துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, July 30, 2011

இத்தாலி -படுவா

படுவா (படோவா) 
(Read Original Article in :- Padova)
Padua, Italy 
படுவா , இத்தாலி
Author: Andrzej Walczak (Creative Commons Attribution 3.0 Unported)

வடக்கு 'இத்தாலி'யில் உள்ள 'வெனிடோ'வில் (Veneto) உள்ளதே 'படுவா' (Padova) எனும் நகரம். அது 'படுவா' மாவட்டத்தின் (Province) தலை நகர் ஆகும். இதன் ஜனத்தொகை 2008 ஆம் ஆண்டு கணக்கின்படி 212,500 ஆகும்.
Basilica of Saint Anthony at night
இரவில் செயின்ட் அந்தோணி பாஸ்லிக்கா
Author: Berthold Werner (public domain)

'பச்சிக்லியோனே' நதிக்கரையின் (Bacchiglione River) பக்கத்தில் அமைந்து உள்ளது 'படுவா' நகரம். 'வெனிஸ்சில்' (Venice) இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், 'விசென்சாவின்' (Vicenza) தென்கிழக்கில் இருந்து 29 கிலோ தொலைவிலும் இந்த நகரம் உள்ளது. இங்குதான் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட 'படுவா பல்கலைக் கழகம்' (Universita di Padova) உள்ளது. இந்த நகரில் பொதுஜன பியாசாக்களும் (public Piazza) 'பச்சிக்லியோனே' நதிக்கரையின் இரு கரைகளை இணைக்கும் பல பாலங்களும் (bridges ) அங்காங்கே உள்ளன.
ஷேக்ஸ்பியரின் (Shakespeare) படைப்பான 'டேமிங் தி ஷ்ரூ' என்ற நாடகம் அரங்கேறிய இடமே 'படுவா'. இங்குள்ள அந்தோணி பாஸ்லிக்கா (Basilica of St Anthony) கதோலிக (Catholics) கிறிஸ்துவர்களின் புனித இடம் (pilgrimage site) ஆகும்.
Pratto dela Valle, Padua
பிரட்டோ டேல வல்லே , படுவா
Author: PetarM (Creative Commons Attribution ShareAlike 3.0 Serbia)


'படுவா'விற்கு விமானப் பயணம்
(Budget Travel to Padua By Plane )

'படுவா'வில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'வெனிஸ்சிய மார்கோ போலோ ஏர்போர்ட்டில்' (Venezia Marco Polo Airport (VCE)) இருந்து 'படுவா'விற்குப் போக முடியும். விமான நிலையத்தில் இருந்து படுவாவின் புற நகர் பகுதியை (downtown) அடைய நிறைய பஸ்களும் பிற வாகன வசதிகளும் உள்ளன.

ரயிலில் பயணம் (By Train)

'வெனிசியா' (Venezia), 'பொலொக்னா' (Bologna), 'மிலான்' (Milan) மற்றும் 'கஸ்டேல் பிராங்கோ' (Castelfranco) போன்ற நகரங்களில் இருந்து 'படுவா'விற்குப் போக நிறைய ரயில்கள் உள்ளன.

'படுவா'வின் உள்ளே பயணம்
(Within Padua)

'படுவா'வை சுற்றிப் பார்க்க நடந்து (Walk) செல்வதே சிறந்த வழி. அல்லது ட்ராம்களில் (Trams) செல்லலாம். APS மொபிலிடா ட்ராம்ஸ் (APS Mobilità trams) எனும் வண்டி ரப்பர் சக்கரங்களில் (Rubber Tiers) செல்கின்றது. அது பல இடங்களிலும் நின்று நின்று செல்வதினால் நிறைய இடங்களின் காட்சியை காணலாம்.
Prato della Valle, Padua
படுவா
Author: Dan00nad (public domain)

படுவாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Padua)


(1) படுவா செயின்ட்  அந்தோணி  பேசிலிகா
படுவாவின் மிகப் பெரிய தேவாலயம் . அதில் செயின்ட் அந்தோணியின்  புனிதப் பொருட்களை  வைத்து உள்ளார்கள்.

(2) கபே  பெட்ரோச்சி
1831 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட கப்பே எனும்  தண்ணீர் வரும் ஓட்டை

(3) துயோமோ
1552 ஆம் ஆண்டு மிச்சிலாஞ்சிலோ என்பவரால் வடிவமைக்கப்பட்ட படுவாவின் தேவாலயம் 

(4) எரேமிடாணி  காட்சியகம்
14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல  மடங்களின் கட்டிடங்கள் உள்ள மையம்.

(5) ஒர்டோ  போடனிகோ
ஐரோபியாவின் மிகப் பழமையான படுவாவின் போட்டானிகல் கார்டன்.

(6) பலஸ்சோ டெல் போ
படுவாவின் பல்கலைகழக கட்டிடம் 

(7) பலஸ்சோ டெல்லா  ரேகியோனே
சலோன் என்றும் இதைக் கூறுவார்கள். 1218 ஆம் ஆண்டை சேர்ந்த படுவாவின் நீதி மன்றம்  .

(8) பர்டோ  டெல்லா  வல்லே
இத்தாலியின் மிகப் பெரிய பொதுஜன மைதானம். 

(9) ஸ்ரோவேக்னி  சாபேல்
என்ரிகோ ஸ்ரோவேக்னி என்பவர் 1303 ஆம் ஆண்டு நிறுவிய தொழுகை இடம்.

(10) கட்டமிலாட்டா சிலை
செயின்ட் அந்தோணியின் பசிலிக்காவின்  நுழை வாயிலில்  உள்ள காவலாளியின் சிலை

(11) ஸ்கோல  டெல்  சான்டோ  மற்றும் ஓரடோரியோ  டி  சன்  ஜியோர்ஜியோ
இரண்டு வரலாட்று சிறப்பு மிக்க கட்டிடங்கள். அவற்றின் சுண்ணாம்புச் சுவர்களில் அற்புதமான சிற்பங்கள் உள்ளன.

No comments:

Post a Comment