பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
வரலாற்று சிறப்பு மிக்க சுக்ரீ
வரலாற்று சிறப்பு மிக்க 'சுக்ரீ' (Historic City of Sucre ) 'பொலிவியா'வின் (Bolvia) முதலாவது தலை நகரமாக இருந்தது. 16 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் அமைக்கப்பட இந்த நகரில் பல புராதான கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் சில 'சான் ரசாரோ' {San Lázaro (1544)}, 'சான் பிரான்சிஸ்கோ' {San Francisco (1581) } மற்றும் 'சான்டோ டோமிங்கோ' {Santo Domingo (late 16th century)} போன்றவை . இந்த கட்டிடங்கள் அனைத்துமே ஐரோப்பிய கட்டிடக் கலையும் உள்ளூர் கட்டிடக் கலையும் இணைத்து அமைக்கப்பட்டவை ஆகும்.
வரலாற்று சிறப்பு மிக்க சுக்ரீ
Author: jennifrog (Creative Commons Attribution 2.0)
Author: jennifrog (Creative Commons Attribution 2.0)
1991 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் 9 முதல் 11 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய (World Heritage Committee) அங்கத்தினர் கூட்டத்தில் இந்த நகரை யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO heritage Site) அங்கீகரித்தார்கள்.
'தென் அமெரிக்கா'வை (South America) சேர்ந்தவரும் 1783-1830 ஆண்டுகளில் வாழ்ந்தவருமான 'சிமன் பொலிவார்' (Simon Bolivar) பெயரால் 'பொலிவியா' அமைந்தாலும் அதன் முதல் தலைநகர் 1795-1830 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த 'பொலிவியாவின்' இரும்பு மனிதரான (Strongman) 'அந்தோனியா ஜோஸ் டி சுக்ரீ வை அல்கலா'' {(Antonio José de Sucre y Alcalá (1795-1830)} என்பவர் பெயரால் அமைந்தது. அவரே 1826 ஆம் ஆண்டில் 'பொலிவியாவின்' முதலாம் ஜனாதிபதி ஆனார். ஆனால் 1830 ஆம் ஆண்டு அவர் பஸ்டோ' (Pasto) எனும் இடத்தில் கொல்லப்பட்டார்.
பேசிலிகா டி சான் பிரான்சிஸ்கோ
Author: Vico ricab (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Vico ricab (Creative Commons Attribution ShareAlike 3.0)
இந்த நகரின் முதல் பெயர் 'லா பிளேட்டா' (La Plata) என்பது. இது 'சார்காஸ்' (Charcas) இந்தியர்கள் குடியேறிய இடம். இந்த இடத்தை 'சுகிசாகா' என இந்தியர்கள் (Indians) அழைத்தார்கள். 16 ஆம் நூற்றாண்டில் 'ஸ்பானிஷ' நாட்டில் உள்ளதைப் போலவே இங்குள்ள தெருக்களையும் நகர அமைப்பையும் 'ஸ்பானிஷ்' (Spanish) ஆட்சியினர் செய்தார்கள். வெள்ளி சுரங்கம் (Silver Mine) இருந்த பொடாசி (Potosi ) நகருக்கு அருகில் இது இருந்ததினால் மேலும் பயன் அடைந்தது. இந்த நகரில் முக்கியமான இடங்கள் 1624 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'சான் பிரான்சிஸ்கோ சேவியர்' பல்கலைக் கழகம் (Universidad de San Francisco Javier)சட்டப் படிப்புக் கலை கழகம் ( Real Academia Carolina, a law institution) மற்றும் 1595 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 'சான் இசபேல் ஹங்க்ரியா செமினாரியோ (San Isabel de Hungria Seminario ) போன்றவை உள்ளன. 'சார்காஸ் ஆடியேன்ஷியா' என்ற உச்ச நீதி மன்றமும் (Charcas Audiencia, which was the early incarnation of the Supreme Court ) அமைக்கப்பட்டது. இங்குள்ள கட்டிடங்கள் 'பொடசியில் ' (Potasi) உள்ளதைப் போன்ற கட்டிட அமைப்பில் உள்ளது.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : S 19 02 35 W 65 15 33
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1991
பிரிவு : கலாச்சாரம்-கலை
தகுதி : IV
No comments:
Post a Comment