துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, September 25, 2011

பொலிவியா - லா பாஸ்

பொலிவியா - லா பாஸ்
(Read original Article in :- La Paz


லா பாஸ்சில் சொபோகாசி மாவட்டக் காட்சிகள்
Author: Christopher Walker (Creative Commons Attribution 2.0 Generic)

'பொலிவியா'வின் (Bolvia)  தலை நகர் மற்றும் நிர்வாக நகரமே 'லா பாஸ்' (La Paz) என்ற நகரம். இது 'பொலிவியா'வின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இந்த நகரின் புற நகரையும் சேர்த்து மொத்தமுள்ள 3,240 சதுர கிலோமீட்டர் (1,251 sq mi) பரப்பளவில் அமைந்து உள்ள இந்த பெருநகரின் பரப்பளவு 472 சதுர கிலோமீட்டர் (182.2 சதுர மைல் ).  இதன் ஜனத்தொகை 880,000. உலக நாடுகள் பொதுவாக ஏற்றுக் கொண்டு உள்ள நேரத்தைவிட இந்த நகரின் நேரம் நான்கு மணி நேரம் (-4 hrs/ UTC) பின்னால் உள்ளது.
'லா பாஸ்' என்பது கிழக்கு 'பொலிவியா'வின் 'ஸாந்தாக்ருஸ்' (Santhacruz) என்ற நகரைவிட குறைவான ஜனத்தொகையைக் கொண்ட நகரம். ஆனால் 'லா பாஸ்' பெருநகரின் ஜனத்தொகை 'ஸாந்தாக்ருஸ்' பெருநகர் ஜனத்தொகையை விட அதிகம்.
லா பாஸ் நகர மையப் பகுதி
Author: Anakin (Creative Commons Attribution 3.0 Unported)

'பொலிவியா'வின் அதிகாரபூர்வ தலை நகரம் மற்றும் நியாயாலயங்கள் (Seat Of Justice) 'சுக்ரீ'(Sucre) என்பது. ஆனால் 'லா பாஸ்சில்'தான் அரசாங்கத்தின் பல நிர்வாக அமைப்புக்களின் அலுவலகங்கள் உள்ளதினால் இது அங்கீகரிக்கப்படாத ஆனால் 'பொலிவியா'வின் தலைநகரமாக ஏற்கப்பட்டு உள்ளது. கடல் மட்டத்தில் (Above Sea level) இருந்து 3000 - 4100 மீட்டர் உயரத்தில் 'லா பாஸ்' நகரம் அமைந்து உள்ளது.
ஏறத்தாழ வெப்பமண்டல நிலை சார்ந்த ( subtropical ) நிலையில்தான் 'பொலிவியா'வின் தட்ப வெட்பநிலை (climate) உள்ளது. ஆனால் ல்'லா பாஸ்' நகரம் உயரத்தில் அமைந்து உள்ளதினால் எப்போதுமே இந்த நகரம் குளுமையாக (Cool) இருக்கும். வெட்பநிலை ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய (April till June) அநேகமாக ஒரே அளவில் அதாவது 5°C (41°F) வரையும் நவம்பர் முதல் மார்ச் (November to March) முடிய 8°C (46°F) வரையும் உள்ளது. ஜனவரி மாதங்களில் (Januvary) மழையின் அளவு அநேகமாக 130 mm (5.12 in) என்ற அளவில் உள்ளது.
லா பாஸ்சில் ஒரு சிற்றுண்டிசாலை
Author: marcalandavis (Creative Commons Attribution 2.0 Generic)

முதலில் 'லா பாஸ்' என்பது அதிகம் அமெரிக்க (American ) மக்கள் குடியேறி இருந்த லாஜா (Lajaa) என்ற பெயர் கொண்ட இடமாக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் 1548 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் (Spanish) அரசு அதன் ' நம்முடைய அமைதிப் பெண்' (Our Lady of Peace) என்ற அர்த்தம் தரும் பெயரான 'லா பாஸ்' என மாற்றி அமைத்தார்கள். புனித ரோமானிய பேரரசின் (Holy Roman Emperor) மன்னனும் 'ஸ்பானிஷ்' ராஜ்ய மன்னனுமான 'சார்லஸ் V' (Charles V) என்பவரே இந்த நகரை 'பெட்ரோ டி லா காஸ்கா' (Pedro de la Gasca) என்பவர் மூலம் நிர்மாணித்தார்.
1839 ஆம் ஆண்டு முதல் வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் நீதி மன்றங்களை உள்ளடக்கிய 'சுக்ரீ' என்ற நகரமே 'பொலிவியா'வின் தலைநகரமாக இருந்தாலும் 1898 ஆம் ஆண்டுமுதல் 'லா பாஸ்' அதிகாரபூர்வமில்லாத ஆனால் 'பொலிவியா'வின் தலை நகரமாகவே (de facto capital) அனைத்து விதங்களிலும் விளங்கியது.
அல்லியன்ஸ் பிராங்கைஸ் எனும் கட்டிடம்
Author: Edgar Claure (Creative Commons Attribution 3.0 Unported)

லா பாஸ் நகருக்கு செல்ல வேண்டுமா
(Visiting La Paz, Bolivia )

'லா பாஸ்' நகரம் செல்ல வேண்டும் எனில் 'எல் அல்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு' (El Alto International Airport (LPB)) சென்றுவிட்டு அங்கிருந்து நகருக்குள் செல்லலாம். இந்த விமான நிலையம் அதிக உயரத்தில் இருப்பதினால் விமானங்கள் ஏறவும், இறங்கவும் நீண்ட விமானப் பாதை தேவைபடுகின்றது. அதிக உயரத்தில் இருப்பதினால் விமானங்கள் இறங்கும்போது காற்று மண்டலத்தின் காற்று குறைவாகவே இருக்கும். ஆகவே பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன் எனில் சிலருக்கு அந்த குறைந்த அளவு காற்றழுத்தம் உடல் உபாதைக் கொடுக்கலாம். விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்ல பலர் பங்கீட்டுக் கொண்டு செல்லும் (Shared) வாகன வசதிகள் உள்ளன. அதற்கான கட்டணம் Bs 4. அதே நேரத்தில் தனியாக டாக்சியில் சென்றால் அதற்கான கட்டணம் Bs 50 என்ற அளவு இருக்கும்.
கதீட்ரல் மெட்ரோபோலிடானா எனப்படும் தேவாலயம்
Author: Elemaki (Creative Commons Attribution 3.0 Unported)

லா பாஸ் நகரை சுற்றிப் பார்க்க வேண்டுமா
(Exploring La Paz
)
'லா பாஸ்' நகர் ஒரு கிண்ணத்தைப் போன்ற அமைப்பில் உள்ளது. ஆகவே நீங்கள் வழி தவறி எங்காவது போய் விட்டால் கவலைப் படாமல் அந்த இடத்தில் இருந்து கீழ்நோக்கிச் சரிவாகச் செல்லும் பாதையிலேயே தொடர்ந்து வந்தால் நகரின் மத்தியப் பகுதியை அடைந்துவிடலாம். அல்லது ஒரு டாக்சியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். 'லா பாஸ்சில்' உள்ள டாக்சிக்களில் மீட்டர் கிடையாது என்பதினால் பேரம் பேசிக் கொண்டு வண்டியில் செல்லவும். சாதாரணமாக நகரின் எந்தப் பகுதிக்கும் செல்ல கட்டணம் Bs 6-8 என்ற அளவில் இருக்கும்

பார்க்க வேண்டிய இடங்கள்
Places of Interest in La Paz, Bolivia
(1) பொலிவியன் ஆண்டியன் டெக்ஸ்டைல் மியூசியம்
( Bolivian Andean Textile Museum)
(2) கால்லி ஜெயன்
Calle Jaen
(3) எல் அல்டோ தர்ஸ்டே அண்ட் சண்டே மார்கெட்
(El Alto Thursday & Sunday Market)
(4) ஏலாய் சாலமன்
(Eloy Salmon )
(5) மேர்கடோ நீக்ரோ மார்கெட்
{Mercado Negro (Black Market)}
(6) மிர்ராடார் கில்லி கில்லி
(Mirador Killi Killi)
(7) மிராடார் மோண்டிகோலா
(Mirador Monticulo)
(8) மியூசியம் சான் பிரான்சிஸ்கோ
(Museum San Francisco)
(9) மியூசியம் ஆப் காண்டேம்பொரரி ஆர்ட்
(Museum of Contemporary Art)
(10) மியூசியம் ஆப் பிரிஷியச்ஸ் மெடல்ஸ்
(Museum of Precious Metals )
(11) மியூசியம் ஆப் இன்ஸ்ட்ருமென்ட் மியூசியம்
(Musical Instrument Museum)
(12) பர்கியூ லைகாகோட்டா
(Parque Laikacota)
(13) பிளாசா மியுரிலோ
(Plaza Murillo )
(14) சாகர்னாக ஸ்ட்ரீட்
(Sagarnaga Street)
(15) சப்மேர்ஜிட்மியூசியம்
(Submerged Museum)
(16) டிவானுகா மியூசியம்
(Tiwanaku Museum)
(17) வால்லே டி லா லூனா
( Valle de la Luna)
(18) விட்செஸ் மார்கெட்
(Witches Market)

No comments:

Post a Comment