துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, September 25, 2011

பொலிவியா சாந்தாக்ருஸ் டி லா சைரா

பொலிவியா
சாந்தாக்ருஸ் டி லா சைரா
(Read Original Article in :-  
 

சாந்தாக்ருஸ் டி லா சைரா
Author: Rojk (Creative Commons Attribution 3.0 Unported)

'சாந்தாக்ருஸ் டி லா சைரா' (Santa Cruz de la Sierra) என்ற இடம் 'பொலிவியா'வின் (Bolvia) ஜனத்தொகை மிக்க நகரம். மேலும் இது பொருளாதார வளம் உள்ள நகரம், மேலும் அதிக வளர்ச்சியை நோக்கிச் செல்லும் நகரம். இதன் பரப்பளவு 535 சதுர கிலோமீட்டர் (206.6 sq மைல் ). ஜனத்தொகை 1.6 மில்லியன் .
சாந்தாக்ருஸ் டி லா சைராவில் மெட்ரோபோலிடானா  தேவாலயம்
Author: Igor Prata (Creative Commons Attribution 2.0 Generic)

'சாந்தாக்ருஸ் டி லா சைரா' என்ற நகரை 'நுப்லோ டி சாவேஸ்' (Ñuflo de Chavez) என்பவர் 1561 ஆம் ஆண்டு நிர்மாணித்தார்.  இதை நிறுவிய பின்னர் பலமுறை இந்த நகரை இடம் மாற்றி அமைக்க (relocated) வேண்டி இருந்தது. சிறிய ஊராக இருந்த இது மெல்ல மெல்ல பெரிய நகரமாக இரண்டாம் உலக யுத்தத்திற்குப் (World War II) பிறகு மாறியது.
'சாந்தாக்ருஸ் டி லா சைரா'வின் தட்பவெட்ப நிலை 16°C வரை சென்று ஜூன் மற்றும் ஜூலை (June -July) மாதங்களில் மிகக் குளிராகவும், நவம்பர் முதல் மார்ச் வரை (November Till March) இங்குள்ள தட்ப வெட்ப நிலை வெட்பமாக அதாவது  30°C அளவில் இருக்கும்.

'சாந்தாக்ருஸ் டி லா சைரா' விற்குச் செல்ல வேண்டுமா
(Visiting Santa Cruz de la Sierra Viru Viru )

'சாந்தாக்ருஸ் டி லா சைரா' விற்குச் செல்ல வேண்டும் எனில் இங்குள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு  {International Airport (VVI)} செல்ல வேண்டும். 'பொலிவியாவின்' மிக நவீன விமான நிலையம் இது. இந்த விமான நிலையத்துக்கு அசூசியன், புயனேஸ் ஏரிஸ், கோச்சபம்பா,குச்ச்கோ, லா பாஸ், லிமா, மாட்ரிட், மியாமி, பனாமா சிட்டி, சாவோ பவுலோ, வாஷிங்டன் (Asunción, Buenos Aires, Cochabamba, Cuzco, La Paz, Lima, Madrid, Miami, Panama City, São Paulo, and Washington) போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் இருந்து மினிபஸ் (Mini Bus) அல்லது டாக்சியில் (Taxi) நகருக்குள் செல்ல முடியும்.  டாக்சிக்கான கட்டணம் US$8, மற்றும்  மினி பஸ்சிற்கு கட்டணம் US$0.80.

பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Santa Cruz de la Sierra)

(1) கச்சா டி லா கல்சரா ராவுல் ஓட்டிரோ ரிசே
(Casa de la Cultura Raul Otero Reiche)
(2) கதீட்ரல் மியூசியம் ஆப செக்ரெட்  ஆர்ட்
(Cathedral Museum of Sacred Art)
(3) பிரான்கோ ஜெர்மன் ஆர்ட் சென்டர்
(Franco German Art Center)
(4) கவ்ரானி மியூசியம்
(Guarani Museum)
(5) மியூசியம் ஆப் இண்டிபெண்டன்ஸ்
(Museum of Independence)
(6) நோயால் கேம்ப் மேர்கேடோ நச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்
(Noel Kempff Mercado Natural History Museum)
(7) டினிஎண்டி ஜெனரல் ஜெர்மன் பச்ச் பசீரா  நேஷனல் ஹிஸ்டரி மியூசியம்
(Teniente General German Busch Becerra national History Museum )

No comments:

Post a Comment