பொலிவியா - ஒரூரோ
(Read Original Article in :- Oruro)
(Read Original Article in :- Oruro)
'பொலிவியா'வின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ளது 'ஒரூரோ' (Oruro ) என்ற நகரம். 2011 ஆண்டு கணக்கின்படி இதன் ஜனத்தொகை 235,000 . இது 'லா பாஸ்' (La Paz) மற்றும் 'சுக்ரீ' (Sukre) போன்ற நகரங்களுக்கு செல்லும் பாதி வழியில் உள்ளது. இந்த நாடு கடல் மட்டத்தில் இருந்து 3,706 மீட்டர் (12,159 ft) உயரத்தில் உள்ளது.
சண்டோரியோ டி லா விர்ஜென் டெல் சொகாவோன்
Author: José Porras/Elemaki (Creative Commons Attribution 3.0 Unported)
Author: José Porras/Elemaki (Creative Commons Attribution 3.0 Unported)
மத்திய அமெரிக்காவின் வறண்ட பிரதேசமான உரூ -உரூ மற்றும் பூபூ (Uru-Uru and Poopó) போன்ற உப்பு நிலங்களின் வடக்குப்புறம் 'ஒரூரோ' அமைந்து உள்ளது. இந்த நகரில் குளிர் அதிகம். ஆகஸ்ட் முதல் அக்டோபர் (August Till October) வரை வெயில் காலமாக உள்ளது. உப்பு வள பூமிக்கு அருகில் இந்த நகரம் இருந்தாலும் நவம்பர் முதல் மார்ச் வரை (November till March) மழை காலமாக உள்ளது. மே முதல் ஜூலை (May to July) குளிராக இருக்கும். அந்த மாதங்களில் இரவில் குளிர் நிலை -20°C வரை கீழே போகும்.
இந்த நகரின் சுரங்களில் உள்ள இடத்தில் வெள்ளி தாது அதிகம் கிடைக்கின்றது என்பதினால் 1606 ஆம் ஆண்டு 'ஒரூரோ' நிர்மாணிக்கப்பட்டது. முதலில் இதன் பெயர் ரியல் வில்லா டி சான் பிலிப்ப் டி ஆஸ்திரியா (Real Villa de San Felipe de Austria) என்பதே. அந்தப் பெயரை ஸ்பெயின் (Spain) நாட்டு மன்னரான பில்லிப் III (King Philip III ) யின் நினைவாக வைத்தார்கள். அந்த நாட்டின் வெள்ளித் தாது (Silver) முழுவதும் வெட்டி எடுக்கப்பட்டதின் பிறகு அந்த பொருளின் வளமும் வற்றி விட்டாலும், மீண்டும் 19 ஆம் நூற்றாண்டில் அங்கு வெள்ளீயம் எனும் தகர (Tin) தாதுப் பொருள் நிறையக் கிடைக்க ஆரம்பிக்க அந்த நகரம் வெள்ளீயம் எனும் தகர உற்பத்தியில் பெரும் செல்வம் பெற்றது. ஆனால் அந்த தாதுப் பொருளின் வளமும் தீர்ந்துவிட (Exhausted) 'ஒரூரோ'வின் செழிப்பு முடிவுக்கு வந்தது.
ஒரூரோவின் ஒரு திருவிழா காட்சி
Author: José Porras/Elemaki (Creative Commons Attribution 3.0 Unported)
Author: José Porras/Elemaki (Creative Commons Attribution 3.0 Unported)
இன்று 'பொலிவியா'வின் முக்கியமான சுற்றுலாப் பயண இடமாக 'ஒரூரோ' உருவாகி வருகின்றது. 'டி ஒரூரோ' எனும் திருவிழாவின் போது (Carnival de Oruro) நிறையக் கூட்டம் வருகின்றது. ஹிஸ்பானிக் காலத்திற்கும் முந்தய (prehispanic) காலத்தின் கலாச்சாரத்தை சேர்த்து கிருஸ்துவக் பண்டிகையாக (Christian celebration) கொண்டாடப்படும் அந்தப் கிராமியப் பண்டிகை யுனெஸ்கோ (UNESCO) வினால் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை. அந்தப் பண்டிகையின்போது ஊர்வலங்களும், கிராமிய நடனங்களும் (Folk Dances) கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
'லா பாஸில்' (La Paz) இருந்து 'ஒரூரோ'விற்கு 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் பஸ்ஸில் (Bus) செல்ல முடியும். அல்லது 'கோச்சம்பரா'வில் (Cochabamba) இருந்தும் சுமார் ஐந்து மணி நேர பஸ் பயணம் செய்து இந்த நகரை அடையலாம்.
இந்த நகரில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Oruro)
(1) மியூசியோ எட்னோக்ராபிகோ மினிரோ
(Museo Etnográfico Minero )
பொலிவியாவின் சுரங்கத் தொழிலை எடுத்துக் கட்டும் விதத்தில் அமைந்துள்ள சுரங்கம்
(2) மியூசியோ மினிரலாஜிகோ
(Museo Mineralógico )
மரபற்றுப் போனவற்றின் பழஞ்சின்னம், இயற்கை பாறைகளின் மாதிரிக் கற்கள் மற்றும் பிற தாதுப் பொருட்களின் காட்சியகம்.
(3) மியூசியோ நஷனல் அன்றோபொலோஜிகோ எடுயாரடோ லோப்லேசஸ் ரிவஸ்
(Museo Nacional Antropológico Eduardo Lóplez Rivas )
உள்ளூர் இனத்தவர், பண்டிகை போன்றவற்றின் வரலாற்றைக் கூறும் மனித இன ஆராய்ச்சிக்குரிய காட்சியகம்
(4) மியூசியோ படினோ
(Museo Patiño )
மறைந்துவிட்ட வெள்ளீய தாது தொழில் அதிபரான சைமன் இட்டுரீ படினோவின் வீட்டில் அமைக்கப்பட்டு உள்ள காட்சியகம்.
No comments:
Post a Comment