துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Wednesday, August 31, 2011

பெல்ஜியம் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்

பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்

ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்
(Read Original Article in :- Flemish Béguinages


'ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்' என்பவர்கள் பெல்ஜியத்தில் (Belgium) கன்னி மாடத்தை சேர்ந்த பெண்கள். அவர்கள் கணவரை யுத்தத்தில் இழந்தவர்கள், திருமணம் ஆகாமல் தெய்வ  சேவையை செய்து கொண்டு இருந்த கன்னிகள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சமூகத்தினர் போல ஒரே இடத்தில் அமைதியாக வாழ்ந்தார்கள். அவர்களை 'டட்ச்' (Dutch) மொழியில் 'பெகிஜ்ஹோப்' (Begijnhof) என்று கூறுவார்கள். 13 ஆம் நூற்றாண்டில் கடவுள் சேவைக்கு தம் வாழ்கையை அர்பணித்துக் கொண்ட ரோம கத்தோலிக்க மகளினர் (Roman Catholic women) இதைத் துவக்கினார்கள்.  அவர்கள் வாழ்ந்து வந்த வீடுகள், வேலை செய்யும் இடங்கள், தேவாலயங்கள் போன்ற அனைத்து இடங்களுமே சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அவைகளே இன்று யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக ( UNESCO World Heritage Site ) 1991 ஆம் ஆண்டு நவம்பர் (November) 30 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 5 ஆம் தேதி வரை கூடிய உலக புராதான சின்ன மைய (World Heritage Committee ) அங்கத்தினர் கூடிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது
இந்த அங்கீகாரத்துக்குக் காரணம் அந்த இடங்களின் 'ப்ளெமிஷ்' கலாச்சாரத்தில் (Flemish cultural) கட்டப்பட்டு இருந்த அற்புதமான கட்டிடக் கலை மற்றும் அதன் அமைப்புக்களே. மேலும் ஐரோப்பியாவில் (Europe) மத்திய காலத்தில் (Middle Ages) வாழ்ந்த , தமக்கென ஒரு தனிக் கலாச்சாரத்தை (independent cultural Tradition) ஏற்படுத்திக் கொண்டு இறை வழி சேவை புரிந்து வந்தப் பெண்கள் (Religious) மதசார்பற்ற (Secular), அதே சமயத்தில் பண்டைய கலாசாரத்தில் அந்தக் கட்டிடங்களை அமைத்து வாழ்ந்து கொண்டு இருந்ததுதான்.

அன்ட்வேர்ப்பில் பெகுநேஜெஸ்
Author: frank wouters (Creative Commons Attribution 2.0)

டீஸ்ட்டில்  பெகுநேஜெஸ்
Author: Athenchen (Creative Commons Attribution ShareAlike 3.0)

ஓட்னார்டேயில் ப்ளெமிஷ் பெகுநேஜெஸ் 
Author: LimoWreck (Creative Commons Attribution ShareAlike 3.0)

'பெகுநேஜெஸ்சில்' என்ன பார்க்கலாம்
( What to See in Flemish Béguinages )

'பெல்ஜிய'த்தில் 'அன்த்வேர்ப்' (Antwerp), 'ப்ரெகேஷ்' (Bruges), 'டென்டேர்மோண்டி' (Dendermonde), 'டைஸ்ட்' (Diest), 'கெண்ட்' (Ghent), 'ஹேஸ்சல்ட்'(Hasselt), 'ஹூக்ஸ்ராடேன்' (Hoogstraten), 'லையர்' (Lier), 'லியூவேன்' (Leuven), 'மேச்சிலேன்' (Mechelen), 'கோர்த்ரிஜ்க்' (Kortrijk), 'சின்ட் த்ரைடேன்' (Sint-Truiden), 'துர்ன்ஹவுட்' (Turnhout), மற்றும் 'டோங்கேறேன்' (Tongeren) போன்ற இடங்களில் 'பெகுநேஜெஸ்' கட்டிடங்களைக் காணலாம். அங்கெல்லாம் யுத்தங்களில் மடிந்து போன கணவனை இழந்த பல இளம் பெண்கள் (Widows) , மத்திய காலத்தில் இருந்த பல மணமாகாத பெண்கள் (Unmarried women) போன்றவர்களை சமூகம் தள்ளி வைத்தபோது 'பெகுநேஜெஸ்' எனப் பெயர் கொண்ட அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமக்கென தனி இடங்களை அமைத்துக் கொண்டு (dwellings for themselves) ஒரு குடும்பமாக வாழ்ந்தார்கள்.
'பெகுநேஜெஸ்' என்ற கூட்டு சமூகத்தினர் தம் இருப்பிடங்களில் வீட்டோடு சேர்ந்த முற்றம் (Courtyard ) தாம் இருந்த மொத்தப் பகுதியையும் சுற்றி அரண் போல சுவர்களை எழுப்பி வைத்துக் கொண்டு தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். அந்த இடத்திற்குள் நுழைய இரண்டு அல்லது மூன்று கதவுகள் அந்த பாதுகாப்பு சுவர்களில் அமைந்து இருந்தன.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)

இருப்பிடம் : N 51 1 51.5 E 4 28 25.5
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1998
பிரிவு : கலை
தகுதி : II, III, IV

'ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்' செல்ல வேண்டுமா
(Visiting Flemish Béguinages)

நீங்கள் இந்த இடத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றால் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கிக் கொள்ளலாம். 'ப்ருச்சில்ஸ்' நகரில் தங்கும் இடங்களை முன் பதிவு செய்து கொள்ள ஹோடேல்ஸ் என்ற இதன் மீது (hotels in Brussels) கிளிக் செய்யவும்.

Tuesday, August 30, 2011

பெல்ஜியம் - எப்ரேஸ்

பெல்ஜியம்  - எப்ரேஸ்
(Read Original Article in :-Ypres )

'ஏப்ரேஸ்' (Ypres )  சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
 இந்த நகரம் 'பெல்ஜியத்தின்' (Begium) மேற்குப் பகுதியில் உள்ளது. இதன் எல்லை 'பிரான்ஸ்' (France) நாட்டுடன் உள்ளது. மேலும் இந்த நகரம் 'ப்ளெமிஷ்' (Flemish) மாகாணத்தில் உள்ளது. இந்த நகரின் மொத்தப் பரப்பளவு 130.61 சதுர கிலோ மீட்டர்.  நகரின் ஜனத்தொகை  35,000 (2011 ஆண்டு கணக்கின்படி ). 'லேபெர்லீ' (Ieperlee ) எனும் வாய்க்கால் (Canal) இந்த நகரத்தின் உள் வழியாக செல்கின்றது. இந்த நகரின் வரலாறு ரோமர்கள் (Romans) காலத்தை சேர்ந்தது.  மத்தியப் பகுதியில் இந்த நகரின் ஜனத்தொகை  40,000 என்ற அளவில் இருந்தது.  அந்த அளவு ஜனத்தொகை தற்போது உள்ள ஜனத்தொகையை விட அதிகம். இந்த இடம் 'இங்கிலாந்து' (England)  நாட்டுடன் ஒரு வகை மெல்லிய நூல் துணி (Linen) வியாபாரத்தில்  ஈடுபட்டு வந்து இருந்தது.
க்ரோடி மார்கெட்  
Author: Tony Grist (public domain)
ஒரு வகை மெல்லிய லினேன் (Linen) எனும் துணி மற்றும் பிற துணிகளின் வியாபாரத்தில்இருந்து வந்ததினால் 'ஏப்ரேஸ்' நகரில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடமான க்ளோத் ஹால் (cloth Hall) எனப்படும் மையத்தைக் கட்டினார்கள். இந்த நகரமும் பல்வேறு சமயங்களில் பெரும் சேதத்தை சந்தித்தது. 1241 ஆம் ஆண்டு க்ளோத் ஹால் தீயினால் நாசம் அடைந்தது. 1383 ஆம் ஆண்டு இந்த நகரம் 'ஆங்கில பிஷாப் ஹென்றி லி டிஸ்பென்செர்' (English bishop Henry le Despenser) என்பவரால் முற்றுகை இடப்பட்டது. 1697 ழில் 'ரிஸ்விக்' (Ryswick) என்ற ஒப்பந்தத்தின்படி இது 'ஸ்பெயின்' (Spain) நாட்டு வசமாயிற்று. 1713 ஆம் ஆண்டு இந்த நகரை 'ஆஸ்த்ரியன்' (Austrian) நாட்டினருக்கு தந்துவிட்டார்கள். 
இப்படியாக குழப்பமான (turbulent) வரலாற்றைக் கொண்ட இங்கு இந்த நாட்டின் மீது படை எடுத்தவர்களை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த சுவற்றின் சிதைவுகளை , முக்கியமாக 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  சுவற்றை  இன்றும் காணலாம்.
க்ளோத்  ஹால்
Author: Tony Grist (public domain)

முதலாம் உலக யுத்தத்தின்போது (First World War)  'ஜெர்மனி'யின் (Germans) தாக்குதலினால் மற்ற நாடுகளைப் போல 'எப்ரேஸ்' நகரமும் பெரும் சேதத்துக்கு உள்ளாயிற்று.  மூன்று முறை 'ஏப்ரேஸ்' நகரில் நடந்த யுத்தத்தில் 50,000 க்கும் அதிகமான  'ஜெர்மானி'யர்கள்(Germans), 'ஆங்கிலேயர்' (English), 'கனடா' (Canadians), 'அன்சாக்' (ANSAC), மற்றும் 'பிரென்ச்'(French) போன்ற நாடுகளின்  படையினர் (Troops) மடிந்தார்கள். ஆனால் அந்த நகரத்தினை மீண்டும் ஜெர்மனியிடம் இருந்து பெற்ற நஷ்ட ஈட்டுத் தொகையினால் புனரமைத்தார்கள். முக்கியமான கட்டிடங்களை முடிந்த அளவு பழைய தோற்றத்திலேயே கட்டினார்கள். மற்ற கட்டிடங்களை நவீனக் கட்டிடங்களாகக் கட்டினார்கள்.
மெனின்  கேட்
Author: Sniper snoop with Cam (Creative Commons Attribution 3.0 Unported)


 

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Ypres )

'ப்ருச்சில்ஸ்சில்' இருந்து செல்லும் ரயிலில் ஏறி 'எப்ரேஸ்' நகருக்குச் செல்ல முடியும்.

எப்ரேஸ்சில் பார்க்க வேண்டிய இடங்கள்
( Places of Interest to Visit in Ypres )


(1) இன் பிலாண்டேர்ஸ் பீல்ட்ஸ் மியூசியம்
(In Flanders Fields Museum)
ஏப்ரேச்ஸ் நகரில் முதலாம் உலக யுத்தத்தில் நிகழ்ந்த காட்சிகளைக் கொண்ட மியூசியம்
(Grote Markt 34, Ieper )
(2) பஸ்செண்டேலே 1917 நினைவு மியூசியம்
(Memorial Museum Passchendaele 1917 )
முதலாம் உலக யுத்தத்தில் நிகழ்ந்த காட்சிகளை வரிசையாகக் காட்டும் மற்றொரு மியூசியம் 
(3) மெனின் கேட் மெமோரியல்
(Menin Gate Memorial)
பிரிட்டிஷ் மற்றும் காமன்வெல்த்  நாடுகளை சேர்ந்த  தொலைந்து போன படையினர் நினைவாக அமைந்த மியூசியம்
(4) எப்ரேஸ் க்ளோத் ஹால்
( Yepes Cloth Hall )
மீண்டும் கட்டப்பட்ட ப்லண்டேர்ச்ஸ் பில்ட்ஸ் மியூசியம்

பெல்ஜியம் - லியூயென்

பெல்ஜியம் - லியூயென்
(Read Original Article in :- Leuen)
 

இங்கு தரப்பட்டு உள்ள 'லியூயென்' (Leuen)  சுற்றுப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு பெரும் அளவு உதவியாக இருக்கும். 'லியூயென்' (French: Louvain, German: Löwen) நகரம் 'பெல்ஜியத்தின்' (Belgium)  'ப்ளெமிஷ்' (Flemish) வட்டாரத்தில்  உள்ளது.  இதன் மொத்தப் பரப்பளவு 56.63 சதுர கிலோமீட்டர். 2011 ஆண்டின் கணக்குப் படி இந்த நகரின் ஜனத்தொகை 91,000 . 'ப்ளெமிஷ் ப்ரபான்ட்' என்ற மாவட்டத்தின் தலை நகர் 'லியூயேன்'.   The city is about 30 km to the east of ப்ருச்சில்ஸ்சில் (Brussels) இருந்து கிழக்கப் புறமாக 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நகரம் உள்ளது.  இந்த நகருக்கு  ரயில்  அல்லது சாலை வழியிலும் செல்லலாம்.  
உலகின் மிகப் பெரிய 'பீர் மதுபான' (Beer) தயாரிப்புத் தொழில்சாலையான  (Company) 'ஆன்ஹியூசெர் புஷ் இன் பீவ்' (Anheuser-Busch InBev) என்பது 'லியூயென்' நகரில்தான் உள்ளது. மிகப் பழைய காலத்தைய, மிகப் பெரிய ஆனால் இன்னமும்  தொடர்ந்து நடைபெற்று வரும்  'லியூயேன் கதோலிக் பல்கலைக் கழகமும்'  (Catholic University of Leuven) இங்குதான் உள்ளது. 
க்ரோடே  மார்கெட்
Author: Snowdog (public domain)

'லியூயேன்' நகர வரலாறு  AD ௮௯௧காலத்தை சேர்ந்தது. அந்த கால கட்டத்தில்தான் 'லியூயேன்னில்' நடைபெற்ற யுத்தத்தில் விகிங்க்ஸ் (Vikings) என்பவர்களை 'கரின்தியாவை' (Carinthia) சேர்ந்த 'ஆர்னுல்ப்'  (Arnulf) என்ற 'ப்ரான்கிஷ்' (Frankish) இன மன்னன் தோற்கடித்தான். அப்போது இந்த நகரத்தின் பெயர் 'லோவென்' (Loven) என்று இருந்தது. 11 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளில் இந்த நகரம் வியாபார கேந்திரமாக ( Trading Center) விளங்கியது. முக்கியமாக துணிகளின் தயாரிப்பில் முன்னணியில் (Textile manufacturing) இருந்தது. இங்கு நெய்யப்பட்ட துணிகள் அந்த நகரின் புகழ் மிக்கப் பெயரால் 'லிவைன்' (lewyn) என அறியப்பட்டது. இங்குள்ள கத்தோலிக்க பலகலைக் கழகம் 1425 ஆம் ஆண்டு உருவாயிற்று.  இதுவே கீழ் நாடுகளில் (Low Countries)  உருவான மிகப் பெரிய பலகலைக் கழகமாக இருந்தது.  
முதலாம் உலக யுத்தத்தின்போது (World War I )ஜெர்மானியர்கள் இந்த நகரின் பல கட்டிடங்களை அழித்தார்கள். ஆனால் யுத்தம் முடிந்தப் பின் அதற்கு நஷ்ட ஈட்டை (Indementies)  ஜெர்மானியர்கள் கொடுக்க வேண்டியதாயிற்று.
போப் காலேஜ்
Author: Jeanhousen (Creative Commons Attribution 3.0 Unported)

லியூயேன் செல்ல வேண்டுமா
(Visiting Leuven )

முதலில் 'ப்ருச்சில்ஸ்' விமான நிலையத்துக்கு {(Brussels Airport (BRU) } சென்றடைந்தப்  பின் அங்கிருந்து  இருந்து ரயில் (Train) மூலம் இங்கு செல்லலாம். விமான நிலையத்தில் இருந்து சுமார் 13 நிமிடங்களில் இந்த நகர மையத்தை அடையலாம். வாகனம் மூலம் (Taxi) சென்றால் 20 நிமிடம் பிடிக்கும்.  ஆனால் நீங்கள் குறைந்தக் கட்டண விமான சேவைகள் மூலம் (Low Cost Carriers) 'ப்ருச்சில்ஸ்'சின் சார்லோ விமான நிலையத்தை வந்தடைந்தால் {Brussels South Charleroi Airport (CRL)} ,  விமான நிலையத்தில் இருந்து ஒரு பஸ்ஸை (Bus) பிடித்துக் கொண்டு சார்லோய் (Charloi) ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ரயிலைப் பிடித்துக் கொண்டு நகரை அடையலாம்.  மொத்தப் பயணகே கட்டணம் €11.40 , அதற்க்கு பிடிக்கும் நேரமோ 30 நிமிடங்களே.

கோல்லேகியாலே  சின்ட் -பீட்டர்ஷேர்க்   


லியூயே
னில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to Visit in Leuven)



(1) போச்ப்ளின்
(Fochplein)
க்ரோடி மார்கெட்டின் பக்கத்தில் உள்ளது. இங்கு பல விதமான பொருட்கள் கிடைக்கும்.
(2) க்ரூட் பெகிஞ்ச்ஹோப்
(Groot Begijnhof)
1230 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஏழைகள், முதியோர் என அனாதைகள் தங்கும் 'பெகுநெஜெஸ்' (béguinages) எனப்படும் வீடுகள்.
(3) க்ரோடி மார்கெட்
(Grote Markt)
அவுடி (Oude Market) டிற்கு அருகில் வரிசையாக உள்ள மத்திய காலத்தை சேர்ந்த கட்டிடங்கள். 
(4) M வான் மியூசியம், லியூயேன்
(M van Museum Leuven)
17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  கலைக் கட்டிடத்தில்  உள்ள  அறைகள் பல்வேறு காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
(5) அவுடி மார்கெட்
(Oude Markt)
அற்புதமான மார்கெட் ஸ்கொயர் . பரம்பரை பரம்பரையாக உள்ள கட்டிடங்களை சுற்றிலும் கொண்டது.
(6) ஸ்டேடுயிஸ்
(Stadhuis)
1439 மற்றும்  1463 ஆண்டுகளில் அந்த நகரின் வியாபார வளர்ச்சி அமோகமாக இருந்தபோது கட்டப்பட்டு உள்ள டவுன் ஹால்.
(7) செயின்ட் பெடேர்ஷேர்க் சர்ச்
{St-Pieterskerk (St. Peter's Church)}
லியூயெனின் முக்கியமான தேவாலயம். மார்கெட் ஸ்கொயாரின் அருகில் உள்ளது.  
க்லீன் பெகிஜ்ன்ஹோப்
Author: Janvanhellemont (pub

பெல்ஜியம் - டினான்ட்

பெல்ஜியம் - டினான்ட்
(Read Original Article in :- Dinant

இங்குள்ள 'டினான்ட்' (Dinant ) சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
'டினான்டு'ம் 'பிரெஞ்ச்' (French) மொழி அதிகம் பேசும் 'வால்லோனியா' (Wallonia) மண்டலத்தில் உள்ள  ஒரு நகரம். இதுவும் 'மியூஸ்' (Meuse)  நதியின் அருகில் அமைந்து உள்ளது. 'நமூர்' (Namur) மாகாணத்தை சேர்ந்தது 'டினாட்'. இதன் எல்லை 'பிரான்ஸ்' (France) நாட்டுடன் உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 99.8 கிலோ மீட்டர். ஜனத்தொகை 13,000. இதன் நேரம் ஐரோப்பிய நாடுகளின் பொதுவான நேரத்தை விட ஒரு மணி நேரம் (Central European Time) அதிகம் (UTC+1). வெயில் காலத்தில் இதன் நேரம் இரண்டு மணி அதிகம் (UTC+2).
'டினான்டிற்கு' வருகை தரும் பயணிகள் இங்கு கோதிக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டு உள்ள 'காலேஜியேட் சர்ச் ஆப் நோத்ரே டாமே' (Collegiate Chruch of Notre-Dame) என்ற முக்கியமான கட்டிடத்தைக் கவனிக்காமல் இருக்க மாட்டார்கள். இதுவே இந்த நகரின் முக்கியமான எளிதில் அடையாளம்  கண்டு கொள்ளக்கூடிய சின்னம் (Landmark) . பெரும்பாலான மக்கள் இங்கு 'பிரெஞ்ச்'  மொழியையே பேசுகிறார்கள். இந்த நகரத்தின் முக்கியமான இனிக்கும் அல்லது இன்பகரமான (delicacies) ஆகாரம் தேனினால் (Honey Sweetened) இனிப்பூட்டப்பட்ட  அப்ப வகை (Cookies).
View of Dinant from the Meuse
டினான்ட்டின் தோற்றம் 
Author: Jean-Pol GRANDMONT (Creative Commons Attribution 2.0 Generic)

'டினான்டின்' வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு (1000) முற்பட்டது. புதிய கற்காலம் முதலே (Neolithic) இங்கு மனிதர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள். 'ரோமானியர்'கள் (Romans) இங்கு வருவதற்கு முன்னரே 'செல்டிக்' (Celtic) என்ற இனத்தவர் இங்கு வாழ்ந்து உள்ளார்கள்.  'டினான்டை' பற்றி ஏழாம் (7th) நூற்றாண்டில் 'செயின்ட் பெர்பெடே'(Saint Perpete) என்பவர் 'செயின்ட் வின்சென்ட்' (Saint Vincent) எனும் தேவாலயத்தை நிறுவியபோதே  கூறப்பட்டு உள்ளது. 
'மியூஸ்' நதிக் (Meuse river)  கரையில் இந்த நகரம் அமைந்துள்ள இடத்தினால் இந்த நகரம் அடிக்கடி  கொள்ளையடிப்பட்டும் (Pillaged) தீ வைக்கப்பட்டும் (Burnt) நாசப்படுத்தப்பட்டது. 16 மற்றும் 17 ழாம் நூற்றாண்டுகளில் 'ஸ்பெயின்' (Spain) மற்றும் 'பிரெஞ்ச்' நாடுகளிடையே நடந்த யுத்தத்தினால் (War)  அதிக பாதிப்புக்கு உள்ளாயிற்று. 1675 ஆம் ஆண்டு இந்த நகரை 'பிரெஞ்ச்' நாடு பிடித்துக் கொண்டது. ஆனால் மீண்டும் 18 ஆம் நூற்றாண்டில் இதை 'ஆஸ்திரியா' (Austria) நாடு பிடித்துக் கொண்டது. 1795 ஆம் ஆண்டு 'பிஷோப்ரிக் ஆப் லிகேரி' (Bishopric of Liège) என்பவர்  இதை பிரெஞ்ச் நாட்டுடன் இணைய ஒப்புக் கொண்டார்.1914 ஆம் ஆண்டு 674 மக்கள் ஜெர்மனியை சேர்ந்த  படையினரால் (Troops) இங்கு கொல்லப்பட்டார்கள். அந்த ஆண்டில் நடந்த மிகப் பெரிய படுகொலை (massacre) இதுவே ஆகும்.  
Abbaye Notre-Dame de Leffe, Dinant
அப்பயே  நோட்ரே -டாமே  டி  லெப்பே
Author: Grentidez (public domain)

இன்று 'டினான்ட்'  நவ நாகரீகமான செழுமையான நகரம். இதன் 2003 ஆம் ஆண்டின் வருட வருமானம்  €10,000.  இங்கு பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன.  'ப்ருச்சில்ஸ்'சில் (Brussils) இருந்து ரயில் (Train) மூலம்  இங்கு ஒரு மணி முப்பது நிமிட நேரத்தில் செல்லலாம்.  நதிக் கரையின் அருகில் இந்த ரயில் நிலையம் உள்ளது.
Meuse Riverbank, Dinant
மியூஸ் நதிக் கரை 
Author: Marc Ryckaert (Creative Commons Attribution 3.0 Unported)

டினாண்டில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to Visit in Dinant)


(1) காலேஜியேட் சர்ச் ஆப் நோத்ரே டாமே
(Collegiate Church of Notre-Dame )

1227 ஆம் ஆண்டு மலை மீது இருந்து  விழுந்த  பாறைகளினால்  நாசம் அடைந்த இந்த தேவாலயம் கோதிக் கலையில் நதிக் கரையில் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இதனுள் 'அன்தோய்னே வியர்ட்ஸ்' (Antoine Wiertz) என்ற ஓவியர் வரைந்து உள்ள கற்பனையில் உருவான பயங்கரமான உருவைக் (macabre-Romantic) காட்டும் ஓவியம் உள்ளது.
(2) சிடாடலே
(Citadelle)

ஆகாய ஊஞ்சல் மூலம் (Cable Car) செல்ல வேண்டிய மலை உச்சியில் நகரைப் பார்த்தபடி அமைந்து உள்ள உள்ள கோட்டை அரண்   (Fortification)
(3) மியூசி டி லா லெப்பே
(Musée de la Leffe)

'பழைய அப்பே டி லெப்பே'  (old Abbaye de Leffe.) எதிரில் அமைந்துள்ள மதுபான வடிப்பக (Brewery) மியூசியம் 
(4) ரோசேர் பயார்ட்
(Rocher Bayard)

நகரின் தென் பகுதியில் உள்ள கற் கோட்டம். (Rock formations). ஒரு புராண நம்பிக்கையின்படி இங்குள்ள கற்கள் மிகப் பெரிய புராணக் கதைக் குதிரை (Giant Horse) ஒன்று தன்னுடைய கால் குளம்புகளினால் பெரிய கற்களை உடைத்ததினால் ஏற்பட்டவையாம்.
L'église de la Nativité de Notre-Dame in Dinant
லேக்லிஸ்சே டி லா நடிவைட் டி நோட்ரே டாமே  
Author: Jean-Pol Grandmont (Private Collection) (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

பெல்ஜியம் - நமூர்

பெல்ஜியம் - நமூர்
(Read Original Article in : - Namur)



'நமூர்' {Namur (Walloon: Nameur)} சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்.  'பெல்ஜியத்தின்' (Belgium) மத்தியத் தென் பகுதியில் உள்ளது 'நமூர்'. பிரேன்ச் மொழி பேசும் 'வல்லோனியா'(Wallonia) மாகாணத்தின் தலை நகரம் இது. 'நமூரின்' பரப்பளவு 175.69 சதுர கிலோ மீட்டர், ஜனத்தொகை  110,000 (2011 ஆண்டின் கணக்கின்படி ).
சமப்ரே நதியின் முன்னணியில்  நமூர்  பழைய  நகரம்
Author: Jean-Pol GRANDMONT (Creative Commons Attribution 3.0 Unported)

'நமூர்' நகர் 'சம்பரே' மற்றும் 'மியூஸ்' (Sambre and Meuse) நதிகள் சங்கமிக்கும் (Confluence) பகுதியில் உள்ளது.  முன்னர் இந்த துறைமுகப் பகுதி வர்த்தகங்களுக்கான போக்குவரத்து வழியாக (ancient trade routes) இருந்தது.  இந்த நகரம் 'ஜெர்மானியர்கள்' (Germans)  வசம் இருந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களில் (World Wars) இந்த நகரம் பெரும் அளவு நாசம் (severe damage) அடைந்தது.  இந்த நகரம் 'பெல்ஜியத்தின் முன்னணி  தொழில் நகரமாக விளங்குகின்றது.  இங்கு இயந்திரங்கள் உற்பத்தி, இரும்பு சம்மந்தமான, பீங்கான், தோல் போன்ற பொருட்கள் (metal products, porcelain and leatherware) சம்மந்தமான தொழில்சாலைகள் நிறையவே உள்ளன. 'ப்ருச்சில்ஸ்' (Brussels)  நகரில் இருந்து 'லக்ஸ்சம்பர்க்' (Luxembourg ) மற்றும் 'லில்லி'யில்  (Lille) இருந்து 'லைகே'  செல்லும் ரயில்கள் இந்த வழியேதான் செல்கின்றன. அது மட்டும் அல்லாமல் 'மியூஸ்' நதி மூலம் 'நமூர்' செல்லும் பாதை மூலமும் போக்குவரத்து உள்ளது.
நமூர் புறநகர் பகுதியின் காட்சி 
Author: Werneuchen (public domain)

நமூர் செல்ல வேண்டுமா
(Visiting namur)

'ப்ருச்சில்ஸ்' , 'லக்ஸ்சம்பர்க்', 'லில்லி' மற்றும் 'லைகே' போன்ற இடங்களில் இருந்து ரயில் மூலம் இங்கு செல்லலாம். சாலை வழியே வாகனத்தில் சென்றால் 'ப்ருச்சில்ஸ்'சில் இருந்து  E411 எக்ஸ்பிரஸ்வே (Expressway) வழியாகவும் 'லைகே'யில் இருந்து  E42 வழியாகவும் செல்ல வேண்டும். எக்ஸ்பிரஸ்வே  E25/E411 போன்றவை  'லக்ஸ்சம்பர்க்'கில் இருந்து 'நமூர்' செல்லும் பாதை. 

'நமூரில்' பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to Visit in Namur )
(1) சைடடில்லி
( Citadelle )
ரோமர்களின் காலத்தில் இருந்து மீண்டும் மீண்டும் பல முறை புதுப்பிக்கப்பட்ட 'சாம்பியாவூ' (Champeau)  மலைப் பகுதியில் உள்ள கோட்டை (Fortess)
(Route Merveilleuse 64)
சமப்ரே நதியின் முன்னணியில்  சிடாதேல்லே டி நமூர் 
Author: Jean-Pol GRANDMONT (Creative Commons Attribution 3.0 Unported)

பழைய பெல்ப்பிரை

(2) எக்லிஸ் செயின்ட் லூப்
( Église St-Loup )

1621 மற்றும் 1645 ஆண்டுகளில் கட்டப்பட்டு உள்ள மிகப் பெரிய  பொரோக் தேவாலயம் 
(Rue du Collège)
(3) க்ரோயேஸ்பீக்  டி க்ரோயக்ஸ் மியூசியம் 
(Groesbeeck de Croix Museum )

18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த மியூசியத்தில்  பலவிதமான ஓவியங்கள் முதல் அலங்கார தொங்கு சீலைகள்வரை (Tapesteries) பல பொருட்களை காணலாம்.
(Rue Saintraint 3)
(4) லி த்ரிசார் டோயக்னிஸ்  
(Le Trésor d'Oignies )

தங்கம், வெள்ளி, யானையின் தந்தம் (Gold /Silver /Ivory ) போன்ற பொருட்களில் மத்தியக் காலத்தில் (Medieval) செய்த நகைகள் மற்றும் பீங்கான், கண்ணாடி போன்ற  பொருட்களை உள்ளடக்கி உள்ள மியூசியம்.
(Convent des Soeurs de Notre-Dame)
(5) முஸ் அம்ப், ஈஅக்யூட், ஈ ஆர்சியலாஜிக் டி நமூர்
(Mus&eeacute;e Archéologique de Namur)

16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஹல்லே அல் சேர் எனும் இடத்தில் 'கல்லோ ரோமன்' (Gallo-Roman) மற்றும் 'மேரோவிஞ்சியன்' (Merovingian) காலத்தைய கலைப் பொருட்களைக் கொண்ட  காட்சியகம்
(Rue du Pont 21)

(6) மியூசீ ப்ரோவின்ஷியல் தேச ஆர்ட் ஏன்சியன்ச்ஸ்
(Musée Provincial des Arts Anciens)

மத்திய மற்றும் மறுமலர்ச்சி காலத்தைய சிற்பங்கள், ஓவியங்கள், ஆயுதங்கள் போன்றவை உள்ள மியூசியம்
(Rue de Fer 24)

(7) மியூசீ ப்ரோவின்ஷியல் பிலிசியன் ரோப்ச்ஸ்
(Musée Provincial Félicien Rops)

'பிலிசியன் ரோப்ச்ஸ்' (Félicien Rops) எனும் உள்ளூரை சேர்ந்த ஓவியர் படைத்த கொடூரமான (macabre ) ஓவியம் முதல் புனிதத்துவத்தை பாழடிக்கிற குற்றம் உடைய (sacrilegious) ஓவியங்களைக்  கொண்ட காட்சியகம். 
(Rue Furnal 12)
கதீத்ரலே செயின்ட் ஆபின்  
Author: Werneuchen (public domain)

பெல்ஜியம் - லைகே

பெல்ஜியம் - லைகே
(Read Original Article In :- Liège )


Liège, Belgium
லைகே

இங்குள்ள 'லைகே' (Liège) சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
'லைகே' (Dutch: Luik, English, now uncommon: Luick, Walloon: Lidje, German: Lüttich, Latin: Leodium) என்பது வால்லோனியப் (Wallonia) பகுதியில் பிரேன்ச் (French) மொழி பேசும் மக்கள் நிறைந்த பகுதி. இதன் பரப்பளவு 69.39 சதுர கிலோ மீட்டர். 2011 ஆம் ஆண்டுக் கணக்கின்படி இதன் ஜனத்தொகை 187,000 . இந்த மாகாணத்தின் மொத்தப்  பரப்பளவு 1,879 சதுர கிலோமீட்டர் மற்றும் ஜனத்தொகை 750,000. இந்த நகரத்தின் நேரம் மத்திய ஐரோப்பிய நாடுகளின் பொதுவான நேரத்தை (Central European Time) விட ஒரு மணி நேரம் அதிகம் (UTC+1). வெய்யில் காலத்தில் இது இரண்டு மணி நேரம் அதிகமாக (UTC+2) உள்ளது.

Église du Sacré Coeur de Cointe, Liège
எக்லிசி டியூ சேக்ரி கொயூர் டி கொயிண்டி

'லைகே' நகர் 'மியூஸ்' நதியின் (Meuse River) பள்ளத்தாக்கில் (Valley) உள்ளது.  இதன் எல்லைகள்  'நெதர்லாந்' (Netherlands) மற்றும் 'ஜெர்மனி'யுடன் (Germany) உள்ளது.  இந்த நகரின் அருகில்தான் மியூஸ் நதி ஓர்தி நதியை (Ourthe river) சந்திக்கின்றது.
'வால்லோனியா'வில் உள்ள நகரங்களில் 'சார்லிரோய்' (Charleroi) என்ற நகருக்கு அடுத்தபடியாக 'லைகே' நகரில்தான் ஜனத்தொகை மிகவும் அதிகம். இந்த மாகாணத்தில் 'லைகே'தான் பொருளாதார மற்றும் கலைகளில் புகழ் பெற்ற நகரம் ஆகும். இங்கு உள்ள தொழில்சாலைகளில் எஃகு தொழில்சாலை (steel making), ஏரோஸ்பேஸ் (aerospace), தகவல் தொடர்ப்பு (information technology), உயிரித் தொழில்நுட்பம் ( biotechnology ), தண்ணீர், பீர் மற்றும் சாக்கலேட் (water, beer and chocolate) போன்றவை செய்யும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
வாகனங்கள் மூலம் பொருட்களை பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் 'பெல்ஜியத்தின்' மிகப் பெரிய மையம் இது. இந்த நகரம் ஐரோபியாவின் மூன்றாவது பெரிய நதித் (River port) துறைமுகம் உள்ள இடம் மட்டும் அல்ல, இது எட்டாவது  சரக்குகளை (Cargo) ஏற்றிச் செல்லும் பெரிய விமான நிலையம்.

லைகேவிற்குச் செல்ல வேண்டுமா
(Visiting Liège)
'லைகே'யிற்கு நேரடியாகச் செல்ல 'லைகே' விமான நிலையம் {Liège Airport (LGG)} உள்ளது. அங்கிருந்து பொதுஜனப் பயண (Public Bus) பஸ்களில் ஏறி  எளிதில் நகருக்கு செல்லலாம். 'ப்ருச்சில்ஸ்' (Brussils) ,  'பாரிஸ்' (Paris ), 'ஆச்சேன்' (Aachen), 'கோலன்' (Cologne) மற்றும் 'பிரான்க்பர்ட்' (Frankfurt) போன்ற நகரங்களில் இருந்து  அதி  வேக (High Speed) ரயில்களும் இந்த நகருக்குச் செல்கின்றன.

லைகேயில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to visit in Liège)

அக்வோரியம் மியூசியம்
(Aquarium-Muséum )
2500 விதமான மிருகங்களின் எலும்புக் கூடுகளையும் , அந்த மிருகங்களின் தோலை பதப்படுத்தி அவற்றின் நிஜ உருவங்களை படைத்துக் காட்சியாக வைத்து உள்ளார்கள்.

Aquarium-Muséum Lieège
அக்வோரியம் மியூசியம்

ஆர்ச்சிபோரம்
(Archéforum)
செயின்ட் லம்பார்ட் (St.Lambart) பகுதியில் ரோமர்கள் (Roman) காலத்தில் இருந்து கிடைத்த புராதான சின்னப் பொருட்களை (archaeological) காட்சியகமாக பூமிக்கு அடியில் (Underground) அமைத்துள்ள மியூசியத்தில் வைத்து உள்ளார்கள்.

கதீட்ரல் செயின்ட் பால்
(Cathédrale St-Paul)
 தேவாலயம்  1794 ஆம் ஆண்டு 'செயின்ட் லம்பார்ட்' (St.Lambart) என்ற தேவாலயம் இடிக்கப்பட்டு (Destroyed) 600 ஆண்டுகளுக்குப் (six centuries) பின்னர் அதாவது 13 ஆம் நூற்றாண்டில்  'கதீட்ரல் செயின்ட் பால்' என்ற அதே இடத்தில் அமைக்கப்பட்டது.

கிறிஸ்டல் பார்க்
(Cristal Park)
'கிரிஸ்டில்லேரி டியூ வல் செயின்ட் லம்பேர்ட்' (Cristallerie du Val St Lambert) என்ற கண்ணாடி தொழில்சாலையினர் (glass manufacturer ) இந்த இடத்தில் கண்ணாடிப் பண்டங்களை உருவாக்குவது,  கண்ணாடிகளை வெட்டி அதில் வேலைபாடுகளை (glass blowing, cutting and engraving) செய்வது போன்றவற்றை இங்கு கற்றுத் தருகிறார்கள்.

 எக்லிஸ்சே - செயின்ட் - பார்திலேமி
(Église St-Barthélemy)
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்லூரி தேவாலயம் (Collegiate Church) . இதில் பல பணக் குவியல்கள் (Treasures) உள்ளன. 
 Église St-Barthélemy, Liège
எக்லிச்சே செயின்ட் பார்திலேமி

எக்லிச்சே செயின்ட் ஜாக்விஸ்
(St-Jacques)
1514 முதல் 1538 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு உள்ள கண்ணைக் கவரும் கோதிக் கலையில் (Gothic Style) அமைந்த  தேவாலயம்

கரே டி லைகே குய்லேமின்ஸ்
(Gare de Liège-Guillemins)
சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் 'லைகே'யின் ரயில் நிலையம். உலகின் முதலாவதான சர்வதேச ரயில் நிலையம் (international railway station) இங்குதான் துவக்கப்பட்டது  . இங்கு அதி வேக ரயில்கள் (high-speed trains) செல்கின்றன. 
Gare de Liège-Guillemins
 கரி  டி  லைகே -கில்லேமின்ஸ்
Author: Dominique Torette (Creative Commons Attribution 3.0 Unported)
லி பர்ரன்
(Le Perron)
பெரிய கல் தூண் நினைவுச் சின்னம். இதில் மேலெழும்பிப் பாயும் நீர்வீழ்ச்சி (Fountains) மற்றும் வேலைபாடுகளோடு கூடிய சிறு தூண்களோடு உள்ள கைபிடிகள் (balustrades) உள்ளன .

மிசன் டி லா மெட்டலர்ஜி எட் டி இன் இன்டஸ்ட்ரி
(Maison de la Métallurgie et de l'Industrie)
'லைகே'யின் முந்தய கால  எஃகு தொழில்சாலை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை எடுத்துக் காட்டும் மியூசியம்

மியூசி டி ஆன்செம்போர்க்
(Musée d'Ansembourg)
'லைகே'யின் பர்னீச்சர் எனப்படும் மேஜை நாற்காலி (Furniture) போன்றவற்றை செய்யும் வேலை அமைப்பைக் காட்டும் மியூசியம்

மியூசி டி ஆர்ட் எட் டி ஆர்ட் காண்டேம்போரைன்
(Musée d'Art Moderne et d'Art Contemporain (MAMAC)
'பிகாஸ்சோ', 'சகல்', 'மொனெட்', மற்றும் 'குவ்குயின்' (Picasso, Chagall, Monet and Gauguin) போன்றவர்களின் படைப்புக்களை எடுத்துக் காட்டும் இடம். 1905 ஆம் ஆண்டு முதல் உள்ளது.

மியூசி டி லா வை வல்லோனே
(Musée de la Vie Wallonne)
நாடோடிக் கதைகள் (Folklore), உள்ளூர் வரலாறு போன்றவற்றை எடுத்துக் காட்டும்  மியூசியம். பழைய கான்வென்ட் (Convent) கட்டிடத்தில் அமைந்து உள்ளது.

மியூசி டி ஆர்ட் வாலன்
(Musée de l'Art Wallon)
'லைகே'யின் சிலை வடிப்பமைப்பாளர் 'ஜீன் டெல குர்' (Jean Del Cour) மற்றும் ஓவியரான 'லம்பேர்ட் லம்பார்ட்' ( Lambert Lombard ) போன்றவர்களின் படைப்புகளை வைத்துள்ள கலைக் கூடம். 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

மியூசி கிராண்ட் கர்டியஸ்
(Musée Grand Curtius)
ஐரோபியாவின் பல இடங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட அலங்காரப் பொருட்களின்  (decorative arts) கலைக் கூடம்

மியூசி டிசான்ட்சீஸ்
(Musée Tchantchès)
நல்ல அதிஷ்டத்தை தரும் (Mascot) என நம்பப்படும் மரபு வழி உடைகளுடனான (traditional costume) பொம்மைகளைக் (Puppet) கொண்ட மியூசியம்.

பலைஸ் டெஸ் பிரின்செஸ் எவிகியூ
( Palais des Princes-Évêques )
18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இளவரசர் பிஷாப்பின் (Prince-Bishop) அரண்மனை.

Palais des Princes-Évêques, Liège
பலைஸ் டெஸ் பிரின்செஸ் எவிகியூ

பிளேஸ் - செயின்ட்- லம்பேர்ட் 
(Place St-Lambert)
'லைகே'யின் மத்தியப் பகுதியில் உள்ள பெரிய மைதானம்.

பெல்ஜியம் - ப்ருகேஸ்

பெல்ஜியம்  -  ப்ருகேஸ்
(Read Original Article in :- Bruges
Bruges, Belgium

'ப்ருகேஸ்' (Bruges) சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் உங்களுடைய சுற்றுலா பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். மேற்கு 'ப்லாண்டேர்ஸ்' (West Flanders) என்ற மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் மற்றும் அந்த மாகாணத்தின் தலை நகரம் இது. 'பெல்ஜியத்தின்' (Belgium)  வடமேற்குப் பகுதியில் உள்ள 'ப்ருகேஸ்' நகரின் பரப்பளவு 138.4 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011 ஆண்டு கணக்கின்படி இதன் ஜனத்தொகை 117,000.  வரலாற்று சிறப்பு மிக்க 'ப்ருகேஸ்' (historic center of Bruges) யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World heritage site) அங்கீகாரம் பெற்று உள்ளது. ' ப்ருகேஸ்' நகர மையத்தில் 'கூல்கேர்டி' (Koolkerke), 'சின்ட் அண்ட்ரிஸ்' (Sint-Andries), 'சின்ட் மிசேல்ஸ்' (Sint-Michiels), 'அஸ்சிப்ரோயெக்' (Assebroek), 'சின்ட் க்ரூஸ்' (Sint-Kruis), 'டுட்சிலே' ( Dudzele) மற்றும் 'லிஸ்ஸிவெகே' (Lissewege) போன்ற பகுதிகளும் உள்ளன.
Canal and buildings of Old Bruges
பழைய ப்ருகேஸ்சில் தண்ணீர் வாய்க்கால் மற்றும் வீடுகள்
Author: Jebulon (Creative Commons Attribution 3.0 Unported)

'ஆம்ஸ்டர்டாமைப்' (Amsterdam) போலவே இங்கு பல வாய்க்கால்கள் (Canals) உள்ளன. ஆகவே இதை 'வடக்கு வெனிஸ்' (Venis) என்று கூறுகிறார்கள். 'ஜுலிய சீசர்' (Julius Ceasar) ஆட்சியில் இருந்த ரோமானியர்கள் (Romans) இந்த நகரை கொள்ளைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க முதலில் அரண்களை அமைத்தார்கள். ரோமானியர்கள் வருவதற்கு முன்னரே 'கேல்லோ' (Gallo) என்பவர்கள் இங்கு இருந்துள்ளார்கள். 4 ஆம் நூற்றாண்டில் 'ப்ருகேஸ்'களிடம் இருந்து 'பிராங்க்ஸ்' (Franks) என்ற பிரிவினர்கள் இதைக் கைபற்றினார்கள். 9 ஆம் நூற்றாண்டில் 'விகிங்க்ஸ்' (Vikings) என்பவர்கள் இங்கு கொள்ளை அடித்தபோது 'கவுண்ட் ஆப் ப்லாண்டேர்ஸ் பால்ட்வின் I' (Count of Flanders Baldwin I) என்பவர் ரோமானியர்களின் இடங்களை பாதுகாக்க கோட்டையை மேலும் பலப்படுத்தினார். அப்போதுதான் 'ப்ரைக்கியா' (Bryggia) என்றப் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியாயின.
Bruges Market Square
ப்ருகேஸ் மார்கெட் ஸ்கொயர்
Author: Ernmuhl (Creative Commons Attribution 3.0 Unported)

ப்ருகேஸ் செல்ல வேண்டுமா
(Visiting Bruges)

'ப்ருச்சில்ஸ்' (Brussels) அல்லது 'லில்லி' (Lily) என்ற இடத்துக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து இந்த இடத்துக்கு ரயிலில் (Train) செல்லலாம். ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு ரயில் சேவை உள்ளது. அந்த இடங்களில் இருந்து இங்கு சுமார் 20 நிமிடங்களில் செல்லலாம். 'ப்ருச்சில்ஸ் ஜுயிட்' (Brussel-Zuid) என்ற இடத்தில் இருந்து ரயிலில் சென்றால் இங்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகும்.

ப்ருகேஸ்சில் என்ன பார்க்கலாம்
 (Places of Interest to Visit in Bruges)

வரலாற்று சிறப்பு மிக்க 'ப்ருகேஸ்' நகரை நடந்தே சென்று பார்க்கலாம். 'ப்ளெமிஷ்' (Flemish) எனும் பகுதியில் உள்ள 'டி லேஜின்' (De Lejn) என்ற வாகன சேவை (Transportation authority) அமைப்பு  நிறைய பஸ் வசதிகளை  வைத்து உள்ளது. அவற்றைத் தவிர இரு சக்கர சைக்கிள்களை (Bi Cycle) வாடகைக்கு எடுத்துக் கொண்டும் நகரை சுற்றிப் பார்க்கலாம்.

அரேன்ட்ஷுயிஸ்
(Arentshuis)
'டிஜ்வேர்' வாய்க்காலை (Dijver Canal) நோக்கி அமைந்து உள்ளது 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த அரேன்ட்ஷுயிஸ் மாளிகை (Mansion). இதனுள் 'க்ரோயினிங்கே' மியூசியத்தின் ஒரு பிரிவு அமைந்து உள்ளது.

பெகிஜ்ன்ஹோப்
(Begijnhof)
1244 ஆம் ஆண்டு 'கான்ஸ்டண்டினோபிலை சேர்ந்த மார்கரேட்' (Margaret of Constantinople ) என்பவரால் கன்னிகாஸ்ரீ ஆகாமல் கடவுள் சேவை செய்த இளம் பெண்கள் தங்குவதற்காக இந்த இடம் அமைக்கப்பட்டது. நாட்டுப்புற சூழ்நிலையில் அமரும் இருக்கைகளைக் (Rustic Furnitures) கொண்டு , அற்புதமான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த இடம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
Begijnhof, Bruges
பெகிஜ்ன்ஹோப்
Author: Donar Reiskoffer (Creative Commons Attribution 3.0 Unported)

பெல்போர்ட்
(Belfort )
எட்டு கோண வடிவில் (Octogen) கட்டப்பட்டு உள்ள இந்த கோபுரம் (Tower) 13 அல்லது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இதன் உயரம் 83 மீட்டர். இதனுள் மேலே செல்ல 366 படிகள் உள்ளன. இதற்குள் 47 மணிகள் (Bells) உள்ளன. அதன் ஓசைகளை கி-போர்டிலும் (Key board) இசைக்க முடியும்.

மார்கெட்
(Markt (Bruges Market Square)
17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீடுகள் அழகுற சீரமைக்கப்பட்டு  பெரிய மைதானத்தில் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ள இந்த இடம்  'மார்கெட்ஸ்கொயர்' (Market Square) என அழைகப்படுகின்றது. இங்கு 1881 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு உள்ள 'நியோ கோதிக் ப்ரோவின்ஷியல் ஹோப்' (Neo Gothic Provencial Hof) என்ற இடத்திற்குச் சென்று பார்க்கலாம். மேலும் அந்த மைதானத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு உள்ள 'பீட்டர் டி கொனின்க்' (Pieter de Coninck) மற்றும் 'ஜான் ப்ரேடில்' (Jan breydel ) போன்றவர்களில் சிலையையும் காணலாம்.

புர்க்
(Burg)
மார்கெட் ஸ்கொயருக்குப் பின்னால் உள்ள பெரிய கற்களால் அமைக்கப்பட்டு உள்ள  இடமே 'கோப்பில்டு ஸ்கொயர்' (Cobbled Stone Square) எனப்படுவது. இதை 'புர்க்' (Burk) அல்லது 'போர்ட்' (Fort) என்கிறார்கள் . இதை சுற்றி 'நகரக் கூடம்' (Town Hall) , 'ஓடி கிரிப்பி' (Oude griffe) மற்றும் 'மறுமலர்ச்சிக் கதவு' போன்றவை உள்ளன.

View from Molenbrug, Bruges
மோலேன்ப்ருக்கில் இருந்து காட்சி
Author: Tony Grist (public domain)

சாக்கோவின் கதை
(Choco-Story)

முன்னர் வைன் மது விடுதியாக (Wine Tavern) இருந்த இந்த இடம் தற்போது சாக்கலேட்களின் காட்சியகமாக (museum for chocolates) உள்ளது. இங்கு சாக்கலேட் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம், அவற்றை சுவைத்தும் பார்க்கலாம். மத்திய அமெரிக்காவில் (Central America) துவங்கி மற்ற இடங்களுக்குப் பரவிய சாக்கலேட்டின் கதையை (Story) முழுவதும் தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டிடத்துக்குள் 'லுமினா டோமேஸ்டிகா' (Lumina Domestica) என்பதும் உள்ளது.

பிரைட் மியூசியும்
(Friet Museum)
சாக்கோவின் கதையை வடிவமைத்தவர்களே பெல்ஜியத்தின் பொரியல் வகைகளின் கதையையும் வடிவமைத்து உள்ளார்கள். இங்கு பல விதமான உருளைக் கிழங்கு (Potato) போன்றவற்றின் பொரியல் வகைகள், அவற்றின் ஆரம்பம், அதை செய்வது எப்படி போன்றவற்றைக் காணலாம் .

க்ரோயிங்கி மியூசியம்
(Groeninge Museum)
இது நுண் கலைகளின் மியூசியம். 'ப்ளெமிஷ்' (Flemish) மற்றும் 'டட்ச் ' (Dutch) மேதாவிகளின் கலை வண்ணத்தை இங்கு காணலாம். 17 முதல் 20 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த வேலைபாடுகள் காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதை ஓட்டி உள்ள  அரேன்ட்ஷுயிஸ் சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள அந்த மாதிரியான மேலும் பல படங்களை காணலாம்.
Augustijnen Bridge, Bruges
ஆகஸ்ட்ஜ்னேன் பாலம்
Author: Marc Ryckaert (Creative Commons Attribution 3.0 Unported)

க்ருதூஸ் மியூசியம்
(Gruuthuse Musium)

இங்கு மேலும் அதிக கலைப் பொருட்களின் (Applied Arts) காட்சியைக் காணலாம். 'டிஜ்வேர்' (Dijver Canal) வாய்க்காலின் அருகில் ஒரு மாளிகைக்குள் உள்ள உள்ள இந்த மையம் 15 ஆம் நூற்றாண்டில் ஒரு வியாபாரியின் வீடாக (Merchant House) இருந்ததாம்.

ஹைலிக் ப்லோயேட் பேசிலேக்
(Heilig Bloed Basiliek )
'ப்ருகேஸ்சில்' உள்ள மிக முக்கியமான தேவாலயம் இது. ஐரோபியாவின் மிக முக்கியமான புனித சின்னங்களில் ஒன்று (Religuries) வைக்கப்பட்டு உள்ள இடம். இங்கு உள்ள ஒரு கண்ணாடிக் குடுவையில் (Phial) ஏசுவின் உடலைக் கழுவியபோது சிந்திய ரத்தத்தை 'அரிமாதியா'வை சேர்ந்த 'ஜோசப்' (Joseph of Arimathea) என்பவர் பிடித்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள்.

லுமினா டோமேஸ்டிகா
(Lumina Domestica )

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகளின் காட்சியகம் இங்கு உள்ளது. இங்கு பல வரலாற்று காலத்தை சேர்ந்த 6500 க்கும் அதிகமான விளக்குகள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளது.

மின்னி வாட்டர்
(Minnewater)

'ப்ருகேஸ்'சில் ஏரிகள் அடங்கிய பார்க் இது. 1488 ஆண்டு முதல் இங்கு அன்னப் பறவைகள் உள்ளன. 'ப்ருகேஸ்' மக்கள் நகர மக்கள் மன்ற உறுப்பினரான 'பிர்ரி லாஞ்சல்ச்ஸ்' (Pierre Lanchals) என்பவரின் தலையை சீவி கொன்றனர். அவர் நினைவாக இது ஏற்படுத்தப்பட்டது.
Sint-Salvatorskathedraal, Bruges
சின்ட்  - சல்வடோர்ஸ்கதீட்ரல்
Author: Maros M r a z (Creative Commons Attribution 3.0 Unported)

ஓந்தால்கெர்க் ஓந்சீ லிவி வ்ரௌஹ்
(Onthaalkerk Onze-Lieve-Vrouw)
நம் பெண்மணியின் நல்வரவு தேவாலயம் (Welcome Church of Our Lady) என்பது இதன் அர்த்தம். இந்த கூர்மையான (Spire) கோபுரத்தைக் கொண்ட கதோலிக தேவாலயம் 122 மீட்டர் உயரமானது. நடுக் காலமான (Medieval) 1220 ஆண்டை சேர்ந்த இதன் உட்புறம் மிகவும் எளிமையாக அமைக்கப்பட்டு உள்ளது.

செயின்ட் ஜோஹ்ன்ஹாஸ்பிடல் மற்றும் ஹான்ஸ் மேம்ப்லிங் மியூசியம்
(St-Janhospitaal and Hans Memling Museum)

12 ஆம் நூற்றாண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை மருத்துவமனையாக (Hospital) இருந்த இது தற்போது மியூசியமாக உள்ளது.  இது இரண்டு அம்சங்களை வெளிக் காட்டும் (Showcases) விதத்தில் அமைந்து உள்ளது. முதலாவதாக மத்திய காலத்தில் இருந்த மருத்துவமனை , உபகரணங்கள் (medical instruments) மற்றும் பழங்காலப் படுக்கைகள் (antique beds) போன்றவை ஒருபுறம் இருக்க மறுபுறம் ஜெர்மனியில் (Germany) பிறந்த ஹான்ஸ் மேம்ப்லிங் (Hans Memling) என்பவர் அந்த மருத்துவமனைக்காக வரைந்த பலவிதமான ஓவியங்கள் (Paintings) என இரண்டும் உள்ளன.

செயின்ட் சல்வடோர்கதீட்ரல்
(St-Salvatorkathedraal)
12 ஆம் நூற்றாண்டில் சமயகுருவின் வட்டார சர்ச்சாக (Parish Church) கட்டப்பட்ட இதன் பகுதிகள் ஆண்டாண்டுகளாக பெரிதாக்கப்பட்டுக் கொண்டே (enlarged over the centuries) சென்றது.   முடிவாக 1834 ஆம் ஆண்டில் 'செயின்ட் டோனஷனின் தேவாலயம்' (Cathedral of St Donation) அழிக்கப்பட்டபோது இதை 'ப்ருகேஸ்'சின் பிரதான தேவாலயமாக மாற்றி அமைத்தார்கள்.

ஸ்டடுயிஸ்
(Stadhuis)

'ப்ருகேஸ்'சின் நகர மண்டபம் (Town hall) இது. 1375 ஆம் ஆண்டு இதன் முகப்பு அற்புதமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டிடத்தின் பிறை மாடங்களில் (Niches) பிரபுக்களின் மற்றும் பிரபுக்களின் மனைவிகளின் (counts and countesses) சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை வெகு காலத்துக்குப் பின்னரே வைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதற்கு உள்ளே கோதிக் கலையில் 1400 ஆம் ஆண்டு அற்புதமாக அமைக்கப்பட்டுள்ள மண்டபம் (Gothic Hall) போன்றவை உள்ளன. இந்த கட்டிடம் முழுவதுமே அடுத்தடுத்து புதுப்பிக்கப்பட்ட நிலையை அற்புதமாக எடுத்துக் காட்டுகின்றது.
The Gothic Hall in the Stadhuis of Bruges
ஸ்டடுயிஸ்சில் கோதிக் மண்டபம்
Author: Szilas (Creative Commons Attribution 3.0 Unported)

விஸ்மார்க்ட்
(Vismarkt)
இது மீன் மார்கெட்.  இங்குள்ள கண் இல்லாத கழுதையின் சந்து ("Alley of the Blind Donkey") என்றப் பெயரில் உள்ள 'ப்லிண்டி எசில்ஸ்ட்ராட்' (Blinde Ezelstraat) என்ற ஒடுக்கமான பாதை (Alley) நம்மை 'புர்கு' (Burg)  பகுதிக்கு கொண்டு சேர்க்கும்.

கிழக்கு ப்ருகேஸ்சில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Eastern Bruges )

இந்த இடத்துக்கு அதிகப் பயணிகள் செல்வது இல்லை என்றாலும் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே  உள்ளன
Bruges Belfort
ப்ருகேஸ் பெல்போர்ட்
Author: Steve Parker (Creative Commons Attribution 2.0 Generic)

கைடோ கேசெல்லிமியூசியும்
(Guido Gezellemuseum)
இந்த வீட்டில்தாம் புகழ் பெற்ற 'ப்ளெமிஷ்' கவிஞ்சரான 'குயடோ கேசல்லே' வளர்ந்தார். இங்குள்ள அறைகள் ஓரளவுக்கு காலத்துக்கு தகுந்தாற் போல அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

ஜெருசெலேம்கேர்க்
(Jeruzalemkerk)
'ப்ருகேஸ்'சின் வித்தியாசமான தேவாலயம் இது.  இதை ஜெருசேலத்தில் (Jerusalem) உள்ள சர்ச் ஆப் தி ஹோலி சிபல்ச்ரீ (church of the Holy Sepulchre ) என்ற தேவாலயத்தின் அமைப்பில் கட்டி உள்ளார்கள். 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள இதை இத்தாலிய வணிக வியாபாரியான 'அன்சில்முஸ் அடோர்ன்ஸ்' மற்றும் அவர் மனைவியும் (Anselmus Adornes and his wife) சேர்ந்து கட்டி உள்ளார்கள்.

காண்ட்சென்ரம்
(Kantcentrum)

'ஜுருசலேம்கேர்'கின் (Jeruselemkerk)  பக்கத்தில் உள்ள 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த இடம் ஜரிகை, நாடா அல்லது இழை கச்சடி (Lace making) போன்றவற்றை செய்யும் புகழ் பெற்ற இடம் ஆகும்.

க்ரூஸ்பூர்ட்
(Kruispoort)

'ப்ருகேஷ்' செல்லும் மத்திய காலத்தை சேர்ந்த நுழை வாயில். 1402 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது நகரின் கிழக்குப் பகுதியின் காவல் நுழை வாயிலாக இருந்தது. ஒரு காலத்தில் இங்கு 20 காற்றாலை மின் யந்திரங்கள் இருந்தன. ஆனால் தற்போது இங்கு நான்கே நான்கு காற்றாலை மின் விசிறிகள்தான் உள்ளன.

மியூசியம் ஒன்சீ லைவ் வ்ரௌவ் தேர் போட்டேரி
(Museum Onze-Lieve-Vrouw-ter-Potterie)
1276 ஆம் ஆண்டு இது வயதான பெண்மணிகளின் மருத்துவ மனையாக இருந்தது. தற்போது நம் மண்பாண்டபொருள் பெண்மணியின் மியூசியமாக (Our Lady of the Pottery) உள்ளது.

ஸ்குட்டர்ஸ்கில்டி செயின்ட் செபெஸ்டியன்  
( Schuttersgilde St-Sebastian)
பெரிய வில் சங்க  (Longbow Archers guild) வில்லாளிகளின் இடமான இதில் மத்தியக் கால படைவீரர்கள் இணைந்து இருந்தார்கள். ரோம மன்னன் 'டியோக்ளேஷியன்' (Emperor Diocletian) என்பவர் ஒரு கிருஸ்துவ வீரரை வில் அம்பு எய்து கொல்லுமாறு கூறியதினால் அந்த தியாகியின் நினைவாக இது அமைந்தது.  அப்படி செய்தும் 'செயின்ட்  செபெஸ்டியனின் (St. Sebastian) காயம் ஆறி விட்டதினால் அவரை தடியினால் அடித்துக் கொலை செய்தார்கள்.

பெல்ஜியம் - அன்ட்வேர்ப்

பெல்ஜியம்  -  அன்ட்வேர்ப்
(Read Original Article in :- Antwerp

அன்ட்வேர்ப்
Author: Wouter Hagens (Creative Commons Attribution 3.0 Unported)

 
'அன்ட்வேர்ப்' (Antwerp) அல்லது  'அன்ட்வேர்பென்' (Antwerpen)  என 'டட்ச்' மொழியில் கூறப்படும் இந்த நகரம் 'பெல்ஜியத்தின்' (Belgium)  மிகப் பெரிய நகரம் ஆகும். 'ஸ்செல்ட்ச்' நதியின் (River Scheldt) வலதுக் கரையில் அமைந்து உள்ள இந்த நகரம்   204.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. நகரின் ஜனத்தொகை  461,000 (2011 ஆண்டு கணக்கின்படி ). ஒரு பெரிய மாவட்டத்தின்  (Metropolitan)  மத்தியில் அமைந்துள்ள இந்த நகரின்  ஜனத்தொகை ஒரு மில்லியனைத் (One Million) தாண்டும்.  'அன்ட்வேர்ப்' நகரம் 'அன்ட்வேர்ப்'  மாவட்டத்தின்  தலை நகரம் ஆகும். இந்த நகரத்தின் எல்லை 'நெதர்லாந்' (Netherland) நாட்டின் எல்லையை தொட்டபடி உள்ளது. 
ஐரோபியாவின்  'ரோட்டர்டாம்' (Rotterdam) என்ற நகரத்தில் உள்ள துறைமுகத்தைப் (Sea Port) போல அதற்கு அடுத்த பெரிய துறைமுகப் பகுதியாக 'அன்ட்வேர்ப்' நகரம் உள்ளது.  துறைமுகத்தை சார்ந்த தொழில்சாலைகள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப்  பொருட்களின் (Petro Chemicals) கையாளுகைக் கட்டணங்களினால்  'அன்ட்வேர்ப்' நகரின்  பொருளாதாரம் பெரும் அளவில்  வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில பத்தாண்டு காலங்களாக அங்கு குடியேறி இருந்த  'இந்தியாவை ' (India) சேர்ந்த  நகை (Jewellary) வியாபாரிகள் அங்கு தொழில் முறை ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் உள்ளூரில் இருந்த யூதர்கள் (Jews) அங்கு நடந்து வந்த வணிகத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.      
கதீட்ரல் ஆப் அவர் லேடி 
Author: Ad Meskens (Creative Commons Attribution 3.0 Unported)

'அன்ட்வேர்ப்' நகரம் ஒரு புராணக் கதையுடன் (Legend) சம்மந்தப்பட்டது. 'ஹான்ட் வேர்பேன்' (Hand Werpen) என்ற 'டட்ச்' சொல்லின் மூலமே இந்தப் பெயர் வந்தது. அதன் அர்த்தம் 'கையை தூக்கி ஏறி' என்பதாகும். பண்டைய காலத்தில் 'பிராடோ' (Brado) என்ற வீரன் அந்த நாட்டை துன்புறுத்தி வந்த கொடியவானின் கையை வெட்டி அருகில் இருந்த  'ஸ்செல்ட்ச்' நதியில் (River Scheldt) தூக்கி எறிந்து அவர்களைக் காப்பாற்றியதால் அப்படி ஒரு பெயர் வந்ததாம்.   
 'கலோ ரோமார்கள்' (Gallo-Roman) காலத்தில் இருந்தே மக்கள் இந்த இடத்தில் வாழ்ந்து வந்து  உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக  இரண்டாம் நூற்றாண்டை (2nd Century) உடைந்த மண்பானைகளின் சில்லுகள் (pottery shards) இங்கு கிடைத்துள்ளன.  7 ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்ள, 10 ஆம் நூற்றாண்டில்  'ஸ்செல்ட்ச்'  நதி அங்கு ஆட்சியில் இருந்த   புனித ரோம மாமன்னர்களின் எல்லை (Frontier) ஆயிற்று. 
16 ஆம் நூற்றாண்டில் ஸ்வின் (Zwin) நதி வற்றி வண்டலாக ஆனபோது   'அன்ட்வேர்ப்' நகருக்கு அதிர்ஷ்டம் அடித்தது.  1560 ஆம் ஆண்டுகளில் 'ஆல்ப்ஸ்' மலைகளின் (Alps) வடக்குப் பகுதியில் ஐரோபியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாக உருவெடுத்தது. 
அன்ட்வேர்ப்பில் கட்டிடங்கள்
Author: Piotr Kuczynski (Creative Commons Attribution 3.0 Unported)

1566 ஆம் ஆண்டு ஏற்பட்ட ரோமன் கதோலிகர்கள் (Catholics) மற்றும் ப்ரோடேஸ்டன்ட்ஸ் (Protestants) இடையிலான பிரிவினால் இந்த நகர் தெருக்களில்  சண்டை  துவங்க நெதர்லாந்தை (Netherland) சேர்ந்த 'ஹாஸ்பர்க்' (Habsburg Netherlands) மற்றும் 'ஸ்பானிய' (Spanish) அரசரான பிலிப் II (பிலிப்ஸ் II) என்ற மன்னர் இடையே நடந்த 'டட்ச்' விடுதலை யுத்தம் எட்டு (Eight) ஆண்டுகள் தொடர்ந்தது. 1648 ஆம் ஆண்டு ஏற்பட்ட 'முஸ்டேர்' (Muster) உடன்படிக்கையின்படி இது 'டட்ச்' அரசை சார்ந்ததாக ஒப்பந்தம் ஏற்பட  'ஸ்செல்ட்ச்' நதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  அதனால் அந்த தடை 1863 ஆம் ஆண்டு விலகும்வரை  'அன்ட்வேர்ப்'பின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. 
காரோலுஸ்  போர்ரோமியுஸ் சர்ச் உல் தோற்றம்
Author: Ad Meskens (Creative Commons Attribution 3.0 Unported)

 1830 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நகர ஆட்சி 'பெல்ஜியத்தை' சேர்ந்த புரட்சியாளர்கள் கையில் விழுந்தது. 1831 ஆம் ஆண்டு விடுதலைப் பெற்ற இந்த நகரின் ஆட்சி  'லேபோர்ட்' I (Lepord I ) என்ற மன்னன் தலைமையில் அமைந்தது. 1920 ஆம் ஆண்டு இந்த நகரில் ஒலிம்பிக் போட்டி (Olympic) பந்தயங்கள் நடைபெற்றன.  1940 ஆம் ஆண்டு மே மாதம் (May) முதல் 1944 ஆம் ஆண்டுவரை செப்டம்பர் (September) மாதம்வரை இந்த நகரம் நாசி (Nazi) ஆட்சியாளர்கள் வசம்  இருந்தது.  இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோது  1944 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசினர் இந்த நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார்கள். இங்கிருந்த துறைமுகத்தின் மீது ஜெர்மானியர்கள் (Germany) குண்டுமழை பொழிந்து அதை நாசப்படுத்தினார்கள். அந்த யுத்தத்தின்போது பெருமளவில் யூதர்கள் மரணம் அடைந்தாலும் பின்னர் மீண்டும் அவர்களின் ஜனத்தொகை பெருகியது.
அன்ட்வேர்ப் சிட்டி கேப்
Author: Savant-fou (Creative Commons Attribution 3.0 Unported)

அன்ட்வேர்பிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Antwerp)

 இங்கு செல்ல வேண்டும் எனில் 'அன்ட்வேர்ப் விமான நிலையம்' { Antwerp Airport (ANR)}, அல்லது 'ப்ருச்சில்ஸ் விமான நிலையம்' {Brussels Airport (BRU)} அல்லது 'ஸ்ஷிபோல் விமான நிலையம்{Schiphol Airport (AMS)} போன்றவற்றில் எதிலாவது சென்று  அங்கிருந்து டாக்ஸ்சி (Taxi) அல்லது பஸ்ஸில் (Bus) பயணம் செய்து நகரை அடையலாம். டாக்ஸ்சிக்கான கட்டணம் யூரோ 10 ஆகும்.

நகரின் உள்ளே பயணிக்க
(Exploring Antwerp )
நகருக்கு உள்ளே உள்ள இடங்களுக்கு செல்ல பஸ்ஸில் பயணம் செய்யலாம். பல முறை பயணம் செய்யும் வகைக்கான பயண சீட்டுக்கள் யூரோ  €9 அல்லது 10 என்றக் கட்டணத்தில் கிடைக்கின்றன  .  ஒரே ஒரு முறை பயணம் செய்யக் கட்டணம் யூரோ €2.00 அதே பயணச் சீட்டில் ஒரு மணி நேரத்தில் எந்த இடத்துக்கும் மாறி மாறி எந்த பஸ்ஸில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.

