துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 30, 2011

பெல்ஜியம் - ப்ருச்சில்ஸ்

பெல்ஜியம் - ப்ருச்சில்ஸ்  
(Read Original Article in :- Brussels

View of Brussels from the Atomium
அட்டோமியம் என்ற பகுதியில் இருந்து ப்ருச்சில்ஸ்
Author: Wouter Hagens (Creative Commons Attribution 3.0 Unported)
'பெல்ஜியத்தின்' (Belgium) தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரமே'ப்ருச்சில்ஸ்' (Brussels). கம்யூன்ஸ் (communes) அல்லது ஜெமெண்டீன் (gementeen) எனப்படும் 19 நகரசபைகளை உள்ளடக்கிய நகரம் இது. இந்த நகரத்தின் பரப்பளவு 161.4 சதுர கிலோமீட்டர். (62.2 சதுர மைல்). நகரின் ஜனத்தொகை 1.83 மில்லியன் (2011 கணக்கின்படி ). இதன் நேரம் மத்திய ஐரோபியாவின் ஒன்றுபட்ட நேர கணக்கை (Coordinated Universal Time) விட ஒரு மணி நேரம் அதிகமாகவும் வெய்யில் காலத்தில் இரண்டு மணி நேரம் அதிகமாகவும் உள்ளது.
மேலும் இந்த நகரம் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளின் தலை நகரமும் ஆகும். இது 'பிரேஞ்ச் ' (France) நாட்டினர் அதிகம் உள்ள இடம். 'ப்ருச்சில்ஸ்' தலைநகரப் பகுதியில் நவீன 'ப்ருச்சில்ஸ்' (Modern city) என்ற நகரப் பகுதி 1989 ஆம் ஆண்டு ஜூன் (June) மாதம் 18 ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது.
 
பிலேஸ் டி அல்பேண்டைன் 

இந்த நகரத்தின் பெயர் சதுப்பு நிலத்தில் உள்ள நகரம். இந்தப் பெயர் டட்ச் (Dutch) மொழியில் சதுப்பு நிலத்தைக் குறிக்கும் 'ப்ரோக்செல்' (Broeksel) என்ற சொல்லில் இருந்து வந்ததாம். 'ப்ருச்சில்ஸ்' நகரம் பத்தாம் நூற்றாண்டில் (10th Century) அதாவது அதிகாரபூர்வமாக AD 979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த ஆண்டில்தான் 'கீழ் லோதரிஞ்சியா' (Lower Lotharingia) பகுதியை சேர்ந்த டியூக் சார்லஸ் (Duke Charles) என்ற இளவரசர் செயின்ட் கெளஜெரிகுஸ் தேவாலயத்தின் (Saint Gaugericus Chapel) 'செயின்ட் குடுலா' (St Gudula) என்பவறின் நினைவுச் (Relics) சின்னங்களை அங்கு கொண்டு வந்து வைத்து அந்த நகரைப் பாதுகாக்க பலமான படையை அமைத்தார். 'ப்ருச்சில்ஸ்' விரைவாக வளர்ந்து பெரிய நகரமாக மாறியதுடன் அந்த நகரை பாதுகாக்க (To Fortify) இன்னொரு பாதுகாப்பு அரணை அமைக்க வேண்டி இருந்தது. இன்று அந்தப் பகுதிகளை சுற்றி பொது மைய வளைய சாலைகள் (Ring Roads) அமைக்கப்பட்டு உள்ளன.
கதீத்ரலே செயிண்ட்ஸ் -மிசேல்-எட்-குடுலி
Author: Prosopee (Creative Commons Attribution 3.0 Unported)

'ப்ருச்சில்ஸ்' நகரில் அதிகாரபூர்வமாக இரண்டு மொழிகள் (Bi Lingual) நடைமுறையில் உள்ளன. அங்குள்ளவர்களில் 80 % மக்கள் பிரென்ச் (French) மொழியையும் 20 % மக்கள் டட்ச் (Dutch)  மொழியையும் பேசுகிறார்கள். இங்கு பேசப்படும் பிரென்ச் மொழி உண்மையான பிரென்ச் (Standard French) மொழியுடன் ஒத்து உள்ளது,  ஆனால் டட்ச் மொழி  உண்மையான டட்ச் (Standard Dutch) மொழியுடன் சிறிது மாறுபட்டு உள்ளது. இருந்தாலும் இந்த நகரில் உள்ளவர்கள் பலரும் ஆங்கில மொழியையும் அறிந்து உள்ளதினால் ஆங்கிலம் தெரிந்தால் இங்கு எந்த பிரச்சனையும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுவது இல்லை.
'ப்ருச்சில்ஸ்' நகரின் சீதோஷ்ண நிலை கடல் பகுதியை ஒத்து உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் (July -August) மாதங்களில் வெப்ப நிலை (Temperature) 22.4°C (72.3°F) வரையிலோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும். ஜனவரி மற்றும் பெப்ருவரி (January and February) மாதங்களில் வெப்ப நிலை குறைந்து 0.7°C (33.3°F) வரை போய்விடும். சில நேரத்தில் அதை விடக் குறைவாகவும் இருக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் ( November and December ) மாதங்களில் மழை (Rain) பெய்யும். பனி பொழிவு (Snow) வருடத்தில் இரண்டு முறை இருந்தால் அதுவே அதிகம்.
கிராண்ட் ப்ளேஸ்
Author: KoS (Creative Commons Attribution 3.0 Unported)

'ப்ருச்சில்ஸ்' செல்ல வேண்டுமா
(Visiting Brussels)

'பெல்ஜியத்தின்' முக்கியமான விமான நிலையம் 'பெல்ஜிய தேசிய அல்லது ஜவேண்டம் விமான நிலையம்' {Brussels National or Zaventem Airport (BRU)} என்பதே. அங்கு  'ப்ருச்சில்ஸ்' ஏர்லைன்ஸ் சேவை உள்ளது. இங்கு பல நாட்டில் இருந்தும் விமானங்கள் வருகின்றன. இல்லை என்றால் கட்டணக் குறைவான விமான சேவை தரும் 'ரைனைர்' (Ryanair) அல்லது 'விசைர்' (Wizzair) போன்ற விமான சேவை மூலம் 'ப்ருச்சில்ஸ் சவுத் சார்லிரோய்' விமான நிலையத்திற்கு ' { Brussels South Charleroi Airport (CRL)} சென்று அங்கிருந்து 'ப்ருச்சில்ஸ்' புறநகர் பகுதியை அடையலாம்.
'ப்ருச்சில்ஸ்' நகரில் மூன்று ரயில் நிலையங்கள் (Three Railway Stations) உள்ளன. அவை 'மிடி ஜுயிட்' (Midi-Zuid), 'சென்றல் -சென்ட்ரால்' ( Central-Centraal) மற்றும் 'நோர்ட் நூர்ட்' (Nord-Noord) என்பன ஆகும். 'ப்ருச்சில்ஸ்'சில் இருந்து ஐரோப்பியாவின் பல நகரங்களுக்கு செல்லும் விரைவு ரயில் (High Speed Trains) இந்த மூன்று ரயில் நிலையங்களில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் நின்று விட்டுப் போகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மியூசி மக்ரேட் மியூசியம் 

'ப்ருச்சில்ஸ்'சை சுற்றிப் பார்க்க
(Exploring Brussels)

'ப்ருச்சில்ஸ்' நகரை நடந்தே சுற்றிப் பார்க்கலாம். அதிக தூரமுள்ள இடங்களை சென்று பார்க்க STIB-MIVB மெட்ரோ ரயில் (Metro Train) சேவை உள்ளது. 1976 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மெட்ரோ சேவை ஆறு தடங்களில் (Six Lines) ஓடுகின்றது. ஒரு பக்க பயணம் அல்லது ஐந்து/ஆறு பக்கப் பயணத்திற்கு ஏற்ப கட்டணங்கள் யூரோ €12.30 என்று உள்ளன . ஒரு நாளைக்கான (1-day pass) மெட்ரோ ரயில் கட்டணம் யூரோ €4.50) மற்றும் மூன்று நாளைக்கான (3-day pass) கட்டணம் யூரோ €9.50 என வசூலிக்கின்றார்கள்.

ப்ருச்சில்ஸ்சில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Brussels, Belgium)
(1) அடோமியும் 
(Atomium)
(2) ஆட்டோவோல்ட்
(Autoworld)
(3) பெல்ஜியம் காமிக் ஸ்ட்ரிப் செனட்டர் 
(Belgium Comic Strip Center)
(4) பவுர்சீ 
(Bourse)
(5) காண்டில்லின் ப்ரேவேர்ரி 
(Cantillon Brewery)
(6) ஐரோப்பியன் பார்லிமென்ட் 
(European Parliament)
(7) கிராண்ட் ப்ளேஸ்
(Grand Place/Grote Markt )
(8) ஹோர்டா மியூசியம் 
(Horta Museum)
(9) மனிக்கேன் பிஸ்
(Manneken Pis)
(10) மினி யுரோப் 
(Mini-Europe)
(11) மியூசி பெல்வ்யூ மியூசியம் 
(Musé BELvue/BELvue Museum)
(12) மியூசி டி எக்ஸ்ட்ரீமி ஓரியன்ட் 
(Musée d'Extrême-Orient/Musea van het Verre Oosten)
(13) மியூசி து சினிமா 
(Musée du Cinéma/Filmmuseum)
(14) மியூசி மேக்ரிட்மியூசியம் 
(Musée Magritte/Magritte Museum)
(15) மியூசி ராயல் டெல லார்மி மியூசியம் 
(Musée Royal de l'Armée/Koninklijk Museum van het Leger en van der Militaire Geschiedenis)
(16) மியூசி ராயலுக்ஸ் டி ஆர்ட் எட் டிஸ்டோரி 
(Musée Royaux d'Art et d'Histoire/Koninklijke Musea voor Kunst en Geschiedenis)
(17) மியூசி ராயலுக்ஸ் டிபியுக்ஸ் ஆர்ட்ஸ் டி பெல்ஜிக்யூ 
(Musée Royaux des Beaux Arts de Belgique/Koninklijke Musea voor Schone Kunsten van België)
(18) மியூசிகல் இன்ஸ்தருமேன்ட்ஸ் மியூசியம் 
(Musical Instruments Museum)
(19) நேஷேனல் சயின்செச்ஸ் மியூசியம் ஆப் பெல்ஜியம் 
(National Sciences Museum of Belgium)
(20) பலைஸ் ராயலே 
(Palais Royale/Koninklijk Paleis)
(21) பார்க் து சின்குயண்டினைர் 
(Parc du Cinquantenaire/Jubelpark)
(22) ராயம் மியூசியம் ஆப் சென்றல் ஆப்ரிக்கா 
(Royal Museum of Central Africa)
(23) ஸ்டேட்ச்யூ ஆப் யூரோப் 
(Statue of Europ )

ப்ருச்சில்ஸ் முனிசிபாலிடிஸ்
(Municipalities of Brussels )
(1) ப்ருச்சில்ஸ்/ லில்லிச்ஸ்- எல்சின்ஸ் 
(Brussels/Ixelles-Elsenes)
(2) ப்ருக்லேஸ்/ ப்ருச்சில்ஸ் 
( Bruxelles/Brussel)
(3) மரோல்லேஸ்/ மரோலேன் 
( Marolles/Marollen )
(4) மோலேன்பீக் / மோலேன்பீக்
( Molenbeek/Molenbeek)
(5) செயின்ட் கில்லெஸ் /சின்ட் கில்லெஸ் 
(Saint-Gilles/Sint-Gillis)
(6) செயின்ட் ஜோஸ்சி /சின்ட் ஜோஸ்ட் 
(St-Josse/Sint-Joost)
(7) உக்கில் / உக்கேல்
(Uccle/Ukkel )
(8) வோலுவீ-செயின்ட்- பிர்ரீ/சின்ட் பீட்டர்ஸ் வோலுவீ 
(Woluwé-Saint-Pierre/Sint-Pieters-Woluwe)
(9) வோலுவீ செயின்ட்- லம்பேர்ட் / சின்ட் லம்ப்ரேட்ஸ் வோலுவீ 
(Woluwé-Saint-Lambert/Sint-Lambrechts-Woluwe)

No comments:

Post a Comment