துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Monday, July 18, 2011

ஆன்டிகுவா மற்றும் பார்புடா - சுற்றுலா குறிப்புகள்

ஆன்டிகுவா மற்றும் பார்புடா சுற்றுலா குறிப்புகள்
(Read Original Article in :Antigua-and-barbuda )


Beach at Antigua and Barbuda
ஆன்டிகுவா மற்றும் பார்புடா கடற்கரை
Author: Z_dead (Creative Commons Attribution 2.0 Generic)

'ஆன்டிகுவா' மற்றும் 'பார்புடா' (Antigua and Barbuda) என்ற இரண்டு நாடுகளுமே இரண்டு தீவுகள் ஆகும். அவை அட்லாண்டிக் மற்றும் கரீபியன் கடல்களின் (Atlantic and Carribean sea) நடுவில் உள்ளன. அந்த நாடுகளின் மற்ற குட்டித் தீவுகள் ' கிரேட்பர்ட் தீவு (Great Bird Island), 'கிரீன் தீவு' (Green Island), 'கினியா தீவு' (Guinea Island), 'லாங் தீவு' (Long Island), 'மைடின்' தீவு (Maiden Island) மற்றும் யார்க் தீவு (York Island) போன்றவை ஆகும். மேலும் 'ஆன்டிகுவா' மற்றும் 'பார்புடா' என்ற இரு தீவுகளுமே 'லெஸ்செர் ஆண்டில்ஸ்' (Lesser Antilles) என்ற நாட்டை சேர்ந்த 'லீவார்ட்' தீவுகளின் (Leeward Islands) மத்தியப் பகுதியில் உள்ளது.
Antigua shoreline
'ஆன்டிகுவா' கடற்கரைப் பகுதி
Author: Calyponte (Creative Commons Attribution 3.0 Unported)

'ஆன்டிகுவா' மற்றும் 'பார்புடா' என்ற இரண்டின் பரப்பளவு 440 சதுர கிலோ மீட்டர் (sq km) ஆகும். 2009 ஆம் ஆண்டின் கணக்கின்படி அவற்றின் ஜனத்தொகை 87,000 (population) மற்றும் பொருளாதார வளர்ச்சியின் GDP என்பது 1.472 பில்லியன் (billion) ஆகும். இந்த இரண்டு தீவுகளும் 01-11-1981 ஆம் தேதியன்று பிரிட்டனின் ஒன்றிணைந்த குடியரசின் (United Kingdom) கீழ் இருந்து விடுதலைப் பெற்றது. இந்த தீவுகளின் மகாராணி இங்கிலாந்தை (England) சேர்ந்த 'மகாராணி எலிஜிபெத் II' (Queen Elizabeth II) ஆவார் இந்த நாடுகளின் மிகப் பெரிய நகரம் மற்றும் அவற்றின் தலை நகரம் (Capital) 'செயின்ட் ஜான்ஸ்' (Saint John's) என்பதே.
'ஆன்டிகுவா' மற்றும் 'பார்புடா' நாடுகளின் முக்கிய வருமானமே அங்கு வரும் சுற்றுலாப் பயணிகல் மூலமே உள்ளது. இந்த நாடுகளின் கடல்கரை நல்ல வெள்ளை மணல் கொண்ட அந்த கடற்கரைப் பகுதிகளில் அற்புதமான பல தங்கும் (upscale beach resorts) இடங்களும் உள்ளன. இந்த இரண்டு தீவுகளிலும் 'ஆன்டிகுவா' நல்ல வளர்ச்சி பெற்று உள்ளது. ஆனால் 'பார்புடா'வின் வளர்ச்சி அத்தனை புகழும்படியாக (under developed) இல்லை.
'ஆன்டிகுவா' மற்றும் 'பார்புடா' நாடுகளின் சீதோஷ்ண நிலை (Climate) வருடம் முழுவதும் அநேகமாக ஒரே மாதிரியாகவே உள்ளன. அவ்வப்போது இந்த நாடுகளில் ஜூலை முதல் அக்டோபர்வரை (July and October) சூறாவளிக் காற்றும், கடும் புயல்களும் (storms and hurricanes) வீசுகின்றன.
Saint John's, Antigua
'செயின்ட் ஜான்ஸ்'
Author: UKWiki (public domain)

'ஆன்டிகுவா' மற்றும் 'பார்புடா' செல்ல வேண்டுமா
(Going to Antigua and Barbuda )

அல்பானியா (Albania), அர்ஜென்டினா ( Argentina) ஆர்மேனியா ( Armenia) ஆஸ்ட்ரேலியா ( Australia), அஜர்பைஜான் (Azerbaijan), பஹாமா ( Bahamas), பார்படாஸ் (Barbados), பெலாரஸ் (Belarus), பிளிஸ் ( Belize), போட்ஸ்வானா ( Botswana), பிரேசில் ( Brazil), புரூனி ( Brunei), கனடா (Canada), சிலி ( Chile), கியூபா (Cuba), டொமினிகா ( Dominica), பிஜி (Fiji), ஜியோர்ஜியா Georgia), கிரேனடா (Grenada), குயானா (Guyana), ஜமைக்கா (Jamaica), ஜப்பான் (Japan), காசகஸ்தான் ( Kazakhstan), கென்யா ( Kenya), கிரிபாட்டி (Kiribati), கைசிஸ்தான் ( Kyrgyzstan), லிசொதோ ( Lesotho), லைசிஸ்டன்டையின் ( Liechtenstein), மலேசியா ( Malaysia), மலாவி (Malawi), மால்டிவ் (Maldives), மொருஷியஸ் (Mauritius), மெக்ஸிக்கோ( Mexico), மோல்டோவா (Moldova), மொனோக்கோ( Monaco), நாம்பியா ( Namibia), நியூசிலாந்த் (New Zealand), நவரா (Nauru), நார்வே (Norway), பபுவா நியூ குயானா (Papua New Guinea), பெரு ( Peru), ரஷ்யா (Russia), செயின்ட் லூசியா (Saint Lucia), செயின்ட் வின்சன்ட்(Saint Vincent ) மற்றும் கிரெனடின்ஸ் (Grenadines) , சமோவா (Samoa),சிச்சில்ஸ் (Seychelles) சிங்கபூர் (Singapore) , சாலமன் தீவுகள் (Solomon Islands), சவுத் ஆப்ரிக்கா (South Africa), சவுத் கொரியா (South Korea), சுறினாம் (Suriname), சுவாசிலாந்த் (Swaziland), சுவிஸ்ஸர்லாந்த் ( Switzerland), தாஜிகிஸ்தான் (Tajikistan), தான்சனியா( Tanzania), டோங்கா (Tonga), திரினர்ட் (Trinidad), டோபாகோ (Tobago), டுவாலு (Tuvalu), துர்கி (Turkey), துர்க்மெனிஸ்தான் (Turkmenistan ), உகாண்டா (Uganda), யுக்ரயின் (Ukraine ), யுனைடெட் ஸ்டேட்ஸ் (United States), உஸ்பெகிஸ்தான் (Uzbekistan ), வனுவாட்டு (Vanuatu), வெனிஸ்சுலா (Venezuela), ஜிம்பாவே (Zimbabwe), மற்றும் அனைத்து பிட்டிஷ் ராஜ்ய நாடுகள் (British Overseas) போன்றவர்களுக்கு இங்கு செல்ல விசா தேவை (Visa not needed) இல்லை.

விமானம் மூலம் செல்ல
(By Plane )

இந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டும் எனில் முதலில் 'ஆன்டிகுவா'வின் வடமேற்குப் பகுதியில் உள்ள V.C பர்ட்சர்வதேச விமான நிலையம் {V.C. Bird International Airport (ANU)} சென்றுவிட்டு அங்கிருந்து வண்டியில் செல்லலாம். இந்த விமான நிலையத்திற்கு அமேரிக்கா (United States), கானடா(Canada) போன்ற நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகள் உள்ளன. அமெரிக்கன் ஈகல் (American Eagle) , கான்டிநேண்டல் ஏர்லயின்ஸ் (Continental Airlines) , U S ஏர்வேஸ் (US Airways) , ஏர் கானடா (Air Canada), பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), வெர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic), மற்றும் கரீபியன் ஏர்லயின்ஸ் (Carribbean Airlines) போன்ற விமான சேவைகள் உள்ளன.

கப்பல் மூலம்
(By Cruise Ships)

பல இடங்களில் இருந்து 'ஆன்டிகுவா'விற்குச் செல்ல கப்பல் (cruise ships) வழிப் பயண வசதிகள் உள்ளன.
St John's Cathedral, Saint John's, Antigua
செயின்ட் ஜான்ஸ் தேவாலயம்
Author: UKWiki (public domain)

'ஆன்டிகுவா' மற்றும் 'பார்புடா'வின் மிகப் பெரிய நகரங்கள்
(Major Cities in Antigua and Barbuda)

(1) தலைநகரமான 'செயின்ட் ஜான்ஸ்'
(Saint John's - capital )
(2) kodrington
(Codrington )
(3) இங்க்லீஷ் ஹார்பர்
(English Harbour )
(4) பால்மவுத்
(Falmouth)
(5) ஹால்ப் மூன் பே
(Half Moon Bay)

'ஆன்டிகுவா' மற்றும் 'பார்புடா'வின் தீவுகள்
(Islands in Antigua and Barbuda)

(1) ஆன்டிகுவா
(Antigua )
(2) பார்புடா
(Barbuda )
(3) கிராமப் தீவு
(Crump Island)
(4) கிரேட்பர்ட் தீவு
(Great Bird Island)
(5) கிரீன் தீவு
(Green Island )
(6) குவானா தீவு
(Guiana Island )
(7) லாங் தீவு
(Long Island)
(8) பெலிகன் தீவு
(Pelican Island )
(9) ப்ரிக்கி பியேர் தீவு
(Prickly Pear Island )
(10) ரிடோண்டா
(Redonda)
(11) யார்க் தீவு
(York Island)

எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.

No comments:

Post a Comment