துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 2, 2011

இத்தாலி - குறைந்த கட்டண ஹாஸ்டல்கள், விடுதிகள்

குறைந்த கட்டண  ஹாஸ்டல்கள், விடுதிகள் 
(Read Original Article in :-Budget Accomodation in Italy)

‘இத்தாலி’யில் (Italy) ஹாஸ்டல்களும் (Hostels) தங்கும் விடுதிகளும் (Guest Houses) நிறையவே உள்ளன. அங்கு குறைந்தக் கட்டணங்களில் (low budget) சுற்றுலாப் பயணிகளுக்கு அறைகள் வாடகைக்குக் கிடைக்கும். சில இடங்களில் நாள் ஒன்றுக்கு (Per Night) €12 கட்டணத்தில் அறைகள் கிடைக்கும். அப்படிப்பட்ட இடங்களின் அறைகளின் கட்டணங்கள் 'பென்சியோனி' (Pensinios) போன்றவற்றை விட குறைவாகவே இருக்கும். ஆனால் அந்த இடங்களில் உள்ள ஒரே ஒரு குறை என்ன பலர் தங்கும் ஒரே அறையில் (in a single-sex dormitory) தனித்தனிக் கட்டிலில் (Bed) தங்கும் பயணிகள் தாம் குளிக்க காத்து (wait for his turn) இருக்க வேண்டும். காரணம்  குளியல் அறைகள் அனைவருக்கும் தனித்தனியாக இருக்காது.
அப்படிப்பட்ட தங்கும் இடங்களில் தனித்தனியான அறைகளும் வாடகைக்குக் கிடைக்கும். ஆனால் அவற்றிலும் பல இடங்களில் தனி குளியல் அறை வசதிகள் இருக்காது. நீங்கள் அப்படிப்பட்ட தங்கும் இடங்களின் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள AIG எனும் 'இளைஞ்சர்கள் ஹாஸ்டல் சங்கத்தை' (International Youth Hostel Association) தொடர்புக் கொள்ளவும் . அந்த இணைய தளம் செல்ல AIG மீது கிளிக் செய்யவும்.
நீங்கள் இணையத்தளம் மூலம் ‘இத்தாலி’யில் கிடைக்கும் பல ஹாஸ்டல்களின் விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதில் உள்ள  விவரத்தைப் பார்த்து உங்களுக்குத் தேவையான இடத்தை முன் பதிவு செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட இடங்களின் விவரங்களை அறிய ஹாஸ்டல்ஸ் இன் இத்தாலி (Hostels in Italy) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment