துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Friday, September 30, 2011

பொலிவியா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

பொலிவியா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read original Article in : Bolivia)


Altiplano de La Paz, Bolivia
அல்டிப்லானோ டி லா பாஸ்
Author: Vico ricab (Creative Commons Attribution 3.0 Unported)

'தென் அமேரிக்காவில்' (South Africa) அனைத்துப் பகுதிகளிலும் நிலம் அல்லது பிற நாடுகள் மற்றும் மாவட்டங்களால் சூழப்பட்ட நாடே 'பொலிவியா' (Bolvia) எனும் நாடு.  இதை சுதந்திர நாடாக உருவாக்கியவருடைய பெயர் 'சிமன் பொலிவார்' என்பது (Simón Bolívar). ஆகவேதான்  'வெனிசூலா'வை (Venezuelan) சேர்ந்தவரான அவர் பெயரை இதற்கு சூட்டினார்கள். இந்த நாட்டைத் தவிர அவர் 'கொலம்பியா' (Colombia) , 'ஈக்வீடார்' (Ecuador), 'பனாமா'(Panama), 'பெரு' (Peru) மற்றும் 'வெனின்சூலா' போன்ற நாடுகளின் விடுதலைக்கும் வழிவகுத்த அரசியல்வாதி ஆவார். 'பொலிவியா'வின்  எல்லைகள் கிழக்கு மற்றும் வடக்கில் 'பிரேசில்' (Brazel) தெற்கில் 'பெருகுவெ' மற்றும் 'அர்ஜென்டினா' ( Paraguay and Argentina ), மேற்கில் 'சிலி' மற்றும் 'பெரு' (Chile and Peru) போன்ற நாடுகளுடன் உள்ளன. இந்த நாட்டின் பரப்பளவு 1,098,581 சதுர கிலோ மீட்டர் (424,163 சதுர மைல்) மற்றும்  ஜனத்தொகை 10 மில்லியன் என்ற அளவில் உள்ளது.
A native on a floating island at Lake Titicaca, Bolivia
டிடிககா ஏரியின் மத்தியில் மிதக்கும் தீவில் ஒரு பயணி
Author: Yves Picq (Creative Commons Attribution 3.0 Unported)

'பொலிவியா'வின் தலநகரமான 'லா பாஸ்' (La Paz) என்பதே உலகின் மிக உயரமான பகுதியில் அமைந்து உள்ள நகரமாகும். இதன் ஜனத்தொகை 835,000. ஆனால் இந்த நகரை  விட அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்கள்  அதாவது  'சாந்தாக்ரூஸ்' (Santhacruz) நகரில் 1,450,000 மக்களும் 'எல் அல்டோ' (El Alto)வில்  860,000 மக்களும் உள்ளனர்.
பொல்வியாவின் மிக அதிக உயரமான மலை உச்சி 'நிவடோ சஜாமா'(Nevado Sajama). அதன் உயரம் 6,542 மீட்டர் (21,463 அடி ). 'பொலிவியா' மற்றும் 'பெரு' (Peru)  நாடுகளுக்கு இடையே 3,805 மீட்டர் உயரத்தில் உள்ள 'டிடிககா' (Lake Titicaca) என்ற ஏரியே கடற் பயணத்துக்கேற்ற உள்ள மிகப் பெரிய ஏரியாகும்.
La Paz, Bolivia

பொலிவியா பற்றிய செய்திகள்
(Fast Facts about Bolivia)
அதீகாரபூர்வப் பெயர் : பொலிவியா ஜனநாயக குடியரசு
தலை நகரம் : லா பாஸ் (812,000)
ஜனத்தொகை : 8,857,900
பேசும் மொழிகள் : ஸ்பானிஷ் {Spanish (official)}, குவிச்சுவா (Quechua), அய்மாரா (Aymara) போன்றவை
நாணயம் : பொலிவியானோ (BOB)
மதம் : ரோமன் கத்தோலிக் (95%), பரோடேஸ்டன்ட் (5%)
பரப்பளவு : 1,098,580 சதுர கிலோமீட்டர் (424,164 மைல் )
பிராந்தியம் (Region) : தென் ஆப்ரிக்கா

பொலிவியாவுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Bolivia)
'பொலிவியா'வின் பருவ நிலை ஒரு சமயத்தில்  வடதுருவத்துக்குரிய அதி வெட்பமாகவும் அல்லது இன்னொரு சமயத்தில் மிகக் குளிரான மற்றும் உலர்ந்த , வறண்ட நிலையிலும் உள்ளது. மழை காலத்தில் சேறு நிறைந்த சாலைகளில் செல்வது கடினமாக இருக்கும். மே (May) மாதம் முதல் அக்டோபர் (October) முடிய மேகம் தெளிவாக இருக்கும், அனைத்து இடங்களுமே வறண்டு இருக்கும். ஆகவே ஜூன் (June) மதம் முதல் செப்டம்பர் (September ) மாதம் வரை இந்த நாட்டிற்கு செல்ல சிறந்த காலம் ஆகும். மேலும் அந்த நேரங்களில் நிறைய பண்டிகைகளையும் (major festivals) காண முடியும். வடக்கு அமெரிக்கா (North Amerixca) மற்றும் ஐரோப்பியாவில் (Europe) இந்த நேரமே விடுமுறைக் காலமாக இருப்பதினால் அந்த மாதங்களில் கூட்டம் அதிகம் இருக்கும். அனைத்து பொருட்களின் விலைகளும் மற்ற மாதங்களின் விலைகளைக் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிகமாகவே (Higher Price ) இருக்கும்.

எச்சரிக்கை
(Travel Warning)
'பொலிவியா'வில் திடீர் திடீர் என சாலைகளில் போராட்டங்கள் (demonstrations) நடைபெறும். அந்த நேரத்தில் அங்கிருந்து சென்று விடுவது நல்லது. ஏன் எனில் அந்த சாதாரணமாக  துவங்கும் போராட்டம் பல நேரங்களில் வன்முறைப் போராட்டமாக வெடித்து உங்கள் பயண திட்டத்தைக் கெடுத்து விடும் (disrupt your itinerary). அப்படிப்பட்ட போராட்டங்களினால் சாலைகள் முற்றுகை இடப்பட்டு யாருமே செல்ல முடியாத அளவு பல நாட்களுக்கு போக்குவரத்து பாதை முடக்க விடப்படும். இந்த மாதிரியான சாலை முடக்கப் போராட்டங்கள் முக்கியமாக 'லா பாஸ்' மற்றும் 'கோச்சபம்பா' (La Paz and Cochabamba) போன்ற இடங்களில் அதிகமாகவே உள்ளது. ஆகவ寇 உள்ளூர் செய்திகளை தெரிந்து கொண்டப் பின்னரே அந்தந்த நாளின் பயணத்தை தொடர வேண்டும்.
அங்கு சென்றால் சாதாரணமாக தின உபயோகத்தில் பயன்படுத்தப்படும் மெல்லிய  உடைகள் (Lightweight clothing) போதும். ஆனால் 'ஆண்டிப்லேனோ' (Altiplano), 'பியூனா'வின் சில பகுதிகள் (Puna), 'லா பாஸ்', 'ஒரூரோ'  (Oruro) மற்றும் 'போடோசி' (Potosi) போன்ற இடங்களில் தங்க வேண்டி இருந்தால் மிதமான குளிருக்கு ஏற்ப கனமான உடைகளை எடுத்துச் செல்வது அவசியம்.

விமானம் மூலம் செல்ல
(Getting into Bolivia By Plane )
2007 ஆம் ஆண்டு மார்ச் (March) மாதம் முதல் 'பொலிவியா'வின் 'லாயிட் ஏரியோ பொலிவியானா' (Lloyd Aereo Boliviano) எனும் தேசிய விமான சேவை நிறுத்தப்பட்டு விட்டதினால் 'பொலிவியா'விற்கு விமானம் மூலம் செல்வதில் பல சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆகவே நீங்கள் விமானம் மூலம் அங்கு செல்ல நினைத்தால் 'மியாமி' விமான நிலையத்தில் இருந்து 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' (American Airlines) விமான சேவை மூலம் செல்லலாம்.
'லா பாஸ்' சர்வதேச விமான நிலையம் {La Paz International Airport (LPB)} நகரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதினால் விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன. நாட்டை விட்டு விமானம் மூலம் வெளியேறும் சமயத்தில் வெளியேறும் வரி  (departure tax) US$25 செலுத்த வேண்டும்.

உள்ளூரில் பயணிக்க
(Travel within Bolivia )
அவ்வப்போது நடைபெறும் போக்குவரத்து சேவை ஊழியர்களின் வேலை நிறுத்தங்களினால் நமது திட்டங்கள் தடைபெறும். ஆகவே உள்ளூர் நிலைமையை கேட்டு அறிந்து கொண்டு செல்ல வேண்டும். அண்டை மானிலங்களுக்கு (Cross Country) செல்லும் பஸ் வசதியில் இரவில் செல்லும் (Services at Night) பஸ்களின் கட்டணம் குறைவாக உள்ளது.
Moody Lake Titicaca, Bolivia
டிடிகாகாவில் மூடி ஏரி
Author: Pallares1 (public domain)

பொலிவியாவின் முக்கிய நகரங்கள்
(Principal Cities of Bolivia)
(1) லா பாஸ்
(La Paz)
'பொலிவியா'வின் தலை நகரம் மற்றும் இரண்டாவது பெரிய நகரம். ஆனால் 'பொலிவியா'வின் நகரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் 'லா பாஸ்' நகரின்  ஜனத்தொகை அதிகம் .
(2) சாந்தா குருஸ் டி லா சிரியா
(Santa Cruz de la Sierra)
பொலிவியாவின் வளமான மற்றும் ஜனத்தொகை மிகுந்த நகரம்
(3) எல் ஆல்டோ
(El Alto)
'லா பாஸின்' புறநகர் பகுதி . வேகமாக முன்னேறி வரும் நகரம்.
(4) கோச்சபம்பா
(Cochabamba)
மத்திய பொலிவியாவின் ஆன்டியன் பள்ளத்தாக்கில் உள்ளது இந்த நகரம் நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.
(5) சுக்ரீ
(Sucre)
சுக்ரீ நகரம் அதிக ஸ்பானிஷ கலாச்சாரத்தைக் கொண்ட நகரம். இதன் உள்ளே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களினால் இந்த நகரம் யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக ( UNESCO World Heritage Site) ஏற்கப்பட்டு உள்ளது.
(6) ஒரூரோ
(Oruro)
'சுக்ரீ' மற்றும் 'லா பாஸ்' என்ற இரண்டு நகரங்களுக்கும் இடையே உள்ள இந்த நகரம் ஈயம் மற்றும் தகர உலோகம் போன்றவை உள்ள சுரங்க இடம் ஆகும்.
(7) தாரீஜா
(Tarija)
1574 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் அரசினால் 'ஆன்டியன்' மேட்டு நிலப் பகுதியில் அமைக்கப்பட்ட நகரம்.
(8) போடோசீ
(Potosí )
வெள்ளி தாதுப் பொருள் சுரங்கள் உள்ள நகரம்
(9) சகபா
(Sacaba )
'கோச்சம்பா' நகரின் இரண்டாவது பெரிய மாகாணம். கோகோ உற்பத்தியை நிறுத்தியபோது 2002 ஆம் ஆண்டு இங்கு பெரிய கலவரம் நடந்தது.
(10) யகுய்பா
(Yacuíba )
அர்ஜென்டினா நாட்டின் எல்லையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரம்

பார்க்க வேண்டிய இடங்கள்
(Travel Destinations in Bolivia )
(1) டிடிகாகா ஏரி
(Lake Titicaca )
படகுப் போக்குவரத்து மூலம் வியாபாரம் செய்ய பயன்படுத்தப்படும் மிகப் பெரிய ஏரி
(2) சலார் டி யுயுனி
(Salar de Uyuni )
உலகின் மிகப் பெரிய உப்பளம் உள்ள இடம்
(3) லகுனா வேர்டே
(Laguna Verde )
அல்டிபிலோனோவில் உள்ள இன்னுமொரு பெரிய உப்பளம்.
(4) கிறிஸ்டோ டி லா கன்கார்டியா
(Cristo de la Concordia )
உலகிலேயே மிகப் பெரிய ஏசு கிறிஸ்து சிலை உள்ள இடம்

யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites)
(1) போடோசி நகரம்
(City of Potosí)
போடோசியின் உள்ளூர். நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது
(2) ஜெசூட் மிஷன்ஸ்  ஆப் தி  சிகுவிடோஸ்
(Jesuit Missions of the Chiquitos)
17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்திய கிருஸ்துவர்கள் வந்து குடியேற ஏற்படுத்தப்பட்ட பகுதி.
(3) வரலாற்று சிறப்பு மிக்க சுக்ரீ
(Historic City of Sucre )
பொலிவியாவின் முதலாம் புராதான சின்ன மையம்
(4) பெர்டி டி சமைடா
(Fuerte de Samaipata )
இன்கா காலத்து நாகரீகத்தைக் காட்டும் இடத்தின் தொல்பொருள் ஆராச்சி மையம்
(Tiwanaku )
பொலிவியாவின் மிகப் பழைய நாகரீகத்தைக் காட்டும் மற்றுமொரு மையம்
(6) நோயால் கேம்ப் மேர்கேடோ நேஷனல் பார்க்
(Noel Kempff Mercado National Park )
அமேசான் பேசினில்  உள்ள மற்றொரு பார்க் 

பொலிவியா - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : நோயேல் கெம்ப் நேஷனல் பார்க்

பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
நோயேல் கெம்ப் நேஷனல் பார்க்
(Read Original Article in :- 
 

அமேசான் (Amazon) வடிநிலத்தில் உள்ள மிகப் பெரிய பூங்காவே 'நோயேல் கெம்ப் நேஷனல் பார்க்' (Noel Kempff Mercado National Park) என்பது. உலக புராதான மைய அங்கத்தினர் ( World Heritage Committee) இந்த இடத்தை யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Sites ) அங்கீகரிப்பது என 2000 ஆம் ஆண்டு நவம்பர் (November) 27 முதல் டிசம்பர் (December) 2 ஆம் தேதிவரை 'ஆஸ்திரேலியா ' (Australia) நாட்டில் நடைபெற்ற அங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்தார்கள்.
'நோயேல் கெம்ப் நேஷனல் பார்க்' முதலில் 'பார்கியூ நேசியோனல் ஹுவான்சகா' (Parque Nacional Huanchaca) என அழைக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு இந்த பார்க்கில் ஒரு இடத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்தனமாக மருந்துகள் தயாரிக்கும் சாலையை (Drug Lab) அவர் கண்டுபிடித்தபோது அவர் கொலை (Murdered) செய்யப்பட்டார் என்பதினால் 'நோயேல் கெம்ப் மேர்கடோவின்' நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இந்த பார்க்கின் பரப்பளவு (Area) 15,234 சதுர கிலோமீட்டர். அத்தனை தூரம் பரவி உள்ள அந்த பார்க்கின் உயரம் (altitude) கடல் மட்டத்தில் இருந்து 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உள்ளது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன. அவற்றில் சில 'ப்ரோமிலியார்ட்ஸ்', 'பிலாசிபோராஸ்', 'ஹெலிகொனியன்ஸ்', 'அராசியாஸ்' (bromeliads, passifloras, heliconias, araceas ) போன்றவை.  மேலும் 130 வகைகளான குட்டிபோட்டு பால் தரும் பிராணிகள், சிலந்தி போன்ற மற்றும் ஊளை இடும் குரங்குகள் (howler monkeys) , மற்றும் பிற விலங்குகள்,  650 வகை பறவைகள் (Birds) , 6 வகை பஞ்சவர்ணக் கிளிகள் (Macaw) , 70 வகைகள் ஊர்வன,  347 வகை பூச்சிகள் (Insects) போன்றவை உள்ளன .


நோயேல் கெம்ப் நேஷனல் பார்க்


காஸ்கேட் கோலா தே கபல்லோ

உலக புராதான மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

உள்ள இடம் : S 14 16 0.012 W 60 52 0.012
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு : இயற்கை
தகுதி : IX, X
இது உள்ள இடத்தை பெரிய அளவில் காண
படத்தின் மீது கிளிக் செய்யவும்


இங்கு செல்வது எப்படி
(Visiting Spiritual and Political Centre of the Tiwanaku Culture )

நீங்கள் இங்கு செல்ல வேண்டும் எனில் 'லா பாஸ்' (Laa Paz) நகரில் தங்கிக் கொள்ளலாம் . அங்கு உள்ள ஹோட்டல்களின் விவரத்தை இதன் மீதே (hotels in La Paz ) கிளிக் செய்து பார்க்கவும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

பொலிவியா - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : திவானக்கு

பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
திவானக்கு 
(Read original Article in :- Tiwanaku)


திவானக்குவில் ஒரு துறவியின் சிலை
Author: Fulsen (Creative Commons Attribution ShareAlike 3.0)'ஏன்டீஸ்' (Andes) நகரின் தென் பகுதியில் உள்ள 'திவானக்கு'  சிதைவுகள் (Tiwanku Ruins) யுனெஸ்கோ புராதான சின்ன மையம்  (UNESCO World Heritage Site ) என்று  அங்கீகரிக்கப்பட்டுள்ள இடம்.  500 மற்றும் 900 AD ஆண்டு காலத்தில் 'திவானக்கு'  நாகரீகம் உச்ச கட்டத்தில் இருந்தது.  உலக புராதான மைய அங்கத்தினர் ( World Heritage Committee) இந்த இடத்தை யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Sites) அங்கீகரிப்பது என  2000 ஆம் ஆண்டு நவம்பர் (November) 27 முதல் டிசம்பர் (December) 2 ஆம் தேதிவரை 'ஆஸ்திரேலியா ' (Australia) நாட்டில் நடைபெற்ற அங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்தார்கள். 'ஆண்டியன் ஹிஸ்பானிக்' நாகரீகத்தின் (Andean pre-Hispanic civilisation) முக்கிய காரணகர்த்தாவாக 'திவானக்கு'  திகழ்ந்தது. இங்குள்ள கட்டிடங்கள் மற்றும் சமய சம்மந்தமான கட்டிடங்கள் 'ஆண்டியன்' பகுதியின் (Andean region) அற்புதமான கலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்து இருந்தது.        
திவானக்கு 
Author: Claire POUTEAU (Creative Commons Attribution 2.0 France)திவானக்குவின் சிதைவுகள்
Author: Claire POUTEAU (Creative Commons Attribution 2.0 France)

சூரிய நுழைவாயில் 
Author: Mhwater (public domain)கலசசய  ஆலயம் 
Author: Anakin (Creative Commons Attribution ShareAlike 3.0)

இங்கு என்ன பார்க்கலாம்
(What to See in Spiritual and Political Centre of the Tiwanaku Culture )

இந்த மையம் 'லா பாஸ்சில்' இருந்து  72 கிலோமீட்டர் தொலைவில் 'டிடிகாகா' (Titicaca) நதிக் கரையின் தென் பகுதியில் உள்ளது. இந்த மையத்தைப் பற்றிய விவரங்கள் முதலில்  'பெட்ரோ சைஸா டி லியோன்' (Pedro Cieza de León) என்பவரால் 1549 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

உள்ள  இடம் : S 16 33 30 W 68 40 40
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு  : கலை
தகுதி : III, IV


இந்தப் பெயர் வந்ததின் காரணம்
(Etymology )

'திவானக்கு' என்ற பெயர்  'அய்மாரா' (Aymaraa) மொழியில் இருந்து வந்திருக்க வேண்டும். அதில்தான் 'தைபிகுவாலா' (Taipiquela) என்றால் மத்தியில் உள்ள பாறை என்று அர்த்தம். ஆகவே உலகின் மத்தியப் பகுதியில் உள்ள 'திவானக்கு'விற்கு அப்படிப்பட்ட ஒரு  பெயர் வந்திருக்க வேண்டும். அந்தப் பெயர் பின்னர் மறந்து போகக் காரணம் அந்த மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை.

வரலாறு
(History )

புதைபொருள்  ஆராய்ச்சியாளர்களின்  கூற்றின்படி  'திவானக்கு' 400 AD யில் வளரத் (Expanded) துவங்கியது. வர்த்தக  ஒப்பந்தங்கள் (Trade Negotiations) மூலம் அவர்கள் வசித்து வந்த இடங்கள் வளர்ந்து கொண்டே போயிற்று.  இந்த இடம் சமய வழிபாட்டுத் தளமாக (Religious Centre) உருவெடுத்தது. 
AD 600 முதல் 800 ஆண்டு வரை இங்கு ஜனத்தொகை பெருகியது. இந்த நகரின் பரப்பளவு  6.5 சதுர கிலோ மீட்டராக ஆயிற்று. 30,000 மக்கள் வாழ்ந்தார்கள். வானத்தில் இருந்து ஆராய்ந்தபோது இந்த நகரில்   285,000 முதல் 1.5 மில்லியன் அளவு மக்கள் வாழ்ந்து இருக்க வேண்டும் என்பது புலனாயிற்று.  AD 950 ஆண்டில் ஏற்பட்ட திடீர் இயற்கையின் மாறுதலினால்  மக்கள் தொகை குறைந்தது. அடுத்த 50 ஆண்டுகளில் அந்த நாகரீகமே அழிந்து விட்டது.  அதன் பின்னர் 13 ஆம் நூற்றாண்டில் 'இன்கா' மன்னர்கள் (Inca Rulers) இங்கு வந்து இந்த இடத்தை பிடித்துக் கொண்டபோது மீண்டும் மனிதர்கள் வாழத் துவங்கினார்கள்.1445 ஆம் ஆண்டு ஒன்பதாவது  'இன்கா' மன்னர் 'பச்சகுட்டி இன்கா யுபாண்டி' (Pachacuti Inca Yupanqui) என்பவர் இந்த இடத்தின் நாகரீக அமைப்பின் தன்மையை  கிரகித்துக் கொண்டு தம் மக்களுக்கும் அது பலனளிக்கும் வகையில் நகரை அமைக்க அதிகாரிகளை அங்கு நியமித்தார்.   
இந்த மையம் உள்ள இடத்தை பெரியதாக பார்க்க
படத்தின் மீது கிளிக் செய்யவும்

இங்கு செல்வது எப்படி
(Visiting Spiritual and Political Centre of the Tiwanaku Culture )

நீங்கள் இங்கு செல்ல வேண்டும் எனில் 'லா பாஸ்' (Laa Paz) நகரில் தங்கிக் கொள்ளலாம். அங்கு உள்ள ஹோட்டல்களின் விவரத்தை இதன் மீதே (hotels in La Paz ) கிளிக் செய்து பார்க்கவும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

பொலிவியா - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : புர்டி டி சமைபடா

பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்

புர்டி டி சமைபடா

(Read original Article in :- Fuerte de Samaipata)

 

'புர்டி டி சமைபடா' ( Fuerte de Samaipata ) என்பது ஒரு புதைபொருள் ஆராய்ச்சி மையம்.  1991 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 30 முதல் டிசம்பர் (December) மாதம் 5 ஆம் தேதிவரை ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய (World Heritage Committee) அங்கத்தினர் கூட்டத்தில் இந்த நகரை யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO heritage Site) அங்கீகரித்தார்கள். இது 'இன்கா' நாகரீகத்திற்கு (pre-Inca civilisation) முன்னர் இருந்த 'சேன்ஸ் இந்தியர்கள்' (pre-Inca civilisation) பயன்படுத்திய சமய சம்மந்தப்பட்ட இடம் (Religious Site) ஆகும். 'புர்டி டி சமைபடா' வில் உள்ள பாறை கற்களில் காணப்படும் செதுக்கப்பட்ட உருவங்கள் ஹிஸ்பானிக் காலத்துக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த சிதைவுகள் ஆகும்.
'புர்டி டி சமைபடா' மிகப் புராதான சிதைவுகளை  கொண்ட மலை பகுதியாகும். அதன் தெற்குப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்கள். 'இன்கா' இனத்தவர் 'சேன்ஸ்' ஆலயத்தின் அருகில் ஒரு நகரத்தையும் அமைத்து உள்ளார்கள். 'இன்கா' மற்றும் 'சேன்ஸ்' இந்தியர்களை 'கெளரானிச்ஸ்' இந்தியர்கள் அடிக்கடி வந்து தாக்கினார்கள். அந்த படையெடுப்புக்களில் அவர்கள் சமைபடா'வை அழித்தார்கள் (Destroyed). மீண்டும் 'ஸ்பானியர்கள்' இங்கு வரும்வரை அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். இந்த மையத்தில் 'இன்கா', 'சேன்ஸ்' மற்றும் 'ஸ்பானியர்களின்' கட்டிட  இடிபாடுகள் மற்றும் சில சின்னங்கள் உள்ளன.

'புர்டி டி சமைபடா'
Author: Pattrön (Creative Commons Attribution 2.0)


'புர்டி டி சமைபடா'
Author: Franz Barjak (public domain)

'புர்டி டி சமைபடா'
Author: Mhwater (Creative Commons Attribution ShareAlike 3.0)
சமைபடாவின் அருகில் உள்ள ஒரு கிராமம்.
இது தொல்பொருள் ஆராய்ச்சி மையம்.

Author: Natalia Rivera (Creative Commons Attribution 2.0)

இந்த இடத்தில் என்ன பார்க்கலாம்
(What to See in Fuerte de Samaipata )
எல்  காஸ்கபேல்
(El Cascabel )
இது மிக முக்கியமான பாறை சித்திரம் உள்ள பகுதி. இந்த பாறை மீது சமதூரத்தில் போடப்பட்டு உள்ள இரண்டு கோடுகள் 1066 ஆம் ஆண்டு அங்கு கிழக்குப் பகுதி வானத்தில் தோன்றிய 'ஹெல்லி' நஷத்திரத்தைக் (Halley comet ) காட்டுவதாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் .

உலக புராதான சின்ன மையம் விவரம்
(World Heritage Site Inscription details)

உள்ள இடம் : S 18 10 W 63 49
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1998
பிரிவு : கலை
தகுதி : II, III
இந்த மையம் உள்ள இடத்தை பெரிய அளவில் பார்க்க
படத்தின் மீது கிளிக் செய்யவும்

'புர்டி டி சமைபடா' விற்கு செல்ல வேண்டுமா
(Visiting Fuerte de Samaipata )

நீங்கள் இந்த இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சாந்தாருஸ்சில்' (Santa Cruz) தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து மூன்று மணி நேரத்தில் ஒரு டாக்சியில் இந்த இடத்துக்கு செல்ல முடியும்.

சாந்தாருஸ்சில் உள்ள ஹோட்டல்களின் (hotels in Santa Cruz ) அல்லது லா பாஸ்சில் ( La Paz ) உள்ள ஹோட்டல்களில் முன் பதிவு செய்து கொள்ள அந்தந்த பெயர்கள் மீது கிளிக் செய்யவும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

பொலிவியா -யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : வரலாற்று சிறப்பு மிக்க சுக்ரீ

பொலிவியா 
யுனெஸ்கோ புராதான சின்ன மையம் 
வரலாற்று சிறப்பு மிக்க சுக்ரீ
(Read Original Article in :- Historic City of Sucre
 

வரலாற்று சிறப்பு மிக்க சுக்ரீ Author: Vico ricab (Creative Commons Attribution ShareAlike 3.0)

வரலாற்று சிறப்பு மிக்க 'சுக்ரீ' (Historic City of Sucre ) 'பொலிவியா'வின் (Bolvia) முதலாவது தலை நகரமாக இருந்தது. 16 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் அமைக்கப்பட இந்த நகரில் பல புராதான  கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் சில 'சான் ரசாரோ' {San Lázaro (1544)}, 'சான் பிரான்சிஸ்கோ' {San Francisco (1581) } மற்றும் 'சான்டோ டோமிங்கோ' {Santo Domingo (late 16th century)} போன்றவை . இந்த கட்டிடங்கள் அனைத்துமே ஐரோப்பிய கட்டிடக் கலையும் உள்ளூர் கட்டிடக் கலையும் இணைத்து அமைக்கப்பட்டவை ஆகும்.
வரலாற்று சிறப்பு மிக்க சுக்ரீ
Author: jennifrog (Creative Commons Attribution 2.0)

1991 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் 9 முதல் 11 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய (World Heritage Committee) அங்கத்தினர் கூட்டத்தில் இந்த நகரை யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO heritage Site) அங்கீகரித்தார்கள்.
'தென் அமெரிக்கா'வை (South America) சேர்ந்தவரும் 1783-1830 ஆண்டுகளில் வாழ்ந்தவருமான 'சிமன் பொலிவார்' (Simon Bolivar) பெயரால் 'பொலிவியா' அமைந்தாலும் அதன் முதல் தலைநகர் 1795-1830 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த 'பொலிவியாவின்' இரும்பு மனிதரான (Strongman) 'அந்தோனியா ஜோஸ் டி சுக்ரீ வை அல்கலா'' {(Antonio José de Sucre y Alcalá (1795-1830)} என்பவர் பெயரால் அமைந்தது. அவரே 1826 ஆம் ஆண்டில் 'பொலிவியாவின்' முதலாம் ஜனாதிபதி ஆனார். ஆனால் 1830 ஆம் ஆண்டு அவர் பஸ்டோ' (Pasto) எனும் இடத்தில் கொல்லப்பட்டார்.
பேசிலிகா டி சான் பிரான்சிஸ்கோ
Author: Vico ricab (Creative Commons Attribution ShareAlike 3.0)

