பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
திவானக்கு
(Read original Article in :- Tiwanaku)
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
திவானக்கு
(Read original Article in :- Tiwanaku)
'ஏன்டீஸ்' (Andes) நகரின் தென் பகுதியில் உள்ள 'திவானக்கு' சிதைவுகள் (Tiwanku Ruins) யுனெஸ்கோ புராதான சின்ன மையம் (UNESCO World Heritage Site ) என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள இடம். 500 மற்றும் 900 AD ஆண்டு காலத்தில் 'திவானக்கு' நாகரீகம் உச்ச கட்டத்தில் இருந்தது. உலக புராதான மைய அங்கத்தினர் ( World Heritage Committee) இந்த இடத்தை யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Sites) அங்கீகரிப்பது என 2000 ஆம் ஆண்டு நவம்பர் (November) 27 முதல் டிசம்பர் (December) 2 ஆம் தேதிவரை 'ஆஸ்திரேலியா ' (Australia) நாட்டில் நடைபெற்ற அங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்தார்கள். 'ஆண்டியன் ஹிஸ்பானிக்' நாகரீகத்தின் (Andean pre-Hispanic civilisation) முக்கிய காரணகர்த்தாவாக 'திவானக்கு' திகழ்ந்தது. இங்குள்ள கட்டிடங்கள் மற்றும் சமய சம்மந்தமான கட்டிடங்கள் 'ஆண்டியன்' பகுதியின் (Andean region) அற்புதமான கலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்து இருந்தது.
திவானக்குவின் சிதைவுகள்
Author: Claire POUTEAU (Creative Commons Attribution 2.0 France)
Author: Claire POUTEAU (Creative Commons Attribution 2.0 France)
கலசசய ஆலயம்
Author: Anakin (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Anakin (Creative Commons Attribution ShareAlike 3.0)
இங்கு என்ன பார்க்கலாம்
(What to See in Spiritual and Political Centre of the Tiwanaku Culture )
இந்த மையம் 'லா பாஸ்சில்' இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் 'டிடிகாகா' (Titicaca) நதிக் கரையின் தென் பகுதியில் உள்ளது. இந்த மையத்தைப் பற்றிய விவரங்கள் முதலில் 'பெட்ரோ சைஸா டி லியோன்' (Pedro Cieza de León) என்பவரால் 1549 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : S 16 33 30 W 68 40 40
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : III, IV
இந்தப் பெயர் வந்ததின் காரணம்
(Etymology )
'திவானக்கு' என்ற பெயர் 'அய்மாரா' (Aymaraa) மொழியில் இருந்து வந்திருக்க வேண்டும். அதில்தான் 'தைபிகுவாலா' (Taipiquela) என்றால் மத்தியில் உள்ள பாறை என்று அர்த்தம். ஆகவே உலகின் மத்தியப் பகுதியில் உள்ள 'திவானக்கு'விற்கு அப்படிப்பட்ட ஒரு பெயர் வந்திருக்க வேண்டும். அந்தப் பெயர் பின்னர் மறந்து போகக் காரணம் அந்த மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை.
வரலாறு
(History )
புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி 'திவானக்கு' 400 AD யில் வளரத் (Expanded) துவங்கியது. வர்த்தக ஒப்பந்தங்கள் (Trade Negotiations) மூலம் அவர்கள் வசித்து வந்த இடங்கள் வளர்ந்து கொண்டே போயிற்று. இந்த இடம் சமய வழிபாட்டுத் தளமாக (Religious Centre) உருவெடுத்தது.
AD 600 முதல் 800 ஆண்டு வரை இங்கு ஜனத்தொகை பெருகியது. இந்த நகரின் பரப்பளவு 6.5 சதுர கிலோ மீட்டராக ஆயிற்று. 30,000 மக்கள் வாழ்ந்தார்கள். வானத்தில் இருந்து ஆராய்ந்தபோது இந்த நகரில் 285,000 முதல் 1.5 மில்லியன் அளவு மக்கள் வாழ்ந்து இருக்க வேண்டும் என்பது புலனாயிற்று. AD 950 ஆண்டில் ஏற்பட்ட திடீர் இயற்கையின் மாறுதலினால் மக்கள் தொகை குறைந்தது. அடுத்த 50 ஆண்டுகளில் அந்த நாகரீகமே அழிந்து விட்டது. அதன் பின்னர் 13 ஆம் நூற்றாண்டில் 'இன்கா' மன்னர்கள் (Inca Rulers) இங்கு வந்து இந்த இடத்தை பிடித்துக் கொண்டபோது மீண்டும் மனிதர்கள் வாழத் துவங்கினார்கள்.1445 ஆம் ஆண்டு ஒன்பதாவது 'இன்கா' மன்னர் 'பச்சகுட்டி இன்கா யுபாண்டி' (Pachacuti Inca Yupanqui) என்பவர் இந்த இடத்தின் நாகரீக அமைப்பின் தன்மையை கிரகித்துக் கொண்டு தம் மக்களுக்கும் அது பலனளிக்கும் வகையில் நகரை அமைக்க அதிகாரிகளை அங்கு நியமித்தார்.
இந்த மையம் உள்ள இடத்தை பெரியதாக பார்க்க
படத்தின் மீது கிளிக் செய்யவும்
படத்தின் மீது கிளிக் செய்யவும்
இங்கு செல்வது எப்படி
(Visiting Spiritual and Political Centre of the Tiwanaku Culture )
நீங்கள் இங்கு செல்ல வேண்டும் எனில் 'லா பாஸ்' (Laa Paz) நகரில் தங்கிக் கொள்ளலாம். அங்கு உள்ள ஹோட்டல்களின் விவரத்தை இதன் மீதே (hotels in La Paz ) கிளிக் செய்து பார்க்கவும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment