துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, July 30, 2011

இத்தாலி' - நேப்பில்ஸ்

நேப்பில்ஸ் 
(Read Original Article in :- Naples)

Naples, Italy
நேப்பில்ஸ் , இத்தாலி
Author: Utente (Creative Commons Attribution 3.0 Unported)

தெற்கு 'இத்தாலி'யின் கம்பானியா (Campania ) எனும் பகுதியில் உள்ள நகரமே 'நேப்பில்ஸ்' (Naples) . இதன் வரலாறு 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை கிரேக்கர்கள் (Greeks) அமைத்து புதிய நகரம் என்ற அர்த்தம் தரும் பெயரான 'நேப்போலிஸ்' (Nepolis) என அதன் பெயரை வைத்தார்கள். இன்று 'நேப்பில்ஸ்'சில் 2.25 மில்லியன் மக்கள் வசிக்கின்றார்கள். இது 'இத்தாலி'ய நாட்டின் மூன்றாவது (3rd biggest) பெரிய நகரம் ஆகும். அனால் சுமார் 4 மில்லியன் மக்கள் வாழும் இது உள்ள பிரதான நகரம் (Metropolitan area) 'மிலானுக்கு' (Milan) அடுத்த பெரிய நகரம் ஆகும்.
'நேப்பில்ஸ்'சும் உணவு வகைகள், கட்டிடக் கலை, கலை வரலாறு போன்றவற்றில் சிறப்பு மிக்கது. நெபோலிடன் (Neapolitan) என்ற சமையல் கலை (Cuisine) பெயரில் கிடைக்கும் உணவுப் பொருட்களான நெபோலிடன் ஐஸ் க்ரீம் (Ice Cream) , பிச்சா (Pizza) , காப்பி (Coffee) , ஜெலடோ(Gelto) மற்றும் பழங்கள் போட்ட ஐஸ் க்ரீம் (fruit-based ice-cream) போன்றவை மிகவும் பிரபலமானவை .
Piazza Plebiscito, Naples

பியாசா ப்லேபிஸ்சிடோ , நேப்பில்ஸ்
Author: Lalupa (public domain

 
நேப்பில்ஸ்சிற்கு விமானப் பயணம்
(Budget Travel to Naples By Plane )

'கோபோடிச்சினோ' விமான நிலையத்தில் (Capodichino Airport) இருந்து நீங்கள் 'நேப்பில்ஸ்சிற்கு' ஏர்பஸ்ஸில் செல்லலாம். அங்கிருந்து குளிர்சாதன பஸ்ஸில் (Alibus) €3.00 கட்டணத்தில் 'நேப்பில்ஸ்' நகருக்குச் செல்லலாம். குளிர்சாதனம் இல்லாத பஸ்ஸில் சென்றால் அதன் கட்டணமாக 3S வசூலிப்பார்கள். அதுவும் ஏர் பஸ் செல்லும் சாலையில்தான் செல்கின்றது.

ரயில் மூலம் பயணம் (By Train )
இத்தாலியின் பல பகுதிகளில் இருந்தும் நீங்கள் நேப்பில்ஸ்சிற்கு ரயிலில் செல்ல வசதிகள் உள்ளன. நேப்பில்ஸ்சின் முக்கியமான ரயில் நிலையம் நபோலி சென்ட்றலே பியாசா கரிபால்டி ஸ்டேஷன் (Napoli Centrale Piazza Garibaldi station) என்பது.

