துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Monday, July 18, 2011

அஜர்பைஜான் - சுற்றுலாக் குறிப்புக்கள்

அஜர்பைஜான் சுற்றுலாக் குறிப்புக்கள்
(Read Original Article in: - Azerbaijan)
 
Mountain panorama in Azerbaijan
அஜர்பைஜான் மலைப் பகுதி

'அஜர்பைஜான்' ( Azerbaijan) என்ற நாடு 'உரேஷியா'வின் (Eurasia) சட்டசபை மாகாணங்களில் (Caucasus region of Eurasia) ஒன்றாகும். ஒன்பது மில்லியன் (9 Million) மக்கள் ஜனத்தொகையைக் கொண்ட 'அஜர்பைஜானின்' பரப்பளவு சுமார் 86,600 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த நாட்டின் வடக்கில் 'ரஷ்ய' (Russia), வட மேற்கில் 'ஜியார்ஜியா' (Georgia), கிழக்கில் 'அர்மானியா' (Armenia) மற்றும் தெற்கில் இரான் (Iran) நாடுகளின் எல்லைகளும் உள்ளன. இதன் தலை நகரம் 'பாகு'(Baku) என்பது.
'அஜர்பைஜான்'னின் எல்லையில் உள்ள (exclaved landlocked part) நிலப்பகுதி 'ஆர்மேனியாவின்' வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையேயும், 'இரானின்' தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையேயும் சிறிதளவு ஊடுருவி உள்ளது. அதாவது 'ஆர்மேனியா' மற்றும் 'இரான்' நாடுகளுடனான அதன் எல்லை கூம்பு போல அந்த நாடுகளுக்கு உள்ளே நீண்டு உள்ளது. அது போலவே 'துர்கி ' (Turkey) நாட்டின் வட மேற்குப் பகுதியிலும் 'அஜர்பைஜான்'னின் எல்லைப் பகுதி புகுந்து உள்ளது.
Bibi Heybat Mosque in Baku, Azerbaijan
பாகுவில் பீபி ஹெய்பாட் மசூதி

'அஜர்பைஜான்'னின் சில பிரதேசங்களான கார்க்கி' ( Karki ), 'யுக்காரி அஸ்கிபாரா' (Yukhary Askipara), 'பார்க்குடார்லி' (Barkhudarly) மற்றும் 'சொபுலூ' (Sofulu) போன்றவை (Enclaves) 1988 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டுவரை 'அஜர்பைஜான்'னிற்கு எதிராக 'நாகூர்னா-கராபக்' (Nagorno-Karabakh) என்ற மாகாணம் கிளர்ச்சி செய்த போது 'ஆர்மினியா'வின் ஆட்சியின் கீழ் வந்தன. 1991 ஆம் ஆண்டு ' நாகூர்னா-கராபக் என்ற மாகாணம் 'அஜர்பைஜான்'னின் நாட்டில் இருந்து தான் விடுதலைப் பெற்று விட்டதாக (declared independence) அறிவித்துக் கொண்டாலும் அந்த நாட்டை உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை (not diplomatically recognised).'அஜர்பைஜான்' நாட்டின் மின்சாரத்தின் அளவு 220V 50Hz ஆகும்.
Russian Orthodox Church in Goytepe, Azerbaijan
கொய்டேபேயில் ரஷ்யன் ஆர்தடாக்ஸ் சர்ச்
Author: Emin Bashirov (Creative Commons Attribution 3.0 Unported)

'அஜர்பைஜானில்' மனிதர்கள் வாழ்கை கற்காலம் (stone age) தொட்டு இருந்து உள்ளது என்கிறார்கள். இந்த நாட்டை மாமன்னன் 'அலேக்சாண்டர்' (Alexander) முதல் 'செலியூசிட் மன்னர்' (Seleucid Empire) வரை ஆண்டு வந்து உள்ளார்கள். நான்காம் நூற்றாண்டில் (4th century) 'காகசியன் அல்பேனியர்கள்'தான் (Caucasian Albanians) முதன் முதலாக இந்த நகருக்கு வந்தவர்கள். மேலும் அதே நூற்றாண்டில்தான் மன்னன் 'ஊர்னியார்' (King Urnayr) என்பவர் கிருஸ்துவ மதத்தை அந்த நாட்டு அரசின் மதமாக்கினர்.
ஆனால் அதன் பின் 667 AD யில் 'உமாயாட் கலிபேட்' (Umayyad Caliphate) என்பவர் அந்த நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றினார். AD 1030 ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவின் 'துர்கிக் ஓகுஸ்' (Turkic Oghuz ) என்ற பழங்குடி இனத்தவர் அந்த நாட்டை ஆக்ரமித்துக் கொள்ள நாளடைவில் அவர்களின் ஜனத்தொகை பெருகிக்கொண்டே போயிற்று. அவர்கள் பேசிய மொழியான 'துர்கிக்' (Turkic) என்பதே 'அஜிரி' (Azeris) எனப்படும் தற்போதைய 'அஜர்பைஜானின்' மொழியாகும்.
1813 ஆம் ஆண்டுவரை 'அஜர்பைஜானை 'கனேடேஸ்' (khanates) என்பவர்கள் ஆண்டு வந்தார்கள். அதன் பின் அந்த நாடு ருஷ்யர்கள் வசமாகியது. அதை 'ஆர்மேனியா' (Armenia) மற்றும் 'ஜார்ஜியா'வுடன் (Georgia) சேர்ந்து 'திரான்ஸ்காகசியன் ஜனநாயக கூட்டு பிரதேசமா'க்கினார்கள் (Transcaucasian Democratic Federative Republic) . அதன் பின் 1918 ஆம் ஆண்டு 'அஜர்பைஜான்' தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டாலும் அடுத்த 23 மாதங்களில் சோவியத் யூனியனின் 11 வது சிவப்பு ராணுவத்தை (11th Soviet Red Army ) சேர்ந்த 'போல்ஷெவிக்' (Bolshevik) அதன் மீது படையெடுத்து பிடித்துக் கொண்டு 28 -04 -1920 ஆம் தேதி 'அஜர்பைஜான் சோவியத் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக்' (Azerbaijan Soviet Socialist Republic) என அந்த நாட்டை பிரகடனம் செய்தது.
ஆனால் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதற்கு முன்னால் மீண்டும் 'அஜர்பைஜான்' 18-10-1991 ஆம் தேதியன்று தன்னை அதில் இருந்து விலக்கிக் கொண்டு தனி நாடாக பிரகடனம் செய்து கொண்டது. 'ஆர்மெனியா'வுடனான நோகோர்னோ-கரம்பக் (Nagorno-Karabakh War) சண்டையில் 'அஜர்பைஜான்' நோகோர்னோ-கரம்பக்கையும் சேர்த்து 16 % பிரதேசத்தையும் பல மக்களின் உயிர்களையும் இழந்தது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்ச ஊழல் மற்றும் நிர்வாகத் திறமை இல்லாமை போன்றவை நாட்டின் வளர்ச்சியை பெரிதும் பாதித்து வந்தாலும் இப்போது அந்த நாடு மெல்ல மெல்ல சீரடைந்து வருகின்றது.
Quba area, Azerbaijan
குபா எனும் இடம்
Author: Gulustan (Creative Commons Attribution 3.0 Unported)

'அஜர்பைஜான்' செல்ல வேண்டுமா
(Visiting Azerbaijan)

'அஜர்பைஜான்' செல்ல விசா (Visa) பெற வேண்டும். ஆனால் பாஸ்போர்டில் (Passport) நோகோர்னோ-கரம்பக்கிற்குச் செல்ல அனுமதி வாங்கி இருந்தால் 'அஜர்பைஜானில் நுழைய அனுமதி தரப்படுவது (barred ) இல்லை. அது போல ஆர்மெனியாவை சேர்ந்தவர்களுக்கும் 'அஜர்பைஜானில் நுழைய அனுமதி தரப்படுவது இல்லை.

விமானப் பயணம்
(By Plane )

‘பாகு’ எனும் இடத்தில் உள்ள ஹைதர் அலியேவ் சர்வதேச விமான நிலையம் (Heydar Aliyev International Airport (GYD)) சென்று அங்கிருந்து 'அஜர்பைஜான்' nagarukkul chellalaam. 'அஜர்பைஜான்' தேசிய விமான சேவை 'லண்டன்' (London) , 'மிலன்' (Milan), 'பாரிஸ்'(Paris) போன்ற பல இடங்களுக்கு விமான சேவையை வைத்துள்ளது.

அஜர்பைஜானின் முக்கியமான நகரங்கள்
( Major Cities in Azerbaijan )

தலை நகரம் - பாகு
(Baku - capital )
கஞ்சா
(Ganja)
லன்காரன்
(Lankaran )
மின்ஜிசிவிர்
(Mingechivir)
நப்டலான்
(Naftalan)
நாக்கிசேவன் நகரம்
(Nakhichevan City)
ஷேக்கி
(Sheki)
சும்கயிட்
(Sumqayit)
ஸச்மாச்ஸ்
(Xachmaz)

அஜர்பைஜானில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Azerbaijan)

கினாலுக்
(Khinalug)
கோபுஸ்தானின் பெரோகிளிப்ஸ்
(Petroglyphs of Gobustan)

அஜர்பைஜானில் யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையங்கள்

(UNESCO World Heritage Sites in Andorra)
(1) அரண் அமைக்கப்பட்ட ‘பாகு’ எனும் நகரம், ச்ரீவன்ஷாவின் அரண்மனை மற்றும் ‘மைடின் டவர்’
{(Walled City of Baku with the Shirvanshah's Palace and Maiden Tower (2000) }

(2) கோபுஸ்தான் ராக் ஆர்ட்கல்சரல் லாண்ட்ஸ்கேப்
{(Gobustan Rock Art Cultural Landscape (2007) }

எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்

No comments:

Post a Comment