இந்த நகரின் முதல் பெயர் 'லா பிளேட்டா' (La Plata) என்பது. இது 'சார்காஸ்' (Charcas) இந்தியர்கள் குடியேறிய இடம். இந்த இடத்தை 'சுகிசாகா' என இந்தியர்கள் (Indians) அழைத்தார்கள். 16 ஆம் நூற்றாண்டில் 'ஸ்பானிஷ' நாட்டில் உள்ளதைப் போலவே இங்குள்ள தெருக்களையும் நகர அமைப்பையும் 'ஸ்பானிஷ்' (Spanish) ஆட்சியினர்  செய்தார்கள்.  வெள்ளி சுரங்கம் (Silver Mine) இருந்த பொடாசி (Potosi ) நகருக்கு அருகில் இது இருந்ததினால் மேலும் பயன் அடைந்தது. இந்த நகரில் முக்கியமான இடங்கள் 1624 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'சான் பிரான்சிஸ்கோ சேவியர்' பல்கலைக் கழகம் (Universidad de San Francisco Javier)சட்டப் படிப்புக் கலை கழகம் ( Real Academia Carolina, a law institution) மற்றும் 1595 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 'சான் இசபேல் ஹங்க்ரியா செமினாரியோ (San Isabel de Hungria Seminario ) போன்றவை உள்ளன. 'சார்காஸ் ஆடியேன்ஷியா' என்ற உச்ச நீதி மன்றமும் (Charcas Audiencia, which was the early incarnation of the Supreme Court ) அமைக்கப்பட்டது. இங்குள்ள கட்டிடங்கள் 'பொடசியில் ' (Potasi) உள்ளதைப் போன்ற கட்டிட அமைப்பில் உள்ளது.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)

உள்ள இடம் : S 19 02 35 W 65 15 33
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1991
பிரிவு : கலாச்சாரம்-கலை
தகுதி : IV

Wednesday, September 28, 2011

பொலிவியா - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்

பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்
( Read Original Article in : - Jesuit Missions of the Chiquitos )


சான் ஜேவியர் தேவாலயம், ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்

1696 மற்றும் 1760 ஆம் ஆண்டுகளில் கிருஸ்துவ மதத்திற்கு மாறிய (Christianized) 'இந்தியர்கள் ' (Indians) வந்து குடியேறிய ஆறு இடங்களையே 'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்' (Jesuit Missions of the Chiquitos) என்று கூறுகிறார்கள். மாற்றப்பட்டவர்கள் என்ற அர்த்தம் தரும் இந்த ஆறு இடங்கள்  'சான் பிரான்சிஸ்கோ ஜேவியர்' (San Francisco Javier), 'கன்சிப்சியன்' ( Concepción), 'சான்டா அனா' (Santa Ana), 'சான் மிகுயேல்' (San Miguel), 'சான் ரப்யேல்' (San Rafael ) மற்றும் 'சான் ஜோஸ்' (San José ) போன்றவை. அவை 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. அந்த ஆறு இடங்களும் 'சிக்விடோஸ்' (Chiquitos) நகர்புறத்தின் போற்றத்தக்க முறையில் ஒரு சொத்தாக இருந்த குடியிருப்பு  என்று கருதிய உலக புராதான மைய அங்கத்தினர் ( World Heritage Committee) இந்த இடத்தை யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Sites ) 1990 ஆம் ஆண்டு டிசம்பர் (December) 7 முதல் 12 ஆம் தேதி வரை 'கானடா' (Canada) நாட்டில் நடைபெற்ற அங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்தார்கள்.

ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ் : வரலாறு
(History of the Jesuit Missions of the Chiquitos )
1567 ஆம் ஆண்டு 'பொலிவியா'விற்கு வந்த 'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்' என்பவர்கள் (மதகுருமார்கள்) அங்கிருந்த இந்தியர்களை ரோமன் கதோலிக்க (Roman Catholic) பிரிவில் நம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற எண்ணி அதற்காக முதலில் 'போடோசி' (Potosi) நகரில் ஒரு சிறு மத மாற்ற கல்லூரியை துவக்கினார்கள். அதனைத் தொடர்ந்து 'சாந்தாக்ருஸ் டி லா சைரியாவில்' (Santa Cruz de la Sierra) 1592 ஆம் ஆண்டு தொழுகை இடத்துடன் கூடிய ஒரு கட்டிடத்தை அமைத்தார்கள்.
1671 ஆம் ஆண்டு ஜெசுஸ் குருமார்கள் மொக்சோஸ் (Moxos) இந்தியரை மதமாற்றம் செய்ய அனுப்பபட்டார்கள். அப்போது 'சாந்தாக்ருஸ்' நகரின் கவர்னராக இருந்த 'அகஸ்டின் கிடர்ரேஸ் டி அர்கா' (Agustin Gutierrez de Arca) என்பவர் கொடுத்த ஊக்கத்தினால் 'சிக்விடோஸ்' என்ற இடத்துக்கு அந்த மதகுருமார்கள் வந்தார்கள். பின்னர் ஏற்பட்ட பத்து குடியிருப்புக்களில் 1696 ஆம் ஆண்டு முதலாவது  ஏற்படுத்தப்பட்ட மத மாற்றப்பட்டவர் குடியிருப்பு 'சான் பிரான்சிஸ்கோ' ஜேவியரில் அமைக்கப்பட்டது.
 'உடோபியா'வின் (Utopia) 'தாமஸ் மோர்' (Thomas More) மற்றும் 'ஆர்கடியாவின்' (Arcadia) 'பிலிப் சிட்னி' (Philip Sydney) போன்றவர்கள்  குடியிருப்புக்கள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தபடி , இந்த குடியிருப்பை ஜெசுஸ் குருமார்கள் தேவாலயம், மடாலயம், பள்ளிகள், தொழிலகங்கள் மற்றும் கன்னிப் பெண் அல்லது விதவைகள் தங்குமிடம் போன்ற அனைத்தும் சீரிய முறையில் இருக்குமாறு  மிகவும் கவனமாக அமைத்தார்கள்.
இந்தக் குடியிருப்புக்களில் ஏசு  குருமார்கள் தவிர வேறு எந்த ஆண் மகனும் அனுமதிக்கப்படவில்லை. 'சிக்விடோஸ்' மொழி மட்டுமே இதற்குள் பேசப்பட்டது. இந்த நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த இந்தியர்களை கிருஸ்துவர்களாக மதமாற்றம் செய்தார்கள். 1767 ஆம் ஆண்டு ஏசு  மத போதகர்கள் வெளியேற்றப்பட்டபோதும் அந்த குருமார்கள் அங்கு தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.
 
