துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, September 25, 2011

பொலிவியா - கோச்சபம்பா : கிறிஸ்டோ டி லா கன்கோர்டியா என்ற சிலை

பொலிவியா- கோச்சபம்பா 
கிறிஸ்டோ டி லா  கன்கோர்டியா

(Read original Article in : -
Cristo de la Concordia )


'கிறிஸ்டோ டி லா  கன்கோர்டியா' (Cristo de la Concordia) அல்லது அமைதியான ஏசு (Christ of Peace)  என்ற சிலையே உலகின் மிக அதிக உயரத்தில் உள்ள மற்றும் மிக உயரமான  சிலை (tallest as well as highest statue) என்கிறார்கள். இந்த சிலை 'கோச்சபம்பா'வின் மத்தியப் பகுதியில் உள்ளது. இந்த சிலையைக் காண வானத்தில் செல்லும் கேபிள் காரில் (Cable Car) செல்லலாம்.  இந்த சிலையும் 'தென் ஆப்ரிக்கா'வில் (South Africa) 'ரயோ டி ஜெனாரியோ'வில் (Rio de Janeiro) உள்ள ரத்ஷகர் ஏசு (Christ The Redeemer ) எனும் 'கிறிஸ்டோ ரிடிண்டர்' (Christo Renentor) என்ற இரண்டு சிலைகளுமே கிட்டத்தட்ட ஒரே  அளவு உயரமான சிலைகளாக உள்ளன என்கிறார்கள்.
கிறிஸ்டோ டி லா  கன்கோர்டியா'
Author: C Maranon (Creative Commons Attribution 2.0 Generic)

'கிறிஸ்டோ டி லா  கன்கோர்டியா'  மற்றும் 'கிறிஸ்டோ ரிடிண்டர்' என்ற  இந்த இரண்டு சிலைகளுமே 33 மீட்டர் உயர சிலைகள் . இரண்டு சிலைகளின் கைகளும் பக்கவாட்டில் நீண்டு - உங்களை கட்டி அணைக்க கைகளை விரித்தது போல உள்ளன.  ஏசு  இந்த பூமியில் வாழ்ந்த காலத்தை காட்டும் வகையில் இரண்டு சிலைகளின் உயரமும் 33 மீட்டர் அளவில் (height was chosen to represent one year in Christ's life on earth) உள்ளது என்கிறார்கள்.  ஆனால்  'கிறிஸ்டோ டி லா  கன்கோர்டியா'வின் சிலையின் உண்மையான உயரம் 34.2 மீட்டர்  . இதற்குக் காரணம் ஏசுபெருமான் 33 ஆண்டுகளுக்கு மேலாக பூமியில் வாழ்ந்து உள்ளார் எனக் கருதி அதன் உயரத்தை அதிகமாக வைத்து உள்ளார்கள். மேலும் இதன் பீடத்தின் உயரம் தனியாக உள்ளதினால் சிலையின் மொத்த உயரம் பீடத்தையும் சேர்த்து  40.44 மீட்டர் எனும் அளவில் உள்ளது .
'கிறிஸ்டோ ரிடிண்டர்' வின் சிலை 1932 ஆம் ஆண்டுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது . ஆனால் 'கிறிஸ்டோ டி லா  கன்கோர்டியா'வின் சிலை 1987 மற்றும் 1994 ஆண்டுகளுக்கு இடையே செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  'கோச்சம்பாரா' நகரம் ஏற்கனவே கடல் மட்டத்தில் இருந்து 2575 மீட்டர்  உயரத்தில் உள்ளது.   அந்த நகரில் நகர்மட்டதை விட 265 மீட்டர் அதிக உயரத்தில் உள்ள சிறிய குன்று மீது  ஒரு பீடத்தில் வைக்கப்பட்டு உள்ள 'கிறிஸ்டோ டி லா  கன்கோர்டியா'வின் சிலையின்   மொத்த உயரம்  2840 மீட்டர்  ஆகிவிடுகின்றது. ஆகவே உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள சிலை எதுவே என்கிறார்கள்.
கிறிஸ்டோ டி லா  கன்கோர்டியா-
சிலையின் முழு  தோற்றம்

Author: Jimmy Gilles (Creative Commons Attribution 3.0 Unported)

இந்த சிலையை சென்று பார்க்க விரும்பினால் 1399 படிகளில் ஏறிச்  செல்ல வேண்டும். இல்லை எனில் கேபிள் காரில் 3 BOB கட்டணம் செல்த்திவிட்டு அதில் செல்லலாம். மேலும் அந்த இடத்தில் குடிக்க காபீ கூடக் கிடைக்காது. காரணம் அங்கு எந்த கடைகளுமே கிடையாது. ஆகவே இந்த சிலையை பார்க்கச் செல்பவர்கள் அங்கு வெகு நேரம் தங்குவது இல்லை. 

No comments:

Post a Comment