துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 23, 2011

புருண்டி - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

புருண்டி சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read Original Article in :- Burundi )

மத்திய ஆப்ரிக்காவின் (Central Africa) ஒரு குடியரசு நாடே 'புருண்டி' (Burundi). இதன் எல்லைகள் வடக்கில் ரவாண்டா (Rwanda), தெற்கு மற்றும் கிழக்கில் டான்சநீயா (Tanzania) மட்டும் மேற்கில் காங்கோ ஜனநாயக நாட்டுடன் (Democratic Republic of the Congo) உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 28,000 சதுர கிலோமீட்டர் மற்றும் ஜனத்தொகை 8.7 மில்லியன் (2011 ஆண்டு கணக்கின்படி ).
தன்கன்யிகாவில் மீன் பிடிப்பவர்கள்
Author: FRANCESCA ANSALONI (Creative Commons Attribution 2.0 Generic)

உலகின் பத்து (Top ten)  மிக ஏழ்மை நிலையில் (poorest) உள்ள நாடுகளில் 'புருண்டி'யும் ஒன்று. இந்த நாட்டின் GDP என்பது US $1.321 பில்லியன்  (2009 கணக்கின்படி ) மற்றும் தனிநபர் வருமானம்  GDP என்பது US $162 (2009 கணக்கின்படி ). இந்த நாடு உள்நாட்டு யுத்தம் (civil wars), ஊழல் (corruption), மிக அதிகமான ஜனத்தொகை  (large population) மற்றும்  HIV/AIDS போன்ற வியாதிகளினால் அவதிப்பட்டு உள்ளது. அவைகளே இந்த நாட்டின் ஏழ்மை  நிலைக்குக் காரணம்.   62% மக்கள் ரோமன் கத்தோலிகர்கள் ( Roman Catholic), 8%-10% மக்கள் முஸ்லிம்கள் (Muslims), மற்றவர்கள் உள்நாட்டு மதம் அல்லது கிருஸ்துவர்கள். 
முதலாம் உலக யுத்தத்தின்போது இந்த நாடு 'ஜெர்மனியை' (Germany)  சேர்ந்த 'கிழக்கு ஆப்ரிக்காவுடன்' (East Africa) இருந்தது.  அதற்குப் பின் இந்த நாட்டை 'ஜெர்மானியர்கள்' (Germany) 'பெல்ஜியத்துடன்'  (Belgium)  இணைக்குமாறு  கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அது 'ருவாண்டா உருண்டி' (Ruvanda -Urundy) என  மன்னர்கள் வம்ச (kingship dynasty) ஆட்சிமைக்கு கீழ் வந்தது.
 புருண்டி நேஷனல் பார்க்கில் கடல் யானைகள்
  
'ரவாண்டாவை' (Rawanda) சேர்ந்த 'ஹுடு' (Hutu) எனும் மலைவாழ் பிரிவினர் 'துட்சீ' (Tutsi) எனும் மலை வாழ் மக்களை (Tribes) துன்புறுத்தத்தி 1959 ஆம்   ஆண்டு ஏற்பட்ட பெரும் கலவரத்தில் 'துட்சிஸ்' மக்களை பாடுகொலை செய்தார்கள் என்பதற்காக 1959 ஆம் ஆண்டு ஜனவரி ( January) 20 ஆம்  தேதியன்று 'புருண்டி'யின் 'மாவ்மி மாவ்ம்புட்சா IV' (Burundi Mwami Mwambutsa IV) என்பவர்  'பெல்ஜிய' குடியேற்ற நாட்டு அமைச்சரிடம் 'ருவாண்டா' மற்றும் 'உருண்டியை' இரண்டு பகுதிகளாகப் பிரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கேற்ப 1962 ஆம்   ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று 'புருண்டி' சுதந்திரம் அடைந்தது.   'மாவ்மி மாவ்ம்புட்சா IV 'புருண்டியின்' மன்னராக ஆனார்.  'ருவான்ட் - புருண்டி' (Ruand-Urundi ) என்றப் பெயர் 'புருண்டி' என  ஆயிற்று.
அதற்கு  ஒரு  மாதத்துக்குப் பிறகு அந்த நாடு உலக நாடுகளின் சபையில் அங்கத்தினராக ஆயிற்று.  நாட்டில் அடிக்கடி சண்டையில் ஈடுபட்ட மலை வாழ் மக்களின் கிளர்ச்சியினால் (coups ) பலர் கொல்லப்பட்டார்கள்.
இன்று 'புருண்டி' ஏழ்மை நிலையில் முன்னேற்றம் அடையாத நாடாகவே உள்ளது. குழப்பமான அரசியல்  நிலைமை நிலவுகின்றது. ஆகவே அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும் அந்த நாட்டின் பண்பாட்டுச் சூழ்நிலையை நல்ல முறையில் வைத்துக் கொண்டு உள்ளதால் அங்குள்ள  பண்டைக் கால  நடனம் (traditional dances) மற்றும் கைவேலைக் கலைகளும் (handicrafts) பார்க்க வேண்டியவையாக உள்ளன.
 புருண்டி நாட்டின்  தலைநகரமான புஜும்பரா

'புருண்டி'யின் சீதோஷ்ண நிலை வெப்ப மண்டல நிலையில் உள்ளது. அங்கு வெப்ப நிலை 20°C செல்கின்றது . 'தன்கன்யிகா' எனும் ஏரியின் (Lake Tanganyika)  கரைகளில்  வெப்ப  நிலை  23°C யாக இருக்கையில் மலைகள் மீது  அதே சமயத்தில் வெப்ப நிலை 16°C என்ற அளவில் இருக்கும் . அந்த நாட்டின் தலை நகரம் மற்றும் பெரிய நகரமே 'புஜும்புராதான்' (Bujumbura). இந்த நகரம் 16 மாகாணங்களைக் கொண்டது.     

'புருண்டிக்குச்' செல்ல வேண்டுமா 
(Going to Burundi )
புருண்டிக்கு செல்லும் அனைவருமே விசா (Visa)  வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால்  உகாண்டா (Uganda ) நாட்டினருக்கு விசா  தேவை இல்லை.  விசாவிற்கு கட்டணமாக US $ 80 செலுத்த வேண்டும். அந்த நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அங்கேயே சென்று விசாவை பெற்றுக் கொள்ளலாம்.      

விமானம் மூலம் 
(By Plane )
அந்த நாட்டிற்குச் செல்ல  புஜும்புரா சர்வதேச விமான நிலையத்துக்கே செல்ல வேண்டும். அங்கு செல்ல 'கென்யா (Kenya)    ஏர்வேஸ்' (Kenya Airways), பிளை 540 (Fly 540), 'ரவாண்டேர்  எக்ஸ்பிரஸ்' (Rwandair Express) மற்றும் 'ப்ருச்சில்ஸ்' ஏர்லயேன்ஸ் (Brussels Airlines) போன்ற விமான சேவைகள் உள்ளன. 
இரு சக்கர வண்டி சரி செய்யும் இடத்தின் தோற்றம் 


புருண்டியின் பெரிய நகரங்கள்
(Major Cities in Burundi)

(1) புஜும்பரா - தலை நகரம்
(Bujumbura - capital)
(2) புரூரீ
(Bururi)
(3) சிபிடோக்
(Cibitoke)
(4) ஜிடிகா
(Gitega )
(5) முயிங்கா
( Muyinga)
(6) நோசீ
(Ngozi)

புருண்டியின் இயற்கை காட்சிகள்
(Nature Sights of Burundi)

(1) புருண்டி நேச்சுரல் ரிசர்வ்
(Bururi Natural Reserve)
(2) கரீரா பால்ஸ்
(Karera Falls)
(3) கிபீரா நேஷனல் பார்க்
(Kibira National Park)
(4) ஞாகாசு பிரேக்
(Nyakazu Break )
(5) ருசிசீ  நேச்சுரல் ரிசர்வ்
(Rusizi Natural Reserve)
(6) ருவுபூ நேஷனல் பார்க்
(Ruvubu National Park)
(7) ரிஹிண்டா லேக் நேச்சுரல் ரிசர்வ்
(Rwihinda Lake Natural Reserve)
(8) வ்யாண்டா நேச்சுரல் ரிசர்வ்
(Vyanda Natural Reserve) 

No comments:

Post a Comment