முக்கியமான சுற்றுலா இடங்கள்
( Places of Interest in Antwerp)
(1) அன்ட்வேர்ப் சென்ட்ரல் ஸ்டேஷன்  
(Antwerp Central Station)
(2) அன்ட்வேர்ப் ஜூ 
(Antwerp Zoo)
(3) அக்வோடோபியா 
(Aquatopia)
(4) போரேண்டோரின் 
(Boerentoren ("Farmer's Tower")
(5) போவுர்லா தியேட்டர் 
(Bourla Theatre )
(6) பவுர்ச்ஸ் 
(Bourse )
(7) காரோலுஸ்  போர்ரோமஸ்  சர்ச் 
(Carolus Borromeus Church )
 (8) காதேட்ரல் ஆப் யவர்  லேடி 
(Cathedral of Our Lady (Onze Lieve Vrouwekathedraal)
(9) சர்ச் ஆப்  செயின்ட் பால் 
(Church of St Paul )
(10) சீடி ஹால் அண்ட் மார்கட் ஸ்கொயர் 
(City Hall & Market Square (Stadthuis/Grote Markt)
(11) டையமன்ட் டிஸ்ட்ரிக்ட்  
(Diamond District )
(12) ஹெட் முன்ட்ப்லின் 
(Het Muntplein)
(13) ஹெட் ஸ்டீன் 
(Het Steen ("The Stone")
(14) ஜஸ்டிபலிஸ் 
(Justitiepaleis (Palace of Justice)
(15) கொனின்க்ளிஜ்க்  மியூசியம்
(Koninklijk Museum voor Schone Kunsten (Royal Museum of Fine Arts)
(16) மிட்டேல்ஹெயம்  பார்க் 
(Middelheim Park )
(17) முக்ஹா மியூசியம்
(MUHKA, the Museum of Contemporary Art )
(18) பிளான்டின் மோரிடச்ஸ் மியூசியம் 
(Plantin Moretus Museum )
(19) செயின்ட் ஜேம்ஸ் சர்ச்
(St James' Church )
(21) ஜூதர்பெர்ஸ்ஹுஇஸ் 
(Zuiderpershuis)
(22) ஜுரென்போர்க்  
(Zurenborg )

பெல்ஜியம் - ப்ருச்சில்ஸ்

பெல்ஜியம் - ப்ருச்சில்ஸ்  
(Read Original Article in :- Brussels

View of Brussels from the Atomium
அட்டோமியம் என்ற பகுதியில் இருந்து ப்ருச்சில்ஸ்
Author: Wouter Hagens (Creative Commons Attribution 3.0 Unported)
'பெல்ஜியத்தின்' (Belgium) தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரமே'ப்ருச்சில்ஸ்' (Brussels). கம்யூன்ஸ் (communes) அல்லது ஜெமெண்டீன் (gementeen) எனப்படும் 19 நகரசபைகளை உள்ளடக்கிய நகரம் இது. இந்த நகரத்தின் பரப்பளவு 161.4 சதுர கிலோமீட்டர். (62.2 சதுர மைல்). நகரின் ஜனத்தொகை 1.83 மில்லியன் (2011 கணக்கின்படி ). இதன் நேரம் மத்திய ஐரோபியாவின் ஒன்றுபட்ட நேர கணக்கை (Coordinated Universal Time) விட ஒரு மணி நேரம் அதிகமாகவும் வெய்யில் காலத்தில் இரண்டு மணி நேரம் அதிகமாகவும் உள்ளது.
மேலும் இந்த நகரம் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளின் தலை நகரமும் ஆகும். இது 'பிரேஞ்ச் ' (France) நாட்டினர் அதிகம் உள்ள இடம். 'ப்ருச்சில்ஸ்' தலைநகரப் பகுதியில் நவீன 'ப்ருச்சில்ஸ்' (Modern city) என்ற நகரப் பகுதி 1989 ஆம் ஆண்டு ஜூன் (June) மாதம் 18 ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது.
 
பிலேஸ் டி அல்பேண்டைன் 

இந்த நகரத்தின் பெயர் சதுப்பு நிலத்தில் உள்ள நகரம். இந்தப் பெயர் டட்ச் (Dutch) மொழியில் சதுப்பு நிலத்தைக் குறிக்கும் 'ப்ரோக்செல்' (Broeksel) என்ற சொல்லில் இருந்து வந்ததாம். 'ப்ருச்சில்ஸ்' நகரம் பத்தாம் நூற்றாண்டில் (10th Century) அதாவது அதிகாரபூர்வமாக AD 979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த ஆண்டில்தான் 'கீழ் லோதரிஞ்சியா' (Lower Lotharingia) பகுதியை சேர்ந்த டியூக் சார்லஸ் (Duke Charles) என்ற இளவரசர் செயின்ட் கெளஜெரிகுஸ் தேவாலயத்தின் (Saint Gaugericus Chapel) 'செயின்ட் குடுலா' (St Gudula) என்பவறின் நினைவுச் (Relics) சின்னங்களை அங்கு கொண்டு வந்து வைத்து அந்த நகரைப் பாதுகாக்க பலமான படையை அமைத்தார். 'ப்ருச்சில்ஸ்' விரைவாக வளர்ந்து பெரிய நகரமாக மாறியதுடன் அந்த நகரை பாதுகாக்க (To Fortify) இன்னொரு பாதுகாப்பு அரணை அமைக்க வேண்டி இருந்தது. இன்று அந்தப் பகுதிகளை சுற்றி பொது மைய வளைய சாலைகள் (Ring Roads) அமைக்கப்பட்டு உள்ளன.
கதீத்ரலே செயிண்ட்ஸ் -மிசேல்-எட்-குடுலி
Author: Prosopee (Creative Commons Attribution 3.0 Unported)

'ப்ருச்சில்ஸ்' நகரில் அதிகாரபூர்வமாக இரண்டு மொழிகள் (Bi Lingual) நடைமுறையில் உள்ளன. அங்குள்ளவர்களில் 80 % மக்கள் பிரென்ச் (French) மொழியையும் 20 % மக்கள் டட்ச் (Dutch)  மொழியையும் பேசுகிறார்கள். இங்கு பேசப்படும் பிரென்ச் மொழி உண்மையான பிரென்ச் (Standard French) மொழியுடன் ஒத்து உள்ளது,  ஆனால் டட்ச் மொழி  உண்மையான டட்ச் (Standard Dutch) மொழியுடன் சிறிது மாறுபட்டு உள்ளது. இருந்தாலும் இந்த நகரில் உள்ளவர்கள் பலரும் ஆங்கில மொழியையும் அறிந்து உள்ளதினால் ஆங்கிலம் தெரிந்தால் இங்கு எந்த பிரச்சனையும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுவது இல்லை.
'ப்ருச்சில்ஸ்' நகரின் சீதோஷ்ண நிலை கடல் பகுதியை ஒத்து உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் (July -August) மாதங்களில் வெப்ப நிலை (Temperature) 22.4°C (72.3°F) வரையிலோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும். ஜனவரி மற்றும் பெப்ருவரி (January and February) மாதங்களில் வெப்ப நிலை குறைந்து 0.7°C (33.3°F) வரை போய்விடும். சில நேரத்தில் அதை விடக் குறைவாகவும் இருக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் ( November and December ) மாதங்களில் மழை (Rain) பெய்யும். பனி பொழிவு (Snow) வருடத்தில் இரண்டு முறை இருந்தால் அதுவே அதிகம்.
கிராண்ட் ப்ளேஸ்
Author: KoS (Creative Commons Attribution 3.0 Unported)

'ப்ருச்சில்ஸ்' செல்ல வேண்டுமா
(Visiting Brussels)

'பெல்ஜியத்தின்' முக்கியமான விமான நிலையம் 'பெல்ஜிய தேசிய அல்லது ஜவேண்டம் விமான நிலையம்' {Brussels National or Zaventem Airport (BRU)} என்பதே. அங்கு  'ப்ருச்சில்ஸ்' ஏர்லைன்ஸ் சேவை உள்ளது. இங்கு பல நாட்டில் இருந்தும் விமானங்கள் வருகின்றன. இல்லை என்றால் கட்டணக் குறைவான விமான சேவை தரும் 'ரைனைர்' (Ryanair) அல்லது 'விசைர்' (Wizzair) போன்ற விமான சேவை மூலம் 'ப்ருச்சில்ஸ் சவுத் சார்லிரோய்' விமான நிலையத்திற்கு ' { Brussels South Charleroi Airport (CRL)} சென்று அங்கிருந்து 'ப்ருச்சில்ஸ்' புறநகர் பகுதியை அடையலாம்.
'ப்ருச்சில்ஸ்' நகரில் மூன்று ரயில் நிலையங்கள் (Three Railway Stations) உள்ளன. அவை 'மிடி ஜுயிட்' (Midi-Zuid), 'சென்றல் -சென்ட்ரால்' ( Central-Centraal) மற்றும் 'நோர்ட் நூர்ட்' (Nord-Noord) என்பன ஆகும். 'ப்ருச்சில்ஸ்'சில் இருந்து ஐரோப்பியாவின் பல நகரங்களுக்கு செல்லும் விரைவு ரயில் (High Speed Trains) இந்த மூன்று ரயில் நிலையங்களில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் நின்று விட்டுப் போகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மியூசி மக்ரேட் மியூசியம் 

'ப்ருச்சில்ஸ்'சை சுற்றிப் பார்க்க
(Exploring Brussels)

'ப்ருச்சில்ஸ்' நகரை நடந்தே சுற்றிப் பார்க்கலாம். அதிக தூரமுள்ள இடங்களை சென்று பார்க்க STIB-MIVB மெட்ரோ ரயில் (Metro Train) சேவை உள்ளது. 1976 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மெட்ரோ சேவை ஆறு தடங்களில் (Six Lines) ஓடுகின்றது. ஒரு பக்க பயணம் அல்லது ஐந்து/ஆறு பக்கப் பயணத்திற்கு ஏற்ப கட்டணங்கள் யூரோ €12.30 என்று உள்ளன . ஒரு நாளைக்கான (1-day pass) மெட்ரோ ரயில் கட்டணம் யூரோ €4.50) மற்றும் மூன்று நாளைக்கான (3-day pass) கட்டணம் யூரோ €9.50 என வசூலிக்கின்றார்கள்.

ப்ருச்சில்ஸ்சில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Brussels, Belgium)
(1) அடோமியும் 
(Atomium)
(2) ஆட்டோவோல்ட்
(Autoworld)
(3) பெல்ஜியம் காமிக் ஸ்ட்ரிப் செனட்டர் 
(Belgium Comic Strip Center)
(4) பவுர்சீ 
(Bourse)
(5) காண்டில்லின் ப்ரேவேர்ரி 
(Cantillon Brewery)
(6) ஐரோப்பியன் பார்லிமென்ட் 
(European Parliament)
(7) கிராண்ட் ப்ளேஸ்
(Grand Place/Grote Markt )
(8) ஹோர்டா மியூசியம் 
(Horta Museum)
(9) மனிக்கேன் பிஸ்
(Manneken Pis)
(10) மினி யுரோப் 
(Mini-Europe)
(11) மியூசி பெல்வ்யூ மியூசியம் 
(Musé BELvue/BELvue Museum)
(12) மியூசி டி எக்ஸ்ட்ரீமி ஓரியன்ட் 
(Musée d'Extrême-Orient/Musea van het Verre Oosten)
(13) மியூசி து சினிமா 
(Musée du Cinéma/Filmmuseum)
(14) மியூசி மேக்ரிட்மியூசியம் 
(Musée Magritte/Magritte Museum)
(15) மியூசி ராயல் டெல லார்மி மியூசியம் 
(Musée Royal de l'Armée/Koninklijk Museum van het Leger en van der Militaire Geschiedenis)
(16) மியூசி ராயலுக்ஸ் டி ஆர்ட் எட் டிஸ்டோரி 
(Musée Royaux d'Art et d'Histoire/Koninklijke Musea voor Kunst en Geschiedenis)
(17) மியூசி ராயலுக்ஸ் டிபியுக்ஸ் ஆர்ட்ஸ் டி பெல்ஜிக்யூ 
(Musée Royaux des Beaux Arts de Belgique/Koninklijke Musea voor Schone Kunsten van België)
(18) மியூசிகல் இன்ஸ்தருமேன்ட்ஸ் மியூசியம் 
(Musical Instruments Museum)
(19) நேஷேனல் சயின்செச்ஸ் மியூசியம் ஆப் பெல்ஜியம் 
(National Sciences Museum of Belgium)
(20) பலைஸ் ராயலே 
(Palais Royale/Koninklijk Paleis)
(21) பார்க் து சின்குயண்டினைர் 
(Parc du Cinquantenaire/Jubelpark)
(22) ராயம் மியூசியம் ஆப் சென்றல் ஆப்ரிக்கா 
(Royal Museum of Central Africa)
(23) ஸ்டேட்ச்யூ ஆப் யூரோப் 
(Statue of Europ )

ப்ருச்சில்ஸ் முனிசிபாலிடிஸ்
(Municipalities of Brussels )
(1) ப்ருச்சில்ஸ்/ லில்லிச்ஸ்- எல்சின்ஸ் 
(Brussels/Ixelles-Elsenes)
(2) ப்ருக்லேஸ்/ ப்ருச்சில்ஸ் 
( Bruxelles/Brussel)
(3) மரோல்லேஸ்/ மரோலேன் 
( Marolles/Marollen )
(4) மோலேன்பீக் / மோலேன்பீக்
( Molenbeek/Molenbeek)
(5) செயின்ட் கில்லெஸ் /சின்ட் கில்லெஸ் 
(Saint-Gilles/Sint-Gillis)
(6) செயின்ட் ஜோஸ்சி /சின்ட் ஜோஸ்ட் 
(St-Josse/Sint-Joost)
(7) உக்கில் / உக்கேல்
(Uccle/Ukkel )
(8) வோலுவீ-செயின்ட்- பிர்ரீ/சின்ட் பீட்டர்ஸ் வோலுவீ 
(Woluwé-Saint-Pierre/Sint-Pieters-Woluwe)
(9) வோலுவீ செயின்ட்- லம்பேர்ட் / சின்ட் லம்ப்ரேட்ஸ் வோலுவீ 
(Woluwé-Saint-Lambert/Sint-Lambrechts-Woluwe)

பெல்ஜியம் - கெண்ட்

பெல்ஜியம் - கெண்ட்
(Read Original Article in :- Ghent

காணட் கனால் அருகில் வீடுகள்

'கெண்ட்' (Dutch: Gent; French: Gand) நகரம் என்பது 'பெல்ஜியத்தின்' (Belgium)  மூன்றாவது பெரிய (third most populous) நகரம்.  இதன் பரப்பளவு  156.18 சதுர கிலோமீட்டர்.  2011 ஆண்டின் கணக்கின்படி இந்த நகரின் ஜனத்தொகை 233,000.  இந்த நகரம்  'ஸ்செல்டட்' (Scheldt ) மற்றும் 'லைஸ்' (Lys)  நதிகள் இணையும் (confluence) இடத்தில் உள்ளது.  உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட {(Coordinated Universal Time (UTC+1)} இந்த நகரின் நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாகவே  உள்ளது. அதேபோல வெயில் காலத்தில் இரண்டு மணி நேரம் அதிகமாக உள்ளது.  சர்வதேச தொலைபேசி எண்  கோட் : 09.
 சின்ட் -மிச்சிஎல்ஸ்ப்ருக்  எனும் இடத்தில் இருந்து
பார்த்தால் தெரியும் சின்ட் -நிக்லாஸ்கெர்க்

'கெண்ட்' நகரசபையில் (Municipality) 'கெண்ட்' நகரை தவிற  'அப்ஸ்ணீ' (Afsnee), 'டேஸ்டேல்டோன்க்' (Desteldonk), 'துரோன்ஜென்' (Drongen), 'ஜென்ட்ப்ருகீ' (Gentbrugge), 'லிடிபெர்க்' (Ledeberg), 'மரியாகெர்கீ' (Mariakerke), ' மென்டோன்க்' (Mendonk), 'ஓஸ்டேகர்' (Oostakker), 'சின்ட் அமாண்ட்ஸ்பெர்க்' (Sint-Amandsberg), 'சின்ட் டேனிஜ்ஸ் வெஸ்டெம்' (Sint-Denijs-Westerm), 'சின்ட் க்ருஸ் வின்கேல்' (Sint-Kruis-Winkel), 'வொண்டேல்ஜெம்' (Wondelgem) மற்றும் 'ஜிவிஜ்னார்டி' (Zwijnaarde) போன்றவை உள்ளன.  'கெண்ட்' நகரசபையின் ஜனத்தொகை 600,000 . ஆக இது 'பெல்ஜியத்தின்' நான்காம் அதிக எண்ணிக்கை (fourth most populous) உள்ள மக்களைக் கொண்ட சிறு நகரமாக உள்ளது.  இங்குதான் உலகிலேயே மிக அதிகமாக நடந்து செல்லும் மக்கள் (pedestrian) உள்ளார்கள் என்கிறார்கள் (வாகனம் இல்லை?)
'செல்டிக்' (Celtic) மொழியில் 'கெண்ட்' என்றால்  சங்கமம் (Confluence) என்று பொருள். இந்த நகரம் இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ளதினால் அந்தப் பெயர் வந்துள்ளது. கற்காலம் தொட்டு (Stone Age) இங்கு மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்கள்.  இந்த இடத்தில்  'ரோமானியர்கள்' (Romans) முதல் 'ப்ராங்க்ஸ்' (Franks) எனப்படும் இனத்தவர்வரை வாழ்ந்து உள்ளார்கள். ஆனால் அது பற்றிய சரித்திரக் குறிப்புக்கள் (Documented History) அதிகம் கிடைக்கவில்லை.
சின்ட் -பீட்டர்ஸ்கேர்க்

AD 650 ஆம் ஆண்டில் 'செயின்ட் அமான்ட்' (Saint Amand) என்பவர் நிறுவிய இந்த நகரம் 'செயின்ட் பீட்டர் அப்பே' (Saint Peter Abbey) மற்றும் 'செயின்ட் பாவோஸ் அப்பே' (St. Bavo's Abbey)  என்பவர்களால் மேலும் வளர்ச்சி பெற்றது.  851 மற்றும்  879 ஆண்டுகளில்  இந்த நகரை 'விகிங்' (Viking) என்பவர்கள் கொள்ளையடித்து நாசப்படுத்தினார்கள். ஆகவே 12 ஆம் நூற்றாண்டில் இந்த நகரை  மீண்டும்  மேம்படுத்தினார்கள். இது 'லண்டன்' (London) மற்றும் 'மாஸ்கோ' (Moscow) நகரங்களை விடப் பெரியதாக  என்றாலும்   'பாரிஸ்' (Paris) நகருக்கு அடுத்த பெரிய  நகரமாகவே   ஐரோப்பியாவில் விளங்கியது.
கெண்ட் மாதா கோவில் மணிக் கூடு கோபுரம்

கம்பளி மற்றும் கம்பளம் (Wool) போன்ற தொழில்சாலைகள் இங்கு பெருமளவில் வளர்ந்தன. ஆனால்  1337-1453 வரை நூறு ஆண்டுகளாக நடந்த யுத்தங்களினால் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் வீழ்ந்தது.  யுத்தங்களுக்குப் பின்னர்  மீண்டும் இந்த நகரம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் இதன் அரசியல் மற்றும் பொருளாதார மையங்கள்  'ப்லாண்டேர்ச்ஸ்' (Flanders) (இன்றைய 'கெண்ட்' மற்றும் 'ப்ருக்கேச்ஸ்' எனும் இடங்கள் அடங்கியது) மற்றும் 'ப்ரபாந்து' (Brabant ) (இன்றைய 'ஆண்ட்வெர்ப்' மற்றும் 'ப்ருச்சில்ஸ்' அடங்கியது ) எனும் பகுதிகளுக்கு சென்றன.
'கெண்ட்' நகரில் பிறந்தாலும் 'சார்லஸ் V' (Charles V) என்பவர் ரோம பேரரசின் (Roman Empire) மற்றும் ஸ்பெயின் (Spain)  நாட்டு மன்னனாகவும் ஆனார். 1539 ஆம் ஆண்டு எழுந்த கெண்ட் கிளர்ச்சியை (Revolt) அவர் ஈவு இறக்கம் இன்றி (Dealt mercilessly) அடக்கி ' செயின்ட் பிரேவோ அப்பேயை' தரைமட்டமாக்கி அங்கு 'ஸ்பானிய' படையினர் (Spanish troops) பாதுகாப்பில் இருக்க ஒரு  கோட்டையைக் (Fortress) கட்டினார்.
இன்று 'கெண்ட்' நகரம் தனது பழைய தன்மையை பாதுகாத்து வைத்துக்  கொண்டு (Preserved)  உள்ளது. இங்கு பல தேவாலயங்களும் (Churches)  கன்னிகாஸ்திரீ (nuns) ஆகாமலேயே சன்யாசிகளாக இறை பணியில் ஈடுபட்டு வந்திருந்த இருந்த இளம் பெண்கள் பயன்படுத்தி வந்த தங்கும் இடங்கள்  (béguinages) உள்ளன.

கெண்ட் நகருக்கு  செல்ல வேண்டுமா
(Visiting Ghent )
'ப்ருச்சில்ஸ்' (Brussels) நகரில் இருந்து அரை மணி நேரத்தில் (Half an hour) இங்கு செல்ல ரயில்கள் உள்ளன. அங்கிருந்து கிளம்பி  'ஜென்ட்-சின்ட்- பீட்டர்ஸ்' ரயில் நிலையத்துக்குச் (Gent-Sint Pieters Railway Station) சென்று இறங்கிக் கொண்டு அங்கிருந்து நகருக்குள் ட்ராம் (Tram) வண்டியில் பயணிக்க வேண்டும்.
கரைவேன்ஸ்டீன் கோட்டை

உள்ளூரில் பயணிக்க
(Exploring Ghent )
இந்த நகருக்குள் உள்ள அனைத்தையும் நடந்து சென்றே பார்க்க முடியும். இல்லை என்றால் ஒரு இரு சக்கர சைக்கிளை (Bi Cycle)  வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் ட்ராம் செல்லும் பாதையில் புதைகப்பட்டு உள்ள தண்டவாளங்கள் (Tracks) மற்றும் சாலைகள்  மேடு பள்ளமாக உள்ளதினால் சைக்கிளை ஜாக்கிரதையாக ஓட்டிச் செல்ல வேண்டும்.

கெண்ட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Ghent)
(1) பெல்போர்ட்
(Belfort)
(2) டிசைன் மியூசியம் கெண்ட்
(Design Museum Gent)
(3) துள்ளி கிரைட்
(Dulle Griet)
(4) கிரேஸ்லி மற்றும் கொரேன்லை
(Graslei and Korenlei)
(5) க்ரூட் விஷுலிஸ்
(Groot Vleeshuis)
(6) ஹெட் க்ரேவேன்ஸ்டீன்
(Het Gravensteen)
(7) ஹெட் ஹுயிச்ஸ் வான் அலிஜின்
(Het Huis van Alijn)
(8) கலன் பெகேன்ஹோல்ப்
(Klein Begijnhof)
(9) மியூசியம் வோர் ஷோன் குன்ஸ்டேன்
(Museum voor Schone Kunsten)
(10) சின்ட் பாப்ஸ்கதீட்ரல்
(Sint-Baafskathedraal)
(11) சின்ட் நிக்லாஸ்கேர்க்
(Sint-Niklaaskerk)
(12) ஸ்டாட்டுயிச்ஸ்
(Stadhuis)
(13) ஸ்டாட்ஸ்மியூசியம் கெண்ட்
(Stadsmuseum Gent)
(14) ஸ்டெடில்ஜெக் மியூசியம் வூர் அக்சுயெல்லி குன்ஸ்ட் 
(Stedelijk Museum voor Actuele Kunst)
(15) வ்லாம்ஸ்சே ஒபேரா
(Vlaamse Opera)