துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, August 20, 2011

பெர்முடா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

பெர்முடா சுற்றுலா
பயணக் குறிப்புக்கள் 
(Read Original Article in :- Bermuda
 
 

ஹார்ஸ் ஷூ பே
Author: Ekem (Creative Commons Attribution 3.0 Unported)
 
வடக்கு அட்லாண்டிக் கடலில்  'பிரிட்டிஷ்' (British) அரசின் கட்டுப்பாட்டில் அந்த நாட்டின் கடலைத் தாண்டி (overseas territory) உள்ளது  'பெர்முடா' (Bermuda) எனும் சிறிய தீவு . இதன் பரப்பளவு  53.2 சதுர கிலோமீட்டர்  (20.6 சதுர மைல் ) . இந்த நாட்டின்  ஜனத் தொகை  68,000 (2011 வருடக் கணக்குப்படி ). இந்த நாட்டின் தலை நகரம் 'ஹாமில்டன்' (Hamiltan). பெரிய நகராட்சி செயின்ட் ஜார்ஜ் ( St George's). சர்வதேச நேரத்தை விட (Coordinated Universal Time ) இந்த நாட்டின் நேரம் நான்கு மணி நேரம் (4 Hours Behind) பின் தங்கி உள்ளது. நாட்டின் நாணயம் பெர்முடியன் டால்ர் {(Bermudian dollar (BMD)}. மின் ஆற்றலின் அளவு  120V/60Hz.  சர்வதேச தொலைபேசி எண்  IDD code is +1-441. தேசிய மொழி ஆங்கிலம் ( English). இங்குள்ள மக்களில் 55% ஆப்ரிகா-கர்ரீபியனை சார்ந்த  (ethnic African-Caribbean) இனத்தவர், 34 % ஐரோப்பியர்கள் (Europians) .

ஹமில்டன்
Author: Mfdii (Creative Commons Attribution 3.0 Unported)
 

பெர்முடாவின் தனி நபர் வருமானம் உலகிலேயே மிகவும் அதிகமானது. அதற்க்குக்  காரணம் இது கடலைத் தாண்டி செய்யப்படும் வியாபார முதலீடு (Offshore Financial Centre) மற்றும் இங்கு வரும் மிக அதிகமாக சுற்றுலாப் பயணிகளின் (Tourists)  எண்ணிக்கையே. 

ஹாமில்டன் நகரக் கூடம்
Author: Hiong Leng Stanley (Creative Commons Attribution 3.0 Unported)

'பெர்முடாவின்' சீதோஷ்ண நிலை  'சவானாஹ்' (Savannah) மற்றும் 'ஜியார்ஜியா' (Georgia) போன்ற இடங்களில் உள்ளதைப் போலவே ஏறத்தாழ  வெப்ப மண்டல நிலையில் இருக்கிற சீதோஷ்ண நிலையில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் (August) அதிக பட்சமாக வெப்ப நிலையின்  அளவு   30°C (86°F) இருக்கும். பெப்ருவரி மற்றும் மார்ச் (February and March) மாதங்களில்  வெப்ப நிலையின்  அளவு 15°C (59°F) உள்ளது. அக்டோபர் ( October) மாதம் மழைக் காலம். அப்போது மழையின் அளவு  160 mm (6.3 அங்குலம்) வரை இருக்கும்.
பர்முடாவின் நிர்வாகப் பகுதிகளை 'பரிஷேஸ் '  (Parishes) என்கிறார்கள். இந்த தீவில் அப்படிப்பட்ட ஒன்பது  'பரிஷேஸ்கள்' உள்ளன. 'பெர்முடா'வில் 181 துணைத் தீவுகள் உள்ளன.

பெர்முடாவுக்கு செல்வது எப்படி
(Visiting Bermuda )

பெர்முடாவுக்கு செல்ல பெர்முடா சர்வதேச விமான நிலையத்துக்கு {The Bermuda International Airport (BDA)} சென்றுவிட்டு அங்கிருந்து நகருக்குள் வேறு சாதனம் மூலம் செல்லலாம். இங்கு செல்ல பயணக் கட்டணம் காரீபீனைவிட அதிகம்.  இங்கு பல இடங்களில் இருந்தும் விமான சேவைகள் உள்ளன. 

செயின்ட் கேத்தரின் போர்டில் இருந்து பெர்முடா
Author: reivax (Creative Commons Attribution 2.0 Generic)


பெர்முடாவின் பெரிய நகரங்கள்
(Major Cities in Bermuda )
(1) ஹாமில்டன்  - தலை நகர்
(Hamilton - capital)
(2) பிலாட்ஸ் வில்லேஜ்
(Flatts Village)
(3) சோமேர்செட் வில்லேஜ்
(Somerset Village)
(4) செயின்ட் ஜார்ஜச்ஸ்
(St George's)

இங்கு பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Bermuda)
(1) பிளீஸ் பே (விரிகுடா ) 
(Baileys Bay)
(2) ஹார்ஸ் ஷூ பே (விரிகுடா ) பீச்
(Horseshoe Bay Beach)

No comments:

Post a Comment