துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, September 25, 2011

பொலிவியா - சுக்ரீ

பொலிவியா - சுக்ரீ
(Read Original Article in :- Sucre)


'பொலிவியா'வில் (Bolvia) கடல் மட்டத்தில் இருந்து 2,750 மீட்டர் (9,022 ft) உயரத்தில் உள்ளதே 'சுக்ரீ'(Sucre) எனும் நகரம். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்த நகரத்தின் ஜனத்தொகை 225,000 .


காஸ்டில்லோ டெல் ப்ரின்சிபடோ டி லா க்லோரீட்ட
Author: Jerry Daykin (Creative Commons Attribution 2.0 Generic)

1538 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'சுக்ரீ' நகரத்தின் பெயர் 'சியுடாட் டி லா பலடா டி லா நுவா டொலிடோ'(Ciudad de la Plata de la Nueva Toledo) என இருந்தது . அப்போது அது 'பெருவை' (Peru) சேர்ந்த 'வைஸ்ராயல்டியை' (Viceroyalty) சேர்ந்த நகரமாக இருந்தது. 'ஸ்பெயின்' (Spain) நாட்டின் 'ஆண்டலூசியன்' (Andalusian ) பகுதியையும் இணைத்து ஒரு கட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டது. 'பொலிவியா'வில் 'ரோமன்' (Roman) கத்தோலிக்க தேவாலயங்களின் இடமாக 'சுக்ரீ' அமைந்தது. ஆகவே இந்த நகரின் ஜனத்தொகையில் நிறைய துறவிகளும் (Monks) , கன்னி ஸ்திரீகளும் (Nuns) இருந்தார்கள்.
இங்கு வெளிநாட்டு மக்கள் வந்து குடியேறிய காலம் முதலே இங்கு பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவை நன்கு பராமரிக்கப்பட்டன. ஆகவே இந்த நகரை 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ புராதான சின்னமான (UNESCO world heritage Site) வரலாற்று சிறப்பு மிக்க சுக்ரீ ( Historic City of Sucre) என அங்கீகரித்தார்கள்.


பேசிலிக்கா டி சான் பிரான்சிஸ்கோ
Author: Robert Cutts (Creative Commons Attribution 2.0 Generic)


மற்றவற்றைத் தவிர யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடத்ததினாலும் இந்த நகரம் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து உள்ளது. புஜிலே எனும் பண்டிகை (Fujillay Festival) கொண்டாடப்படும் மாதமான மார்ச்சில் (March) இங்கு கூட்டம் அதிகம் இருக்கும். அப்போது உள்ளூர் மக்கள் விதவிதமான பராம்பரிய உடை அணிந்து அலங்காரங்களை (indigenous costumes) செய்து கொண்டு வந்து பண்டிகை கொண்டாடுவதைக் காண அற்புதமாக இருக்கும்.

சுக்ரீக்கு செல்ல வேண்டுமா
(Visiting Sucre )

இங்கு செல்ல விமான சேவை இல்லை. ஆகவே பல முக்கிய நகரங்களில் இருந்து செல்லும் பஸ்சின் மூலமே 'சுக்ரீ'நகரை அடைய முடியும்.

கடைகளில் காய்கறிகள்
Author: Cristian Ordenes (Creative Commons Attribution 2.0 Generic)


இங்கு பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Sucre)

(1) கால் ஆர்கோ
(Cal Orkco )
சிமெண்ட் கல்சுரங்கங்களில் காணப்பட்ட தற்போது அழிந்துவிட்ட முற்கால ஊர்ந்து செல்லும் ஒருவகை மிகப் பெரிய ஜந்துவின் காலடித் தடங்கள் காணப்படும் இடம்
(2) காசா டி லா லிபர்டாட்
(Casa de la Libertad)
முதலில் இது பெண் துறவியர் மடமாக இருந்தது. இங்குள்ள தொழுகை இடத்தில்தான் 1825 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியன்று சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டது. தற்போது அந்த கன்னியர் மேடம் மற்றும் தொழுகை இடத்தை மியூசியமாக மாற்றிவிட்டார்கள்.

No comments:

Post a Comment