துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, July 31, 2011

இத்தாலி - ரோம்

ரோம்
(Read Original Article in :- Rome)

Rome, as viewed from the belvedere at Villa Boghese park
வில்லா போக்ஹீசே பார்க்கில் உள்ள பெல்வேடேரே
என்ற இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் ரோம்.
Author: Aviad2001 (Creative Commons Attribution 3.0 Unported)

'இத்தாலி'யின் (Italy) தலை நகரமான 'ரோம்' (Rome) என்பது 'இத்தாலி'யின் மிக பெரிய நகரம். அதன் பரப்பளவு 1285 சதுர கிலோமீட்டர் ஆகும். 'ரோம்' நகரம் இத்தாலிய தீபகற்பத்தின் (Italian Peninsula) மேற்கில் மத்தியப் பகுதியில் உள்ள 'லசியா' (Lazio) மாவட்டத்தில் உள்ள திபர் நதியின் (Tiber River) பக்கத்தில் அமைந்து உள்ளது.
Capitoline Hill, Rome
காபிடோலினே ஹில்
Author: Pascal Reusch (Creative Commons Attribution 3.0 Unported)

 
‘ரோம்’ நகரின் வரலாறு 2700 ஆண்டுக்களுக்கு முற்பட்டது. ‘ரோம்’ நகரம் ரோமன் ராஜ்யத்தில் (Roman Kingdom) 753 BC-509 BC ஆண்டுகளிலும், ரோமன் குடியரசில் (Roman Republic) 508 BC-27 BC ஆண்டுகளிலும், ரோமன் மன்னராட்சியில் (Roman Empire) 27 BC-AD 476 ஆண்டுகளிலும், கிருஸ்துவ மதக் குருக்களின் ஆட்சியின் (Papal States) கீழ் AD 752-1870 ஆண்டுகளிலும் இருந்தது.   இத்தாலிய ராஜ்யத்தில் (Kingdom of Italy) 1861-1946 ஆண்டுகளிலும் அவ்வப்போது அமைக்கப்பட்ட நாடுகளின்  தலை நகரமாக ரோம் நகரம் இருந்தது மட்டும் அல்லாமல் 1946 ஆம் ஆண்டு முதல் தற்போதைய இத்தாலி குடியரசின் (Italian Republic) தலை நகரமாகவும் இருந்து வருகின்றது.  ‘ரோம்’ நகரம் சுற்றுலாப் பயணிகள் பார்க்க விரும்பும் (biggest tourist destinations ) முக்கியமான இடம்.  உலகில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் பார்த்த நாடுகள் பட்டியலில் ‘ரோம்’ நகரம் 11 வது இடத்திலும் ஐரோப்பியாவில் (European Union) அதிகமாக சுற்றுலாப் பயணிகள் பார்த்த நாடுகள் பட்டியலில் ‘ரோம்’ நகரம் 3 வது இடத்தில் உள்ளது. மொத்தத்தில் இத்தாலிக்குச் செல்பவர்கள் காண விரும்பும் (top tourist destination) முக்கியமான நகரம் ‘ரோம்’ என்பதே உண்மை. ‘ரோமில்’ உள்ள வாடிகன் கண்காட்சியகங்களையும் (Vatican Museums ) வருடத்தில் சுமார் 4 மில்லியன் மக்கள் கண்டு களிக்கின்றார்கள்.
Interior of Santa Costanza, Rome
சான்டா கோஸ்டான்சாவின் உள்ளே
Author: Lalupa (Creative Commons Attribution 3.0 Unported)

கடற்கரையில் இருந்து 19 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் இருந்தாலும் அந்த நகரத்தின் சில  பகுதிகள் கடற்கரை வரை நீண்டும் உள்ளது. ரோமில் உள்ள மிக உயரமான மலை (peak) 'மோன்டே மாரியோ' (Monte Mario) என்பது. அதன் உயரம் 139 மீட்டர் ஆகும். நகரத்தின் சீதோஷ்ண நிலை மத்திய தரைக் கடல் பகுதியைப் (Mediterranean climate) போலவே உள்ளது. ஜூலை முதல் ஆகஸ்ட் (July - August) வரை அதிக வெப்பமாக அதாவது  30°C (86°F)  வரை இருக்கும் ஜனவரியில் (January) குளுமையாக உள்ளது. குறைந்த (Low) அளவு வெட்பம் 2.7°C (36.9°F). நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழையின் அளவு {Novembar -129.6 mm (5.1 in)} அதிகம் என்றாலும் டிசம்பர் மாதத்தில் மட்டும் மழையின் அளவு  111mm (4.37 in)} வரை இருக்கும்.

ரோமிற்கு விமானத்தில் செல்ல
(Going to Rome By Plane )

ரோம் நகரின் உள்ளேயே இரண்டு விமான நிலையங்கள் (Two Airports) உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றில் சென்று இறங்கலாம். 'லியோனார்டோ டா வின்சி' ((Leonardo da Vinci) சர்வதேச விமான நிலையம் அல்லது 'பியுமிசினோ' சர்வதேச விமான நிலையங்களில்   {Fiumicino International Airport (FCO)} அனைத்து முக்கியமான விமானங்களும் வருகின்றன. அங்கிருந்து 'லினார்டி எக்ஸ்பிரஸ்' (Leonardy Express) ரயிலைப் பிடித்து மத்திய ரோம் ரயில் நிலையத்திற்குச் (central railway station) 30 நிமிடத்தில் சென்று விடலாம். அதற்கான கட்டணம் €17 மட்டுமே. அது போல 'மெட்ரோபோலிடன்' ரயிலில் (Metropolitan train) ஏறிச் சென்றால் €17 கட்டணத்தில் 'திபுர்டினா' (Tiburtina), 'ஒஸ்டியேன்சி' (Ostiense) மற்றும் 'டிராஸ்டிவேர்சி' (Trastevere Station) போன்ற ரயில் நிலையங்களுக்கு சென்று இறங்கலாம். ஆனால் அந்த ரயில் மத்திய ரோம் ரயில் நிலையத்திற்குச் செல்லாது.
'சியாபினோ சர்வதேச விமான நிலையத்தில்' {Ciapino International Airport (CIA)} குறைந்த கட்டண சேவை விமானங்களே வருகின்றான. அங்கிருந்து ரோம் நகருக்கு செல்லும் மெட்ரோ ரயில் (Metro Line) புறப்படும் இடத்திற்கு பஸ்ஸில் (Bus) செல்ல கட்டணம் €1.20 ஆகும்.
Piazza Venezia, Rome
ரோமில் பியாஸ்ஸா வெனேசிய Author: Zavijavah (Creative Commons Attribution 3.0 Unported


ரோமை சுற்றி உள்ள இடங்கள்
(Tourist Areas of Rome)

(1) ஆவின்டைன் ஹில்
(Aventine Hill)
(2) கம்போ டி பியோரி
(Campo de' Fiori)
(3) காபிடோலைன் ஹில்
(Capitoline Hill (Capitol)
(4) கேலியன் ஹில்
(Caelian Hill (Caracalla)
(5) எஸ்குவிலைன்  ஹில்
(Esquiline Hill)
(6) ஜனிகுளும்
(Janiculum)
(7) லடிரன்
(Lateran)
(8) பலடைன் ஹில்
(Palatine Hill)
(9) பியஸா டெல்லா ரோட்டன்டா
(Piazza della Rotonda)
(10) பியஸா டி ஸ்பக்னா
(Piazza di Spagna)
(11) பியஸா நவோனா
(Piazza Navona)
(12) க்வைரினல் ஹில்
(Quirinal Hill)
(13) ரோமன் பாரம்
(Roman Forum)
(14) வாடிகன் சிட்டி
(Vatican City)
(15) வா வினிடோ
(Via Veneto)

ரோமை 22 மாவட்டங்களாகப் பிரித்து  உள்ளார்கள்.
அவை ஒவ்வொன்றும் ரியோனி (Rioni) என அழைக்கப்படுகின்றன.

(1) போர்கோ
Borgo (Rione XIV)
(2) காம்பிடேல்லி
Campitelli (Rione X)
(3) காம்போ மார்சியோ
Campo Marzio (Rione IV)
(4) காஸ்ட்ரோ பிடோரியோ
Castro Pretorio (Rione XVIII)
(5) செலியோ
Celio (Rione XIX)
(6) கொலன்னா
Colonna (Rione III)
(7) எஸ்குவிலினோ
Esquilino (Rione XV)
(8) லுடோவிசி
Ludovisi (Rione XVI)
(9) மோன்டி
Monti (Rione I)
(10) பரியோன்
Parione (Rione VI)
(11) பிக்னா
Pigna (Rione IX)
(12) போன்டி
Ponte (Rione V)
(13) பிராட்டி
Prati (Rione XXII)
(14) ரிகோலா
Regola (Rione VII)
(15) ரிபா
Ripa (Rione XII)
(16) சல்லுஸ்டியனோ
Sallustiano (Rione XVII)
(17) சான் சபா
San Saba (Rione XXI)
(18) சான்ட்'ஏன்ஜில்லோ 
Sant'Angelo (Rione XI)
(19) சான்ட்'யுஸ்தாச்சியோ
Sant'Eustachio (Rione VIII)
(20) டேஸ்டக்கியோ
Testaccio (Rione XX)
(21) திரஸ்டிவேரி
Trastevere (Rione XIII)
(22) ட்ரைவி
Trevi (Rione II)

No comments:

Post a Comment