பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்
( Read Original Article in : - Jesuit Missions of the Chiquitos )
சான் ஜேவியர் தேவாலயம், ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்
1696 மற்றும் 1760 ஆம் ஆண்டுகளில் கிருஸ்துவ மதத்திற்கு மாறிய (Christianized) 'இந்தியர்கள் ' (Indians) வந்து குடியேறிய ஆறு இடங்களையே 'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்' (Jesuit Missions of the Chiquitos) என்று கூறுகிறார்கள். மாற்றப்பட்டவர்கள் என்ற அர்த்தம் தரும் இந்த ஆறு இடங்கள் 'சான் பிரான்சிஸ்கோ ஜேவியர்' (San Francisco Javier), 'கன்சிப்சியன்' ( Concepción), 'சான்டா அனா' (Santa Ana), 'சான் மிகுயேல்' (San Miguel), 'சான் ரப்யேல்' (San Rafael ) மற்றும் 'சான் ஜோஸ்' (San José ) போன்றவை. அவை 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. அந்த ஆறு இடங்களும் 'சிக்விடோஸ்' (Chiquitos) நகர்புறத்தின் போற்றத்தக்க முறையில் ஒரு சொத்தாக இருந்த குடியிருப்பு என்று கருதிய உலக புராதான மைய அங்கத்தினர் ( World Heritage Committee) இந்த இடத்தை யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Sites ) 1990 ஆம் ஆண்டு டிசம்பர் (December) 7 முதல் 12 ஆம் தேதி வரை 'கானடா' (Canada) நாட்டில் நடைபெற்ற அங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்தார்கள்.
ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ் : வரலாறு
(History of the Jesuit Missions of the Chiquitos )
1567 ஆம் ஆண்டு 'பொலிவியா'விற்கு வந்த 'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்' என்பவர்கள் (மதகுருமார்கள்) அங்கிருந்த இந்தியர்களை ரோமன் கதோலிக்க (Roman Catholic) பிரிவில் நம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற எண்ணி அதற்காக முதலில் 'போடோசி' (Potosi) நகரில் ஒரு சிறு மத மாற்ற கல்லூரியை துவக்கினார்கள். அதனைத் தொடர்ந்து 'சாந்தாக்ருஸ் டி லா சைரியாவில்' (Santa Cruz de la Sierra) 1592 ஆம் ஆண்டு தொழுகை இடத்துடன் கூடிய ஒரு கட்டிடத்தை அமைத்தார்கள்.
1671 ஆம் ஆண்டு ஜெசுஸ் குருமார்கள் மொக்சோஸ் (Moxos) இந்தியரை மதமாற்றம் செய்ய அனுப்பபட்டார்கள். அப்போது 'சாந்தாக்ருஸ்' நகரின் கவர்னராக இருந்த 'அகஸ்டின் கிடர்ரேஸ் டி அர்கா' (Agustin Gutierrez de Arca) என்பவர் கொடுத்த ஊக்கத்தினால் 'சிக்விடோஸ்' என்ற இடத்துக்கு அந்த மதகுருமார்கள் வந்தார்கள். பின்னர் ஏற்பட்ட பத்து குடியிருப்புக்களில் 1696 ஆம் ஆண்டு முதலாவது ஏற்படுத்தப்பட்ட மத மாற்றப்பட்டவர் குடியிருப்பு 'சான் பிரான்சிஸ்கோ' ஜேவியரில் அமைக்கப்பட்டது.
'உடோபியா'வின் (Utopia) 'தாமஸ் மோர்' (Thomas More) மற்றும் 'ஆர்கடியாவின்' (Arcadia) 'பிலிப் சிட்னி' (Philip Sydney) போன்றவர்கள் குடியிருப்புக்கள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தபடி , இந்த குடியிருப்பை ஜெசுஸ் குருமார்கள் தேவாலயம், மடாலயம், பள்ளிகள், தொழிலகங்கள் மற்றும் கன்னிப் பெண் அல்லது விதவைகள் தங்குமிடம் போன்ற அனைத்தும் சீரிய முறையில் இருக்குமாறு மிகவும் கவனமாக அமைத்தார்கள்.
இந்தக் குடியிருப்புக்களில் ஏசு குருமார்கள் தவிர வேறு எந்த ஆண் மகனும் அனுமதிக்கப்படவில்லை. 'சிக்விடோஸ்' மொழி மட்டுமே இதற்குள் பேசப்பட்டது. இந்த நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த இந்தியர்களை கிருஸ்துவர்களாக மதமாற்றம் செய்தார்கள். 1767 ஆம் ஆண்டு ஏசு மத போதகர்கள் வெளியேற்றப்பட்டபோதும் அந்த குருமார்கள் அங்கு தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.
'கன்சிப்சியன்' தேவாலயம்
'கன்சிப்சியன்' தேவாலயத்தின் உட்பகுதி
சான் ஜேவியர் தேவாலயம்
சான் ஜேவியர் தேவாலயத்தின் முகப்பு
சான் ஜேவியர் தேவாலயத்தில் செதுக்கப்பட்ட சித்திரங்கள்
சான் மிகுயேல் டி வலேஸ்கோ
சான் மிகுயேல் டி வலேஸ்கோவின் பூஜை மாடம்
சான் மிகுயேல் டி வலேஸ்கோவின் உட்புறப் பகுதி
'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்'சில் என்ன பார்க்கலாம்
(What to See in Jesuit Missions of the Chiquitos )
'சான் பிரான்சிஸ்கோ' மேற்குப் பக்கத்துக் கோடியில் அமைந்த இடம். அங்கு நிறுவப்பட்ட முதலாவது மதமாற்ற பிரிவினர் தங்குவதற்கு அமைக்கப்பட்ட குடியிருப்பில் தற்போது மிஞ்சி இருப்பது பள்ளிக்கூடமும் தேவாலயமும் மட்டுமே. தேவாலயத்தை வடிவமைத்துக் கட்டியவர் 'பாதர் மார்டின் ஸ்மிட்ஸ்ட்' (Father Martin Schmidt) என்பவர். இந்த பொறியாளரே . 1709 ஆம் ஆண்டு இந்த குடியிருப்பு கட்டப்பட்டாலும் அது முற்றிலுமாக கட்டி முடிக்கப்பட்டது 1722 ஆம் ஆண்டில்தான்.
1755 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது 'சான்டா அனா' எனும் குடியிருப்பு . 1768 மற்றும் 1831 ஆண்டுகளில் அதனுள் ஒரு தேவாலயம் (Church) கட்டப்பட்டது. அதன் வழிபாட்டு இடம் (Altar) மற்றும் திருக்கோயிற் சமய உரைமேடை (Pulpit) இரண்டுமே அற்புதமான கலை அலங்காரத்துடன் ( rich decoration) கட்டப்பட்டு உள்ளன.
'சான் மிகுயேல்' 1721 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதனுள் உள்ள தேவாலயம் 'பாதர் ஜான் மேஸ்னர்' (Father Johann Messner) என்பவர் வடிவமைத்தார். அது இன்னும் இங்கு உள்ளது.
'சான் ரப்யேல்' குடியிருப்பில் அங்குள்ள தேவாலயத்தை தவிர வேறு எதுவும் இல்லை. 1750 ஆம் ஆண்டு அதை வடிவமைத்தவர் 'பாதர் மார்டின் ஸ்மிட்ஸ்ட்'. அதனுள் அற்புதமான ஆலய மணி கோபுரம் உள்ளது. தற்போது காணப்படும் அற்புதமான கலை அழகு 1972 ஆம் ஆண்டு அந்த தேவாலயம் புதுப்பிக்கப்பட்டபோது அமைக்கப்பட்டது.
'சான் ஜோஸ்' முதலில் ஏற்பட்ட குடியிருப்பு. 1698 ஆம் ஆண்டு அது ஏற்படுத்தப்பட்டது. அதில் உள்ள விசேஷம் என்ன என்றால் மத்தியப் பகுதியின் நான்கு மூலைகளிலும் தொழுகை இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 1740 ஆம் ஆண்டு அதற்குள் ஒரு பிணமனை (mortuary ) அமைக்கப்பட்டது. 1748 ஆம் ஆண்டு ஆலய மணி கோபுரம் அமைக்கப்பட்டது. 1754 ஆம் ஆண்டு மதகுருக்கள் தங்க வீடுகள் அமைக்கப்பட்டன.
ஜெசுஸ் மிஷன்ஸ் சான் ஜோஸ் டி சிக்விடோஸ்
Author: Pattrön (Creative Commons Attribution 2.0)
ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் சான் ரப்யேல் டி வலேஸ்கோ
Author: Pattrön (Creative Commons Attribution 2.0)
ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் சான் ரப்யேல் டி வலேஸ்கோ
சாண்டா அனா டி டி வலேஸ்கோவின் பூஜை மாடம்
(World Heritage Site Inscription Details )
இருப்பிடம் : S 16 00 W 60 30
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1990
பிரிவு : கலை
தகுதி : IV, V
'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி சிக்விடோஸ்' மையத்தைப் போலவே உள்ள இன்னொரு இடம் 'அர்ஜெண்டினா' (Argentina) மற்றும் 'பிரேசில்' (Brazil) நாடுகளில் உள்ள 'ஜெசுஸ் மிஷன்ஸ் ஆப் தி கவுரானிஸ்' (Jesuit Missions of the Guaranis) என்பது.
இந்த மையம் உள்ள இடத்தை பெரியதாகப்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
இந்த மையத்துக்கு செல்ல வேண்டுமா
(Getting there )
'பொலிவியா'வின் இந்த மையத்துக்கு செல்ல நல்ல பாதை இல்லை. வாகன போக்குவரத்து அத்தனை சரியாக இருக்காது என்பதினால் பயணத்தில் நிறைய தடங்கல் நேரிடலாம். நீங்கள் இங்கு செல்ல வேண்டும் எனில் 'லா பாஸ்' (Laa Paz) நகரில் தங்கிக் கொள்ளலாம் . அங்கு உள்ள ஹோட்டல்களின் விவரத்தை இதன் மீதே (hotels in La Paz ) கிளிக் செய்து பார்க்கவும். இந்த மையத்துக்கு செல்ல 'சான்தாக்ருஸ்சில்' தங்கிக் கொள்வது நல்லது. சான்தாக்ருஸ்சில் உள்ள ஹோட்டல்களின் விவரம் (hotels in Santa Cruz ) அறிய இதன் மீதே கிளிக் செய்யவும். சிறிய நகரம் என்பதினால் ஹோட்டல்களில் அதிக எண்ணிக்கையில் அறைகள் இருக்காது. ஆகவே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment