பொலிவியா - லகுனா வெர்டி
(Read Original Article in :- Laguna Verde )
லகுனா வெர்டி
Author: Ville Miettinen (Creative Commons Attribution 2.0 Generic)
Author: Ville Miettinen (Creative Commons Attribution 2.0 Generic)
'லகுனா வெர்டி' (Laguna Verde) என்றால் பச்சை நிற கடலினின்று மணல் திட்டுக்கள் நிறைந்த ஏரி போன்ற உப்பு நீர்த் தேக்கம் (Green Lagoon). இதுவும் 'ஆண்டியன்' (Andean) மலைப் பகுதியின் மேல் பரப்பில் , 'சிலி' (Chile) நாட்டு எல்லைக்கு அருகில் உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 4,300 மீட்டர் (14,000 ft) உயரத்தில் அமைந்து உள்ள இந்த ஏரி அருமையான இயற்கை காட்சியுடன் பளிங்குக் கண்ணாடி போல காட்சி தருவது மட்டும் அல்ல அதனுள் உள்ள பூமியின் அடிப்பாகம் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. அதை சுற்றி படந்து உள்ள மலைகள் இந்த நீர்தேக்கத்தின் மீது விழுந்து அவற்றை கண்ணாடி பிம்பம் போல அருமையாக பிரதிபலிக்கின்றது. அந்த தண்ணீர் தேக்கத்தில் ஒரு நீர் குமிழி கூடத் தெரியவில்லை. அந்த நிலப்பகுதி கரடுமுரடான, வறண்ட ஏகாந்தமாக இருப்பது போல காட்சி தருகின்றது. இந்த தண்ணீரின் நிறம் பச்சையாக இருப்பதின் காரணம் அந்த பூமியில் சிறிதளவு தாமிர தாதுப் பொருட்கள் உள்ளதினால்தான்.
இங்கு செல்வது எப்படி
(Visiting Laguna Verde )
இங்கு சென்று பார்க்க வேண்டும் எனில் 4WD வண்டிகளான 'டோயோடோ லான்ட் க்ருசேடர்ஸ்' (Toyota Landcruisers) போன்ற கனரக வண்டியில் போக வேண்டும். இங்கு சென்று வர குறைந்தது 3-4 நாட்கள் ஆகும். இது கடும் குளிரான இடம் (frigid) ஆனாலும் இயற்கை காட்சிகள் அற்புதமாக இருக்கும். ஆகவே அதற்கு ஏற்ப நல்ல கெட்டியான துணிகளையும் (Warm Clothes) , குடிக்க நல்ல தண்ணீரையும் (Drinking Water) நிறைய கொண்டு செல்ல வேண்டும். கண்களில் சூரிய ஒளிவீச்சை தடுக்கும் கறுப்புக் கண்ணாடி (Sun Glass) அணிவது அவசியம்.
இதைப் போன்ற மற்றொரு இடம்
(Related Sites )
சலார் டி உயுனி
(Salar De Uyuni)
'பொலிவியா'வின் 'ஆண்டிப்லேனோ'வின் இன்னொரு உப்பளம்
No comments:
Post a Comment