'கன்சிப்சியன்' தேவாலயம்

'கன்சிப்சியன்' தேவாலயத்தின் உட்பகுதி

 
சான் ஜேவியர் தேவாலயம்  

சான் ஜேவியர் தேவாலயத்தின் முகப்பு 

சான் ஜேவியர் தேவாலயத்தில் செதுக்கப்பட்ட சித்திரங்கள்

 
சான் மிகுயேல் டி வலேஸ்கோ

 
சான் மிகுயேல் டி வலேஸ்கோவின் பூஜை மாடம்

சான் மிகுயேல் டி வலேஸ்கோவின் உட்புறப் பகுதி

'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்'சில் என்ன பார்க்கலாம்
(What to See in Jesuit Missions of the Chiquitos )
'சான் பிரான்சிஸ்கோ' மேற்குப் பக்கத்துக் கோடியில் அமைந்த இடம். அங்கு நிறுவப்பட்ட முதலாவது மதமாற்ற பிரிவினர் தங்குவதற்கு அமைக்கப்பட்ட குடியிருப்பில்  தற்போது மிஞ்சி இருப்பது பள்ளிக்கூடமும் தேவாலயமும் மட்டுமே. தேவாலயத்தை வடிவமைத்துக் கட்டியவர் 'பாதர் மார்டின் ஸ்மிட்ஸ்ட்' (Father Martin Schmidt) என்பவர். இந்த பொறியாளரே . 1709 ஆம் ஆண்டு இந்த குடியிருப்பு  கட்டப்பட்டாலும் அது முற்றிலுமாக கட்டி முடிக்கப்பட்டது 1722 ஆம் ஆண்டில்தான்.
1755 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது 'சான்டா அனா' எனும் குடியிருப்பு . 1768 மற்றும் 1831 ஆண்டுகளில் அதனுள் ஒரு தேவாலயம் (Church) கட்டப்பட்டது. அதன் வழிபாட்டு இடம் (Altar) மற்றும் திருக்கோயிற் சமய உரைமேடை (Pulpit) இரண்டுமே அற்புதமான கலை அலங்காரத்துடன் ( rich decoration) கட்டப்பட்டு உள்ளன.
'சான் மிகுயேல்' 1721 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதனுள் உள்ள தேவாலயம் 'பாதர் ஜான் மேஸ்னர்' (Father Johann Messner) என்பவர் வடிவமைத்தார். அது  இன்னும் இங்கு உள்ளது.
'சான் ரப்யேல்' குடியிருப்பில் அங்குள்ள தேவாலயத்தை தவிர வேறு எதுவும் இல்லை. 1750 ஆம் ஆண்டு அதை வடிவமைத்தவர் 'பாதர் மார்டின் ஸ்மிட்ஸ்ட்'. அதனுள் அற்புதமான ஆலய மணி கோபுரம் உள்ளது. தற்போது காணப்படும் அற்புதமான கலை அழகு 1972 ஆம் ஆண்டு அந்த தேவாலயம் புதுப்பிக்கப்பட்டபோது அமைக்கப்பட்டது.
'சான் ஜோஸ்' முதலில் ஏற்பட்ட குடியிருப்பு. 1698 ஆம் ஆண்டு அது ஏற்படுத்தப்பட்டது. அதில் உள்ள விசேஷம் என்ன என்றால் மத்தியப் பகுதியின் நான்கு மூலைகளிலும் தொழுகை இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 1740 ஆம் ஆண்டு அதற்குள் ஒரு பிணமனை (mortuary ) அமைக்கப்பட்டது. 1748 ஆம் ஆண்டு ஆலய மணி கோபுரம் அமைக்கப்பட்டது. 1754 ஆம் ஆண்டு மதகுருக்கள் தங்க வீடுகள் அமைக்கப்பட்டன.
 
ஜெசுஸ் மிஷன்ஸ் சான் ஜோஸ் டி  சிக்விடோஸ்
 
ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் சான் ரப்யேல் டி வலேஸ்கோ 

ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் சான் ரப்யேல் டி வலேஸ்கோ 

சாண்டா அனா  டி டி வலேஸ்கோவின் பூஜை மாடம்   

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

இருப்பிடம் : S 16 00 W 60 30
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1990
பிரிவு : கலை
தகுதி : IV, V

'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்' மையத்தைப் போலவே உள்ள இன்னொரு இடம் 'அர்ஜெண்டினா' (Argentina) மற்றும் 'பிரேசில்' (Brazil) நாடுகளில் உள்ள 'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி கவுரானிஸ்' (Jesuit Missions of the Guaranis) என்பது.

இந்த மையம் உள்ள இடத்தை பெரியதாகப்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

இந்த மையத்துக்கு செல்ல வேண்டுமா
(Getting there )

'பொலிவியா'வின் இந்த மையத்துக்கு செல்ல நல்ல பாதை இல்லை. வாகன போக்குவரத்து அத்தனை சரியாக இருக்காது என்பதினால் பயணத்தில் நிறைய தடங்கல் நேரிடலாம். நீங்கள் இங்கு செல்ல வேண்டும் எனில் 'லா பாஸ்' (Laa Paz) நகரில் தங்கிக் கொள்ளலாம் . அங்கு உள்ள ஹோட்டல்களின் விவரத்தை இதன் மீதே (hotels in La Paz ) கிளிக் செய்து பார்க்கவும். இந்த மையத்துக்கு செல்ல 'சான்தாக்ருஸ்சில்' தங்கிக் கொள்வது நல்லது. சான்தாக்ருஸ்சில் உள்ள ஹோட்டல்களின் விவரம் (hotels in Santa Cruz ) அறிய இதன் மீதே கிளிக் செய்யவும். சிறிய நகரம் என்பதினால் ஹோட்டல்களில் அதிக எண்ணிக்கையில் அறைகள் இருக்காது. ஆகவே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

Tuesday, September 27, 2011

பொலிவியா - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : பொடோசி

பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
பொடோசி
(Read Original Article in :- City of Potosí)

 


'பொடோசி' நகரம்' (City of Potosí) என்பது யுனெஸ்கோ புராதான சின்ன மையத்தினால் (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்ட இடம். ஒரு காலத்தில் இது பெரிய தொழில்சாலைகள் (Industries) இருந்த இடமாக மட்டும் அல்ல உலகிலேயே மிகப் பெரிய வெள்ளி (Silver Mine) உலோக சுரங்கம் உள்ள இடமாகவும் இருந்தது. ஆகவே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் 7 முதல் 11 தேதிவரை 'பிரெஞ்ச்' (France) நாட்டின் 'பாரிஸ்' (Paris) நகரில் கூடிய உலக புராதான சின்ன அங்கத்தினர் (World Heritage Committee) கூட்டத்தில் இந்த இடத்தை உலக புராதான சின்ன மையமாக அங்கீகரித்தார்கள்.

பொட்டாசி
Author: Tyke (Creative Commons Attribution ShareAlike 3.0)

மத்திய 'ஆண்டிஸ்' (Andes) நகரின் கட்டிடக் கலைகள் மற்றும் நினைவுச் சின்னத்துக்குரிய கலைகளுக்கும் 'பொட்டாசி' நகரம் ஒரு முன் மாதிரியாகவே இருந்தது. இந்தக் கலைகள் அமெரிக்கா மற்றும் 'போரோகியூ' கலைகளை (Boroque Arts) ஒன்றிணைத்து செய்யப்பட்டவை. 'பொட்டாசி' மிகப் பெரிய வெள்ளிச் சுரங்கள் இருந்த நகரம் ஆகும். இந்த சுரங்க பகுதியில் 22 நினைவுச் சின்னங்கள் (Monumental) உள்ளன.  வெள்ளி தாதுவை தூளாக்க பயன்படும் வகையில் இங்கு அணை கட்டி மேலிந்து பாயும் நீரில் மின்சார உற்பத்தி (hydraulic power) செய்யப்படுகின்றது. அந்த சுரங்கங்கள், அணைகள், செங்கல் சூளைகள் போன்றவை அப்படியே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பொடோசி


இங்கு என்ன பார்க்கலாம்
(What to See in City of Potosí )

