பொலிவியா - சலார் டி உயுனி
(Read original Article in : - Salar de Uyuni)
(Read original Article in : - Salar de Uyuni)
'சலார் டி உயயுனி ' (Salar de Uyuni) அல்லது 'சலார் டி துனூபா' (Salar de Tunupa) என்பது உலகிலேயே மிகப் பெரிய உப்பளம் (Salt Flat). இதன் பரப்பளவு 10,582 சதுர கிலோ மீட்டர் (4085 சதுர மைல் ). இது 'பொலிவியா'வின் (Bolivia) போடோசி (Potosí) மற்றும் ஒரூரோ (Oruro ) என்ற இரண்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ளது.
'சலார் டி உயுனி ' 3650 மீட்டர் உயரத்தில் 'ஆண்டிஸ்சின்' மேல் முனைப் (crest of the Andes) பகுதியில் உள்ளது. 'ஆண்டிஸ்' மேட்டு நிலத்தின் மீது உள்ள இந்த இடத்தில் ஹேலைட் (Halite) மற்றும் கால்சியம் சல்பேட் எனப்படும் ஜிப்சம் (Gypsum) போன்ற கனிப் பொருட்கள் கிடைகின்றன. உண்மையில் 40000 ஆண்டுகளுக்கு முன்னர் வற்றி விட்ட (Dried) 'மின்சின்' என்ற ஏரியின் (Lake Minchin) பகுதியே 'சலார் டி உயுனி ' . அந்த ஏரி வற்றியதும் தற்போது உள்ள இரண்டு ஏரிகளான 'பூபூ' (Poopo) மற்றும் 'உரு உரு' (Uru Uru) என்பவற்றை அது தோற்றுவித்தது.

அது மட்டும் அல்லாமல் அந்த வறண்டு போன ஏரி 'சலார் டி உயுனி' மற்றும் 'சலார் டி கொய்பாசா'என்ற இரண்டு உப்பளங்களையும் தோற்றுவித்தது. 'சலார் டி உயுனி' என்பது 'அமெரிக்கா'வின் (America) 'போன்னிவில்லி' (Bonniville) உப்பளத்தை விட 25 மடங்கு பெரியது. 'சலார் டி உயுனி'யில் சுமார் 10 மில்லியன் டன் உப்பு உள்ளதாக தோராயமாக கணக்கீட்டு உள்ளார்கள் என்றாலும் ஒரு வருடத்திற்கு 25,000 டன் உப்பு மட்டுமே வெட்டி எடுக்கப்படுகின்றது.
இந்த சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் அனைவருமே 'கொல்சானி' கூட்டுறவு (Coperative) சங்கத்தினர். அவர்கள் உடல் வலிமையுடன் இருக்க 'கோகா' (Coca) இலைகளை மென்று கொண்டே இருப்பார்கள்.
நவம்பர் (November) மாதத்தில் இங்கு 'சிலி' (Chile) மற்றும் ஜேம்ஸ் அண்ட் ஆண்டியன் (James's and Andean) நாடுகளை சேர்ந்த 'பிளேமிங்கோ' (Flamingos) எனும் பறவை மிக அதிகமாக குஞ்சு போடும். அவை பார்க்கவே ரம்யமாக இருக்கும்.

இங்கு சென்று பார்க்க வேண்டும் எனில் 4WD வண்டிகளான 'டோயோடோ லான்ட் க்ருசேடர்ஸ்' (Toyota Landcruisers) போன்ற கனரக வண்டியில் போக வேண்டும். இங்கு சென்று வர குறைந்தது 3-4 நாட்கள் ஆகும். இது கடும் குளிரான இடம் (frigid) ஆனாலும் இயற்கை காட்சிகள் அற்புதமாக இருக்கும். ஆகவே அதற்கு ஏற்ப நல்ல கெட்டியான துணிகளையும் (Warm Clothes) , குடிக்க நல்ல தண்ணீரையும் (Drinking Water) நிறைய கொண்டு செல்ல வேண்டும். கண்களில் சூரிய ஒளிவீச்சை தடுக்கும் கறுப்புக் கண்ணாடி (Sun Glass) அணிவது அவசியம்.
இதைப் போன்ற மற்றொரு இடம்
(Related Sites )
லகுனா வேரடி
(Laguna Verde )
'பொலிவியா'வின் 'ஆண்டிப்லேனோ'வின் இன்னொரு உப்பளம்
No comments:
Post a Comment