துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 23, 2011

புர்கினா பாசோ - சுற்றுப் பயண குறிப்புகள்

புர்கினா பாசோ சுற்றுப்  பயண குறிப்புகள் 
(Read Original Article in :- Burkina Faso)புர்கினா பாசோவில் உள்ள சின்தவ் எனும் இடத்தில் இயற்கையாக
அமைந்து உள்ள கல்பாறையின் காட்சி

Author: Stefan Dressler (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

மத்திய மேற்கு ஆப்ரிக்காவில் (central-western Africa ) உள்ளதே 'புர்கினா பாசோ'  (Burkina Faso) .  இதன் எல்லை வடக்கில் 'மாலி' (Mali) , தென் கிழக்கில் 'பெனின்' (Benin) , தென் கிழக்கில் 'கோடி டெல்வோரே' (Côte d'Ivoire ) , கிழக்கில் 'நைஜெர்'  (Niger)  மற்றும் தெற்கில்  'டோகோ'  (Togo) மற்றும் 'கானா' (Ghana) போன்ற நாடுகளுடன் உள்ளன. இந்த நாட்டின் பரப்பளவு    274,200 சதுர கிலோமீட்டர்  (105,869 சதுர மைல் ) . நாட்டின் ஜனத்தொகை 15.8 மில்லியன்  (2011 கணக்கின்படி ). நாட்டின் தலை நகரம் 'ஒகாடவுகவ்' (Ouagadougou)
இந்த நாட்டை நிர்வாகிப்பது ஜனாதிபதி (President) மற்றும் பிரதம மந்திரி (Prime Minister)  ஆவர். வண்டிகளை சாலையின் வலது புறமாக ஓட்ட வேண்டும். மின்விசை அளவு 220V 50Hz , ஆனால் இங்கு ஐரோப்பிய பாணி  மின்செருகிகளைதான் (Plug) பயன்படுத்த முடியும். இந்த நாட்டின் சர்வதேச தொலைபேசி எண்  கோடு+226.  நாட்டின் நாணயம் மேற்கு ஆப்ரிக்காவின் (West African )  நாணயமான CFA (XOF) என்பதே.

டேனகவ்ரவ்  மலையில் பண்டை காலத்தைய வீடு
Author: Marco Schmidt (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

2009 ஆம் ஆண்டு கணக்கின்படி நாட்டின் GDP  $8.105 பில்லியன் , தனி நபர் வருமானம்  $1,314. தேசிய மொழி 'பிரெஞ்ச்' (French) என்றாலும் சுமார் 90 % சதவிகித மக்கள் உள்ளூர் மொழிகளையே (Indegenous Languages) பேசுகிறார்கள். 14,000 BC ஆண்டிலேயே இங்கு மனிதர்கள் இருந்து உள்ளார்கள். 16 ஆம் நூற்றாண்டில் 'வகடகோ' (Wagadogo) என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய தலை நகரான 'ஒகாடவுகவ்'  மற்றும் 'யடிங்கா' ( Yatenga ) என்பதை 'மோச்சி' என்ற (Mossi) பிரிவினர் ஆண்டு வந்தார்கள். 1896 ஆம் ஆண்டு அவர்களை துரத்தி விட்டு  'பிரெஞ்ச்' நாட்டினர் இந்த  இடத்தைப் பிடித்துக் கொண்டார்கள்.
1915 -16 ஆம் ஆண்டுகளில் 'பிரெஞ்ச்' குடியேற்ற (Colonial) அரசின் எதிராக ஆயுதங்களை (Armed Revolt) ஏந்திய  புரட்சி நடந்தது. பல முறை அந்த யுத்தத்தில் 'பிரெஞ்ச்' நாட்டினர் தோல்வி அடைந்தாலும் முடிவாக அவர்களே ஆட்சியை பிடித்துக் கொண்டார்கள். 1919 ஆம் ஆண்டு 'பிரெஞ்ச்' நாட்டினரின் அதிக அதிகாரம்  கொண்ட நிர்வாகத்தை  அமைத்து  நிறுவி, வரும் காலத்தில் அப்படிப்பட்ட புரட்சிகள் எழாமல் (Future Uprising) இருக்க தேவையான அனைத்தையும் செய்தார்கள். பின்னர் 1932 ஆம் ஆண்டில் இந்த நாட்டை மூன்று பகுதிகளாக பிரித்து அவற்றை 'பிரெஞ்ச்' நாட்டை சேர்ந்த 'சூடான்'  (Sudan), 'நைஜெர்'  (Niger) மற்றும் 'கோடி டெல்வோரே'  என்ற நாடுகள் தம் நாடுகளுடன் இணைத்துக் கொண்டார்கள். 
பன்போரா நீர் வீழ்ச்சி
Author: Marco Schmidt (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

இரண்டாம் உலக யுத்தம் ( World War II) முடிந்ததும் மீண்டும் அந்த நாட்டின் அரசை  நேரடியாக 'பிரெஞ்ச்' அரசு எடுத்துக் கொண்டது. 1958 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் பதினோராம் (11) தேதி அதை அதிக அதிகாரம் படைத்த 'பிரெஞ்ச்' நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்கள் என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் அதாவது  1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் (August) மாதம் ஐந்தாம் தேதி அந்த நாடு முழு சுதந்திரம் (Independence)  அடைந்தது.  
'ஆப்ரிக்காவில்' (African Countries)  இருந்த பல நாடுகளைப் போலவே இந்த நாட்டிலும் சிறிது காலம் அரசாங்கத்தின் நிலையற்ற தன்மை (Instability) , கிளர்ச்சி (Coup) போன்றவை நடந்து கொண்டே இருந்தன. நடந்தேறிய அரசியல் கிளர்ச்சியில் 'தளபதி  சங்கரா' (Captain Sankara) என்பவர் 1983 ஆம் ஆண்டு அந்த நாட்டின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு நடந்த கிளர்ச்சியில்  அவர் கைது செய்யப்பட்டாலும், சில மாதங்களிலேயே  மீண்டும் அவர் ஆட்சியை பிடித்தார். 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட்(August) மாதம் 4 காம் தேதியன்று அந்த நாட்டின் பெயரை 'தூய்மையானவர்கள்  உள்ள நாடு' (Land Of Honest People)  என்ற அர்த்தத்தை தரும் 'புர்கினா பாசோ' எனப் பெயரிட்டார். அதன் பின் நடைபெற்ற புரட்சியில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர்  (October) மாதம் 15 ஆம் தேதி அவர் கொல்லப்பட்டார். அவர் உடலை பல துண்டுகளாக வெட்டி (dismembered) எறிந்து  அழித்தார்கள். அவருடைய குடும்பத்தினர் தப்பி ஓடினார்கள். இன்று அந்த நாடு ஏழ்மை நிலையில் உள்ள நாடாக உள்ளது. அரசியல் ஸ்திரத் தன்மை இல்லை. ஆனாலும் இந்த நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு  எந்தப் பிரச்சனையும் இல்லை.
இந்த நாட்டிற்குச் செல்ல விசா (Visa) தேவை. இங்கு செல்ல வேண்டும் எனில் அந்த நாட்டின் தலைநகரமான  'ஒகாடவுகவ்'வில்  உள்ள விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து ஊருக்குள் செல்லலாம். 'ஏர் புர்கினா' (Air Burkina)  என்ற தேசிய விமான சேவை நல்ல விமானங்களை இயக்குகின்றது. விமான நிலையத்தில் உள்ள இராணுவத்தினரே உங்கள் பெட்டிகளை  தூக்கிக் கொண்டு செல்ல உதவுவார்கள். அதைக் கண்டு வியப்படைய வேண்டாம். அதற்கான கட்டணமாக அவர்களுக்கு  பெட்டி ஒன்றுக்கு  US$1 பணம் தரவேண்டும்.
கோரம் கோரம் கடைவீதியில் விற்பனைக்கு
சோங்கே  எனும் மண் பானைகள்

Author: C. Hugues (Creative Commons Attribution 2.0 Generic)
 


நாட்டின் மிகப் பெரிய நகரங்கள்
(Major Cities in Burkina Faso)
(1) ஒகாடவுகவ்  -தலை நகர்
(Ouagadougou - capital)
(2) பான்பாரோ
(Banfora )
(3) போபோ டவ்லஸ்சோ
(Bobo-Dioulasso)
(4) டிடவ்கோ
(Dédougou )
(5) கவ்வா
(Gaoua)
(6) கொவ்டவ்கோ
(Koudougou)
(7) ஒவ்ஹிகவ்யா 
(Ouahigouya)

புர்கினா பாசோவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Burkina Faso)
(1) W நேஷனல் பார்க்
(W National Park)

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Burkina Faso )
லோரோபினி சிதைவு மையம்
(Ruins of Loropéni (2009)

No comments:

Post a Comment