'பொடோசி' நகரம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. வெள்ளி தாதுப் பொருள் சுரங்கத்தை சேர்ந்த சுரங்கங்கள், அணைகள், செங்கல் சூளைகள் போன்றவை அப்படியே பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அவை பார்க்க வேண்டியவை. இங்கு 22 துறவிகளுக்கான தேவாலயங்கள் உள்ளன. அவற்றில் 'சான் பெர்னாடோ', 'சான் லொரென்சோ', 'சான் அகஸ்டின்', 'சான் மார்டின்', 'சாந்தா தெரிஸ்சா', 'கம்பானியா' (San Bernado, San Lorenzo, San Agustin, San Martin, Santa Teresa, the Compania) போன்றவை அடங்கும். அதைத் தவிர நாணயம் அச்சிடும் சாலை, உயர்குடி மக்களின் (Patrician) வாசஸ்தலங்கள் உள்ளன.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

உள்ள இடம் : S 19 35 01 W 065 45 11
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1987
பிரிவு : கலை
தகுதி : II, IV, VI


இந்த இடம் உள்ள இடம் 

இந்த  இடத்தை பெரிய அளவில் பார்க்க
தரைபடத்தின் மீது கிளிக் செய்யவும்

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting City of Potosí )

நீங்கள் இங்கு செல்ல வேண்டும் எனில் 'லா பாஸ்' (Laa Paz) நகரில் தங்கிக் கொள்ள வேண்டும். அங்கு உள்ள ஹோட்டல்களின் விவரத்தை இதன் மீதே (hotels in La Paz ) கிளிக் செய்து பார்க்கவும். 'பொடாசிக்கு' செல்ல நிறைய பஸ் வசதி (Bus) உள்ளது. நகர மத்தியில் இருந்து நடந்து சென்றால் (By Walk) இந்த இடத்தை 30 நிமிடங்களில் அடையலாம். டாக்சியில் (Taxi) சென்றால் கட்டணம் அதிகமாக இருக்கும்.

பார்க்க வேண்டிய இடங்கள்
(Tourist Attractions )

(1) காசா நேஷியானால் டி மொனிடா
(Casa Nacional de Moneda)
நாணயம் அச்சடித்த தொழில்சாலை மற்றும் மியூசியம். வெளிநாட்டவருக்கு நுழைவுக் கட்டணம் (Entrance Fee) Bs. 20 .
(2) கம்பெனியா டி ஜெசுஸ்
(Compañia de Jesus )
(3) தாமிர சுரங்கங்கள்
( Copper mines )
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

பொலிவியா - லகுனா வெர்டி

பொலிவியா - லகுனா வெர்டி
(Read Original Article in :- Laguna Verde )Laguna Verde, Bolivia
லகுனா வெர்டி
Author: Ville Miettinen (Creative Commons Attribution 2.0 Generic

'லகுனா வெர்டி' (Laguna Verde) என்றால் பச்சை நிற கடலினின்று மணல் திட்டுக்கள்  நிறைந்த ஏரி போன்ற உப்பு நீர்த் தேக்கம் (Green Lagoon). இதுவும் 'ஆண்டியன்' (Andean) மலைப் பகுதியின் மேல் பரப்பில் , 'சிலி' (Chile) நாட்டு எல்லைக்கு அருகில் உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 4,300 மீட்டர் (14,000 ft) உயரத்தில் அமைந்து உள்ள இந்த ஏரி அருமையான இயற்கை காட்சியுடன் பளிங்குக் கண்ணாடி போல காட்சி தருவது மட்டும் அல்ல அதனுள் உள்ள பூமியின் அடிப்பாகம் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. அதை சுற்றி படந்து உள்ள மலைகள் இந்த நீர்தேக்கத்தின் மீது விழுந்து அவற்றை கண்ணாடி பிம்பம் போல அருமையாக பிரதிபலிக்கின்றது. அந்த தண்ணீர் தேக்கத்தில் ஒரு நீர் குமிழி கூடத் தெரியவில்லை. அந்த நிலப்பகுதி கரடுமுரடான, வறண்ட ஏகாந்தமாக இருப்பது போல காட்சி தருகின்றது.  இந்த தண்ணீரின் நிறம் பச்சையாக இருப்பதின் காரணம் அந்த பூமியில் சிறிதளவு  தாமிர தாதுப் பொருட்கள் உள்ளதினால்தான்.
Laguna Verde, Bolivia
லகுனா வெர்டி
Author: mapache_mau (Creative Commons Attribution 2.0 Generic)

இங்கு செல்வது எப்படி
(Visiting Laguna Verde )


இங்கு சென்று பார்க்க வேண்டும் எனில் 4WD வண்டிகளான 'டோயோடோ லான்ட் க்ருசேடர்ஸ்' (Toyota Landcruisers) போன்ற கனரக வண்டியில் போக வேண்டும். இங்கு சென்று வர குறைந்தது 3-4 நாட்கள் ஆகும். இது கடும் குளிரான இடம் (frigid) ஆனாலும் இயற்கை காட்சிகள் அற்புதமாக இருக்கும். ஆகவே அதற்கு ஏற்ப நல்ல கெட்டியான துணிகளையும் (Warm Clothes) , குடிக்க நல்ல தண்ணீரையும் (Drinking Water) நிறைய கொண்டு செல்ல வேண்டும். கண்களில் சூரிய ஒளிவீச்சை தடுக்கும் கறுப்புக் கண்ணாடி (Sun Glass) அணிவது அவசியம்.

இதைப் போன்ற மற்றொரு இடம்
(Related Sites )

சலார் டி உயுனி
(Salar De Uyuni)
'பொலிவியா'வின் 'ஆண்டிப்லேனோ'வின் இன்னொரு உப்பளம்
Laguna Verde, Bolivia
லகுனா டி உயுனி
Author: Lucash (Creative Commons Attribution 3.0 Unported)

பொலிவியா - சலார் டி உயுனி

பொலிவியா - சலார் டி உயுனி
(Read original Article in : - Salar de Uyuni) 


'சலார் டி உயயுனி ' (Salar de Uyuni) அல்லது 'சலார் டி துனூபா' (Salar de Tunupa) என்பது உலகிலேயே மிகப் பெரிய உப்பளம் (Salt Flat). இதன் பரப்பளவு 10,582 சதுர கிலோ மீட்டர் (4085 சதுர மைல் ). இது 'பொலிவியா'வின் (Bolivia) போடோசி (Potosí) மற்றும் ஒரூரோ (Oruro ) என்ற இரண்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ளது.
'சலார் டி உயுனி ' 3650 மீட்டர் உயரத்தில் 'ஆண்டிஸ்சின்' மேல் முனைப் (crest of the Andes) பகுதியில் உள்ளது. 'ஆண்டிஸ்' மேட்டு நிலத்தின் மீது உள்ள இந்த இடத்தில் ஹேலைட் (Halite) மற்றும் கால்சியம் சல்பேட் எனப்படும் ஜிப்சம் (Gypsum) போன்ற கனிப்  பொருட்கள் கிடைகின்றன. உண்மையில் 40000 ஆண்டுகளுக்கு முன்னர் வற்றி விட்ட (Dried) 'மின்சின்' என்ற ஏரியின் (Lake Minchin) பகுதியே 'சலார் டி உயுனி ' . அந்த ஏரி வற்றியதும் தற்போது உள்ள இரண்டு ஏரிகளான 'பூபூ' (Poopo) மற்றும் 'உரு உரு' (Uru Uru) என்பவற்றை அது தோற்றுவித்தது.
இஸ்லா டெல பெச்கடோ , சலார் டி உயுனி
Author: Ricampelo (Creative Commons Attribution 3.0 Unported)

