ஜெசுட் மிஷன்ஸ் ஆப் குவரனிஸ் , அர்ஜென்டைனா மற்றும் பிரேசில்
(Read Original article in :- Jesuit-missions-of-the-guaranis_argentina)
(Read Original article in :- Jesuit-missions-of-the-guaranis_argentina)
'குவாரனிஸ்'சின் 'ஜெசுட் மிஷன்ஸ் ' எனப்படும் மதப் பிரசார ஸ்தாபனம் (Jesuit Missions of the Guaranis) 'அர்ஜென்டைனா' (Argentina) மற்றும் 'பிரேசில்' (Brazil) போன்ற நாடுகளில் ஐந்து ஸ்தாபனங்களை நிறுவி உள்ளது. அவை 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவை (America) சேர்ந்த 'குவாரனிஸ்' இனத்தவர்களிடையே மதப் பிரசாரம் செய்யவே அமைக்கப்பட்டன. இந்த அனைத்து இடங்களில் உள்ள சின்னங்களும் யுனெஸ்கோ உலக புராதான பாதுகாப்பு மைய சின்னம் (UNESCO World Heritage Site) என்ற அங்கீகாரத்தைப் பெற்று உள்ளது. இந்த அங்கீகாரம் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று 'புயினோஸ் ஐரேஸ்' நகரில் கூடிய உலக புராதான சின்ன மையத்தின் அங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
'குவாரனிஸ்'சின் 'ஜெசுட் மிஷன்ஸ்' உள்ள இடத்தில் என்ன பார்க்கலாம்.
(What to See in the Jesuit Missions of the Guaranis )
இங்குள்ள ஐந்து ஜெசுட் மிஷன்களும் பல்வேறு நிலைகளில் உள்ள இடிபாடுகளாக உள்ளன. அவை 'பிரேசிலில்' உள்ள 'சையோ மிகுயேல் தாஸ் மிசொயெஸ்' (São Miguel das Missões), மற்றும் 'அர்ஜென்டைனா'வில் உள்ள 'சான் இக்னஷியோ மினி' (San Ignacio Mini), 'நுஷ்ட்ரா செனோரா டி சாந்தா அனா' (Nuestra Señora de Santa Ana), 'நுஷ்ட்ரா செனோரா டி லோரிடோ' (Nuestra Señora de Loreto) மற்றும் 'சாந்தா மரியோ லா மேயர்' (Santa María la Mayor) என்பன. அவை அனைத்தும் பல்வேறு விதங்களில் (Different layouts) கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. அது அவசியம் காண வேண்டிய ஒன்றாகும்.
பிரேசிலில் சிதைந்த நிலையில் உள்ள
'சையோ மிகுயேல் தாஸ் மிசொயெஸ்'
Author: temponotempo (Creative Commons Attribution 2.0)
'சையோ மிகுயேல் தாஸ் மிசொயெஸ்'
Author: temponotempo (Creative Commons Attribution 2.0)
அர்ஜென்டைனாவில் சிதைந்த நிலையில்
உள்ள 'சான் இக்னஷியோ மினி'
Author: Dario Alpern (Creative Commons Attribution ShareAlike 3.0)
'சையோ மிகுயேல் தாஸ் மிசொயெஸ்'சின் முன் பக்கத் தோற்றம்
Author: Leandro Kibisz (Creative Commons Attribution ShareAlike 2.5)
இவை உள்ள இடம்
(Location)
'சையோ மிகுயேல் தாஸ் மிசொயெஸ்' ன்பது பிரேசில் நாட்டில் 'ரியோ கிராண்டி டோ சுல்' (Rio Grande do Sul) எனும் பகுதியில் இருக்க மற்ற நான்கும் 'அர்ஜெண்டினா'வின் 'மிசோனிஸ்' (Misiones) மாகாணத்தில் உள்ள 'பராகுவே' (Paraguay) மற்றும் பிரேசில் நாட்டின் இடையே உள்ள குறுகிய பகுதியில் (Narrow Strip) உள்ளன.
இந்த உலக புராதான சின்ன விவரம்
(World Heritage Site Inscription Details)
(1) சையோ மிகுயேல் தாஸ் மிசொயெஸ் :-S28 32 36.0 W54 15 57.0
(São Miguel das Missões)
(2) சான் இக்னஷியோ மினி :- S27 15 00.0 W55 31 00.0
San Ignacio Mini:
(3) நுஷ்ட்ரா செனோரா டி சாந்தா அனா :- S27 23 00.0 W55 33 58.0
Nuestra Señora de Santa Ana:
(4) நுஷ்ட்ரா செனோரா டி லோரிடோ: -S27 30 00.0 W55 32 00.0
Nuestra Señora de Loreto:
(5) சாந்தா மரியோ லா மேயர் :- S27 33 00.0 W55 20 00.0
Santa María la Mayor:
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1984
பிரிவு : இயற்கை / கலை
தகுதியின் விவரம் : IV
இதைப் போன்ற மற்ற இடங்கள்
ஜெசுட் மிஷன்ஸ் ஆப் குவாரனிஸ்' போன்று யுனெஸ்கோ உலக புராதான சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்றொரு இடமான 'ஜெசூட் மிஷன்ஸ் ஆப் சிகுடோஸ்' (Jesuit Missions of the Chiquitos) என்பது 'பொல்வியா'வில் (Bolivia) உள்ளது.
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment