.  




அங்கு செல்வது எப்படி?
(Getting There)

நாவல் பழ நிற (Purple) பஸ் No. 1  அல்லது 34 லில்  ஏறி அங்கு செல்லலாம். 

விலாசம்
(Contact )

Sultan Hassanal Bolkiah National Stadium
Jalan Berakas
Tel: 238 0700
Opening Hours:
8:00 am - 12:00 noon & 1:30 pm - 4:30 pm

ப்ருனி - பண்டார் செரி பகவான் : ப்ருனி மியூசியம்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
ப்ருனி மியூசியம்
(Read original article in :- Brunei Museum)


'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானில்' உள்ளது 'ப்ருனி மியூசியம்' (Brunei Museum). நகர மையத்தில் இருந்து சுமார் 6.5 தொலைவில் உள்ள இதன் கீழ தளத்தில் முன்னர் வழக்கத்தில் இருந்த இஸ்லாமிய கலைப் பொருட்களான - பீங்கான் (Ceramics), நகைகள் (Jewellery), வெள்ளியினால் செய்த பொருட்கள் (Silverware) போன்றவை உள்ளன. இவை ஆசியாவின் மிக அபூர்வமான பொருட்கள் ஆகும்.
அடுத்து 'ப்ருனியின்' செல்வம் தரும் எண்ணை வாயு (Gas) சம்மந்தப்பட்ட கலைக் கூடம் உள்ளது. அதில் எண்ணை எடுப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள், எண்ணை எடுக்கும் விதம் போன்றவற்றின் மாதிரிகள் (Models) வைக்கப்பட்டு உள்ளன. மேல் தளத்தில் 1929 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த பித்தளைப் பொருட்கள் (Brass), கூடை வகைகள் (Basketware), சீனர்களின் பண்டங்கள் போன்றவை உள்ளன. அவற்றைத் தவிர இயற்கை காட்சிகள் என்ற பிரிவில் ஊர்வன (Mamals), பறவைகள் (Birds) மற்றும் பூச்சிகளின் (Insects) போன்றவை காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டு உள்ளன.

அங்கு செல்வது எப்படி?
(Getting There)
நாவல் பழ நிற (Purple) பஸ் No. 11 அல்லது 39 தில் ஏறி அங்கு செல்லலாம். அதற்கான கட்டணம் B $1.00.

விலாசம்
(Contact )

Brunei Museum
Tel: 222 6495
Admission Free

ப்ருனி - பண்டார் செரி பகவான் : புகிட் சுபோக் பாரேஸ்ட் ரெக்ரியேஷனல் பார்க்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
புகிட் சுபோக் பாரேஸ்ட்  ரெக்ரியேஷனல் பார்க்
(Read original article in :- Bukit Subok Forest Recreational Park)


'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானில்'உள்ளது 'புகிட் சுபோக் பாரேஸ்ட் ரெக்ரியேஷனல் பார்க் ' ( Bukit Subok Forest Recreational Park). இதை வன இலாகா (Forest Dept) மேற்பார்வையில் வைத்து உள்ளார்கள். இங்கு இருந்தபடி சுற்றுப் பகுதிகளில் (Surroundings) உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இதற்கு அருகில்தான் முன்னர் பிரிட்டிஷ் தூதரக அதிகாரி தங்கி இருந்த 'பும்புங்கன் துவா பெலஸ்' (Bumbungan Dua Belas ) உள்ளது.

ப்ருனி - பண்டார் செரி பகவான் : செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆங்க்லிகன் சர்ச்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
செயின்ட் ஆண்ட்ரூஸ்  ஆங்க்லிகன் சர்ச்
(Read original article in :- St. Andrew's Anglican Church)
 
'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானில்'உள்ளது 'செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆங்க்லிகன் சர்ச் ' ( St. Andrew'ச Anglican Church) .  சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஆங்லிகன்ஸ் இனத்தவரின் தொழுகை இடமாக இருந்தது. தற்போது உள்ள தேவாலயம் மூன்றாவது ஆகும். அதை 1950 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 5 ஆம் தேதியன்று ஆண்ட்ரூஸ் திறந்து வைத்தார்.  இந்த தேவாலயத்தில் தமிழ், மலையாளம், சைனீஸ் மற்றும் இபன் போன்ற மொழிகளின் பகுதிகள் உள்ளன. 

இந்த மையம் உள்ள இடத்தை பெரிய
அளவில் பார்க்க தரை படத்தின் மீது கிளிக் செய்யவும் 
 

ப்ருனி - பண்டார் செரி பகவான் : பும்புங்கன் துவா பெலாஸ்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
பும்புங்கன் துவா பெலாஸ்
(Read original article in :-Bumbungan dua Belas)
 
'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானில்' (Bandar Seri Bagawan) உள்ளது  'பும்புங்கன் துவா பெலாஸ்' (Bumbungan Dua Belas) . இடது காலாச்சார மையம். முன்னர் இது பிரிட்டிஷ் அரசின் தூதர் வாழ்ந்திருந்த வீடு (British High Commissioner's house) . 'ப்ருனியில்' இருந்த 'பிரிட்டிஷ்' நாட்டினரின் 'ப்ருனியின்' மீதான ஈடுபாட்டை காட்டும் படங்கள் இங்கு வைக்கப்பட்டு உள்ளன.

மையம் திறக்கப்படும் நேரங்கள்
(Opening Hours)

Mon - Thurs & Sat: 9:00 am - 4:30 pm
Fri: 9:00 am - 11:30 am & 2:30 pm & 4:30 pm

ப்ருனி - பண்டார் செரி பகவான் : ஆர்ட்ஸ் அண்ட் ஹான்டிகிராப்ட்ஸ் சென்டர்

ப்ருனி
பண்டார் செரி பகவான்
ஆர்ட்ஸ் அண்ட் ஹான்டிகிராப்ட்ஸ் சென்டர்
(Read original article in :- Arts and Handicrafts centre )


'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானில்'உள்ளது ஆர்ட்ஸ் அண்ட் ஹான்டிகிராப்ட்ஸ் சென்டர் . இங்குள்ள பொருட்களின் விலை அதிகம். மேலும் அவை மரபு வழியான கலைஞர்களினால் செய்யப்பட்டவை அல்ல. அவற்றை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் செய்தவை.


இந்த இடம் உள்ள பகுதியைக் காண
கீழுள்ள தரைபடத்தின் மீது கிளிக் செய்யவும்

ப்ருனி - டுடோங் : டெலிசை

ப்ருனி
டுடோங்   : டெலிசை 

(Read Original Article in :- Telisai)

'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'டுடோங் ' (Tutong) உள்ள சிறு நகரமே 'டெலிசை' (Telisai) என்பது.  இது மாகாண நிர்வாக அலுவலகத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதில் 'முகீம்' (Mukim)  12 பகுதிகள் உள்ளன.  அவை :-
  1. கம்பாங் டெலிசை (Kampong Telisai)
  2. பெருமகான் நெகரா டெலிசை (Perumahan Negara Telisai)
  3. கம்பாங் டேலேம்பா (Kampong Telamba )
  4. கம்பாங் லலித் (Kampong Lalit )
  5. கம்பாங் தனாஹ் ஜம்பு (Kampong Tanah Jambu )
  6. கம்பாங் சுங்கை பகு (Kampong Sungai Paku )
  7. கம்பாங் தனாவ் (Kampong Danau )
  8. கம்பாங் பெனபார் டெலிசை (Kampong Penapar (Telisai)
  9. கம்பாங் கேரமுட் (Kampong Keramut )
  10. கம்பாங் தும்புவான் உகாஸ் (Kampong Tumpuan Ugas )
  11. கம்பாங் புகிட் பெருவாங் (Kampong Bukit Beruang )
  12. பெருமகான் நெகரா புகிட் பெருவாங் (Perumahan Negara Bukit Beruvaang)
இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்

ப்ருனி - பிலைட் : செரியா

ப்ருனி
பிலைட்  : செரியா 
(Read Original Article in :- Seria)


'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'பிலைட்டில்' (Temburong) உள்ள சிறு நகரமே 'செரியா ' (Seria) என்பது.  இதுவே 'ப்ருனி'யின் பெட்ரோலிய பொருட்களான கச்சா எண்ணெய்  உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ள இடம். 'கவ்லா பிலைட்' (Kuala Belait) மற்றும் 'செரியா'விற்கு இடையே இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களின்  வீடுகள் உள்ளதைக் காணலாம். 'பான் போர்னியா' நெடுஞ்சாலை 'ப்ருனியை' மலேசியாவின் 'சராவக்' மற்றும் 'சபாஹ்'வுடன் இணைக்கின்றது. 

இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)
இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானால்' (Bandar Seri Begawan) இருந்து டாக்சியில் அல்லது பஸ்ஸில் செல்லலாம். 


இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும் 
 

Tuesday, October 11, 2011

ப்ருனி - பிலைட் : லுமுட்

ப்ருனி
பிலைட்  : லுமுட்
(Read Original Article in :- Lumut)


'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'பிலைட்டில்' (Temburong) உள்ள சிறு நகரமே 'லுமுட்' (Lumut) என்பது.  இங்கு பார்க்க கூடிய இடங்கள் எதுவும் இல்லை. ஆகவே நீங்கள் இங்குள்ள கடற்கரைக்கு மட்டுமே சென்று பார்க்கலாம்.

இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)

இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானால்' (Bandar Seri Begawan) இருந்து டாக்சியில் செல்லலாம். அல்லது 'சராவக்' (Sarawak) மற்றும் 'சபாஹ்'ஹில் (Sabah) இருந்தும் செல்லலாம்.  


இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்


ப்ருனி - டெம்புராங் : லபு

ப்ருனி 
டெம்புராங்    :  லபு

(Read Original Article in :- Labu )

'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'டெம்புராங்கில்' (Temburong) உள்ள முகீம் (Mukim) எனப்படும் இடமே 'லபு ' (Labu) எனும் சிறிய நகரம் . இந்த நகரம் 'டெம்புராங் மாகாணத்தை' கடந்ததும் 'சராவக்கில்' (Sarawak) உள்ள 'மேங்கலாப்' (Mengkalap) என்ற இடத்தை நோக்கிச் செல்லும் பகுதியில் உள்ளது. இங்கு பார்க்க கூடிய இடங்கள் எதுவும் இல்லை.
'லபுவின்' எல்லைகள் வடக்கில் 'ப்ருனி விரிகுடா' (Bruni Bay) , கிழக்கில் 'சரவாக்' (Sarawak) , தெற்கில் இன்னொரு முகீமான 'படு அபோ முகீம்' (Batu Abo Mukim) தென் மேற்கில் இன்னொரு முகீமான ' பங்கோர்' (Bangor) மற்றும் மேற்கில் 'லிம்பாங்' (Limbong) போன்றவை உள்ளன .
'லபு'விற்குள் உள்ள கிராமங்கள் 'கம்புங் அயம்-அயம்' (Kampung Ayam Ayam), 'கம்போங் லபு எஸ்டேட்' (Kampung Labu Estate), 'கம்புங் பயாயூ' (Kampung Payau), 'கம்புங் பியாசவ் பியாசவ்' (Kampung Piasau piasau) மற்றும் 'கம்புங் செனுகொஹ்' (Kampung Senukoh) போன்றவை.
இந்த நாட்டுடன் இன்னும் தொடர்ப்பு கொண்டவை 'பலாவ் பிடுவட்', 'பலாவ் செலன்சக்', 'பலாவ் செலிராங்' மற்றும் 'பலாவ் சியாரவ்' (Pulau Pituat, Pulau Selanjak, Pulau Selirong and Pulau Siarau) போன்றவை.       

இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)

இங்கு செல்ல வேண்டும் எனில் 'பந்காரில்' இருந்து டாக்சியில்  செல்லலாம்.

இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும் 
 

ப்ருனி - பிலைட் : லாபி

ப்ருனி 
பிலைட்  :  லாபி

(Read Original Article in :-  Labi )


'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'பிலைட்டில்' (Belait) உள்ள நகரமே 'லாபி' (Labi) என்பது.  இது ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம்.   இங்கு நீங்கள் 'சுங்கை லியாங்  காட்டு பொழுது போக்கு பார்க்' (Sungai Liang Forest Recreational Park) மற்றும் 'லுவகான் லாலாக் காட்டுப் பகுதி'  (Luagan Lalak Forest Reserve) போன்ற இடங்களுக்கு  செல்லலாம்.
இங்குள்ள மற்ற பார்க்க வேண்டிய இடங்கள் 'நீண்ட வீடுகள்' (Longhouses) , 'ருமாஹ் பஞ்சாங் மேன்டாரம் பெஸார்' (Rumah Paanjang Mendaram besar), 'ரூமா பஞ்சாங் டேரஜா' (Ruma Panjang Teraja) மலை உச்சி போன்றவை. பிரதான சாலையில்  இருந்து 20 நிமிடங்களில் நடந்தே சென்று 'வசாய் வாங் கதிர் நீர்வீச்சியை ' (Wasaui Wong Kadir Waterfall) அடையலாம். 
'ரூமா பஞ்சாங் டேரஜா' மலை உச்சியில் இருந்து மேலும் நடந்து அங்குள்ள மிக உயரமான மலையான 'சுங்கை டேரஜா' வை (Sungai Teraa) அடையலாம்.

இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)

இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானில்' (Bandar Seri Begawan ) இருந்து  சுற்றுலா மையத்தின் ஏற்பாட்டில் வண்டியில்   செல்ல வேண்டும். இல்லை என்றால் தனியாக வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டு போகலாம்.

இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும் 
 

ப்ருனி - மவ்ரா : கவ்லா லுராஹ்

ப்ருனி 
மவ்ரா  :  கவ்லா லுராஹ்

(Read Original Article in :- Kaula Lurah
)


'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'மவ்ராவில்' (Maura) உள்ள நகரமே 'கவ்லா லுராஹ்' (Kaula Lurah) என்பது.  இதன் எல்லை  'மலேசியா'வின் (Malaysia) 'சராவக்' (Sarawak) மாகாணத்துடன் உள்ளது.

இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)
இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானில்' (Bandar Seri Begawan ) இருந்து  பஸ்ஸில்  செல்ல வேண்டும். இல்லை என்றால் தனியாக வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டு போகலாம்.

இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும் 
 

ப்ருனி - டெம்புராங் : பெலலாங் மழைக்காட்டு ஆராய்ச்சி மைய அனுபவம்

ப்ருனி 
டெம்புராங் : 
பெலலாங் மழைக்காட்டு
ஆராய்ச்சி மைய அனுபவம் 
(Read Original Article in :-
Belalong Rainforest Experience)
'பெலலாங் மழைக்காட்டு ஆராய்ச்சி மைய அனுபவம்' (Belalong Rainforest Experience) என்பதை 'உலு டேம்புலாங் நேஷனல் பார்க்கில்' (Ulu Temburong National Park) உள்ள 'கவ்லா மழைக் காட்டுப் பகுதி ஆராய்ச்சி மையத்தில்' (Kuala Belalong Rainforest Field Studies Centre) பெறலாம். 1991 ஆம் ஆண்டில் இது அமைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் 'யூனிவேர்சிடி ப்ருனி தருஸ்ஸலம் ராயல் ஜியோக்ராபிகல் சொசைட்டி எக்ஸ்பெடிஷன்' (Universiti Brunei Darussalam-Royal Geographical Society expedition) என்பதே . முதலில் பல நாடுகளில் இருந்தும் 50 ஆராய்ச்சியாளர்கள் அங்கு வந்து காட்டின் சுற்றுப் புறவியல் (Ecology) ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள்.
அந்த சுற்றுப் புறவியல் இயற்கை அமைப்பின் அனுபவங்களைப் பார்க்கலாம் என்பதற்காகவும் அந்த மழைக் காட்டை எப்படி பாதுகாத்து (Conservation) வருகின்றனர் என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக 'கவ்லா மழைக் காட்டுப் பகுதி ஆராய்ச்சி மையம்' தற்போது பொதுமக்களுக்கும் திறந்து விடப்பட்டு உள்ளது.
அங்கு ஐந்து மரப்பலகைகளில் ஆன கட்டிடங்கள் (Five Wooden Houses) ஒன்றுடன் ஒன்றுக்குள் நடைப்பாதை (Walkways) மூலம் செல்லும் வகையில் அமைந்து உள்ளது. அந்தக் கட்டிடத்துக்குள் ஆராய்ச்சி நிலையம் (Laboratory) , உணவருந்தும் அறை (Dining Hall) , சமையல் அறை (Kitchen) மற்றும் கலந்துரையாடும் அறை (Meeting Hall) போன்ற அனைத்தும் உள்ளன. குடிக்கும் தண்ணீர் சுத்தமாக்கப்பட்டு கிடைக்கின்றது. அதற்கு ஒரு ஜெனரேட்டர் (Generator) உள்ளது.

விலாசம்
(Address)

Kuala Belalong Field Studies Centre
Universiti Brunei Darussalam
Tel: +673 2463001 ext 1376 Web: http://www.ubd.edu.bn/services/kbfsc/index.htm


இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும் 
 

ப்ருனி - டெம்புராங் : படங் டுரி

ப்ருனி 
டெம்புராங் :  படங் டுரி 
(Read Original Article in :- Bangar)
 
 
'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'டெம்புராங்கில்' (Temburong District) உள்ள நீண்ட வீடே (Longhouse)  'படங் டுரி' (Batang Duri) என்பது. இது 'பன்காரின்' (Bangar)  தெற்குப் பக்கத்தில் அங்கிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  அங்கிருந்து பெரு படகைப் பிடித்து 'கவ்லா மழைக் கட்டுப் பகுதி ஆராய்ச்சி மையத்தை' (Kuala Belalong Rainforest Field Studies Centre) அடையலாம்.
நீங்களும் அந்த நீண்ட  வீட்டிற்குள் செல்லலாம். ஆனால் முதலில் அங்குள்ள தலைவனை (Chieftan) வணங்கி உங்களைப் பற்றிக் கூறிக் கொள்ள வேண்டும். உங்களை இரவு அங்க தங்க அனுமதிப்பார்கள். ஆனால் அதற்கு நீங்கள் முன்பதிவு (Pre arrange) செய்து கொண்டு இருக்க வேண்டும் . 

இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)

இங்கு செல்ல வேண்டும் எனில் ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான கட்டணம் B$ 15.00.

இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும் 
 

ப்ருனி - டெம்புராங் : பங்கார்

ப்ருனி  
டெம்புராங் :  பங்கார்
(Read Original Article in :- Bangar)
 
 
'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'டெம்புராங்கில்' (Temburong District) உள்ள சிறிய நகரமே 'பங்கார்' (Bangar) என்பது. இந்த நகரின் ஜனத்தொகை 4000. 'டெம்புராங்' காட்டுப் பகுதிக்குள் நுழையும் வாயிலே 'சுங்கை டெம்புராங்' (Sungai Temburong). அங்கு செல்லும் முன் நீங்கள் 'பன்காரின்' சுற்றுலா அலுவலகத்துக்கு முதலில் செல்ல வேண்டும். அதன் தொலைபேசி எண்: 522 1439.

இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)

இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் சேரி பகவானுக்கு ' (Bandar Seri Begawan) சென்று அங்கிருந்து 'சுங்கை டேம்புராங்கிற்கு' செல்ல வேண்டும். சுமார் 45 நிமிடத்தில் அங்கு செல்லலாம். அதற்கான கட்டணம் B$6.00.

அருகில் பார்க்கக் கூடிய இடங்கள்
(Places of Interest)

  1. படாங் டுரி
  2. பெலலோங் ரேயின் பாரேஸ்ட் அனுபவம்
  3. பெரடயன் பாரேஸ்ட் ரிசெர்வ்
  4. உலு டெம்புராங் நேஷனல் பார்க்

இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும் 
 

ப்ருனி - டெம்புராங் மாகாணம்

ப்ருனி
டெம்புராங்  மாகாணம்

(Read original Article in :- Temburong)


'ப்ருனி' (Brunei) நாட்டின் இன்னொரு மாகாணமே 'டெம்புராங்' (Temburong) என்பது . 1890 ஆம் ஆண்டு 'ராஜா சார்லஸ் ப்ரூக்' (Raj Chales Brook) என்பவர் 'லிம்பாங்' (Limbang) எனும் நகரை பிடித்துக் கொண்டபோது 'டெம்புராங்' 'ப்ருனியின்' மற்ற நகரங்களில் இருந்து தனிமைப்பட்டது. இங்கு இறங்கு நதிகள் உள்ளன. அவை 'சுங்கை டெம்புராங்' ( Sungai Temburong ) மற்றும் ' சுங்கை பாண்டாருவன் '( Sungai Pandaruan) என்பன. இந்த மாகாணம் முழுவதுமே காட்டுப் பகுதியாக இருக்கின்றன.
'டெம்புராங்' என்பதை முனிம் (Munim) என்ற பெயரில் ஐந்து பகுதிகளாக பிரித்து வைத்து உள்ளார்கள். அவை
  1. அமோ (Amo)
  2. பங்கார் (Bangar)
  3. படு அபோய் (Batu Aboi)
  4. போகொக் (Bokok)
  5. லபு (Labu)
இங்கு என்ன பார்க்கலாம்
(Places of Interest)

  1. பங்கார் (Bangar)
  2. படாங் துரி (Batang Duri)
  3. பெலலாங் மழைக் காட்டுப் பகுதி (Belalong Rainforest Reserve)
  4. பெரடயான் காட்டுப் பகுதி (Peradayan Forest Reserve)
  5. உலு டிம்போராங் நேஷனல் பார்க் (Ulu Temberong National park)
இது  உள்ள இடத்தை பெரிய அளவில்
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்.


ப்ருனி - பிலைட் மாகாணம்

ப்ருனி
பிலைட்  மாகாணம்
(Read original Article in :- Belait)

'ப்ருனி'யின் (Brunei) மேற்குப் பகுதியில் உள்ளது 'பிலைட்' ( Belait) மாகாணம் . இது கிழக்கில் 'டுடாங்குடனும்' (Tutong), மேற்கில் 'சராவக்'கின் (Sarawak) 'மிரி' (Miri) எனும் பகுதியுடனும் தனது எல்லைகளைக் (Borders) கொண்டு உள்ளது. இந்த மாகாணம் 'ப்ருனி' நாட்டின் பெட்ரோலிய எண்ணை (Petroleum) நிறுவனங்கள் மிகுந்த இடம்  ஆகும்.

இங்கு எப்படி செல்லலாம்
(Getting There)
'சராவக்' மாகாணத்தில் உள்ள 'கவ்லா பாரம் (Kaula Baram) எனும் பகுதிக்கு 'பண்டார் செரி பகவானில் ' (Bandar Seri Begawan) இருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.


இது  உள்ள இடத்தை பெரிய அளவில்
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
 

ப்ருனி - மாகாணம் டுடாங்

ப்ருனி - மாகாணம்
டுடாங்
(Read Original Article in :-
Tutong
)  
 

'ப்ருனி'யின் (Brunei) இன்னொரு மாவட்டமே 'டுடாங்' (Tutong ) எனப்படுவது. இதை நிர்வாக மாவட்டமாக 'பேகன் டுடாங் ' (Pekan Tutong) அல்லது 'டுடாங்' சிறுநகரம் என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள். மேற்கில் 'கவ்லா பிலைட் மாவட்டம்' (Kuala Belait District) மற்றும் கிழக்கில் 'மவ்ரா' மாவட்டம் (Muara District) என்ற இரண்டுக்கும் இடைப் பகுதியில் உள்ளதே 'டுடாங்' மாகாணம். இந்த மாகாணத்தை 'முகீம்' (Mukim) என எட்டுப் பகுதிகளாகப் பிரித்து உள்ளார்கள். 'ப்ருனி'யின் பல நகரங்களையும் இங்குள்ள 'பான் போர்னியோ நெடும்சாலை' (Pan Borneo Highway) இணைக்கின்றது. அந்த நெடும்சாலை 'சராவக்' (Sarawak) மற்றும் 'சபாஹையும்' (Sabah) இணைக்கின்றது.
'தசெக் மேரிம்பும்' (Tasek Merimbun) என்பது இங்குள்ள மிகப் பெரிய ஏரியாகும். இது ஆசியாவின் பரம்பரை பார்க் (Asean Heritage Park) என்ற அங்கீகாரத்தைப் பெற்று உள்ளது.
இந்த மாவட்டத்தில் பார்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் அங்குள்ள கடற்கரைக்குச் சென்று மகிழலாம்.

இந்த பகுதி உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
 

ப்ருனி - மவ்ரா மாகாணம்

ப்ருனி
மவ்ரா மாகாணம்
(Read Original Article in :- Muara)  
 

'மவ்ரா' மாகாணம் (Muara District) அல்லது 'டேரா மவ்ரா' (Daerah Muara) என்பது 'ப்ருனியின்'(Brunei) ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் வடக்கில் தென் சைனா கடல் (South China sea) , கிழக்கில் 'ப்ருனி விரிகுடா', தெற்கில் 'லிம்பாங்' ( Limbang ) மேற்கில் 'டுடாங்'குடன் (Tutong) உள்ளன. இங்குதான் தலைநகரான (Country's Capital) 'பண்டார் செரி பகவான்' ( Bandar Seri Begawan ) உள்ளது. நாட்டின் தலை நகரைத் தவிர 'மவ்ரா' எனும் பெயரிலேயே இன்னொரு நகரமும் இங்குள்ளது. மவ்ராவின் ஜனத்தொகை 380,000 ஆகும்.

இந்த பகுதி உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்