துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, July 17, 2011

அன்குல்லா - சுற்றுலாக் குறிப்புக்கள்

'அன்குல்லா' சுற்றுலாக் குறிப்புக்கள்
(Read Original Articles in : Anguilla)


 Cap Juluca, Anguilla
காப் ஜூலுக்கா
Author: tiarescott (Creative Commons Attribution 2.0 Generic)
'அன்குல்லா' (Anguilla) என்ற சிறிய தீவு 'கரீபியன்' (Caribbean) கடல் பகுதியில் உள்ளது. லீவர்ட் தீவுகளை சேர்ந்த இது அதன் வடகோடியில் உள்ளது. இந்த தீவின் அகலம் (Widest) 5 கிலோ மீட்டர், நீளம் ஒரு முனையில் இருந்து மறு முனிவரை (End to end) 26 கிலோ மீட்டர் ஆகும். ஜனத் தொகை 14,000 (2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி ). தலை நகரத்தின் பெயர் 'தி வாலி' (The Valley) என்பது.
'அன்குல்லா' வின் நேரம் உலக நாடுகளை விட நான்கு மணி (4 hours behind) நேரம் பின் தங்கியது. பிரிட்டனைப் போலவே இங்கும் வாகனங்களை இடதுபுறமாகவே செலுத்த வேண்டும். மின்சாரா வினியோக அளவு 120V/60Hz . இந்த நாட்டின் நாணயம் கிழக்கு கரீபியன் டாலார் (East Caribbean dollar).
Prickly Pear Island, Anguilla
ப்ரிக்லி பியர் தீவு , அன்குல்லா
Author: Maksim (Creative Commons Attribution 3.0 Unported)

'அன்குல்லா' தாழ்வான பகுதியாக உள்ளது. இங்கு பவழம் (Coral) மற்றும் சுண்ணாம்புப் பாறைகள் (Limestones) அதிகம் உண்டு. இந்த தீவை சுற்றி உள்ள தீவுகளில் கடற்கரைகளும் (Beaches) நிறைய பவழப் பாறைகளும் (Coral Reef) உள்ளன. இங்குள்ள 'க்ரோகஸ்' (Crocus hill) மலையின் உயரம் 65 மீட்டர் ஆகும். வருடம் முழுவதும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை (Temperature) அதாவது சுமார் 28°C வரை உள்ளது. ஆகஸ்ட் முதல் நவம்பர் (August - November) மாதம் முடிய மழைக் (Wettest) காலம். பிப்ரவரி மற்றும் மார்ச்சில் (Feb - Mar) நல்ல வெயிலாக (Dry) இருக்கும்.
'அன்குல்லா' ஆங்கிலேய (Britan) நாட்டின் அயல் நாட்டுப் (Overseas Territory) பகுதியாகும். இந்த தீவுக்கு 1493 ஆம் ஆண்டில் முதன் முதலாக 'கிறிஸ்டோபர் கொலம்பஸ்' (Christopher Columbus) என்ற ஆங்கிலேயர் வந்ததாகவும், 1564 மற்றும் 1565 ஆம் ஆண்டில் 'பிரான்ஸ்' (France) நாட்டை சேர்ந்தவர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இதன் பெயர் 'ஈல்' (eel) என்ற 'பிரான்ஸ்' நாட்டுப் பெயரில் இருந்து வந்தது. 1666 ஆம் ஆண்டு இந்த தீவு 'பிரான்ஸ்' நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பின்னர் இது ஆங்கிலேயர்களின் ஆட்சியில் சென்று விட்டது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் 'ஆப்ரிக்கா'வை சேர்ந்த 'காரிப்பீன்' (Caribbean) என்பவர்கள். அவர்கள் வம்சாவளியினர் (Ancestry) மத்திய மற்றும் மேற்கு 'ஆப்ரிக்கா'வின் (Central and West africa) பகுதிகளில் உள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் 17 ஆம் நூற்றாண்டு முதல் இங்கு 'ஆப்ரிக்கா'வை சேர்ந்த அடிமைகள் (Slaves) இருந்ததாகக் கூறுகிறார்கள்.
Scilly Cay, Anguilla
சில்லி கே நகரம் , அன்குல்லா
Author: Roy Googin (Creative Commons Attribution 3.0 Unported)

'அன்குல்லா'வின் பொருளாதாரமே சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி, வெளிநாட்டு வங்கிகள் போன்றவற்றை நம்பியே உள்ளது.இங்குள்ள மண் வளம் விவசாயத்துக்கு ஏற்றதாக இல்லை.

'அன்குல்லா'விற்கு எப்படி செல்லலாம்
(Visiting Anguilla)

'சான் சுவான்' (San Juvan) , 'புட்ரோ ரிக்கோ' (Puerto Rico) போன்ற இடங்களில் இருந்து 'அன்குல்லா'விற்குச் செல்ல விமான சேவைகள் உள்ளன. ஆனால் பல சுற்றுலாப் பயணிகளும் 'செயின்ட் மார்டன்' (St Maartan) என்ற இடத்தில் இருந்து விமானத்தில் வருவதையே விரும்புவதின் காரணம் அந்த இடத்தின் விமான சேவை சிறப்பாக உள்ளன.

'அன்குல்லா'வின் பெரிய நகரங்கள்
(Major Cities in Anguilla)

தி வாலி
(The Valley)

'அன்குல்லா'வில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Anguilla)

(1) அழிந்து வரும் தாவரங்களின் பூங்கா, மற்றும் உள்ளூர் தாவரப் பூங்கா
(Endangered Species Garden and Indigenous Local Plants Garden)
(2) மண்ணில்லாமல் செடிகளை வளர்க்கும் பூங்கா மற்றும் உரமில்லாமல் வளரும் தாவர பூங்காக்கள் (Hydroponic Garm and Organic Gardens)

எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.

No comments:

Post a Comment