பொலிவியா - போடோஸ்சி
( Read Original Article In :- Potosí )
( Read Original Article In :- Potosí )
போடோஸ்சியின் ஒரு காட்சி
Author: Joachim Pietsch (Creative Commons Attribution 2.0 Generic) (map)
Author: Joachim Pietsch (Creative Commons Attribution 2.0 Generic) (map)
போடோஸ்சி (Potossi ) என்பது 'பொலிவியா'வின் (Bolvia) தென் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது கடல் மட்டத்தில் இருந்து 4,090 மீட்டர் (13,420 ft) உயரத்தில் உள்ளது. 2011 ஆண்டு கணக்கின்படி இதன் ஜனத்தொகை 165,000 (. நகரின் பரப்பளவு 118.2 சதுர கிலோமீட்டர் (45.6 மைல்)
செர்ரோ ரிகோ பின்னணியில் தெரிய போடோஸ்சி Author: Christophe Meneboeuf (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)
பணக்கார மலை என அன்புடன் அழைக்கப்படும் 'செர்ரோ டி போடோஸ்சி' (Cerro de potosi) அல்லது 'செர்ரோ ரிகோ' (Cerro Rico) என்ற மலையின் அடிவாரத்தில் இந்த நகரம் அமைந்து உள்ளது. இந்த மலையின் அடிவாரம் மற்றும் சுற்றுப்புறத்தில் நிறைய வெள்ளி தாதுப் (Silver) பொருள் கிடைக்கின்றது. 'போடோஸ்சி' நகரம் 1546 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஸ்பானிஷ் (spanish) மொழியில் 'போடோஸ்சி' என்றால் அளவுக்கு மீறிய செல்வம் என்று பொருளாம். ஆகவே எங்கெங்கு அதிகமாக வெள்ளி தாது கிடைத்ததோ அந்த நகரங்கள் அனைத்துமே 'போடோஸ்சி' என்ற அடைமொழியை பெற்றன. அவற்றில் சில நகரங்கள் 'மெக்ஸிகோ'வின் (Maxico) 'சான் லூயிஸ் போடோஸ்சி' (San Luis Potosí ) மற்றும் 'நெவடாவின்' (Nevada) ஒரு நகரமான 'போடோஸ்சி' போன்றவை உள்ளன. 19 ஆம் நூற்ற்றடில் 'சான் லூயிஸ் போடோஸ்சி'யின் அனைத்து வெள்ளி தாதுப் பொருட்களும் தோண்டி எடுக்கப்பட்டு அடுத்து வெள்ளீயம் (Tin) தோண்டி எடுக்கப்பட்டது. அதன் வளமும் தற்போது தீர்ந்து விட்டது.
'போடோஸ்சி'
Author: Sascha Grabow (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Sascha Grabow (Creative Commons Attribution 3.0 Unported)
1987 ஆம் ஆண்டு முதல் 'போடோஸ்சி'யை யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக அங்கீகரித்து உள்ளார்கள் என்பதின் காரணம் இது உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள இடம் என்பது மட்டும் அல்ல வெள்ளி தாதுப் பொருள் நிறையக் கிடைத்த இடம் என்பதும் ஆகும்.
இங்கு எப்படி செல்லலாம்
(How To Reach)
'சுக்ரீயில்' (Sucre) இருந்து 3 மணி நேரத்திலும் (3 hours), 'ஒரூரோ'வில் (oruro) இருந்து 6 மணி நேரத்திலும் (6 hours), 'யயுனி'யில் (Uyuni) இருந்து 7 மணி நேரத்திலும் மற்றும் 'துபிஸ்சா'வில்(Tupiza ) இருந்து 7-8 (7-8 hours) மணி நேரத்திலும் இந்த இடத்துக்கு பஸ்களில் செல்லலாம்.
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Potosí )
(1) காசா நேஷினால் டி மொனிடா
(Casa Nacional de Moneda )
முந்தைய காலத்து நாணய தொழில்சாலை உள்ள இடம்.
(2) கண்வேண்டோ டி சந்தா டேரிஸ்சா
(Convento de Santa Teresa )
மடாலயம் மற்றும் ஒரு கான்வென்ட்- மக்களுக்காக திறந்து விடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment