துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, August 2, 2011

இத்தாலி - வெனிஸ் : செயின்ட் மார்க் பேசிலிக்கா

வெனிஸ் நகரின் முக்கிய இடங்கள் (Main Tourist attractions of Venice)
'செயின்ட் மார்க் பேசிலிக்கா '

(Read Original Article in :- Saint Mark Basilica)


'செயின்ட் மார்க் ஸ்கொயரின்' (St. Mark's Square) முக்கியமான இடமே 'செயின்ட்மார்க் பேசிலிக்கா' (St. Mark's Basilica) என்பது. அதை அதிகாரபூர்வமாக 'செயின்ட் மார்க் பேட்ரியார்சல் கதீட்ரல் பேசிலிகா' (Patriarchal Cathedral Basilica of Saint Mark) அல்லது 'பேசில்லிக்கா கதிட்ரலே பேட்ரியார்சலே டி சான் மார்க்கோ' (Basilica Cattedrale Patriarcale di San Marco) என்று கூறுகிறார்கள்.
'வெனிஸ்'சை சேர்ந்த 'அர்ச்டியோசே' (Archdiocese) ரோமான் கதோலிக்கர்களின் தேவாலயம் (cathedral church of the Roman Catholic) இது. 1807 ஆம் ஆண்டு முதல் அவர்களின் வம்சத் தலைமை இடமாக ஆயிற்று. இந்த தேவாலயம் செல்வக் கொழிப்பில் மிதந்ததினால் 11 ஆம் நூற்றாண்டுகளில் இதன் பெயரை தங்கத்திலான தேவாலயம் (Church of Gold) எனும் அர்த்தம் தரும் 'சிசா டோரோ' (Chiesa d'Oro) என்ற பெயரிட்டு அழைத்தார்கள்.
St Mark's Basilica
செயின்ட் மார்க் பேசில்லிக்கா
Author: MarkusMark (public domain)


AD 828 ல்தான் செயின்ட் மார்க் பேசில்லிக்கின்  தேவாலயம் அமைக்கப்பட்டது. 'அலெஸ்சேன்ரியாவில்' (Alexandria) இருந்து வெனிஸ் நகரை சேர்ந்த வணிகர்கள் கொண்டு வந்து இருந்த கிருஸ்துவ மத நூல் பிரசாரகரான (Evangelist) 'மார்க்' (Mark ) என்பவரின் புனித சின்னங்களை (Relics) அங்கு வைத்தார்கள். அதன் நான்கு ஆண்டுகளுக்குப் (Four Years) பிறகு அதே இடத்தில் நிரந்தரமாக இருக்குமாறு (permanent) ஆலய மணிக் கூண்டுடன் (Bell Tower) கூடிய தேவாலயத்தை (Church) அமைத்தார்கள் .
Interior of St Mark's Basilica
செயின்ட் மார்க் பேசில்லிக்காவின் உட்புறத் தோற்றம்
Author: Tango7174 (Creative Commons Attribution 3.0 Unported


AD 976 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் (Rebellion) அந்த தேவாலயம் இடித்து தரை மட்டமாகியது. ஆகவே மீண்டும் அதை 1094 ஆம் ஆண்டு அந்த நகரின் தலைவரான 'டோகி' (Doge) எனும் 'விடலே பாலியிரோ' (Vitale Faliero) என்பவர் 978 கோணங்களில் கட்டியபோது அதனுள் இருந்த ஒரு தூணுக்குள் (Pillar) மறைத்து வைக்கப்பட்டு (hidden) இருந்த 'செயின்ட் மார்க்கின்' (Saint Mark) உடலைக் (Body) கண்டு பிடித்தார்.
அதன் பின் பல நிலைகளிலும் அந்த தேவாலயம் மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. 14 ஆம் நூற்றாண்டுகளில் பிற நாடுகளில் இருந்து வர்த்தக விஷயமாக வந்து சென்று கொண்டு இருந்த கப்பல்களில் (Ships) கொண்டு வரப்பட்ட பல நாடுகளின் புராதான சின்னங்களின் (Parts from ancient buildings)  அழகிய இடிபாடுகளை வைத்துக் கொண்டு அந்த தேவாலயத்தின் வெளிப்புறங்கள் மேலும் அழகு செய்யப்பட்டன.
இந்த தேவாலயத்தின் முக்கியமான ஒரு சின்னம் 'செயின்ட் மார்க்கின்' குதிரைகளே (Horses). அந்த குதிரைகளின் சிலைகள் (sculptures) AD 53 முதல் AD 117 வரையிலான காலத்தை சேர்ந்தவை. 'டோகே என்ரிகோ டண்டோலா' (Doge Enrico Dandolo) என்பவர் அதை 'கன்ஸ்டண்டினோபோலேயுடன்' (Constantinople) நடந்த நான்காம் யுத்தத்தின்போது (Fourth Crusade) 'ஹிப்போட்ரோம்' (Hippodrome) எனும் இடத்தில் இருந்த 'அர்ச் ஆப் ட்ரஜான்' என்ற கட்டிடத்தில் இருந்து கொண்டு வந்தார். 1797 ஆம் ஆண்டு அவற்றை நெபோலியன் (Napolean ) தனது நாட்டிற்கு எடுத்துச் சென்றாலும் பின்னர் அதை 1815 ஆம் ஆண்டு 'வெனிஸ்' நகருக்கே திருப்பி அனுப்பினார். இன்று அதே மாதிரியான சிலைகளே (Replicas) தேவாலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டு உள்ளன. உண்மையான மூல சிலை (Original) 'செயின்ட் மார்க்' மியூசியத்தினுள் (St Mark's Museum) வைக்கப்பட்டு உள்ளது.

'செயின்ட் மார்க் பேசில்லா'வுக்கு செல்ல வேண்டுமா
(Visiting St. Mark's Basilica)

'செயின்ட் மார்க் பேசில்லா'வுக்கு சென்றால் உள்ளே நுழைய சிறிது நேரம் அங்குள்ள பார்வையாளர் வரிசையில் (queue) நிற்க வேண்டும். சாதாரணமாக அங்கு நிறைய கூட்டம் (Crowd) இருக்கும்.

திறந்திருக்கும்  நேரங்கள் (Opening Hours)
(1) ஏப்ரல் முதல் செப்டம்பர் (Apl -Sept) வரை :
(a) திங்கள் (Mondays ) முதல் சனிக் கிழமைகளில் (Saturdays) :-
காலை 9:45 am முதல் மாலை 5:00 pm வரை
(b) ஞாயிற்றுக் கிழமைகளில் (Sundays) :-
மதியம் 2:00 pm முதல் 4:00 pm வரை
(2) அக்டோபர் முதல் மார்ச் (Oct-Mar) வரை
(a) திங்கள் (Mondays ) முதல் சனிக் கிழமைகளில் (Saturdays) :-
காலை 9:45 am முதல் மாலை 4:45pm வரை
(b) ஞாயிற்றுக் கிழமைகளில் (Sundays) :-
மதியம் 2:00 pm முதல் 4:00 pm வரை

செயின்ட் மார்க் மியூசியம் (St Mark's Museum)
(a) காலை 10.00 AM முதல் மாலை 4.00 PM வரை திறந்து இருக்கும்
(b) தேவாலயத்தில் தினமும் ஒன்பது முறை பிரார்த்தனைக்
கூட்டம் (Services) நடைபெறுகின்றது.

No comments:

Post a Comment