துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Friday, September 30, 2011

பொலிவியா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

பொலிவியா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read original Article in : Bolivia)


Altiplano de La Paz, Bolivia
அல்டிப்லானோ டி லா பாஸ்
Author: Vico ricab (Creative Commons Attribution 3.0 Unported)

'தென் அமேரிக்காவில்' (South Africa) அனைத்துப் பகுதிகளிலும் நிலம் அல்லது பிற நாடுகள் மற்றும் மாவட்டங்களால் சூழப்பட்ட நாடே 'பொலிவியா' (Bolvia) எனும் நாடு.  இதை சுதந்திர நாடாக உருவாக்கியவருடைய பெயர் 'சிமன் பொலிவார்' என்பது (Simón Bolívar). ஆகவேதான்  'வெனிசூலா'வை (Venezuelan) சேர்ந்தவரான அவர் பெயரை இதற்கு சூட்டினார்கள். இந்த நாட்டைத் தவிர அவர் 'கொலம்பியா' (Colombia) , 'ஈக்வீடார்' (Ecuador), 'பனாமா'(Panama), 'பெரு' (Peru) மற்றும் 'வெனின்சூலா' போன்ற நாடுகளின் விடுதலைக்கும் வழிவகுத்த அரசியல்வாதி ஆவார். 'பொலிவியா'வின்  எல்லைகள் கிழக்கு மற்றும் வடக்கில் 'பிரேசில்' (Brazel) தெற்கில் 'பெருகுவெ' மற்றும் 'அர்ஜென்டினா' ( Paraguay and Argentina ), மேற்கில் 'சிலி' மற்றும் 'பெரு' (Chile and Peru) போன்ற நாடுகளுடன் உள்ளன. இந்த நாட்டின் பரப்பளவு 1,098,581 சதுர கிலோ மீட்டர் (424,163 சதுர மைல்) மற்றும்  ஜனத்தொகை 10 மில்லியன் என்ற அளவில் உள்ளது.
A native on a floating island at Lake Titicaca, Bolivia
டிடிககா ஏரியின் மத்தியில் மிதக்கும் தீவில் ஒரு பயணி
Author: Yves Picq (Creative Commons Attribution 3.0 Unported)

'பொலிவியா'வின் தலநகரமான 'லா பாஸ்' (La Paz) என்பதே உலகின் மிக உயரமான பகுதியில் அமைந்து உள்ள நகரமாகும். இதன் ஜனத்தொகை 835,000. ஆனால் இந்த நகரை  விட அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்கள்  அதாவது  'சாந்தாக்ரூஸ்' (Santhacruz) நகரில் 1,450,000 மக்களும் 'எல் அல்டோ' (El Alto)வில்  860,000 மக்களும் உள்ளனர்.
பொல்வியாவின் மிக அதிக உயரமான மலை உச்சி 'நிவடோ சஜாமா'(Nevado Sajama). அதன் உயரம் 6,542 மீட்டர் (21,463 அடி ). 'பொலிவியா' மற்றும் 'பெரு' (Peru)  நாடுகளுக்கு இடையே 3,805 மீட்டர் உயரத்தில் உள்ள 'டிடிககா' (Lake Titicaca) என்ற ஏரியே கடற் பயணத்துக்கேற்ற உள்ள மிகப் பெரிய ஏரியாகும்.
La Paz, Bolivia

பொலிவியா பற்றிய செய்திகள்
(Fast Facts about Bolivia)
அதீகாரபூர்வப் பெயர் : பொலிவியா ஜனநாயக குடியரசு
தலை நகரம் : லா பாஸ் (812,000)
ஜனத்தொகை : 8,857,900
பேசும் மொழிகள் : ஸ்பானிஷ் {Spanish (official)}, குவிச்சுவா (Quechua), அய்மாரா (Aymara) போன்றவை
நாணயம் : பொலிவியானோ (BOB)
மதம் : ரோமன் கத்தோலிக் (95%), பரோடேஸ்டன்ட் (5%)
பரப்பளவு : 1,098,580 சதுர கிலோமீட்டர் (424,164 மைல் )
பிராந்தியம் (Region) : தென் ஆப்ரிக்கா

பொலிவியாவுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Bolivia)
'பொலிவியா'வின் பருவ நிலை ஒரு சமயத்தில்  வடதுருவத்துக்குரிய அதி வெட்பமாகவும் அல்லது இன்னொரு சமயத்தில் மிகக் குளிரான மற்றும் உலர்ந்த , வறண்ட நிலையிலும் உள்ளது. மழை காலத்தில் சேறு நிறைந்த சாலைகளில் செல்வது கடினமாக இருக்கும். மே (May) மாதம் முதல் அக்டோபர் (October) முடிய மேகம் தெளிவாக இருக்கும், அனைத்து இடங்களுமே வறண்டு இருக்கும். ஆகவே ஜூன் (June) மதம் முதல் செப்டம்பர் (September ) மாதம் வரை இந்த நாட்டிற்கு செல்ல சிறந்த காலம் ஆகும். மேலும் அந்த நேரங்களில் நிறைய பண்டிகைகளையும் (major festivals) காண முடியும். வடக்கு அமெரிக்கா (North Amerixca) மற்றும் ஐரோப்பியாவில் (Europe) இந்த நேரமே விடுமுறைக் காலமாக இருப்பதினால் அந்த மாதங்களில் கூட்டம் அதிகம் இருக்கும். அனைத்து பொருட்களின் விலைகளும் மற்ற மாதங்களின் விலைகளைக் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிகமாகவே (Higher Price ) இருக்கும்.

எச்சரிக்கை
(Travel Warning)
'பொலிவியா'வில் திடீர் திடீர் என சாலைகளில் போராட்டங்கள் (demonstrations) நடைபெறும். அந்த நேரத்தில் அங்கிருந்து சென்று விடுவது நல்லது. ஏன் எனில் அந்த சாதாரணமாக  துவங்கும் போராட்டம் பல நேரங்களில் வன்முறைப் போராட்டமாக வெடித்து உங்கள் பயண திட்டத்தைக் கெடுத்து விடும் (disrupt your itinerary). அப்படிப்பட்ட போராட்டங்களினால் சாலைகள் முற்றுகை இடப்பட்டு யாருமே செல்ல முடியாத அளவு பல நாட்களுக்கு போக்குவரத்து பாதை முடக்க விடப்படும். இந்த மாதிரியான சாலை முடக்கப் போராட்டங்கள் முக்கியமாக 'லா பாஸ்' மற்றும் 'கோச்சபம்பா' (La Paz and Cochabamba) போன்ற இடங்களில் அதிகமாகவே உள்ளது. ஆகவ寇 உள்ளூர் செய்திகளை தெரிந்து கொண்டப் பின்னரே அந்தந்த நாளின் பயணத்தை தொடர வேண்டும்.
அங்கு சென்றால் சாதாரணமாக தின உபயோகத்தில் பயன்படுத்தப்படும் மெல்லிய  உடைகள் (Lightweight clothing) போதும். ஆனால் 'ஆண்டிப்லேனோ' (Altiplano), 'பியூனா'வின் சில பகுதிகள் (Puna), 'லா பாஸ்', 'ஒரூரோ'  (Oruro) மற்றும் 'போடோசி' (Potosi) போன்ற இடங்களில் தங்க வேண்டி இருந்தால் மிதமான குளிருக்கு ஏற்ப கனமான உடைகளை எடுத்துச் செல்வது அவசியம்.

விமானம் மூலம் செல்ல
(Getting into Bolivia By Plane )
2007 ஆம் ஆண்டு மார்ச் (March) மாதம் முதல் 'பொலிவியா'வின் 'லாயிட் ஏரியோ பொலிவியானா' (Lloyd Aereo Boliviano) எனும் தேசிய விமான சேவை நிறுத்தப்பட்டு விட்டதினால் 'பொலிவியா'விற்கு விமானம் மூலம் செல்வதில் பல சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆகவே நீங்கள் விமானம் மூலம் அங்கு செல்ல நினைத்தால் 'மியாமி' விமான நிலையத்தில் இருந்து 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' (American Airlines) விமான சேவை மூலம் செல்லலாம்.
'லா பாஸ்' சர்வதேச விமான நிலையம் {La Paz International Airport (LPB)} நகரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதினால் விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன. நாட்டை விட்டு விமானம் மூலம் வெளியேறும் சமயத்தில் வெளியேறும் வரி  (departure tax) US$25 செலுத்த வேண்டும்.

உள்ளூரில் பயணிக்க
(Travel within Bolivia )
அவ்வப்போது நடைபெறும் போக்குவரத்து சேவை ஊழியர்களின் வேலை நிறுத்தங்களினால் நமது திட்டங்கள் தடைபெறும். ஆகவே உள்ளூர் நிலைமையை கேட்டு அறிந்து கொண்டு செல்ல வேண்டும். அண்டை மானிலங்களுக்கு (Cross Country) செல்லும் பஸ் வசதியில் இரவில் செல்லும் (Services at Night) பஸ்களின் கட்டணம் குறைவாக உள்ளது.
Moody Lake Titicaca, Bolivia
டிடிகாகாவில் மூடி ஏரி
Author: Pallares1 (public domain)

பொலிவியாவின் முக்கிய நகரங்கள்
(Principal Cities of Bolivia)
(1) லா பாஸ்
(La Paz)
'பொலிவியா'வின் தலை நகரம் மற்றும் இரண்டாவது பெரிய நகரம். ஆனால் 'பொலிவியா'வின் நகரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் 'லா பாஸ்' நகரின்  ஜனத்தொகை அதிகம் .
(2) சாந்தா குருஸ் டி லா சிரியா
(Santa Cruz de la Sierra)
பொலிவியாவின் வளமான மற்றும் ஜனத்தொகை மிகுந்த நகரம்
(3) எல் ஆல்டோ
(El Alto)
'லா பாஸின்' புறநகர் பகுதி . வேகமாக முன்னேறி வரும் நகரம்.
(4) கோச்சபம்பா
(Cochabamba)
மத்திய பொலிவியாவின் ஆன்டியன் பள்ளத்தாக்கில் உள்ளது இந்த நகரம் நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.
(5) சுக்ரீ
(Sucre)
சுக்ரீ நகரம் அதிக ஸ்பானிஷ கலாச்சாரத்தைக் கொண்ட நகரம். இதன் உள்ளே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களினால் இந்த நகரம் யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக ( UNESCO World Heritage Site) ஏற்கப்பட்டு உள்ளது.
(6) ஒரூரோ
(Oruro)
'சுக்ரீ' மற்றும் 'லா பாஸ்' என்ற இரண்டு நகரங்களுக்கும் இடையே உள்ள இந்த நகரம் ஈயம் மற்றும் தகர உலோகம் போன்றவை உள்ள சுரங்க இடம் ஆகும்.
(7) தாரீஜா
(Tarija)
1574 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் அரசினால் 'ஆன்டியன்' மேட்டு நிலப் பகுதியில் அமைக்கப்பட்ட நகரம்.
(8) போடோசீ
(Potosí )
வெள்ளி தாதுப் பொருள் சுரங்கள் உள்ள நகரம்
(9) சகபா
(Sacaba )
'கோச்சம்பா' நகரின் இரண்டாவது பெரிய மாகாணம். கோகோ உற்பத்தியை நிறுத்தியபோது 2002 ஆம் ஆண்டு இங்கு பெரிய கலவரம் நடந்தது.
(10) யகுய்பா
(Yacuíba )
அர்ஜென்டினா நாட்டின் எல்லையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரம்

பார்க்க வேண்டிய இடங்கள்
(Travel Destinations in Bolivia )
(1) டிடிகாகா ஏரி
(Lake Titicaca )
படகுப் போக்குவரத்து மூலம் வியாபாரம் செய்ய பயன்படுத்தப்படும் மிகப் பெரிய ஏரி
(2) சலார் டி யுயுனி
(Salar de Uyuni )
உலகின் மிகப் பெரிய உப்பளம் உள்ள இடம்
(3) லகுனா வேர்டே
(Laguna Verde )
அல்டிபிலோனோவில் உள்ள இன்னுமொரு பெரிய உப்பளம்.
(4) கிறிஸ்டோ டி லா கன்கார்டியா
(Cristo de la Concordia )
உலகிலேயே மிகப் பெரிய ஏசு கிறிஸ்து சிலை உள்ள இடம்

யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites)
(1) போடோசி நகரம்
(City of Potosí)
போடோசியின் உள்ளூர். நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது
(2) ஜெசூட் மிஷன்ஸ்  ஆப் தி  சிகுவிடோஸ்
(Jesuit Missions of the Chiquitos)
17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்திய கிருஸ்துவர்கள் வந்து குடியேற ஏற்படுத்தப்பட்ட பகுதி.
(3) வரலாற்று சிறப்பு மிக்க சுக்ரீ
(Historic City of Sucre )
பொலிவியாவின் முதலாம் புராதான சின்ன மையம்
(4) பெர்டி டி சமைடா
(Fuerte de Samaipata )
இன்கா காலத்து நாகரீகத்தைக் காட்டும் இடத்தின் தொல்பொருள் ஆராச்சி மையம்
(Tiwanaku )
பொலிவியாவின் மிகப் பழைய நாகரீகத்தைக் காட்டும் மற்றுமொரு மையம்
(6) நோயால் கேம்ப் மேர்கேடோ நேஷனல் பார்க்
(Noel Kempff Mercado National Park )
அமேசான் பேசினில்  உள்ள மற்றொரு பார்க் 

No comments:

Post a Comment