பொலிவியா - கோச்சபம்பா
(Read Original Article in : Cochabamba)
(Read Original Article in : Cochabamba)
கோச்சபம்பா
Author: Cercaburgo (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Cercaburgo (Creative Commons Attribution 3.0 Unported)
'கோச்சபம்பா' (Cochabamba ) என்பது 'பொலிவியா'வின் (Bolvia ) நான்காவது பெரிய நகரம் .இது 'செர்கெடா' மாகாணத்தில் (Cercado Province) அமைந்து உள்ளது. இது கடல்மட்டத்தில் (Sea Level) இருந்து 2,574 m (8,445 ft) உயரத்தில் உள்ளது. இந்த நகரின் ஜனத்தொகை 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி 610,000. மற்றும் நகரின் பரப்பளவு 348 சதுர கிலோமீட்டர் (134.4 சதுர மைல்). 'கோச்சபம்பா' என்றால் 'குவிச்சுவா' (Quechua) மொழியில் சமவெளியில் அமைந்துள்ள ஏரி (lake on the open plains) என்று அர்த்தம். மேலும் இந்த நகரில் வருடம் முழுவதும் வசந்த காலமாகவே (Spring) இருக்கும்.
இடதுபுறம் ஸீன் செண்டர் மற்றும் வலதுபுறத்தில்
எடிபிஷியோ லோஸ் டியேம்போஸ் கட்டிடங்கள்
Author: C Maranon (Creative Commons Attribution 2.0 Generic
எடிபிஷியோ லோஸ் டியேம்போஸ் கட்டிடங்கள்
Author: C Maranon (Creative Commons Attribution 2.0 Generic
1542 ஆம் ஆண்டு தற்போது 'கோச்சபம்பா' உள்ள இடத்தை 'கார்சீ ருயிஸ் டி ஒரில்லானா' (Garci Ruiz de Orellana) என்பவர் உள்ளூரில் இருந்தவர்களிடம் இருந்து வாங்கினாராம். இந்த இடத்தில் உள்ளூரில் இருந்த இன்கா (Inca), துபுராயா (Tupuraya), மோஜோகோயா (Mojokoya), ஒமேர்கியூ (Omerque), டிவாநகூ (Tiwanaque) போன்ற இனத்தவர்களே குடியேறி வந்தார்கள். 1571 ஆம் ஆண்டு ஆகஸ்ட் (August) மாதம் இரண்டாம் தேதியன்று இந்த நகரை அதிகாரபூர்வமான நிர்மாணித்தபோது இதன் பெயர் 'வில்லா டி ஒரிபிசா' (Villa de Oropesa) என இருந்தது .
இந்த நகர் விவசாயத்துக்கு (Agriculture) பெயர் பெற்ற இடம். இதன் சுற்றுப்புறத்தில் உணவு தானியங்கள் முதல் உருளைக் கிழங்கு, கரும்பு, தக்காளி, கோகோ, புகை இலை, காபி மற்றும் பலவிதமான பழங்கள் பயிரப்படுகின்றன. (grains, potatoes, coffee, sugar cane, cocoa, tobacco and fruits). மேலும் இங்கு கார் பாகங்கள் தயாரிக்கும் தொழில்சாலைகள் , ரசாயன தொழில்சாலைகள் போன்றவை உள்ளன.

கோச்சபம்பாவின் பழையப் பகுதிகள்
Author: Tyke (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Tyke (Creative Commons Attribution 3.0 Unported)
கோச்சபம்பாவின் தேவாலயம் மற்றும்
பிளாசா 14 டி செப்டிம்பேரே
Author: Paul Richter (Creative Commons Attribution 3.0 Unported)
பிளாசா 14 டி செப்டிம்பேரே
Author: Paul Richter (Creative Commons Attribution 3.0 Unported)
'பொலிவியா'வின் மற்ற நகரங்களைப் போலவே இங்கும் ஏழை மற்றும் பணக்காரர்களின் இடைவெளி அதிகமாகவே உள்ளது. அதனால் இங்கு நகர்புற மற்றும் புறநகர வியாபாரிகள் மத்தியில் அடிக்கடி கலவரங்கள் நடைபெறுகின்றன.
கோச்சபம்பாவிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Cochabamba )
இந்த நகருக்கு செல்ல 'ஜோர்கே வில்ஸ்டேர்மன் சர்வதேச விமான நிலையத்துக்கு' {Jórge Wilstermann International Airport (CBB)} சென்றுவிட்டு அங்கிருந்து டாக்ஸி ஒன்றை பிடித்துக் கொண்டு நகருக்குள் செல்லலாம். கட்டணம் Bs 25 ஆகும். விமானப் பயணத்தின்போது 'இல்லிமானி மலை' (Mount Illimani) அழகைப் பார்க்க வேண்டும் எனில் விமானத்தில் ஜன்னல் பக்கத்து சீட்டை (Window seat) வாங்கிக் கொள்ளவும்.
இந்த நகரில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to visit in Cochabamba)
(1) கிறிஸ்டோ டி லா கொன்கோர்டியா
(Cristo de la Concordia )
உலகிலேயே மிக அதிக உயரமான ஏசு கிறிஸ்துவின் சிலை
(2) மியூசியோ ஆர்கலாஜிகாலோ
(Museo Archeologico )
உள்ளூர் புராதான சின்ன மியூசியம். இங்கு ஹிஸ்பானிக் காலத்துக்கு முந்தய கால கலைப் பொருட்களும், பாண்டங்களும் உள்ளன
(3) சிமோ I .-பாடினோ கல்சரல் சென்டர்
(Simó I. Patiño Cultural Center)
கலைக் காட்சிகளைக் கொண்ட தோட்டம் மற்றும் பெரிய மாளிகை
No comments:
Post a Comment