அது மட்டும் அல்லாமல் அந்த வறண்டு  போன ஏரி 'சலார் டி உயுனி' மற்றும் 'சலார் டி கொய்பாசா'என்ற இரண்டு உப்பளங்களையும் தோற்றுவித்தது. 'சலார் டி உயுனி' என்பது 'அமெரிக்கா'வின் (America) 'போன்னிவில்லி' (Bonniville) உப்பளத்தை விட 25 மடங்கு பெரியது. 'சலார் டி உயுனி'யில் சுமார் 10 மில்லியன் டன் உப்பு உள்ளதாக தோராயமாக கணக்கீட்டு உள்ளார்கள் என்றாலும் ஒரு வருடத்திற்கு 25,000 டன் உப்பு மட்டுமே வெட்டி எடுக்கப்படுகின்றது.
இந்த சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் அனைவருமே 'கொல்சானி' கூட்டுறவு (Coperative) சங்கத்தினர். அவர்கள் உடல் வலிமையுடன் இருக்க 'கோகா' (Coca) இலைகளை மென்று கொண்டே இருப்பார்கள்.
நவம்பர் (November) மாதத்தில் இங்கு 'சிலி' (Chile) மற்றும் ஜேம்ஸ் அண்ட் ஆண்டியன் (James's and Andean) நாடுகளை சேர்ந்த 'பிளேமிங்கோ' (Flamingos) எனும் பறவை மிக அதிகமாக குஞ்சு போடும். அவை பார்க்கவே ரம்யமாக இருக்கும்.
சலார் டி உயுனி உப்பளம்
Author: Luca Galuzzi (Creative Commons Attribution ShareAlike 2.5)

இங்கு சென்று பார்க்க வேண்டும் எனில் 4WD வண்டிகளான 'டோயோடோ லான்ட் க்ருசேடர்ஸ்' (Toyota Landcruisers) போன்ற கனரக வண்டியில் போக வேண்டும். இங்கு சென்று வர குறைந்தது 3-4 நாட்கள் ஆகும். இது கடும் குளிரான இடம் (frigid) ஆனாலும் இயற்கை காட்சிகள் அற்புதமாக இருக்கும். ஆகவே அதற்கு ஏற்ப நல்ல கெட்டியான துணிகளையும் (Warm Clothes) , குடிக்க நல்ல தண்ணீரையும் (Drinking Water) நிறைய கொண்டு செல்ல வேண்டும். கண்களில் சூரிய ஒளிவீச்சை தடுக்கும் கறுப்புக் கண்ணாடி (Sun Glass) அணிவது அவசியம்.

இதைப் போன்ற மற்றொரு இடம்
(Related Sites )

லகுனா வேரடி
(Laguna Verde )
'பொலிவியா'வின் 'ஆண்டிப்லேனோ'வின் இன்னொரு உப்பளம்
உப்பள   பூமியில் ல்லாமாஸ் எனும் விலங்குகள்
Author: Anouchka Unel (Copyleft)

உப்பளத்தில் ஆண்டியன் பிளேமிங்கோ
Author: Luca Galuzzi (Creative Commons Attribution ShareAlike 2.5)

Sunday, September 25, 2011

பொலிவியா - தாரிஜா

பொலிவியா - தாரிஜா
(Read Original Article in :- Tarija)


சான் ஜாடின்சோ ஏரி
Author: Suomi 1973 (Creative Commons Attribution 3.0 Unported)

பொலிவியாவின் (Bolivia) தென் பகுதியில் உள்ளது 'தரிஜா' (Tarija) எனும் நகரம். இது கடல் மட்டத்தில் இருந்து 1,854 மீட்டர் (6,083 ft) உயரத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்த நாட்டின் ஜனத்தொகை 171,000.


'தாரிஜாவின்' தட்பவெட்ப நிலை (Climate) மத்தியதரைக் கடலின் (Mediterranean) தட்ப வெட்ப நிலையை ஒத்து உள்ளதினால் இங்கு எப்போதுமே பருவநிலை ரம்மியமாக (Pleasant Climate) இருக்கும். இந்த நகரம் 1574 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. முதலில் இந்த நாட்டின் மீதான உரிமையை 'அர்ஜென்டினா' (Argentina) நாட்டவர் கேட்டபோது 1899 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி 'புனா டி அடக்கமா' (Puna De Atacama) என்ற இடத்தை பரிமாற்றிக் கொண்டு இந்த நாட்டை 'பொலிவியா' நாட்டவர் தக்க வைத்துக் கொண்டார்கள். ஆனால் 'சிலி' (Chile) அதற்க்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் 'சிலி' மற்றும் 'அர்ஜென்டினா' நாட்டவருக்குகு 'பொலிவியா' கொடுத்த சில பகுதிகள் ஒன்றுக்குள் ஒன்று (Overlapping) இணைந்து இருந்தன. ஆகவே 'சிலி', 'அர்ஜென்டினா' மற்றும் 'பொலிவியா' நாட்டிற்காக அமெரிக்கா நாட்டு பிரதிநிதிகள் ஒன்று கூடிப் பேசி 'பொலிவியா', 'சிலி' மற்றும் 'அர்ஜென்டினா' நாட்டின் எல்லைகளை (Borders) நிர்ணயித்தார்கள்.
'சுருமடாஸ்' மற்றும் ' டோமடாஸ்' போன்ற உள்நாட்டு பழங்குடி இனத்தவர் குடியேறிய பகுதியே முதலில் 'தாரிஜா' என ஆயிற்று. அதை சுற்றி இருந்த நாடுகள் (Incas) இதன் மீது படையெடுத்து 'சுருமடாஸ்' இனத்தவரை துரத்தி அடித்தார்கள். அதன் பின்னர் 'ஸ்பானிஷ்' நாட்டவர் இதை கைப்பற்றியபோது அந்த நாட்டை கைபற்றி இருந்தவர்கள் பல கருங்கல் சாலைகளை அமைத்து இருந்ததைக் கண்டார்கள். அதைத் தவிர 'இன்கைக்கின்' (Incaic) முந்தய கால சிதைவுகளையும் கண்டார்கள்.

சான் லாரென்சோ பரிஷ்
Author: Suomi 1973 (Creative Commons Attribution 3.0 Unported)

இன்று 'தாரிஜா' சுற்றுப் பயணிகளை கவரும் இடமாக உள்ளது. இந்த நாட்டிற்கு வந்து இங்கிருந்து அண்டை நாடுகளுக்கும் செல்ல பயணத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தாரிஜாவிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Tarija )
இந்த நகருக்கு செல்ல வேண்டும் எனில் 'சாந்தாக்ருஸ் டி லா சைரா' விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பஸ் அல்லது டாக்ஸி மூலம் ய்னகருக்குள் செல்லலாம். 'அர்ஜென்டினா'வில் இருந்து இங்கு வந்தால், நகருக்குள் நுழையும் முன்னர் முதலில் அதன் எல்லையின் அருகில் உள்ள பாலத்துக்கு (Bridge) அருகில் உள்ள குடிநுழைவு அனுமதி வழங்கும் அலுவலகத்துக்கு சென்று தமது பாஸ்போர்ட்டுகளில் அனுமதி முத்திரை பெற வேண்டும்.


பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to visit from Tarija )

(1) கிரான் சாக்கோ, பருகுவே
(Gran Chaco, Paraguay)
இது கிழக்கு 'பொலிவியா' , 'பருகுவே' மற்றும் 'அர்ஜென்டினா'வின் வடக்குப் பகுதி போன்ற மூன்று நாடுகளின் இடையே உள்ள வறண்ட நிலம்.
(2) சலார் டி உயினி
(Salar de Uyuni )
19,582 சதுர கிலோமீட்டர் (4,086 சதுர மைல்) நிலப்பரப்பில் அமைந்துள்ள உலகிலேயே மிகப் பெரிய உப்பளம்