துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, July 19, 2011

ஆஸ்ட்ரியா - அரண்மனை மற்றும் ஷோன்ப்ருன் தோட்டங்கள்

அரண்மனை மற்றும் ஷோன்ப்ருன் தோட்டங்கள்
(Read Original Article in :-Palace-and-gardens-of-schoenbrunn_austria)

Schönbrunn Palace, Vienna
 துரின்ச்டியன் தேவாலயம்

18 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை இங்குள்ள 'ஷோன்ப்ருன் அரண்மனை' (Palace of Schönbrunn ) என்பது 'ஹாஸ்பர்க்' மன்னரின் (Habsburg Emperar) தங்கும் இடமாக இருந்தது. 'வியன்னா'வின் (Vienna) தென்கிழக்குப் பகுதியில் இந்த இடம் அமைந்து உள்ளது. இன்று அந்த அரண்மனை மற்றும் தோட்டம் இரண்டுமே யுனெஸ்கோவின் புராதான சின்னமாக (UNESCO World Heritage Site) உள்ளன. இதற்கான அங்கீகாரம் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 2 முதல் 7 வரை கூடிய உலக புராதான சின்ன அங்கத்தினர் (World Heritage Committee) கூட்டத்தில் தரப்பட்டது.
Schönbrunn Maze
துரேன்ஸ்டைன் தோட்டம்

'போரோக்யூ' (Baroque) மன்னர்களின் 'ஷோன்ப்ருன் அரண்மனை' நன்கு பராமரிக்கப்பட்டு (Best preserved) வந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள இந்த அரண்மனையின் சில பகுதிகள் மற்றும் தோட்டம் மட்டும் 19 ஆம் நூற்றாண்டில் சிறிது மாற்றப்பட்டு கட்டப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள நிலபரப்பான 260.64 ஹெக்டயரில் (hectares) இந்த புராதான சின்ன மையம் உள்ள நிலத்தின் பரப்பளவு 186.28 ஹெக்டயர் ஆகும்.
1569 ஆம் ஆண்டு மாக்ஸ்மில்லன் II (Roman Emperor Maximilian II) என்ற புனித ரோம பேரரசர் வாங்கிய ஒரு நிலத்தின் மீதே இந்த சின்னம் உள்ளது. முதலில் இந்த நிலம் வாங்கப்பட்டபோது அங்கு மான் (Deer), கரடி (Bore), வாத்துக்கள் (Ducks) மற்றும் ஒரு வகை கோழி (pheasants) போன்ற அனைத்தும் வளர்க்கப்பட்டு மன்னன் பொழுது போக்க அவற்றை துரத்தி வேட்டையாடும் (recreational hunting) வகையில் உபயோகத்தில் இருந்தது.
Schönbrunn Sculptures
துரேன்ஸ்டைன் தேவாலயம்

'ஷோன்ப்ருன் அரண்மனை'
(About Schönbrunn Palace)
போரோக்யூ காலத்தில் (Baroque era) மன்னன் லியோபோல்ட் II வின் (Emperor Leopold I) ஆணைப்படி இந்த அரண்மனையை ‘ஜோஹன் பெர்னார்ட் பிஷேர் வான் எர்லாச்’ (Johann Bernhard Fischer von Erlach) என்பவர் வடிவமைத்தார். முதலில் அவர் 'வெர்சைல்லிஸ்' (Versailles) என்பதைப் போல பெரிய அளவிலும், அதே கலையிலும் இருக்குமாறு தன் இஷ்டம் போல வடிவமைத்தார் (whimsical design). ஆனால் அது அந்த இடத்திற்கு சரிவர அமையாததினால் சரியான அளவில் (realistic) இன்னொரு சிறிய வரைபடம் தயாரித்தார். அதுவே ஏற்கப்பட்டு 1696 ஆம் ஆண்டு கட்டிடம் கட்டப்படத் துவங்கியது. மூன்று வருடம் பொறுத்து அந்த அரண்மனையின் மத்தியப் பகுதியில் (Middle Portion) திறப்பு விழா (opening ceremony) கொண்டாடப்பட்டது.
அந்த அரண்மனை மரியா தெரிசாவுக்கு (Maria Theresa) அவளுடைய தந்தையான சார்லஸ் VI (Emperor Charles VI) என்பவரிடம் இருந்து கிடைத்தது. அந்த மாளிகையை வெயில் காலத்தில் (summer residence) பயன் படுத்த எண்ணியவள் 'நிகலோ பாஸக்கி' (Nicolò Pacassi) என்பவரை வைத்து அந்த மாளிகையை சீரமைத்து அதன் அருகில் 'ரொகோகோ' மாதிரியிலான (Rococo style) ஒரு தோட்டத்தை உருவாக்கினாள். அவள் ஆட்சியில் அந்த மாளிகை மிக முக்கியமான இடமாக (Nerve Centre) அமைந்தது. 1919 ஆம் ஆண்டு சார்லஸ் I (Charles I ) அதிகாரத்தை இழக்கும்வரை அது ஆஸ்ட்ரிய மன்னர்களின் இருப்பிடமாக இருந்தது.
Schönbrunn grounds
துரேன்ஸ்டைன் தேவாலயம் - இன்னொரு தோற்றம்

ஷோன்ப்ருன் அரண்மனை மற்றும் தோட்டத்தில் என்ன பார்க்கலாம்
(What to See in Palace and Gardens of Schönbrunn)
இங்கு பார்க்க வேண்டிய அரண்மனை : க்வேரெட் டேரேத் (public domain)
கிரேட் கல்லெரி : இங்குதான் மன்னர்களின் விருந்து விழாக்கள் நடைபெறும். 'கார்கியோ குக்லிமி' (Georgio Gugleimi) என்பவரே அதன் மேற்கூரையை வடிவமைத்தார்.
ப்ளூ சைனிஸ் சலோன் : இந்த அறை ரொகோகோ மாதிரியில் சீன நாட்டு காட்சிகளுடன் அமைக்கப்பட்டது. இங்குதான் 1918 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரிய மன்னரான 'கார்ல் இ' (Emperor Karl I) என்பவர் தனது பதவியை துறந்ததிற்கான ஒப்புதலில் கையொப்பம் (signed his abdication) இட்டார்.
லார்ஜ் ரோசா ரூம் : அந்த அரண்மனையில் மூன்று அறைகளை 'ஜோசப் ரோசா' என்பவர் இத்தாலிய மற்றும் சுவிஸ் நாட்டு காட்சிகளைக் கொண்ட ஓவியங்களினால் அழகு செய்தார். அதில் ஒன்றுதான் இந்த அறை. அவர் பெயரின் நினைவாக இருக்குமாறு இந்த அறைக்கு அவர் பெயரை வைத்தார்கள்.
வியுக்ஸ் -லக்யூ ரூம் : பலவித மெருகெண்ணை (Lacquered) பூசிய தாங்கிகள் உள்ள இந்த அறையில்தான் 'மரியா தெரிசா' விதவையானப் பின் தங்கினார்.
மில்லயொன்ஸ் ரூம் (மில்லியோனின்சிம்மர்): 'ரொகோகோ' கலைவண்ணம் மிகுந்துள்ள இந்த அறையில்தான் 'மரியா தெரிசா' விவாத கூடங்களை (conference room) நடத்தி வந்தார்.
ரவுண்டு சைனிஸ் காபினெட் : இந்த அறையில் வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் சுவர்கள் இருக்க அதில் மெருகெண்ணை (Lacquered) பூசிய தாங்கிகள் உள்ளன. 'மரியா தெரிசா' இளவரசர் 'கவுனிட்ச்ஸ்சுடன்' (Prince Kaunitz) தனிமையில் உரையாடும்போது(Private discussions) இந்த அறையைத்தான் பயன் படுத்தி வந்தார்.

ஷோன்ப்ருன் தோட்டத்தை சுற்றி உள்ள இடங்கள்
(The sights and things to see within Schönbrunn Garden)
ப்ரைவி கார்டன்
மழே / லேபிரிந்த்
பல இடங்களையும் பார்க்க முடிந்த 'க்லோரிஇட்டே' ( Gloriette ) எனும் மேல்தளம் (Terrace)

மிருகக் காட்சி சாலை : 
'டையெர்கார்டன்' (Tiergarten) எனப்படும் இது 1752 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மிகப் பழைய மிருகக் காட்சி சாலை. இங்கு விஞ்ஞான முறையில் (scientifically administered) மிருகங்களையும் இயற்கை காட்சிகளையும் பாதுகாத்து வருகிறார்கள்.
கல் சிற்பங்கள் : அங்குள்ள 'கிரேட் பார்டேர்றி' (Great Parterre) என்ற இடத்தில் 32 க்கும் மேற்பட்ட பலதரப்பு கடவுளின் சிலைகள் உள்ளன.
The Gloriette in Schönbrunn Palace, Vienna
துரேன்ஸ்டைன் தேவாலயம்

உலக புராதான சின்ன விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 48 11 12 E 16 18 48
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1996
பிரிவு : கலை
தகுதி : I, IV

இது அமைந்துள்ள இடம்
(Location)
'ஷோன்ப்ருன்' என்பது 'வியன்னா'வின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது.

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Palace and Gardens of Schönbrunn)
நீங்கள் இந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்றால் 'வியன்னா'வில் தங்கிக் கொள்ள வேண்டும். 'வியன்னா'வில் உள்ள ஹோட்டல் (hotels in Vienna) விவரங்களை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். வியன்னாவில் இருந்து பாதாள ரயில் நிலையம் சென்று அங்கு பச்சைக் கோடு போட்ட U4 ரயிலைப் பிடித்து 'ஷோன்ப்ருன்' ரயில் நிலையத்தில் இறங்கலாம். மேலும் 10 மற்றும் 58 எண்களைக் கொண்ட 'ட்ராம்கள்' (Trams) அல்லது 10A எண் பச்சையும் பிடித்து அங்கு சென்று இறங்கலாம்.
Palace of Schönbrunn
'ஷோன்ப்ருன்' அரண்மனை

No comments:

Post a Comment