Castel Nuovo, Naples
காஸ்டேல் நுவோவோ , நேப்பில்ச்ஸ்
Author: Stephen Salomons (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

Piazza San Domenico Maggiore, Naples
பியாசா சண் டோமேனிகோ மக்கியோரே
Author: Lalupa (public domain)

'நேப்பில்ஸ்சிற்குள்' சுற்றிப் பார்க்க
'நேப்பில்ஸ்சிற்குள்' சுற்றிப் பார்க்க சாலையின் கீழ் வழியே ஓடும் 'மெட்ரோவில்' (Metro) செல்வது சிறந்தது. ஏன் எனில் 'நேப்பில்ஸ்சில்' சாலைகளில் நெருக்கடி அதிகம் இருக்கும். மெட்ரோ ரயில் மற்றும் ட்ராம், பஸ் போன்ற சேவைகளை நிர்வாகிப்பது 'மெட்ரோபொலிடனா டி நேபோலி' (Metropolitana di Napoli ) என்ற நிறுவனம் . ஆறு தடயங்களில் (six subway lines ) மெட்ரோ ரயில் கீழ் வழிப்பாதையில் செல்கின்றது. தின பயண கட்டணமான €3.00 யூரோவைக் கொடுத்து ஒரு பயணச் சீட்டை வாங்கிக் கொண்டால் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் (unlimited rides) மெட்ரோவில் அதே பயணச் சீட்டில் பயணிக்கலாம்.
மெட்ரோவைத் தவிர அங்கு ஆகாயத்தில் கம்பி மீது செல்லும் கேபெல் (Cable Cars) எனப்படும் ஆகாய மார்க்க கார் சேவையும் உள்ளது.
Galleria Umberto, Naples
கல்லெறிய உம்பேர்டோ
Author: Mac9 (Creative Commons Attribution 2.0 Generic)

Castel Sant'Elmo, Naples
காஸ்டேல் சந்த்'எல்மோ
Author: Lalupa (Creative Commons Attribution 3.0 Unported

நேபில்ச்ஸ் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Naples)
 
(1) பியாசா கரிபால்டி 
(Piazza Garibaldi)
நேபில்ச்ஸ் நகரில் பொதுஜன மைதானம்.
(2) பியாசா போவியோ
( Piazza Bovio)
நேபில்ச்ஸ் நகரில் இன்னொரு மைதானம் 
(3) பியாசா பலேபிசிடோ 
 (Piazza Plebiscito )
நேபில்ச்ஸ் நகரில் இன்னொரு மைதானம் 
(4) மியுசியோ ஆர்கியலாஜிகோ நேசினலே  
(Museo Archeologico Nazionale)
போம்பே நகர  அழிவின் தொல்பொருள் புகைபடங்கள் 
மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட பிற சின்னங்கள் 
(5) கபோடிமோன்டி
 (Capodimonte)
ஆர்கியலாஜிகல் மியூசியத்தின் வடக்கில் உள்ள கலை அரங்கம்
(6) வில்லா கம்யூனலே
(Villa Comunale )
ஐரோபியாவின் முதலாவது மீன் காட்சியரங்கம்
(7) கோர்டிஸ் மியூசியம் ஆப் அப்லாயிட் ஆர்ட்ஸ் 
(Cortes Museum of Applied Arts )
வில்லா கம்யூனலேயின் அருகிலுள்ள மியூசியம்
(8)  லா கசினா போம்பியானா
(La Casina Pompeiana)
புகைப்படங்களின் விளக்க காலரி
(9) காஸ்டில் நுயோவோ
(Castel Nuovo )
நேபில்ச்ஸ்சின்  முனிசிபல் கவுன்சில் உள்ள இடம்
(10) தியாட்ரோ சான் கார்லோ
(Teatro San Carlo)
உலகின் அற்புதமான மற்றும் இத்தாலியின் மிகப் பெரிய திரை அரங்கம்
(11) கல்லாரியா உம்பேட்டோ I
(Galleria Umberto I)
1887 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலரி
(12) சிஸா டி சான் பிரான்சிஸ்கோ டி பயலோ
(Chiesa di San Francesco di Paola )
 1817 முதல்  1832  வரையிலான காலத்தில் கட்டப்பட்டு உள்ள இரண்டு ஆர்கேடுகள்
(13)  பலாஸ்சோ ரியாலே
(Palazzo Reale)
18-19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பார்பான் மன்னர்களின் நான்கு வீடுகளில் ஒன்று
(14) கஸ்டீல் டெல ஒவோ
(Castel dell'Ovo)
நேப்பிள்ஸ்சின் கோட்டை, தற்போது தற்காலிக காட்சியகங்கள்
மற்றும் பிற நிகழ்சிகளுக்காக பயன்  படுத்தப் படுகின்றது.
(15) சர்ச் ஆப் மோண்டியோலிவ்டோ
(Church of Monteoliveto)
ரோமாவின் சர்ச். மறுமலர்ச்சி  சின்னங்களின் இருப்பிடம்
(16)  ஜேசு நியாவோ
(Gesù Nuovo)
16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நேபோலிடன் பொரொகியூ சர்ச்
(17) சர்ச் ஆப் சாண்டா சியாரா
(Church of Santa Chiara )
14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோதிக் சர்ச். நேபோலிடன் பிரிவினர் வந்து வணங்கிய கர்ச்.
(18)  சான் பியட்ரோ எ மைல்லா
(San Pietro a Maiella )
14 ஆம் ஆண்டை சேர்ந்த சர்ச்
(19) நேப்பிள்ஸ்சின்  டுயோமோ
(Naples Duomo)
பல காலங்களை சேர்ந்த நினைவுச் சின்னங்களைக் கொண்ட மாதாகோவில்
(20) சான் லோரின்சோ மக்கியோரே
(San Lorenzo Maggiore)
நேப்பிள்ஸ்சின் மிகப் பழைய தெருவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சர்ச்
(21) சான் டாமினிகோ  மக்கியோரே
(San Domenico Maggiore)
நேப்பிள்ஸ்சின் கோதிக் சர்ச்
(22) சான் ஜியோவானி எ கார்போனரா
(San Giovanni a Carbonara)
நேப்பிள்ஸ்சின் 14 ஆம் ஆண்டை சேர்ந்த சர்ச்
 (23) ஜிரோலமனி
(Girolamini )
நேப்பிள்ஸ்சின் மிகப் பழைய  சர்ச்
(24) சான் பாட்ரிசியா
(San Patrizia)
சான் க்ரிகோரா ஆர்மினோ மடாலயத்தினுடன்  அமைந்துள்ள சர்ச்
(25) பலாஸ்சோ  ரியலே டி கபடிமோண்டி
(Palazzo Reale di Capodimonte )
18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மன்னன் சார்லஸ் III அரண்மனை .
 தற்போது அங்கு தேசிய காட்சியகம் உள்ளது.
(26)  செர்டோசா ஈ மிசியோ டி சான் மார்டினோ
(Certosa e Museo di San Martino )
14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அற்புதமான கலையில்
 கட்டப்பட்டு உள்ள போரோக்கோ கட்டிடம்
(27) கச்டேல் சண்ட எல்மோ
(Castel Sant'Elmo )
14 ஆம் நூற்றாண்டில் அரசியல் கைதிகளை சிறை வைத்து இருந்த கோட்டை
(28) வில்லா போரியடானா
(Villa Floridiana )
தேசிய பொதுஜன பூங்கா
(29) மியூசியோ நாஷனலேடெல்லா சிராமிக்கா
( Museo Nazionale della Ceramica)
இத்தாலின் பலவிதமான பீங்கான் பாண்டங்களைக் காட்டும் மியூசியம்
(30) மெர்ஜினில்லினா 
(Mergellina)
மேற்கு நேப்பிள்ஸ்சில் இருந்து பிற இடங்களுக்கு கிளம்பும் படகுகள்  உள்ள இடம்.
(31) பியாஸ்சோ சன்னசாரோ
(Piazza Sannazzaro)
நேப்பிள்ஸ்சில் மிக உயர்வான பிஸ்ஸா எனும்  உணவுப் பண்டம்  விற்கப்படும்  மைதானம்.

No comments:

Post a Comment