துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, July 19, 2011

அல்ஜீரியா சுற்றுலா குறிப்புக்கள்

அல்ஜீரியா சுற்றுலா குறிப்புக்கள்
( Read Original Article in :-Algeria)


Bousaayed in Algeria
அல்ஜீரியாவில் பவுசாயேது
Author: Yelles (Creative Commons Attribution 3.0 Unported

'அல்ஜீரியா' (Algeria) என்பது 'ஆப்ரிகா' கண்டத்தின் () African Continent ) மிகப் பெரிய நாடு. இதன் பரப்பளவு 2,381,741 சதுர கிலோ மீட்டர் (sq km ). ‘மெடிட்டரேனியன்’ (Mediterranean) கடலை நோக்கி அமைந்துள்ள இந்த நாடு ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள சூடான் நாட்டிற்கு (Sudan) அடுத்தபடியான பெரிய நாடு என்பது மட்டும் அல்ல உலகத்திலேயே மிகப் பெரிய நாடுகளில் 11 வது (11th biggest) இடத்தை வகுக்கின்றது. ஆனாலும் இத்தனைப் பெரிய நாடான இதன் ஜனத் தொகை (Population) 35.5 மில்லியன் ஆகும். இந்த நாட்டின் தலை நகரம் 'அல்ஜியர்ஸ்' (Algiers) என்பதே.
Tuareg nomads in southern Algeria
அல்ஜீரியாவின் தோரேக் நாடோடிகள்
Author: Garrondo (Creative Commons Attribution 3.0 Unported)

'அல்ஜீரியாவின்' எல்லைகளை தொட்டபடி உள்ள நாடுகள் வடகிழக்கில் 'துனிசியா' (Tunisia), கிழக்கில் 'லிப்பியா' ( Libya),தென்கிழக்கில் 'நைஜீர்' (Niger) மற்றும் 'கிழக்கு சகாரா', தென்மேற்கில் 'மவுரிடானியா' (Mauritania) , 'மாலி' (Mali ), மற்றும் மேற்கில் 'மொரோக்கோ' (Morocco) என்பன. 2010 ஆம் ஆண்டின் கணக்கின்படி பொருளாதார தரத்தில் அல்ஜீரியாவின் GDP $159 பில்லியன் தனி நபர் வருமான (per capita) விகிதம் $4,478. அல்ஜீரிய நாட்டின் நாணயம் 'தினார்' (Dinar) என்பது. சாலைகளின் (Roads) வலது பக்கத்தில் (Right Side Drive) வண்டிகளை ஓட்டிச் செல்ல வேண்டும். பயன் படுத்தும் மின்சாரத்தின் சக்தி 220V 50Hz .
'அல்ஜீரியாவின்' பெயர் 'அல்சியர்ஸ்' என்பதில் இருந்தே வந்துள்ளது. இங்கு 1000 BC யில் 'கார்தஜினியன்' (Carthaginians) என்ற இனத்தவர் குடியேறினார்கள். ஆனால் பின்னர் அவர்கள் மீது போர் தொடுத்த (Fought) தொடுத்த 'பெர்பேர்' (Berber) எனும் இனத்தினர் ஆட்சியைக் கைபற்றி தமது ராஜ்யத்தை (kingdoms) நிறுவினார்கள்.
Roman Bath Hammam Essalhine, Algeria
ஹம்மாம் ஈஸ்சல்ஹைனில் ரோமன் குளியல் இடம்
Author: Ghezaltar (Creative Commons Attribution 2.0 Generic)

200 BC யில் ரோமன் நாட்டினர் 'அல்ஜீரியாவைக்' கைப்பற்றினார்கள். AD 476 யில் அந்த நாட்டின் 'மேற்கு ரோமன் ராஜ்ஜியம்' (Western Roman Empire) 'பெர்பேர்' வசம் வீழ்ந்தது. அதன் பிறகு மீண்டும் அந்த நகரை 'பைய்சண்டையின்' (Byzantine Empire) மன்னர் வம்சத்தை சேர்ந்த 'ஜஸ்டினியன் I' (Justinian I) என்பவர் கைபற்றினார்.
மத்தியக் காலத்தில் அல்ஜீரியாவை 'பெர்பேர்கள்' கைபற்றினாலும் அவர்களுக்குள் பல மலை வாழ் மக்கள் பிரிவுகள் (several tribes) தோன்றி ஒவ்வொரு பிரிவும் அவரவர் பகுதிகளில் சுதந்திரப் பிரகடனம் (Independence) செய்தார்கள். 7 ஆம் நூற்றாண்டில் அராபிய முஸ்லிம்கள் (Muslim Arabs) ‘அல்ஜீரியா’வில் முஸ்லிம் மதத்தை ஸ்தாபனம் செய்தார்கள். 16 ஆம் நூற்றாண்டில் 'ஸ்பெயின்' (Spain) நாட்டை கத்தோலிக்க மன்னர்கள் (Catholic monarchs) ஆண்டு வந்தபோது அவர்கள் வட ஆப்ரிக்காவின் (North Africa) கடற்கரைப் பகுதிகளில் இருந்த பல இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு சுமார் நூறு ஆண்டுகள் அதை ஆண்டு வந்தார்கள்.
1517 ஆம் ஆண்டில் 'ஒட்டமான்' (Ottaman) மன்னரின் ஆளுமையில் 'அல்ஜீரியா' வந்தது. அவர் முன்னர் 'ஸ்பெயின்' நாட்டினர் கைபற்றி இருந்த பல பகுதிகளையும் மீட்டு 'அல்ஜீரியா' நாட்டின் புதிய எல்லையை வகுத்தார். ‘மெடிட்டரேனியன்’ கடல் பகுதிகளில் சென்ற 'அமெரிக்க' கப்பல்கள் மீது கடல் கொள்ளையர் தாக்கி (Piracy) கொள்ளை அடிக்கத் துவங்கியதினால் 1801-05 மற்றும் 1815 ஆண்டுகளில் 'அல்ஜீரியா' நாட்டின் மீது 'அமெரிக்கா' (America) இரண்டு யுத்தங்களை நடத்தியது.
Khirenne Khenchela, Algeria
கிரேன்னே கென்சிலா
Author: Ghezaltar (Creative Commons Attribution 3.0 Unported)

1830 ஆம் ஆண்டில் 'பிரான்ஸ்' நாடு 'அல்ஜீரியா' மீது படை எடுத்தது. அந்த யுத்தம் 20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. மெல்ல மெல்ல அந்த நாட்டை 'பிரான்ஸ்' தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டார்கள். ஆயிரக்கணக்கான 'பிரான்ஸ்' நாட்டினர் 'அல்ஜீரியா'வுக்கு வந்து தங்கினார்கள். ஆனால் 1954 ஆம் ஆண்டு சுதந்திரம் கேட்டு ஏற்பட்ட 'அல்ஜீரியா'வின் புரட்சியினால் 'பிரான்ஸ்' நாட்டின் அதிபரான 'சார்லஸ் டி கால்லே' (Charles De Guillae) அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்க சம்மதித்தார். ஆனால் 10 % அல்ஜீரிய மக்கள் புதிய வாழ்க்கைத் தேடி 'பிரான்ஸ்' நாட்டில் தங்கி விட முடிவு செய்தார்கள். அதன் பின் 'அல்ஜீரியா'வில் பல ஆண்டுகள் அங்காங்கே உள்நாட்டு போர் (Civil War) நடந்து கொண்டே இருந்தது. ஆனால் தற்போது அந்த நாடு சாமான்ய நிலைக்கு (gradually subsiding) திரும்பிக் கொண்டு உள்ளது.

'அல்ஜீரியா'விற்குச் செல்ல வேண்டுமா
(Visiting Algeria )

தலை நகரான 'அல்ஜியர்ஸ்' செல்ல வேண்டும் எனில் ஹுவாரி பௌர்னிடினி சர்வதேச விமான நிலையத்துக்கு {The Houari Boumediene Airport (ALG)} சென்று இறங்கி அங்கிருந்து வண்டி பிடித்துச் செல்ல வேண்டும். இந்த விமான நிலையம் அந்த நகரில் இருந்து 17 கிலோ (K.M) தொலைவில் உள்ளது. அந்த விமான நிலையத்துக்கு ஏர் பெர்லின் (Air Berlin), ஏர் பிரான்ஸ் (Air France) , அலிடாலியா (Alitaia), பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), இப்ரியா (lberia) மற்றும் 'லுப்தான்ஸா' (Lufthansa) போன்ற விமான நிறுவனங்களின் சேவைகள் உள்ளன. அது போல 'அல்ஜீரிய' தேசிய விமான சேவை நிறுவனம் (Algeria National Carrier) ஐரோப்பாவின் (Europe) பல இடங்களுக்கும் தமது விமான சேவையை வைத்துள்ளது.
 Ruins of Timgad, Algeria
டிம்காட் சிதைவுகள்
Author: Yelles (Creative Commons Attribution 3.0 Unported)

அல்ஜீரியாவின் பெரிய நகரங்கள்
(Major Cities in Algeria)

(1) தலை நகரம் அல்ஜியர்ஸ்
(Algiers - capital )
(2) அன்னபா
(Annaba )
(3) பட்னா
(Batna )
(4) பெசார்
(Bechar)
(5) கான்ச்டன்டையின்
(Constantine)
(6) ஓரன்
(Oran)
(7) சேடிப்
(Sétif)
(8) தமன்ரசெட்
(Tamanrasset)

பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Algeria)

(1) எல் ஒயேட்
(El-Oued)
(2) ஹிப்போ ரேகியஸ்
(Hippo Regius)

யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Andorra)
நாகரீகக் கலை சம்மந்தமானது
(Cultural)

(1) அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்
(Al Qal'a of Beni Hammad )-(1980)
(2) டிஜிமெலா
(Djémila) - (1982)
(3) ம'சப் வாலி
(M'Zab Valley) - (1982)
(4) டிம்காட்
(Timgad) -(1982)
(5) டிப்பாஸா
(Tipasa) -(1982)
(6) கஸ்பா ஆப அல்ஜியெர்ஸ்
(Kasbah of Algiers) -(1992)
பல வகை
(Mixed)

டாஸ்சிலி என் அஜீர்
(Tassili n'Ajjer) - (1982)

No comments:

Post a Comment